இதுதான் ராமராஜ்யம்?
#go back modi தப்பே இல்லை . தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முழுதும் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமளவிலான பயிர் சேதத்தை ஒன்றிய அரசின் குழுவினரும் வந்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்ச ரூபாயும், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய 4719 கோடியே 62 லட்ச ரூபாயையும் வழங்கக் கோரி, ஏற்கனவே 3 விரிவான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததுள்ளது தமிழக அரசு. அதை நினைவூட்டி டிசம்பர் 29 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்தக் கடிதத்தில், “ கொரோனாவால் அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டோம். எனவே, தமிழக அரசு கோரிய ஆறாயிரத்து 230 கோடியே 45 லட்ச ரூபாய் நிதியை வழங்கிட, உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்...