வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

“காணாமல் போய் விட்டன”


suran நிலக்கரிச் சுரங்கங்களுக்கான உரிமங்கள் முறைகேடுஒதுக் கீடு விவகாரத்திலோ தோண்டத்தோண்ட விவ காரங்களாகவே வருகின்றன. முறைகேடு ஒதுக்கீடுகள் தொ டர்பான முக்கிய கோப்புகள் “காணாமல் போய் விட்டன” .
நிலக்கரித் துறை அமைச்சரை விட்டு நாடாளுமன்றத்தில் விளக்கம் தர வைத்து, எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுத்த நிலையில் இப்போது மத்திய அரசு பிடிவாதத்தைக் கைவிட்டுள்ளது. இப்பிரச்சனை குறித்த விவாதங்களின்போது பிரதமர் தலையிட்டு பதிலளிப்பார் என்று அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
 இதை முதலிலேயே செய்திருந்தால் இந்தப் பிரச்சனையில் நாடாளு மன்றம் இத்தனை நாட்கள் முடக்கப்பட்ட நிலைமை ஏற்பட்டிருக்காது.
பிரதமர் மன் மோகன் நிலக்கரித்துறை அமைச்சகப் பொறுப் பையும் ஏற்றிருந்த 2006 முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஒப்புதல் அளிக் கப்பட்ட உரிமங்கள் தொடர்பான கோப்பு கள்  மாயமாகிவிட்டன என்பதால் தான் பிரச்சனையே
 ஆகவேதான் நாடாளு மன்றத்தில் அவரே பதிலளிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால், கோப்புகள் எதுவும் காணாமல் போகவில்லை, இடம் மாறியிருக்கக்கூடும், ஒரு சாதாரணப் பிரச்சனையை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறிவந்தார்கள்.
ஒன்று மில்லாத பிரச்சனை என்றால் அதை நாடாளு மன்றத்தில் வந்து சொல்வதில் பிரதமருக்கு என்ன தயக்கம்? எதிர்க்கட்சிகளின் உறுதி யான நிலைப்பாட்டினால் இப்போது பிரதமர் தலையிடுவார் என்று அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. முதலிலேயே இந்த நிலைப்பாட்டிற்கு அரசு வந்திருக்குமானால் நாடாளுமன்ற நேரம் வீணாகியிருக்காது.
தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) இந்த மெகா ஊழல் பற்றிய அறிக்கையை வெளியிட்டபிறகு, உச்சநீதிமன்றம்தான் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டது.
 அமைச்சகத் திடமிருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களை சிபிஐ கடந்த மே மாதமே கேட்டிருந்தது. ஆனால் அமைச்சகம் பதிலளிக்காமலே இருந் தது.
suran
மொத்தம் 225 வகையான ஆவணங்களை கேட்டிருந்தது. அமைச்சகம் கொடுத்திருப்பதோ 68 ஆவணங்கள்தான்.
ஆக, எந்த ஆவணங் களைக் கொடுப்பது எவற்றைக் கொடுக்காமல் இருப்பது என்று முடிவு செய்வதற்குத்தான் இழுத்தடிக்கப்பட்டதோ என்ற நியாயமான ஐயம் எழுகிறது. இன்றைய டிஜிட்டல் பதிவு யுகத்தில், பழைய கோப்புகள் ‘காணோம்’ என்று சொல் லப்படுவதை யார் நம்பு வார்கள்?
 ஆவணங் களை “மறுகட்டுமானம்” செய்ய - அதாவது திருத்தியமைக்க - அமைச்சகம் முடிவு செய்திருப்பதாக வந்த செய்தியோடும் இதை இணைத்துப் பார்க்காமல் இருக்க முடி யாது.இந்த விவாதத்தில் பிரதமர் தலையிடுவார் என்று இப்போதாவது அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதுதான்.
அந்தத் தலையீடு “காணாமல் போன” ஆவணங்களை மீட்பது தொடர்பாகத் திட்டவட்டமான நிலைகளைச் சொல்வதாக, வழக்கில் சரியான தீர்ப்பு வர உதவுவதாக இருக்க வேண்டுமேயன்றி, பூசி மழுப்புகிற வேலையாகிவிடக்கூடாது.

-----------------------------------------------------------------------------------------------
160 லட்சம் டாலர் மதிபுள்ள சொகுசு கார்
-------------------------------------------------------------------------------------
அமெரிக்காவில் உள்ள நியூயார்க், கலிபோர்னியா, இலினியாஸ் உள்பட பல மாநிலங்களில் மாபெரும் வால்மார்ட் கடைகள் உள்ளன.
