என்னவெல்லாம் ..,விண்டோஸ் 8.1.?
வீடியோ சேட் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தொகுப்பான ஸ்கைப், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தொகுப்புடன் இணைந்து தரப்படுகிறது. தற்போது ஏறத்தாழ, 30 கோடி பேர் ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து மைக்ரோசாப்ட் தருகிறது. பயனாளர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும் இனிய அனுபவத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனைத் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 8ல் இயங்கிய ஸ்கைப் குறித்து பல பயனாளர்கள் அவர்களின் பின்னூட்டக் கருத்துக்களைத் தந்துள்ளதாகவும், அவை அனைத்தும் புதிய ஸ்கைப் தொகுப்பின் வடிவமைப்பில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியா...