வாயைத்திறந்தாலே
பொய் .பொய்யைத் தவிர வேறில்லை.
இந்தியாவில் தடுப்பு காவல் மையம் இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி புது டெல்லியில் ஏன் சொன்னார் என்று எனக்குத் தெரியவில்லை. இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையம் இங்கு (மாட்டியா) கட்டப்படுவதை நீங்கள் காணலாம்."
அசாமின் குவால்பாடா மாவட்டத்தின் மாட்டியா கிராமத்தில் வசிக்கும் சமூக செயல்பாட்டாளர் ஷாஜகான் அலி இவ்வாறு கூறுகிறார்.
சட்டவிரோத வெளிநாட்டினரை வைத்திருக்க இந்த பிரமாண்டமான கட்டடம் கட்டப்பட்டு வருகிறது, அதற்கான நிதியை மத்திய உள்துறை அமைச்சகம் கொடுக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக்காவல் மையம் இல்லை என்றும், அது ஒரு வதந்தி என்றும் கூறினார்.
ஆனால், பிரதமர் மோதி கூறியதற்கு மாறாக, நாட்டின் முதல் மற்றும் மிகப்பெரிய தடுப்பு மையம் அசாமின் மாட்டியா கிராமத்தில் இரண்டரை ஹெக்டேர் நிலத்தில் கட்டப்பட்டு வருகிறது.
தடுப்பு மைய கட்டுமான பணிகள்
இந்த தடுப்பு மையத்தின் கட்டுமானத்தை மேற்பார்வையிடும் தள பொறுப்பாளர் ராபின் தாஸிடம் பிபிசி பேசியது.
"இந்த தடுப்பு மையத்தை டிசம்பர் 2018 முதல் நான் மேற்பார்வை செய்து வருகிறேன். கடந்த ஆண்டு டிசம்பர் முதல் மாட்டியா கிராமத்தில் இந்த தடுப்பு மைய நிர்மாணப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த தடுப்பு மையத்தில் மூவாயிரம் பேரைத் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன," என்கிறார் ராபின் தாஸ்.
"ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 சதவிகித தடுப்புக்காவல் பணிகள் முடிந்துவிட்டன. சுமார் 300 தொழிலாளர்கள் எந்த விடுப்பும் இன்றி இந்த கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இந்த கட்டுமானப் பணிகளை முடிக்க 2019 டிசம்பர் 31 என்று காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. "
"ஆனால் இந்த பிரமாண்டமான கட்டடத்தின் கட்டுமானம் தொடர்பான அனைத்து பணிகளும் 2020 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடியும் என்று நான் நம்புகிறேன். உண்மையில், மழை நாட்களில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக, பணிகள் சற்று மந்தமாகிவிட்டன."
இந்த தடுப்பு மையத்தை நிர்மாணிப்பதற்கான செலவு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த ராபின் தாஸ், "இந்த கட்டுமானத்தில் மொத்தம் 46 கோடி ரூபாய் செலவிடப்படும், அதை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்குகிறது" என்றார்.
'உலகின் இரண்டாவது பெரிய தடுப்புகாவல் மையம்'
அமெரிக்காவின் தடுப்பு காவல் மையத்திற்குப் பிறகு, இது உலகின் இரண்டாவது பெரிய தடுப்பு மையமாக இருக்கும் என்று தள பொறுப்பாளர் தாஸ் கூறுகிறார். இதன் உள்ளே மருத்துவமனையும், வாயிலுக்கு வெளியே தொடக்கப்பள்ளி ஆடிட்டோரியம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு சிறப்பு கவனிப்பு உட்பட அனைத்து வசதிகளும் இருக்கும்.
தற்போது, அசாமின் ஆறு வெவ்வேறு மத்தியச் சிறைகளில் அமைக்கப்பட்ட தடுப்பு மையங்களில், வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்ட 1133 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த தகவலை ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் ஜி.கே.ரெட்டி வழங்கினார், இது ஜூன் 25 வரை உள்ள தரவு.
