ஏசு எப்பொ பிறந்தார்
வேளாண்சட்டங்கள்..
மீண்டும் வருகிறது...,?
மோடி அரசு 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், வேளாண் சட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்கிற தொனியில் வேளாண் அமைச்சர் பேசியிருப்பது விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஒன்றிய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லிக்கு பேரணியாகச் சென்றனர். கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கிய இந்த போராட்டம் ஓராண்டாக நீடித்தது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி லாரிகள், டிராக்டர்கள் போன்ற ஏராளமான வாகனங்களில் விவசாயிகள் டெல்லியின் திக்ரி, சிங்கு எல்லை பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்தனர்.
ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை எனக் கூறிவந்த ஒன்றிய பா.ஜ.க அரசு, எதிர்வரும் 5 மாநில சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் முடிவை எடுத்தது.
இந்நிலையில் வேளாண் சட்டங்கள் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தனியார் முதலீட்டு மாநாட்டில் பேசிய ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “வேளாண் சட்டங்களை நாங்கள் கொண்டு வந்தோம். சுதந்திரத்திற்குப் பிறகு 70 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் ஒரு பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால், சிலருக்கு இது பிடிக்கவில்லை.
ஆனால், இதைக் கண்டு அரசு ஏமாற்றமடையவில்லை. இப்போது ஒரு படிதான் பின்வாங்கியுள்ளோம். கண்டிப்பாக மீண்டும் முன்னோக்கிச் செல்வோம்” என நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்களை பா.ஜ.க அரசு வாபஸ் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், பா.ஜ.க அமைச்சரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
--------------------------------------------------------------------------------
மோடி ஒன்றிய அரசின்
பாசிச நடவடிக்கைகள்.
கோவிட் பெருந்தொற்றில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கெடுவாய்ப்பாக அரசின் சார்பில் வயதுவந்த அனைவருக்கும் தடுப்பூசி கள் போடும் இலக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தபோதிலும், இதுவரையிலும், அதாவது டிசம்பர் 18 வரையிலும், 39 சதவீதத்தினருக்கே முழுமையாக இரண்டு தவணை களும் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது. நாட்டில் புதிய சுகாதார அவசரநிலை உருவாவதைத் தடுப்ப தற்காக, அனைவருக்கும் முழுமையாகத் தடுப்பூசிகள் போடுவதை உடனடியாக விரைவுபடுத்திட வேண்டும்.
பெண்களுக்கான திருமண வயதை உயர்த்தியிருத்தல்
பெண்கள் திருமணம் செய்துகொள்ளும் வயதை, தற்போது 18 என்று இருப்பதை 21 என உயர்த்துவதற்காக ஒன்றிய பாஜக அரசு கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆத ரிக்காது. இவ்வாறு உயர்த்துவதற்காக, அரசுத்தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. இது தொடர்பாக அனைத்துத்தரப்பினருடனும் ஓர் ஆழமான ஆய்வு மேற்கொள்வதற்காக, இந்த வரைவு சட்டமுன்வடிவு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற நிலைக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும். ஒரு பெண், 18 வயதினை நிறைவடையும்போது அவர் சட்டப்பூர்வமாக வயதுக்கு வந்தவராகிவிடுகிறார். ஆனால், அவரைத் திருமணம் தொடர்பான காரணங்க ளுக்கு மட்டும் இளம் சிறாராகக் கருதுவது, சுய-முரண் பாடானதாக இருக்கிறது, வயது வந்த ஒருவர் தன் வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை அளிக்க மறுக்கும் விதத்திலும் அமைந்தி ருக்கிறது. இந்தச் சட்டமுன்வடிவு, ஒரு பெண் தன் சொந்த வாழ்க்கை குறித்துத் தீர்மானித்திடும் உரிமை யைப் பறிக்கிறது.
பெண்களின் திருமண வயது தற்போது 18 என இருக்கும் சமயத்திலேயே, அரசாங்கம் 2017இல் வெளி யிட்டுள்ள தரவின்படி பெண்கள் திருமணம் செய்து கொள்ளும் வயது அகில இந்திய அளவில் சராசரியாக 22.1 ஆண்டுகள் என்பதாகும். எனவே, இப்போது இதுபோன்றதொரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. இந்தச் சட்டமுன்வடிவானது, பெண்களின் சுகாதா ரக் காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுமானால், இந்த அரசாங்கம் பெண்கள் கரு வுற்றிருக்கும் நிலையில் தாய்-சேய் மரணம் ஏற்படாது தடுப்பதற்காக, அவர்களுக்குப் போதிய ஊட்டச்சத்து உணவு வழங்குவதை உத்தரவாதப்படுத்திட என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? இவற்றையெல்லாம் செய்யாது, பெண்களின் திருமண வயதை உயர்த்து வது மட்டும் தீர்வாகிவிடாது.