இந்த கடைகளில் ஆயிரகணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை.
suran
 கடைகளில் அவர்களுக்கு தேவையான கழிவறை, உணவு உண்பதற்கான அறை போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை .
 ஆனால் வால்மார்ட் தலைவர் ராப்சன் வால்டன்(68) மிகவும் ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார். மேலும் அவர் 160 லட்சம் டாலர் மதிபுள்ள மெசார்த்தி, பெராரி உள்பட 4 ஆடம்பர கார்களை வைத்துள்ளார்.
அடிக்கடி கார் பந்தயங்களில் கலந்து கொண்டு ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார்.தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம் வழங்காமல், வசதிகள் செய்து கொடுக்காமல், தங்கள் நிறுவனத்தின் தலைவர் மட்டும் பல கார்களை வைத்துக்கொண்டு ஆடம்பரமாக செலவு செய்வதற்கு வால்மார்ட் தொழிலாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் கலிபோர்னியா மாநிலத்தில் லகுனா சிசா நகரில் உள்ள வால்மார்ட் கடை முன்பும், கார் பந்தய மைதானம் முன்பும் வால்மார்ட் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
suran
அப்போது அவர்கள் வால்மார்ட் தலைவர் ராப்சன் வால்டனின் ஆடம்பரத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதுபற்றி ஆர்ப்பாட்டகாரர்களில் ஒருவரான டோனி பெரைரா கூறும்போது" ராப்சன் வால்டன் மிகவும் செல்வந்தராக இருக்கிறார். இதற்காக அவரை வாழ்த்துகிறேன். ஆனால் வால்மார்ட் தொழிலாளர்கள் சரியான உணவு இல்லாமல் தவிக்கும்போது, ராப்சன் வால்டன் 160 லட்சம் டாலர் மதிபுள்ள சொகுசு கார்களில் சுற்றுவது அவசியமா? என்று கேட்கத் தோன்றுகிறது.
ராப்சன் வால்டன் தனது செல்வத்தை அனுபவிக்கட்டும். ஆனால் தனது தொழிலாளர்களை பட்டினியிலும், வேதனையிலும் தவிக்கவிட்டு விட்டு, அவர் மட்டும் ஆடம்பரமாக செலவு செய்வதை ஏற்கமுடியாது "என்று  தெரிவித்தார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
லாப வேட்டைக்கு துணை போகலாமா?
                                                                                                                                         -கி.இலக்குவன்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் களை அனுமதிக்கலாமா?
கூடாதா?
 என்ற விவாதம் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் நடைபெற்று வருகிறது.
இரண்டு அடிப்படைகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த பயிர்களைப் பயன்படுத்தும் மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உடல் ஆரோக்கி யம் பாதிக்கப்படும் என்பது ஒன்று.
suran
இந்த பயிர்களைப் பயன்படுத்தி விவசாயம் நடைபெறும் நிலங்களைச் சுற்றியுள்ள நிலங்களின் விளைச்சல் பாதிக்கப்படும் என்ற அச்சம் மற்றொன்று. மரபணுமாற்றம் செய்யப்பட்ட விதைகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அறிவு சால் சொத்து டைமை அளிக்கப்படுவதால் விவசாயி கள் விதைகளுக்காக அந்த நிறுவனங் களை சார்ந்திருக்கும் நிலையும் ஏற்படும்.
 பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத் தில் ஈடுபட்டு வரும் இந்தியா போன்ற நாடுகளின் பல்வேறு பயிர் வகைகள் அழிந்து போகும் நிலை ஏற்படும். விவ சாயிகள் தாங்களே விதைகளை உற்பத்தி செய்து கொள்ளும் நடைமுறையும் இல் லாமல் போய்விடும்.மரபணு மாற்றப்பட்ட பயிர்களை நம் முடைய நாட்டில் சோதனை அடிப்படை யில் பயிரிடுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர்குழு தனது இறுதி அறிக்கையை கடந்த மாதம்(ஜூலை) சமர்ப்பித்துள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் களை விளைவிப்பதால் ஏற்படக்கூடிய அபாயம் குறித்து இதுவரை செய்யப்பட்ட மதிப்பீடுகள் நாணயமானவையாகவோ சுயேச்சைத்தன்மையுடனோ, அறிவியல் பூர்வமானவையாகவோ இருக்கவில்லை என்பதை இந்த வல்லுநர் குழுவின் அறிக் கை அம்பலப்படுத்தியுள்ளது.