மாட்டியா கிராமத்திற்கு அருகில் வசிக்கும் அஜீதுல் இஸ்லாம், இந்த இடத்தை கடந்து செல்லும் போதெல்லாம், உயரமான சுவர்களால் சூழப்பட்ட தடுப்பு மையத்தைப் பார்த்துப் பயப்படுகிறார்.
அவர் கூறுகிறார், "நான் இந்த பகுதியில் வளர்ந்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு பெரிய கட்டடத்தை நான் பார்த்ததில்லை. மனிதர்களை அதற்குள் வைத்திருந்தால், கண்டிப்பாக பயம் ஏற்படும். அசாமில் சட்டவிரோத குடிமக்களின் பிரச்சினை மிகவும் தீவிரமானது என்பது உண்மைதான். ஆனால் வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்ட நபரை இவ்வளவு செலவு செய்து தடுப்பு மையத்தில் வைத்துப் பராமரிப்பதைவிட அவரது சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பிவிடலாம்.
வெளிநாட்டு குடிமக்கள்
இந்தக் கட்டுமானம் தொடங்கப்பட்டதிலிருந்தே இங்கு 24 வயதான தீபிகா கலிதா தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். எதுபோன்ற நபர்கள் இங்கு வைக்கப்படுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
அவர் கூறுகிறார், "இங்கே என்.ஆர்.சி.யில் பெயர் இடம்பெயராதவர்கள் அல்லது வாக்காளர்கள் இல்லாதவர்கள் வைக்கப்படுவார்கள். நான் ஆரம்பத்திலிருந்தே இங்கு பணியாற்றி வருகிறேன். நாங்கள் ஏழைகள், இங்கு வேலை செய்துதான் வயிறு வளர்க்கிறோம். இங்கு வேலை செய்பவர்களுக்கு ஒப்பந்தக்காரர் தினமும் 250 ரூபாய் கூலி கொடுக்கிறார். என்.ஆர்.சி.யில் எனது பெயர் வந்துவிட்டது, ஆனால் எத்தனை பேர் இங்கு வைக்கப்படுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை" என்கிறார் தீபிகா கலிதா.
இந்த தடுப்பு காவல் மையத்தில் தொழிலாளியாக பணியாற்றும் 30 வயதான கோகுல் விஸ்வாஸ் என்பவரின் பெயர் என்.ஆர்.சி-யில் இடம்பெற்றவர் தான். வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டவர்கள் இந்த இடத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது அவருக்குத் தெரியும்.
கோகுல் கூறுகிறார், "நான் கடந்த சில நாட்களாக இங்கு வேலை செய்கிறேன். நாளொன்றுக்கு 500 ரூபாய் கூலி கிடைக்கிறது. இது தடுப்பு மையத்தின் கட்டடம். வெளிநாட்டு மக்கள் இங்குத் தங்க வைக்கப்படுவார்கள். என்.ஆர்.சி.யில் எனது பெயர் இடம்பெறவில்லை என்றால், என்னையும் இந்த சிறையில் தானே வைத்திருப்பார்கள் என்று இங்கு வேலை செய்யும் போது பல முறை பயந்திருக்கிறேன்."
'குடும்பங்கள் சிதறடிக்கப்படும்'
உண்மையில், இந்த தடுப்பு மையத்தின் கட்டுமானத் தொழிலாளர்கள் பலரின் பெயர் என்.ஆர்.சி.யில் இடம்பெறவில்லை என்று கோகுல் தனது சக தொழிலாளிகளிடமிருந்து கேள்விப்பட்டிருக்கிறார்.
இந்த தடுப்பு மையத்திற்கு வெளியே சிறிய அளவிலான தேநீர் மற்றும் உணவகத்தை நடத்தி வரும் அமித் ஹாஜோங், தனது மனைவி மம்தாவின் பெயர் என்.ஆர்.சி.யில் சேர்க்கப்படவில்லை என்று மிகவும் வருத்தப்படுகிறார்.
தனது பிரச்சினையை விவரிக்கிறார் அமித். "நான் எனது குடும்பத்துடன் அருகிலுள்ள எண் 5 மாட்டியா முகாமில் வசிக்கிறேன். என் பெயர், அம்மாவின் பெயர், மகனின் பெயர் என எனது முழு குடும்பத்தின் பெயரும் என்.ஆர்.சி.யில் வந்துவிட்டது... ஆனால் என் மனைவி மம்தாவின் பெயர் வரவில்லை. இது எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. "
"நானும் என் மனைவியும் சேர்ந்து இந்த சிறிய தேநீர் கடையை நடத்துகிறோம். இதில் தான் எங்கள் வாழ்க்கையே கழிகிறது. நாள் முழுவதும் இந்த கடையில் வேலை செய்கிறோம், எனவே எதையுமே யோசிக்க முடியவில்லை. ஆனால் இரவில் வீட்டிற்குச் செல்லும்போது, இந்த விஷயங்களை நினைத்து கவலை ஏற்படுகிறது. இந்த பிரமாண்டமான கட்டடம் கண்ணுக்கு முன்னால் கட்டப்படுவதை ஒவ்வொரு நாளும் நாங்கள் காண்கிறோம். "
"என் மனைவியைப் பிடித்து ஒரு தடுப்பு மையத்தில் வைத்தால், எங்கள் குடும்பம் சிதைந்துவிடும். மனைவி இல்லாமல் குழந்தைகளை எப்படி வளர்ப்பது. மகனுக்கு ஐந்து வயது, மகளுக்கு 2 வயது. இதை நினைக்கும் போதெல்லாம் எனக்குப் பயமாக இருக்கிறது."
பிரதமரின் அறிக்கை
இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதி பட்டியலில் 19 லட்சம் பேரின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதில், அளும் பாஜகவும் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதிலும் என்.ஆர்.சி அமல்படுத்தப்படும். அப்போது, அசாமிலும் என்.ஆர்.சி பணிகள் மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
புதுடில்லியில் பேசிய பிரதமர் மோதி, "இந்திய மண்ணின் முஸ்லிம்களும், அவர்களின் மூதாதையர்கள் இந்தியத்தாயின் குழந்தைகள். சகோதர சகோதரிகளே, குடியுரிமைச் சட்டம் மற்றும் என்.ஆர்.சிக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நாட்டில் தடுப்பு மையங்களும் இல்லை, அங்கு முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்படுவதும் இல்லை. சகோதர சகோதரிகளே, இது ஒரு பச்சை பொய், இது ஒரு மோசமான எண்ணம் கொண்டவர்களின் விளையாட்டு, இது ஒரு கேவலமான விளையாட்டு. இந்த அளவுக்குப் பொய் பேச முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று கூறினார்.
சமூக ஆர்வலர் ஷாஜகான் கூறுகிறார், "இந்திய அரசின் பணத்தில் தடுப்பு மையம் கட்டப்படும் நிலையில், அதைக் குறித்து பிரதமர் எப்படிப் பேசுகிறார் என்று பாருங்கள்? இங்கு வரும் அனைவருக்கும் இது ஒரு தடுப்பு மையமாக இருக்கப்போகிறது என்பது தெரியும். அதுமட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய தடுப்பு மையமாக இது இருக்கும் என்பதும் அனைவருக்கும் தெரியும். "ட
குடி மக்கள் பதிவேடும் இல்லை என்கிறார்கள்.அதுவும் பொய்.
பதிவேட்டில் இடம் பெறாதவர்களுக்கு தடுப்புமையமே அடைக்கலம்.
குடி மக்கள் பதிவேடும் இல்லை என்கிறார்கள்.அதுவும் பொய்.
பதிவேட்டில் இடம் பெறாதவர்களுக்கு தடுப்புமையமே அடைக்கலம்.