இந்திய[ ரூ/- ] வீழ்ச்சி -----------------------------------------


suran


உலக வங்கியில் பணி புரிந்தவர்கள்.உலக நாட்டண்மை அமெரிக்காவின் சொம்புகள்.மன்மோகன் சிங்,ப.சிதம்பரம்  மற்றும் அமெரிக்க அடிவருடிகள் புதிய பொருளாதார சிற்பிகள் சோனியா,ராகுல் காந்தி இவர்களின் பொண்ணான ஆட்சிகாலத்தில்தான் இதுவரை இல்லா அளவு இந்திய பணம் பாதாளத்தில் வீழ்ந்து தடுமாறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அதை தடுக்க இருப்பதாக பொருளாதார மாமேதைகள் இன்னமும் அறிக்கை மட்டுமே விட்டுக்கொண்டிருக்கிறார்கள் .
எற்றுமதி குறைவு.இறக்குமதி அதிகம்.பங்கு சந்தையில் அந்நிய முதலீடு அனைத்து துறைகளிலும் அன்னியர் என்ற [அமெரிக்கர்]பணம் பங்கு .இவைகள் இந்தியாவில் மடை  திறந்த வெள்ளமாக வரும் போதே இது போன்ற நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டு சீரழியும் நிலை வரும் என்று சுரனில் கூட அவ்வப்போது செய்திகள் வெளியிட்டுள்ளோம்.அது வந்து கொண்டிருக்கிறது.வந்து விட்டது.
பங்கு சந்தையில் டாலர்களில் முதலீடு செய்யும் அன்னியர் தங்கள் பணத்தை லாபத்துடன் விலக்கிக்கொள்ளும் போது இப்படியான நெருக்கடி-பொருளாதார சரிவு கண்டிப்பாக வரத்தானே செய்யும்.இதை நான்காம் வகுப்பு கணக்கு மாணவன் கூட சொல்லி விடுவான்.இது நமது பொருளாதார பு லி ளி களுக்கு புரியாதது எப்படி?
புரியாமல் அல்ல.!
தங்களின் எசமான் அமெரிக்காவின் சொல்படிதானே இங்கு இவர்கள் பொரூளாதார சீர்திருத்தங்களை செய்கிறார்கள்.
இன்றைய இந்தியா தனது நாணய மதிப்பை இழந்து பொருளாதார சீரழிவை எதிர் நோக்கியுள்ளதற்கு மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் அடியாட்களாக உள்ள சோனியா காங்கிரசுதான் முழுக் காரணம்.இவர்களை இன்னமும் தேர்ந்தெடுத்து ஆள விட்டோனானால் சோமாலியா நிலை இந்தியாவுக்கு நிச்சயம்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் ரூ.66 ஆக சரிந்தது.கடந்த வார வர்த்தகத்தில் அமெ ரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 66 ஆக வீழ்ச்சி அடைந்தது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்துவரும் நிலையில், அத்தியா வசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை அனைத்துப் பொருட்களின் விலைகளும் மிகக்கடுமை யாக அதிகரித்துவரும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியை சந்திக்கத் துவங்கியுள்ளது.
suran
 1991ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படும் அபாயம் உள்ள
து.
ரூபாய் மதிப்பு சரி வால் இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருகிறது.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து லேசாக மீண்டு ரூபாய் மதிப்பு 64 ஆக இருந்தது. திங்களன்று மீண்டும் சரிவு ஏற் பட்டு ரூபாய் மதிப்பு 64.31 ஆக இருந்தது. செவ்வாயன்று மேலும் வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 66 ஆக சரிந்தது. அந்நிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து, எண்ணெய் நிறு வனங்களும், இறக்குமதியாளர்க ளும் அதிக அளவில் டாலர்களை வாங்கி வருவதால் டாலருக்கு கிராக்கி அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து உள்ளது.
