இதுதான் ராமராஜ்யம்?

 #go back modi 

தப்பே இல்லை.

தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் முழுதும் பெய்த வரலாறு காணாத மழையால் சென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமளவிலான பயிர் சேதத்தை ஒன்றிய அரசின் குழுவினரும் வந்து ஆய்வு செய்தனர்.

இந்த நிலையில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணமாக தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510 கோடியே 83 லட்ச ரூபாயும், பாலங்கள் போன்ற உட்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்ய 4719 கோடியே 62 லட்ச ரூபாயையும் வழங்கக் கோரி, ஏற்கனவே 3 விரிவான அறிக்கைகளை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்ததுள்ளது தமிழக அரசு.



அதை நினைவூட்டி டிசம்பர் 29 ஆம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அந்தக் கடிதத்தில், “ கொரோனாவால் அரசின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகள் மேலும் அதை கடுமையாக்கியுள்ளன. மாநில பேரிடர் நிவாரண நிதியை முழுமையாக பயன்படுத்திவிட்டோம். 


எனவே, தமிழக அரசு கோரிய ஆறாயிரத்து 230 கோடியே 45 லட்ச ரூபாய் நிதியை வழங்கிட, உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் தமிழக முதல்வர்.

நேற்று நீட் தேர்வு தொடர்பாக தமிழக எம்பிக்கள் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் பெற்று காத்திருந்தும், அவர்களுக்கு அமித் ஷா நேரம் கொடுக்கவில்லை. 

இதை செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

தமிழகத்தின் பிரச்சினைகளுக்காக முதல்வரின் கடிதம் எழுதிய மறுநாளான நேற்று (டிசம்பர் 30) இயற்கை சீற்ற நிவாரணமாக ஆறு மாநிலங்களுக்கு ரூ 3,063.21 கோடி வழங்க உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது. 

அந்த மாநிலங்களில்  பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை.

இது தொடர்பாக நேற்று மாலை உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

“2021-ம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் புயல்களால் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து கூடுதல் மத்திய மானியமாக ரூ 3,063.21 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட இந்த ஆறு மாநிலங்களின் மக்களுக்கு உதவுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதியை இது காட்டுகிறது. 

நிதி ஒதுக்கீட்டின் விவரம்:

‘டௌக்டே’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட குஜராத்திற்கு ரூ.1,133.35 கோடி,

‘யாஸ்’ சூறாவளியால் 2021-ல் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.586.59 கோடி,

2021 தென்மேற்கு பருவமழையின் போது ஏற்பட்ட வெள்ளம்/நிலச்சரிவுகளுக்காக அஸ்ஸாமுக்கு ரூ.51.53 கோடி, 

கர்நாடகாவுக்கு ரூ.504.06 கோடி, 

மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.600.50 கோடி ,

 உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ 187.18 கோடி

. இந்த கூடுதல் உதவியானது, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு ஏற்கனவே மாநிலங்களுக்கு விடுவித்த நிதிக்கு கூடுதலாகும்" என்று உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “ 2021-22ஆம் நிதியாண்டில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 17,747.20 கோடியை 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், மத்திய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ 3,543.54 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

‘டௌக்டே’ மற்றும் ‘யாஸ்’ புயல்களுக்குப் பிறகு, 20.05.2021 அன்று தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து குஜராத்திற்கு முன்பணமாக ரூ 1,000 கோடி புயல் உருவானவுடனே கொடுக்கப்பட்டது,

அதேபோல்  29.05.2021 அன்று மேற்கு வங்காளத்திற்கு ரூ 300 கோடி வழங்கப்பட்டது..

2021-22 ஆம் ஆண்டில், இயற்கைப் பேரிடர்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மாநில அரசுகளிடமிருந்து கோரிக்கையைப் பெறுவதற்குக் காத்திருக்காமல், 22 அமைச்சகங்களுக்கு இடையேயான மத்திய குழுக்களை மத்திய அரசு உடனடியாக நியமித்தது” என்று அதில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஒரு மாத கால மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு  நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநில அரசுகளின் கோரிக்கைகளுக்காக காத்திராமல் மேற்கண்ட ஆறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உள்துறை அமைச்சகத்தின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் கோரிக்கை வைத்தும் தமிழநாட்டுக்கு உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியின் தலையங்கத்தில், “நிதி உரிமை என்பதும் நிதி வளம் என்பதும் ஒன்றிய அரசின் கையில்தான் இருக்கிறது. அதனை செய்து தர வேண்டிய தார்மீகக் கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரி என்ற பெயரால் மாநிலங்களுக்கு வர வேண்டிய வருவாயை மொத்தமாக ஒன்றிய அரசின் கருவூலத்துக்கு பாஜக அரசு திருப்பியது.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள சங்கிகளோ மோடி,அமித் ஷாவிடம் உரிமையுடன் கோரி தமிழ்நாடுக்கு  நேர்மையாக கிடைக்க வேண்டிய பேரிடர் நிவாரணத்தை,வரி ஒதுக்கீட்டை வாங்கித்தர வக்கின்றி தமிழ்நாடு அரசை எதிர்த்து அரசியல் செய்கிறார்கள்.அதற்கான அடிப்படை உரிமையை அவ்களுக்கில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும்.

சரியாகத் தர வேண்டிய நிவாரணம் போன்றவற்றை தராமல் குடும்ப அட்டைக்கு ஐயாயிரம் கொடு என அறிக்கை பா.ஜ.க,சார்பில்  விடுபவர்களைப் பார்த்தால் #go back modi சொல்வதில் தவறே இல்லை எனத் தெரிகிறது.