சோதனை அடிப்படையிலும் கூட இவற்றைப் பயிரி டுவதை இந்த அறிக்கை அதிகாரப் பூர்வமான முறையில் தடை செய்கிறது. மர பணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதித்தால் விவசாயம் தொடர்ந்து செம்மையாக நீடிப்பது தடைப்படும்.
கிராமப்புற வாழ்க்கை நிலை மற்றும் சுற்றுச்சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பது வல்லுநர் குழுவின் கருத்தாகும்.
suran
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை சோதனை அடிப்படையில் பயிரிடுவதற்கு முன்னர் அளிக்கப்பட்ட அனுமதிக்கு கவனக்குறைவோ, இயல்பான மனிதத் தவறோ காரணம் அல்ல என்பதை சுட் டிக்காட்டியுள்ள நாடாளுமன்றக் கூட்டுக் குழு அரசாங்கத்துக்கும் பன்னாட்டு விதைக் கம்பெனிகளுக்கும் இடையே ஏற்பட்ட நேர்மையற்ற கூட்டின் காரண மாகவே கள ஆய்வுக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது என்று கூறியுள்ளது.
 மரபணு மாற்றப்பட்ட கத்தரியை பயிரிடுவதை ஜெயராம் ரமேஷ் குழு 2010ம் ஆண்டு பிப்ர வரி மாதத்திலேயே தடை விதித்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.
உயர்மட்ட முறைப்படுத்தும் குழுவினால் வணிக ரீதியில் கத்தரியை பயிரிடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியே இவ்வாறு ரத்து செய்யப்பட்டிருந்தது.
இதே நிலை யை 2012 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப் பட்ட சோபோரி குழுவும் அதே காலத்தில் வெளியிடப்பட்ட நாடாளுமன்றக்குழு வின் அறிக்கையும் உறுதிப்படுத்தியிருந்தன.
மரபணு மாற்றம் செய்யப்படும் பயிர் களைப் பற்றி தனது கருத்தை வெளியிட் டுள்ள உலக சுகாதார நிறுவனம் இந்த சாகுபடி எதிர்பாராத விளைவுகளை ஏற் படுத்தக் கூடியது. அந்த விளைவுகளை உடனடியாக காண முடியாது. அவற்றைக் கண்டறிய பல ஆண்டுகள் பிடிக்கும். இந்த பயிர்கள் சோதனைச் சாலையில் உருவானவை.
இவை இயற்கையானவை அல்ல என்று கூறியுள்ளது.இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வணிக ரீதியாக பயிரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அவை மக்க ளின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழ லைப் பாதிக்கின்றன என்பதற்கான ஆதா ரங்கள் அங்கே மேலும் மேலும் அதிக அள வில் தொடர்ந்து வந்து கொண்டேயிருக் கின்றன. அது மட்டுமல்ல, உலக அளவில் இயற்கை வேளாண்மை மூலம் உற்பத்தி யாகும் பயிர்களின் விளைச்சல் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் விளைச்சல் குறைந்து வருவதையே அமெரிக்காவிலிருந்து கடந்த 20 ஆண்டு களாகக் கிடைக்கும் புள்ளி விபரங்கள் உணர்த்துகின்றன.
suran
பூச்சிக் கொல்லி மருந்துகளின் தேவை குறைந்து விடும் என்று வாய்ப்பந்தல் போட்ட விதைக் கம் பெனிகளின் கூற்றுக்கு மாறாக அவற்றுக் கான செலவு பலமடங்கு அதிகரித்துள் ளது என்பதே உண்மைநிலையாக உள்ளது.
இந்தியாவிலும் மரபணுமாற்றப்பட்ட பருத்தியை 63 லட்சம் விவசாயிகள் பயிரிட்டனர். அமோக விளைச்சலைக் காணமுடியும் என்ற விதைக் கம்பெனி களின் பிரச்சாரத்தை நம்பி பயிரிட்ட விவசாயிகளின் கசப்பான அனுபவம் தற்கொலைகளுக்கு இட்டுச்சென்றன. வளர்ச்சிக்கான விவசாய அறிவு மற்றும் விஞ்ஞானம் என்ற அமைப்பின் கீழ்400 விஞ்ஞானிகள் பங்கேற்ற ஐ.நா. ஆய்வு நான்காண்டுகள் செயல்பட்டுஒரு கருத் தை வெளியிட்டது. மூன்றாம் உலக நாடு களுக்கு சிறு நிலவுடைமையாளர்கள் மூலம் செய்யப்படும் பாரம்பரிய விவசாய முறையே மிகவும் பொருத்தமானது என்ப தாகும்.