விலைகள் கடும் உயர்வு : இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருவதால், வெளிநாடு களில் இருந்து இறக்குமதியாகும் எண்ணெய் உள்ளிட்ட அனைத் தின் விலைகளும் கடுமையாக உயரத் தொடங்குகின்றன.எலக்ட்ரானிக் பொருட்களின் விலையும் கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கடந்த மாதம் பெரிய அளவில் இருந்த போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட் ரானிக் பொருட்கள் விலை உயர்ந் தது. தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட எலக்ட்ரானிக் பொருட் கள் தயாரிப்பு நிறுவனங்கள் 3 சதவீதம் வரை விலையை உயர்த் தின. குறிப்பாக செல்போன், டி.வி., லேப்– டாப், கம்ப்யூட்டர் உதிரிப்பா கங்கள், பிரிண்டர்கள் விலை உயர்ந் தது. தற்போது மீண்டும் இந்த பொருட்களின் விலைகளில் மாற் றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.தீபாவளிப் பண்டிகை நெருங் கும் நிலையில், அந்த சமயத்தில் விலையை உயர்த்துவதில் சிக்கல் கள் ஏற்படலாம் என்பதால் இப் போதே விலையை உயர்த்த தீர் மானித்துள்ளனர்.
suran
 டாலர் மதிப்பு திட்டமிட்டு உயர்த்தப்படுவதால், தங்கத்தின் மதிப்பும் குறைந்து வருகிறது.தங்கம் விலை கடந்த மாதம் பவுன் ரூ.19 ஆயிரம் வரை குறைந் தது. அதன் பிறகு மீண்டும் விலை உயரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து இந்த மாதத் தின் மத்தியில் ஆகஸ்ட் 16–ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்தை தாண் டியது.
அதன்பிறகு மேலும் உயர்ந்து கொண்டே வந்து கடந்த 24–ந்தேதி ரூ.24 ஆயிரத்தை தாண்டி பவுன் ரூ.24,384 ஆக விற்பனையானது.இந்த நிலையில் தங்கத்தின் விலை செவ்வாயன்று திடீர் என்று சரிந்துள்ளது.
ஒரே நாளில் பவுன் விலையில் ரூ.1272 சரிவு ஏற்பட்டுள் ளது. செவ்வாயன்று ஒரு கிராம் தங்கம் ரூ.2,886–க்கு விற்கப்பட்டது.இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தது பங்கு வர்த்தகத் திலும் எதிரொலித்ததன் காரண மாக வர்த்தகமும் சரிவைச் சந்தித் தது.
சென்செக்ஸ் 590 புள்ளிகள் சரிந்து 17,968 என்ற நிலையிலும், நிப்டி 189 புள்ளிகள் சரிந்து 5,287 என்ற நிலையிலும் இருக்கும் போது வர்த்தகம் நிறைவு பெற்றது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------
விரும்பப்படும் நச்சு.!??
suran 28/08/2013



தமிழகத்தில் நகரங்களில் மட்டும் அல்லாதுப ட்டிதொட்டியெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடைகளில் புரோட்டா கடைகளுக்கு முக்கிய இடம் உண்டு.
தமிழகம் மற்றும் கேரளாவில் மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவு புரோட்டாவாகும்.

இதிலும் எத்தனை வகை உண்டு.
முட்டை புரோட்டா, கொத்து புரோட்டா, விருதுநகர் எண்ணெய் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, சில்லி புரோட்டா என்று கூறும் போதே நாக்கில் எச்சில் ஊறும்.
குற்றாலம் செல்லும் அனைவரும் தவறாமல் பிரானூர் பார்டரில் கிடைக்கும் புரோட்டா கடைகளுக்கு சென்று ஒருகை பார்க்காமல் திரும்புவதில்லை.
கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் மைதாவில் இருந்து புரோட்டா தயாரிக்கப்படுகிறது. நமது ஊர்களில் அரிசி போல் அன்றாட உணவில் கோதுமையை பயன்படுத்தி வரும் வட இந்தியாவில் புரோட்டா விரும்பி சாப்பிடப்படுவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய தகவலாகும். இரண்டாம் உலக போரின் போது கோதுமை பற்றாக்குறையை களைய மைதா அதிகமாக பயன்படுத்தப்பட்டது. அவ்வேளையில் புரோட்டா தமிழகத்தின் உணவுவகைகளில் ஒன்றாக மாறியது. மைதாவின் தூய வெண்மை நம் மனதைக் கொள்ளை கொள்ளச்செய்யும்.
