புத்தாண்டு பரிசுகள்.

 மோடியின் ஆட்சியில் இந்திய ஒன்றிய அரசு 2022 முதல் பல பரிசுகளை இந்திய மக்களுக்கு வாரி வழங்க உள்ளது.

உலகிலேயே மிகச் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள்,நிதி திர்வாகம் கொண்ட பா.ஜ.க மட்டுமே இப்படி சாதனைகளை செய்ய முடியும் என ஐ.நா.மன்றமே வியந்துள்ளது.

இனி2022 புத்தாண்டு மோடி அரசு வழங்க உள்ள  மக்கள் நலத்திட்டங்கள் விபரம்:-

ஒவ்வொரு மாதமும் புதிய விதிமுறைகள், விலை ஏற்ற இறக்கம் என பல்வேறு விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. அதிலும், புத்தாண்டு என்றால் சொல்லவா வேண்டும். இதில் பெரும்பாலான விதிமுறைகள் சாமானிய மக்களை நேரடியாக பாதிக்கும் வகையிலே உள்ளன. ஆக, ஜனவரி முதல் மாறவிருக்கும் விதிமுறைகளைப் பற்றி பார்க்கலாம்.

ஏடிஎம்  கட்டணம்

ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. இப்புதிய கட்டணம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இலவச வரம்புக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுக்க இதுவரை 20 ரூபாய் வசூலிக்கப்பட்டது. இனி 21 ரூபாய் வசூலிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சமையலுக்கு தேவையான கேஸ் சிலிண்டர் விலை மாற்றப்பட்டு வருகிறது. எனவே, ஜனவரியிலும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

தபால் துறை

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி (இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி) வாடிக்கையாளர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் 10000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கவும், பணம் போடவும் கட்டணம் செலுத்த வேண்டும்.


தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி சேமிப்புக் கணக்குகளுக்கான சேவைக் கட்டணத்தை (சேவைக் கட்டணம்) ஜனவரி 1ஆம் தேதி முதல் மாற்றியுள்ளது.

உடைகள்

ஜவுளிப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி


விகிதத்தை 5 விழுக்காட்டில் இருந்து 12 விழுக்காடாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த புதிய வரி விகிதம் ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் ஆடைகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
-------------------------------------------------------------------------------


--------------------------------------------------------------------------------

குடிமகன்களுக்கோர் நற்செய்தி!

ஆந்திராவில் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஒரு கோடி வாக்குகளைப் பெற்றால்,மக்களுக்கு ரூ.70க்கு மதுபானம் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயவாடா கட்சிக்கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் “தரமற்ற” மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்கள் நன்கு அறிந்த மற்றும் பிரபலமான பிராண்டுகள் கிடைக்கவில்லை.

‘Special Status’, ‘Governor’s Medal’என்ற லேபிள்களின் கீழ் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
அவர்கள் பிராண்டட் மதுபானங்களை விற்பனை செய்வதில்லை.



பாஜகவுக்கு ஒரு கோடி ஓட்டுக்கொடுங்கள். வெறும் 70 ரூபாய்க்கு மதுவை வழங்குகிறோம். அதே சமயம், வருமானம் மிச்சம் இருந்தால், வெறும் 50 ரூபாய்க்கு மதுபானம் வழங்குவோம் என்றார்.

மேலும் பேசிய அவர், ” போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் அரசு ஈடுபட்டுள்ளது. மாநில அரசு) மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் ஒரு நபர் மதுபானம் வாங்கிட 12,000 ரூபாய் செலவிடுகிறார். இந்த பணத்தை அரசு வசூலித்துக்கொண்டு நலத்திட்டங்கள் என்ற போர்வையில் மக்களுக்கு திருப்பி கொடுக்கிறது என்றார்.

பிராண்டுகளுக்கு அதிக வரி விதிக்கப்படுவதால், மாநிலத்தில் மதுபானம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது

அண்மையில், ஆந்திர மாநில அரசு மதுபானத்தின் மீதான வாட் வரியை குறைத்தது, ஆனால் ‘சிறப்பு மார்ஜின்’ சேர்ப்புடன் மதுபானம் MRP விலை மாறாமல் இருந்தது, நுகர்வோருக்கு பலன் அளிக்கப்படவில்லை. 


இது போன்ற குறைகளை தாங்கள் ஆட்சிக்கு வந்தால் களைவதாக குடிமக்களுக்கு பா.ஜ.க, வாக்குறுதி தந்து வாக்குகளை கேட்டு வருகிறது.

----------------------------------------------------------------------------------




-


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?