ஐரோப்பிய ஒன்றியத்திலும் மர பணு மாற்றப்பட்டப் பயிர்களுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் அங்கே தனது விதைகளை வணிகம் செய்வதற்கு அனுமதி கோரப் போவதில்லை என்பதை பகாசுர மாண்சான்டோ விதை நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 உலக மற்றும் இந்திய அனுபவம் இவ்வாறாக இருக்க அதற்கு ஒத்துப்போகும் நிலையில் வெளியிடப் பட்டுள்ள வல்லுநர் குழுவின் அறிக் கைக்கு சரத் பவார் தலைமையிலான மத்திய விவசாயத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வல்லுநர் குழுவிட மிருந்து சாதகமான அறிக்கையைப் பெறு வதற்காக விதைக் கம்பெனி வட்டாரங் களிடம் நிதியுதவி பெறும் ஒருவரை மத்திய விவசாய, அமைச்சகம் இக்குழுவுக்குள் புகுத்தியது. இதற்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதையடுத்த அவர் வல்லுநர் குழுவின் இறுதி அறிக்கையில் கையெழுத்திடாமல் ஒதுங் கிக் கொண்டார்.
suran
இந்திய விவசாய விஞ் ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் ஒரு பகுதியினரை தனக்கு ஆதரவாக மாண்சான்டோ நிறுவனம் திருப்பிவிடு வதில் வெற்றி பெற்றது. அவர்கள் இந்த விதைக் கம்பெனியின் பிரச்சார ஏடுகளில் இடம் பெற்ற கருத்துக்களை தங்கள் கருத்துக்களைப் போல அப்படியே வாந்தி எடுத்ததிலிருந்து இதனைக் காண முடிந்தது.
இந்தியாவில் பயிரிடப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளில் 90 சத வீதம் மாண்சான்டோ கம்பெனிக்கு சொந்த மானது என்ற நிலைக்கு அது இட்டுச் சென்றது. அமெரிக்காவிலிருந்து வரக் கூடிய எதனையும் புளகாங்கிதத்துடன் வரவேற்கக் கூடிய பிரதமர் அலுவலகம் பன்னாட்டுக் கம்பெனிகளின் ஊதுகுழ லைப்போல செயல்படும் விவசாய ஆராய்ச்சி அமைப்புகளின் கருத்துக் களை ஆதாரமாகக் காட்டி மரபணு மாற்றப்பட்ட கத்தரிப்பயிரின் அருமை பெருமைகளுக்கு போற்றிப்பாடல்களை பாடி வருகிறது.
விஞ்ஞான முன்னேற்றத்தை நாட்டு நலன்களுக்கு பயன்படுத்தக் கூடாதா? என்று வினா எழுப்புவோர் உண்டு.
 இந் திய விஞ்ஞானிகள் இந்தியாவின் களச் சூழலுக்கு ஏற்ற விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளை உருவாக்கி அவை பாதக மானவிளைவுகளை ஏற்படுத்தாது என் பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு அவற்றைப் பயன்படுத்துவதில் தவறில் லை. தங்களுடைய வணிக நோக்கங் களுக்காக செயல்படும் அந்நியக் கம் பெனிகளின் சூழ்ச்சிகளுக்கு இந்திய வேளாண்மையை பலிகடாவாக்கி விடக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஐ.மு.கூட்டணியின் ஊழல் பட்டிய லில் இதுவும் ஒரு ஊழலாக உருவாகி வருகிறது. வேறு துறைகளில் நடைபெறும் ஊழல்களிலிருந்து தப்பி மீண்டு வந்து விடமுடியும்.
ஆனால் விவசாயத் துறை யில் தற்போது அரங்கேறிவரும் ஊழல் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் நாட்டின் வேளாண்மையே சீரழியும் நிலை ஏற்படு வதைத் தவிர்க்க முடியாது அந்நிய விதைக் கம்பெனிகளிமிருந்து பெறப்படும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் கண்மூடித்தனமான முறையில் புகுத்தப் படுமானால் இந்திய வேளாண் சுற்றுச் சூழல் பெரும் அளவில் மாசுபடும்.

suran

பாரம் பரியமாக பயிரிடப்பட்டு வரும் பயிர் ரகங் கள் காணாமல் போய்விடும்.