லக்கிம்பூர் கெரி கொலைகள்
உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்கிறது. அதில், கொலை செய்யப்படுவ தற்கு, “முன்கூட்டியே சதி மேற்கொள்ளப்பட்டது” என குறிப்பிட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் எட்டுபேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பிரதானமாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர், ஒன்றிய உள்துறை இணை அமைச்சர், அஜய் மிஸ்ரா வின் மகனாவார். அந்த அமைச்சர் ஒன்றிய அமைச்சர வையிலிருந்து நீக்கப்பட வேண்டும் என அனைத்துத் தரப்பிலிருந்தும் குரல் எழுப்பப்பட்டுள்ளபோதிலும், பிரதமர் மோடி அவரைத் தன் அமைச்சரவையிலிருந்து நீக்கவில்லை. அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
வெற்றிகரமான வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்
டிசம்பர் 16-17 தேதிகளில் நாடு முழுதும் சுமார் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அதனை வெற்றி பெறச் செய்திருப்பதற்காக அவர்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் அரசியல் தலைமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது. வங்கிகள் தனியார்மயம் நோக்கி செல்லப்படுவதையும், மக்களின் சேமிப்புகளைத் தங்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் சூறையாட மோடி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதையும் அதுவே வேலைநிறுத்தத்திற்கான காரணம் என்பதையும், வங்கி ஊழியர்கள் மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று விளக்கியிருந்ததால் இந்த வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு தொழிற்சங்கங்களும், பொது மக்களும் விரிவான அளவில் ஆதரவு தெரிவித்தனர். மோடி அரசாங்கம் தன் ஆட்சிக்காலத்தில் 10.7 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலாக கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்ட கடன்களை ரத்து செய்துள்ளது. இதன் பின்னர் வங்கிகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்வ தற்காக மீண்டும் பொது மக்களிடம் பணத்தை சேமித்திருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளை இந்தவிதத்தில் ஆபத்திற்குள்ளாக்கிவிட்டு, இதனையே ஒரு சாக்காக வைத்து, வங்கிகளைத் தனியார்மயப்படுத்திட நடவ டிக்கைகளை எடுத்திருக்கிறது. இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்திடும். அரசின் தனி யார்மயத் திட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது.
விலைவாசி உயர்வு
நவம்பர் மாதத்தில் மொத்த விலைவாசிக் குறி யீட்டெண் 14.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இது, கடந்த முப்பதாண்டுகளில் மிகவும் அதிகமானதாகும். மொத்த எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலைகள் 39.81 சதவீதம் உயர்ந்திருக்கிறது. உணவு மற்றும் எரிபொருள்களின் விலைகள் 12 ஆண்டுகளில் மிகவும் அதிகமாகும். இவை அனைத்தும் மக்களின் துன்பதுய ரங்களை அதிகப்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிராகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கிறது.
வேலையின்மை
2021 நவம்பரில் மட்டும் ஊதியம் வாங்கிக்கொண்டி ருந்த 68 லட்சம் தொழிலாளர்கள் தங்கள் வேலை களை இழந்துள்ளார்கள். நகர்ப்புற வேலையின்மை என்பது கடந்த 17 வாரங்களில் மிகவும் அதிகமாகி இருக்கிறது. அதேபோன்று ஒட்டுமொத்த வேலை யின்மை என்பதும் கடந்த 9 வாரங்களில் அதிகமாகி இருக்கிறது. பணவீக்கம் பாய்ச்சல் வேகத்தில் சென்றுகொண்டி ருப்பதுடன், இவையும் சேர்ந்து மக்கள் மீது மிகப்பெரிய அளவில் துன்ப துயரங்களைச் சுமத்தி இருக்கிறது. இவற்றின் விளைவாக, பொருளாதாரத்தில் மக்களின் தேவை சுருங்கி, பொருளாதார மந்தத்தை மேலும் ஆழப்படுத்தி இருக்கிறது. வருமானவரி செலுத்தாத குடும்பத்தினருக்கு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 7,500 ரூபாய் உடனடி யாக, நேரடியாக ரொக்கமாகக், கொடுக்கப்பட வேண்டும்.
தேர்தல் ஆணையத்தைப் பிரதமர் அலுவலகம் அழைத்ததற்குக் கண்டனம்
------------------------------------------------------------------------------------
போப் மரணம்?
பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV News அதன் நேரடி கிறிஸ்துமஸ் தின கவரேஜின் போது, செய்தி தொகுப்பாளர் கைலி பென்டெலோ (Kylie Pentelow), போப்பின் வருடாந்திர கிறிஸ்துமஸ் உரையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, அவர் தற்செயலாக போப் மரணித்ததாக அறிவித்தார்.
போப்பின் உரையை சுருக்கமாகக் கூறும்போது,
"தடுப்பூசிகள் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று போப் கூறினார்.
அவரது மரணம் அறிவிக்கப்பட்டு விட்டது"
என்று கூறிவிட்டார்.
எனினும், அவள் உடனடியாக தன் தவறை உணர்ந்து, 'எக்ஸ்கியூஸ் மீ' என்று தன்னைத் திருத்திக் கொண்டார்.
இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஒருபக்கம், இது கிண்டல்செய்யப்பட்டாலும், மறுபுறம் இந்த தவறு சர்ச்சையை கிளப்பியதுள்ளது.
இது தற்செயலாக நடந்ததா அல்லது தயார் செய்யப்பட்ட செய்திஅறிக்கையில் அப்படி இருந்ததா என பலரும் விவாதித்து வருகின்றனர்.
உயிருடன் இருக்கும் போப் பிரான்சிஸ், சனிக்கிழமை வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் இருந்து தனது கிறிஸ்துமஸ் தின உரையை ஆற்றினார்.
அப்போது, சிரியா, ஏமன் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் நடந்து வரும் மோதல்களைக் கண்டித்தார்.
-------------------------------------------------------------------
ஏசு பிறப்பு எப்போது?
ஏசு கிறிஸ்து பிறப்பு , கிரிகோரியன் நாட்காட்டியின்படி டிசம்பர் 25 அன்று பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது .
ஆனால் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அவருடைய பிறப்பைக் கொண்டாடவில்லை, இயேசு உண்மையில் எந்தத் தேதியில் பிறந்தார் என்பது யாருக்கும் தெரியாது (சில அறிஞர்கள் உண்மையான தேதி வசந்த காலத்தின் துவக்கத்தில் இருந்தது என்று நம்புகிறார்கள், அதை அவரது உயிர்த்தெழுதலின் நினைவாக ஈஸ்டர் பண்டிகைக்கு நெருக்கமாக வைப்பார்கள் ).
டிசம்பர் 25 ம்தேதி 2 ஆம் நூற்றாண்டில் தொடங்கியிருக்கலாம்.
டிசம்பர்25 ம் தேதிக்கு குறைந்தது மூன்று சாத்தியமான தோற்றங்கள் உள்ளன.
ரோமானிய கிறிஸ்தவ வரலாற்றாசிரியர் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்பிரிக்கானஸ் , இயேசுவின் கருத்தரிப்பை மார்ச் 25 (உலகம் உருவாக்கப்பட்டதாக அவர் கருதிய அதே தேதி) என்று தேதியிட்டார், இது அவரது தாயின் வயிற்றில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 இல் பிறக்க உரிய
3 ஆம் நூற்றாண்டில், அந்த நேரத்தில் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாத ரோமானியப் பேரரசு , டிசம்பர் 25 அன்று வெல்லப்படாத சூரியனின் (சோல் இன்விக்டஸ்) மறுபிறப்பைக் கொண்டாடியது.
இந்த விடுமுறையானது குளிர்கால சங்கிராந்திக்குப் பிறகு நீண்ட நாட்கள் திரும்புவதைக் குறித்தது மட்டுமல்லாமல், சாட்டர்னாலியா எனப்படும் பிரபலமான ரோமானிய திருவிழாவைப் பின்பற்றியது (இதன் போது மக்கள் விருந்து மற்றும் பரிசுகளை பரிமாறிக் கொண்டனர் ).
இது இந்தோ-ஐரோப்பிய தெய்வமான மித்ராவின் பிறந்தநாளாகும், இது ஒளி மற்றும் விசுவாசத்தின் கடவுள், அதன் வழிபாட்டு முறை ரோமானிய வீரர்களிடையே பிரபலமாக இருந்தது.
ரோமில் உள்ள தேவாலயம் 336 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதிதான் பேரரசர் கான்ஸ்டன்டன் ஆட்சியின் போது முறையாக கிறிஸ்துமஸ் கொண்டாடத் தொடங்கியது .
கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை பேரரசின் பயனுள்ள மதமாக மாற்றியதால், இந்த தேதியைத் தேர்ந்தெடுப்பது நிறுவப்பட்ட பேகன் கொண்டாட்டங்களை பலவீனப்படுத்தும் அரசியல் நோக்கம் கொண்டதாக சிலர் ஊகித்துள்ளனர்.
கிழக்குப் பேரரசில் இந்த தேதி பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அங்கு ஜனவரி 6 க்கு ஆதரவாக இருந்தது, மற்றொரு அரை நூற்றாண்டுக்கு, 9 ஆம் நூற்றாண்டு வரை கிறிஸ்துமஸ் ஒரு பெரிய கிறிஸ்தவ பண்டிகையாக மாறவில்லை.
---