ஒரு நாகம் படம் எடுத்தால் பார்க்க அழகாக இருக்கும் . அதற்காக அதை கையில் எடுத்து விளையாட முடியுமா ? ஆனால் வெண்மையான மைதாவில் மறைந்திருக்கும் நச்சுப்பொருட்களை நாம் விரும்பி உண்கிறோம்.
 அதன் மூலம் நச்சை நாமே நமது உடம்பில் ஏற்றிக்கொள்கிறோம்.
இந்த மைதாவில் இருந்து புரோட்டா மட்டுமல்ல, சிறியோரில் இருந்து பெரியோர் வரை விரும்பி உண்ணும் கேக் உள்ளிட்ட பல பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
புரோட்டா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதை இங்கு விளக்க வேண்டியதில்லை. அது அனைவரும் நேரில் பார்த்த விஷயம்தான்.
ஆனால் மைதா எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதுதான் இங்கு கூறப்பட வேண்டிய தகவலாகும்.
அங்குதான் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன. அவைதான் உடம்பில் சேரும் நச்சுப்பொருட்களாகும் .
முதலில் கோதுமையை நன்றாக தீட்டுகிறார்கள்.
கோதுமையில் இருந்து தவிடும் நுண்ணுயிரிகளும் தீட்டுதலின் மூலம் நீக்கப்படுகின்றன. பின்னர் அதை மாவாக அரைக்கிறார்கள். அந்த மாவு நல்ல மஞ்சள் நிறத்தில் இருக்கும். பின்னர் அந்த மாவில் பென்சாயில் பெராக்சைடு  எனும் வேதிப்பொருளை கலக்குகிறார்கள். இந்த வேதிப்பொருள் கோதுமை மாவில் உள்ள மஞ்சள் வண்ணத்தை நீக்கி தூய வெண்மையாக மாற்றுகிறது.
இந்த வேதிப்பொருள் ஒரு நச்சாகும். தலைமுடியை கறுப்பாக மாற்றும் சாயத்தில் சேர்க்கப்படும் வேதிப்பொருள் இது.
இது மைதாவில் உள்ள மாவுப்பொருளுடன் இணைந்து உருவாக்கும் நச்சுப்பொருள் சர்க்கரை வியாதிக்கு காரணியாகிறது.
 மைதாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் (BENZOYL PEROXIDE)எனும் வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது கலக்கப்பட்டவுடன் மைதா வெகுமிருதுவாக மாறுகிறது.
சர்க்கரை வியாதிக்கு மருந்து தயாரிக்கும் ஆலைகளில் உள்ள சோதனைச்சாலைகளில் தயாரிக்கப்படும் மருந்துகள் முதலில் வெள்ளெலி, சிறுபன்றி, குரங்கு ஆகிய விலங்கினங்களிடம் சோதித்துப் பார்க்கப்படுகின்றன. இந்த மிருகங்களுக்கு சர்க்கரை வியாதியை உண்டாக்க இந்த அல்லோக்சான் ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த அல்லோக்சான் சேர்க்கப்படும் மைதாவை உண்பவர்களுக்கு சர்க்கரை நோய் உருவாகத்தானே செய்யும்.
suran
இவை தவிர மைதாவில் செயற்கை வண்ணங்கள், தாது எண்ணெய்கள், சுவையூட்டிகள், பதனப்பொருட்கள், வெள்ளை சீனி, சாக்கரின், அஜினோமோட்டோ ஆகிய பொருட்களும் சேர்க்கப்படுகின்றன. இவை மைதாவை மேலும் அபாயகரமானதாக மாற்றுகின்றன.