தங்களுக்குத் தேவைப்படும் விதைகளை இதுகாறும் தாங்களே தயாரித்து வந்த விவசாயிகள் அந்நிய நாட்டுக் கம்பெனிகளின் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

அவர்கள் தயாரித்து தரும் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றை அதிகவிலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

 அந்நிய நிறுவனங்களின் லாப வேட்டைக்கு துணைபோகும் மத்திய அர சின் கேவலமான முயற்சிகளுக்கு எதி ராக இந்திய விவசாயிகள்  போராடவேண்டும் என்பதே இன்றுள்ள நிலை.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வேட்டி கட்டிய நிதியமைச்சருக்கு 
--------------------------------------------------
 மனம் திறந்த மடல்.!
-------------------------------------------
மாண்புமிகு நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு தங்களது சிவகங்கை தொகுதியை சேர்ந்த வாக்காளன் ஏகாம்பரம் எழுதிக் கொண்ட மனம் திறந்த மடல்.
வாரம் தவறினாலும் தாங்கள் தொகுதிக்கு வர தவறுவதில்லை. ஆனால், வாக்காளர்களாகிய எங் களுக்கு தான் குறிப்பிட்டு சொல்லும் படியான திட்டம் எதுவும் அதில் இல்லை.ஏனெனில், வருகிறீர் ஒரு ஏடிஎம் வங்கி கிளையை திறக்கிறீர், நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று மனம் கூசாமல் சொல்கிறீர்.
suran
பின்னர் பறந்து செல்கிறீர். இதுதான் தங்களு டைய வாராந்திர வேலையாக சிவகங் கை தொகுதிக்கு தாங்கள் செய்யும் சலுகையென்றால் அது மிகையாகாது.
பழைய சரித்திர சம்பவம் ஒன்றை எல்லோரும் சொல்வதை தங்க ளுக்கு நினைவூட்டுவது தவறில்லை என்றே படுகிறது. முதல் சுதந்திர இந்திய அரசாங்கத்தில் நேருவின் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தவர் ஆர்.கே.சண்முக செட்டி யார் என்ற தமிழர். அமெரிக்காவின் விருப்பத்திற்கு ஏற்ப 1.60 காசு என்றிருந்த நமது ரூபாயின் மதிப்பை மேலும் குறைக்க வேண்டுமென்று கேட்ட போது அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. ராஜினாமா செய்து விட்டு தமிழகம் திரும்பிவிட்டார்.
இதேபோல், அடுத்த சில ஆண்டு களில் தமிழகத்தை சேர்ந்த நிதி யமைச்சரான டி.டி.கிருஷ்ணமாச் சாரியும் இந்திய பணத்தின் மதிப்பை குறைப்பதை எதிர்த்து ராஜினாமா செய்திருக்கிறார். இவரும் தமிழர்தான்.
 இத்தனைக்கும் அவர் மிகப்பெரிய தொழில் முதலாளியும் கூட.ஆக, வேட்டி கட்டிய அந்த தமிழர் களுக்கு இருந்த ஆளுமை உங்க ளுக்கு இல்லாமல் போனது ஏன்?
நீங் களும் வேட்டி கட்டிய தமிழர் தானே? 1947ம் ஆண்டு நமது நாடு விடு தலையடைந்த போது ஒரு அமெரிக்க டாலருக்கு 1.60 என்றிருந்த நமது ரூபாயின் மதிப்பு இன்று ஒரு அமெரிக்க டாலருக்கு 64 ரூபாய் என வீழ்ச்சியடைந்திருப்பதற்கு நிதி யமைச்சர் என்ற முறையில் தாங்களே பொறுப்பேற்க வேண்டுமென்பதை என்றைக்காவது நீங்கள் உணர்ந் திருக்கிறீர்களா?இந்த பண மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக நாடு முழுவதும் விலை வாசி இன்சாட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கிறது.
நாணய மதிப்பின் வீழ்ச்சியை கேலியும், கிண்டலும் செய்து ஊடகங்கள் தினசரி கட்டுரை களும், கேலி சித்திரங்களும் தீட்டிக் கொண்டே இருக்கின்றன.
ஆனால் இது எதனையுமே தாங்க ளோ, தாங்கள் சார்ந்த கட்சியோ அல் லது பிரதமரோ கண்டு கொண்ட தாகவே தெரியவில்லை.
suran
 விரைவில் சரியாகிவிடும் என்ற பதிலை மட்டுமே கிளிப்பிள்ளை போல தாங்கள் திரும்ப, திரும்ப சொல்லிக்கொண்டி ருக்கிறீர்கள்.தாங்கள் சார்ந்த நாட்டுக் கோட் டை நகரத்தார் நிதியை சேகரிப்பதி லும், சேமிப்பதிலும், செலவழிப்பதி லும், மிகவும் புத்திசாலித்தனமான வர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்.