----------------------------------------------------------------------

கொரோனாவுக்கு முடிவு 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் 24-ந் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், 1 மாத காலத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. 

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடந்த 2-ந் தேதி நுழைந்து வேகமாக பல மாநிலங்களிலும் கால் பதித்து வருகிறது.

இந்த ஒமைக்ரான் வைரசில், கொரோனாவின் பிற எந்த உருமாறிய வைரசிலும் காணப்படாத அளவுக்கு அதன் ஸ்பைக் புரதத்தில் 37 பிறழ்வுகள் (உருமாற்றங்கள்) இருப்பதும், இந்த ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தித்தான் ஒமைக்ரான் மனித உடல் செல்களுக்குள் நுழைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த ஒமைக்ரான் வைரஸ் தடுப்பூசிகளுக்கு தப்பும் தன்மையைக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் வைரசை வீழ்த்தும் நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடி) அமெரிக்க விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

 ஒமைக்ரானை மட்டுமல்லாது உருமாறிய பிற வைரஸ்களை தடுப்பதற்கும் இந்த நோய் எதிர்ப்பு பொருள் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

ஸ்பைக் புரதத்தில் மிகவும் பாதுகாக்கப்பட்ட தளங்களை குறிவைக்கும் ஆன்டிபாடிகளில் (நோய் எதிர்ப்பு பொருள்) கவனம் செலுத்தி, வைரசின் தொடர்ச்சியான பரிணாமத்தை கடக்க ஒரு வழி இருக்கிறது என்பதை  இக்கண்டுபிடிப்பு சொல்கிறது.

ஒமைக்ரான் உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ்களை வீழ்த்தக்கூடிய ஆன்டிபாடிகளை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டிருப்பதால், இவற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை உருவாக்கவும், ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கவும் வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு வகையான வைரஸ்களில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளை அங்கீகரிப்பதின் மூலம், அவற்றை ஆன்டிபாடிகள் வீழ்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு, இந்த பகுதிகளை குறிவைக்கிற தடுப்பூசிகள் மற்றும் ஆன்டிபாடி சிகிச்சைகளை வடிவமைக்க உதவும். 

இது பரந்த அளவிலான மாறுபாடுகளுக்கு எதிராக பயனுள்ளதாக அமையும்.



-----------------------------------------------------------------------------

ஹிட்லரின் கொ.ப.செயலாளர்

கோயபல்சின் 9 அடிப்படை கொள்கைகள்.



1. பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். அது மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை.

2. நாட்டில் என்ன நடந்தாலும் எதிர்க்கட்சிகளை குற்றம் சொல்லுங்கள்.

3. எவ்வளவு பெரிய தவறையும், தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரிலே நியாயப்படுத்த வேண்டும்.

4. ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பொய் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

5. எல்லா விதமான உண்மைகளுக்கும், ஒரு பொய்க்கதையைப் புணைந்து அதை சமூகத்தில் உலாவ விட வேண்டும்.

6. தங்கள் கருத்துக்கு எதிராக இருப்பவர்களை எல்லாம் தேச துரோகிகள் எனச் சொல்ல வேண்டும்.

7. தம் இயக்கத்தில் உள்ள தலைவர்களை பொதுமக்கள் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.

8. அடிக்கடி பேரணி நடத்துங்கள். அடிக்கடி பெரும் திரள் கூட்டத்தை நடத்துங்கள்.

9. கடந்த காலப் பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருங்கள்.

கோயபல்ஸ்

ஒருவர் ஒரு இடத்தில் பொய் கூறுகிறார் என்றால் மெலிதாக கூறிவிட்டு கடந்துவிடுவார். திரும்பவும் அதைப்பற்றி அந்த இடத்தில் பேச்சு வராதவாறு அவர் பார்த்துக்கொள்வார்.

 ஆனால் கோயபல்ஸ் அப்படியில்லை, தாம் சொல்வது வடிகட்டிய பொய் தான் என்றாலும் அதை நயமாக எடுத்துரைத்து திரும்ப திரும்ப அதைப்பற்றி பேசி அதைக்கேட்டவர்கள் அனைவரையும் ''அட உண்மைதாம்பா'' என நினைக்க வைத்துவிடுவார். 

மக்களிடம் எந்த மாதிரி பேசினால் அவர்களுக்குள் தனது பொய்யை உண்மை என விதைக்க முடியும் என்ற வித்தையை கற்று வைத்திருந்தார் கோயபல்ஸ்.

100 ஆண்டுகளுக்கு முன்பு

கோயபல்ஸ் திறமை

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசகர்கள், தேர்தல் வியூக வகுப்பாளர்கள் என தற்போது இருந்தாலும், நூறாண்டுகளுக்கு முன்பே இதனை உலகிற்கு அறிமுகம் செய்தவர் ஹிட்லர். ஆம், தனது நாஜி கட்சிக்கு ஆலோசகராகவும், வியூக வகுப்பாளராகவும், கொள்கை பரப்புச் செயலாளராகவும் கோயபல்ஸை பணியமர்த்தி தனக்கு பக்கத்தில் வைத்துக்கொண்டார் ஹிட்லர். கொடூரனான ஹிட்லரையே தனது பேச்சால் மயக்கியவர் கோயபல்ஸ் என்றால் அவரின் திறமையை யூகித்துக்கொள்ளுங்கள்.

------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?