இவை தவிர குளோரின் டை-ஆக்சைடு, பொட்டாசியம் புரோமைட், அம்மோனியம் கார்பனேட், சுண்ணாம்பு, சார்பிடன் மோனோ சாச்சுரேட் போன்றவைகளும் கலக்கப்படுகின்றன. கோதுமை தீட்டப்படும் போதே 76 விழுக்காடு வைட்டமின்களும், தாது பொருட்களும் அகற்றப்படுகின்றன.
அத்துடன் 97விழுக்காடு நார்ச்சத்தும் களையப்படுகிறது.
களையப்பட்ட சத்துகளை மீண்டும் சேர்க்க செயற்கையாக உருவாக்கப்படும் வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் கூட்டப்படுகின்றன.
ஆனால் இவை இயற்கையாக கிடைப்பவற்றுக்கு இணையானவை அல்ல.
நார்ச்சத்து இல்லா உணவு நமது செரிமான சக்தியை அழித்து விடுகின்றன. எனவே இவற்றை குழந்தைகளுக்கு அளிப்பதை தவிர்ப்பது நல்லது. மைதாவில் சத்துக்கள் எதுவும் இல்லை. வெறும் சக்கையைத்தான் நாம் உண்கிறோம்.
ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளில் மைதாவில் தயாராகும் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 நீரிழிவு நோய் மருத்துவர்களும், இருதய நோய் மருத்துவர்களும் புரோட்டா சாப்பிடுவதை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர். நாம் என்ன உண்ண வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடும் விளம்பரங்களை கண்டு நாம் ஏமாந்து விடக்கூடாது. மைதா நமக்கு நன்மை பயக்காது. அதன் உற்பத்தியாளர்களுக்கு அள்ளிக்கொட்டும் காமதேனு. நமக்கு அது நச்சாகும்.
கேரளாவில் புரோட்டாவின், மைதாவின் தீமைகள் குறித்து பிரச்சாரம் தொடங்கி விட்டனர். புரோட்டா குறித்து ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று அப்போல்லோ மருத்துவமனை இதயநோய் மருத்துவர் ஏ.மாதவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இப்போதாவது நாம் விழித்துக்கொண்டு நம்மையும், நமது அடுத்த தலைமுறையையும் காப்போம்.
 பாரம்பரியமான கேப்பை, கம்பு, சோளம், வரகு, திணை ஆகியவற்றில் இருந்து தயாராகும் உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய மின் வசதி.?
--------------------------------

இந்தியாவில் 2001ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 5 லட்சத்து 93 ஆயிரத்து 732 கிராமங்கள் உள்ளன.
 இந்த கிராமங்கள் அனைத்திலும் மின்சார வசதி ஏற்படுத்த கடந்த 2005ம் ஆண்டு  திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது.
 திட்டப்படி 2009ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி செய்து கொடுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
அதுபோல வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களில் 2.77 லட்சம் குடும்பத்துக்கு இலவச மின்சாரம் வழங்க திட்டமிட்டது.
suran
ஆனால் கடந்த மாதம் வரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் கிராமங்களிலேயே மின் வசதி செய்யப்பட்டுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரம் குடும்பத்தினரே மின் இணைப்பு வசதியை பெற்றனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி இந்தியாவில் இன்னமும் 32,739 கிராமங்களில் மின் வசதி முழுமையாக இல்லை .
 இதில் 10,826 கிராமங்கள் உத்தரபிரதேசத்தில் உள்ளன.
ஒடிசாவில் 10,029, ஜார்க்கண்டில் 3163, பீகாரில் 1846, கிராமங்களில்  மின் வசதி இல்லை.
கர்நாடக மாநிலத்தில் இன்னமும் 13 கிராமங்களில் மின் இணைப்பு இல்லை.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப், அரியானா, கோவா, டெல்லி உள்பட 8 மாநிலங்களில் எல்லா கிராமங்களும் மின் வசதி உள்ளது.
யூனியன் பிரதேசங்களில் சண்டிகார், புதுச்சேரியில் 100 சதவீத மின் வசதி செய்யப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?