அப்படிப்பட்ட புகழ்பெற்ற நுட்ப மான சமூகத்தில் பிறந்த தாங்கள் இந் தியாவை எந்த வழியிலும் பிழைக்க வைக்கும் ஏற்பாட்டில் இல்லவே இல்லை என்பதால்தான் இன்று நாட்டு மக்கள் படு அவதிக்கு ஆளாகி யுள்ளார்கள்.
இந்தியாவில் அத்தியாவசியப் பொருள், அன்றாடத் தேவை பொருள், ஆடம்பரப் பொருள் இவை எதிலுமே வித்தியாசமில்லாமல் எல்லாமே ஒரே விலையில்தான் இருக்கிறது.
அதாவது வெங்காயம் ரூ.75, பெட்ரோல் ரூ.75, பீர் பாட்டில் ரூ.75 என்று பேஸ் புக்கில் ஒரு வாசகர் எழுதியிருக்கிறார்.
 தங்களின் பொறுப்பின்மையை, நாட்டு மக்களின் மீதுள்ள அக்கறையின்மை யை இதைவிட நளினமாக யார் சுட்டிக் காட்ட முடியும்?அன்றாடம் உபயோகிக்கும் மிக மலிவான விலையில் கிடைக்க வேண்டிய வெங்காயத்திலிருந்து அத் தனை உணவுப் பொருட்களின் விலை களும் உயர்ந்து கொண்டே இருப் பதை திரும்ப, திரும்ப சொல்ல வேண்டியதில்லை. பண வீக்கத்தின் காரணமாக பணப்புழக்கம் குறைந்து விட்டது.
 சிறு, குறுந்தொழில்கள் பெரும்பாலும் அழிந்துவிட்டன. பெரும் தொழில்கள் நசிகின்றன. ஏழைகளும், நடுத்தர மக்களும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தாங்களோ இந்திய நாட்டின் ஏகபோக முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.

suran
அவர்கள் வாங்கிய கடனை வஜா செய்து கொண்டே இருக்கிறீர்கள்.
கேவலம் வோடாபோன் என்ற ஒரு வெளிநாட்டு செல்போன் கம்பெனிக் காரன் நமக்கு செலுத்த வேண்டிய 16 ஆயிரம் கோடி ரூபாய் வரியை தங்க ளால் வசூல் செய்ய இயலவில்லை. இப்போது ஏர்டெல் நிறுவனம் 165 கோடி ரூபாய் அபராதப் பணம் கட்ட வேண்டியிருக்கிறது என்ற செய்திகள் வந்துகொண்டிருக்கிறது.
கோதாவரி நதிப் படுகையில் எடுக் கப்படும் எரிவாயுவிற்கு ஒரு கியூபிக் மீட்டருக்கு 4 ரூபாய் 40 காசு விலை நிச்சயிக்கப்பட்டிருந்ததை ஒரே நாளில் 8 ரூபாய் 80 காசாக உயர்த்திக் கொடுத்து ரிலையன்ஸ் கம்பெனி கொள்ளையோ கொள்ளையடிக்க தங்களது அரசுதான் அனுமதித்தது. அதேசமயம், உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு கிலோ அரிசியை 3 ரூபாயிலிருந்து 2 ரூபாயாக குறைப் பதற்கு 3 வருடமாக ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்.
ஏழை கள் மீது உங்கள் அரசு பாசத்திற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு.
ஆக, இந்தியாவில் பெரும் பணம் படைத்த முதலாளிகளும், கோடீஸ் வரர்களும் மேலும் மேலும் செல்வத் தில் மிதக்க, ஏழைகளும், நடுத்தர மக் களும் அதள பாதாள வாழ்க்கையில் அமிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
 நீங்களோ, தங்கள் மீதுள்ள 2ஜி அலைக்கற்றை, ஏர் செல் மேக்சிஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளி லிருந்து தப்பிக்க, குச்சனூர் சனீஸ்வர பகவானிடம் வந்து வேண்டுதல் செய்து வழிபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
                                                      - இங்ஙனம் தங்கள் தொகுதியின் பரிதாபத்திற்குரிய வாக்காளன் ஏகாம்பரம் 

 கற்பனை : இரா.ஜோதிராம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------- 
suran