என்னவெல்லாம் ..,விண்டோஸ் 8.1.?


வீடியோ சேட் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தொகுப்பான ஸ்கைப், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தொகுப்புடன் இணைந்து தரப்படுகிறது. தற்போது ஏறத்தாழ, 30 கோடி பேர் ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து மைக்ரோசாப்ட் தருகிறது.
suran
  பயனாளர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கும் இனிய அனுபவத்தினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இதனைத் தருவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 8ல் இயங்கிய ஸ்கைப் குறித்து பல பயனாளர்கள் அவர்களின் பின்னூட்டக் கருத்துக்களைத் தந்துள்ளதாகவும், அவை அனைத்தும் புதிய ஸ்கைப் தொகுப்பின் வடிவமைப்பில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
  அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும்.
முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக விண்டோஸ் 8.1 ஐ மைக்ரோசாப்ட் தருகிறது. இது ஏற்கனவே விண்டோஸ் 8 வைத்திருப்பவர்களுக்கு, முற்றிலும் இலவசமாகும். மைக்ரோசாப்ட் நிறுவனம், பல விஷயங்களை முதல் முதலாக இதில் மேற்கொண்டுள்ளது.
suran
விண்டோஸ் 8.1 தொகுப்பில்தான் முதல் முதலாக மைக்ரோசாப்ட் புதிய வசதிகளை இலவசமாக அமைத்துத் தருகிறது. இதுவரை, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்த தவறுகளை நீக்கும் பேட்ச் பைல்களைத்தான் மைக்ரோசாப்ட் தந்துள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எண்ணப்போக்கிலும், செயல்முறை யிலும் ஏற்பட்ட நல்லதொரு மாற்றமாகும்.
இந்த புதிய செயல்பாட்டிற்குக் காரணமும் உள்ளது. முன்பு சிடி வழியாகவே, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மாற்றங்கள் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்தன. ஆனால், இப்போது இணையம் மூலம் எதனையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம். சிஸ்டத்தில் மாற்றங்களைத் தயார் செய்தால், பல மாற்றங்களை இணைத்து, பெரிய அளவில் அப்டேட் ஆகத் தராமல், எப்போதெல்லாம் புதிய வசதிகள் வடிவமைக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம், உடனுக்குடன், அவற்றை இணையம் வழியாகத் தரலாம்.
மேலும் வாடிக்கையாளர்களை என்றென்றும் தங்களுடன் அழைத்துச் செல்ல முயற்சிக்கையில், மாற்றங்களுடன் கூடிய வசதிகளை இலவசமாகத் தருவதே நல்லது.
 இந்த வகையில், விண்டோஸ் 8.1 வருகையில், விண்டோஸ் 8 பயனாளர்கள் அதனை ஒதுக்க மாட்டார்கள்.
 நிச்சயம் ஏற்றுக் கொண்டு செயல்படுவார்கள்.
 நம் வாசகர்கள் பலர், விண்டோஸ் 8.1 சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து இயக்கித் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினையும், சந்தேகங்களையும் நமக்குத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், இந்த தொகுப்பு தரும் முக்கிய மாற்றங்களை இங்கு சின்னதாகப் பட்டியல் இடலாம்.
1. ஸ்டார்ட் பட்டன், சிறிய லைவ் டைல்ஸ், அளவினை மாற்றி அமைக்கக் கூடிய டைல்ஸ், மற்றும் ஒருங்கிணைந்த தேடுதல் வசதி. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கேட்ட ஸ்டார்ட் பட்டன், திரையின் இடது புறம் கீழாக உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்பட்டு, அதில் சில சொற்களை அமைத்துத் தேடி, நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பெறலாம்.
suran
ரைட் கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் செட்டிங்ஸ், டாஸ்க் மேனேஜர், தேடல் கட்டம் மற்றும் பயனுள்ள பல சிஸ்டம் டூல்ஸ்கள் தரப்படுகின்றன. இந்த பாப் அப் மெனுவின் கீழாக, சிஸ்டத்தை ஷட் டவுண் செய்திட, ரீஸ்டார்ட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. (விண்டோஸ் 8ல், திரையின் மேல் வலது மூலைக்குச் சென்று, கீழாக இழுத்து, செட்டிங்ஸ் கிளிக் செய்து, பின் பவர் என்பதில் கிளிக் செய்து, அதன் பின் ஷட் டவுண் அல்லது ரீஸ்டார்ட் தேர்ந்தெடுக்க வேண்டியதிருந்தது)
2. டைல்ஸ்களை குரூப்பாக அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது.
3. பயனாளர்கள், இப்போது நேரடியாக, டெஸ்க்டாப் நிலைக்கு லாக் இன் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 8ல் ஸ்டார்ட் மெனு சென்று தான் இதனைப் பெற முடியும்.
4. லாக் ஸ்கிரீனிலேயே அப்ளிகேஷன்கள் கிடைக்கின்றன.
5. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவுடன் இணைந்த கிளவ்ட் ஸ்டோரேஜ்.
6. ஒருவழியாக விண்டோஸ் ஸ்டோருக்கான அப்டேட் இதில் கிடைக்கிறது.

என்னவெல்லாம் இல்லை?
-----------------------------------------
1. புதிய ஸ்டார்ட் பட்டன், ஸ்டார்ட் மெனுவினைத் தரவில்லை.
2. இன்ஸ்டால் செய்யப்பட்ட அப்ளிகேஷன்கள், மாறா நிலையில் தாமாகவே, ஸ்டார்ட் ஸ்கிரீனில் பின் செய்யப்படவில்லை. இன்ஸ்டால் செய்யப்பட்ட பின்னர், நாமாக சர்ச் பாக்ஸ் மூலம் தேடிப் பெற வேண்டும்.
ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கங்கள் தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்புகளை அடிக்கடி வெளியிடுவது போல, இனி மைக்ரோசாப்ட் நிறுவனமும், இந்த சிஸ்டத்தின் புதிய பதிப்பினை வெளியிடும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அத்துடன், வழக்கமான விண்டோஸ் அப்டேட் சுழற்சியின்படி, இரண்டாண்டுக்கு ஒரு முறை பெரிய அளவில், விண்டோஸ் 8 சிஸ்டம், மேம்பாடுகளுடன் மாற்றித் தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Click Here

suran



-------------------------------------------------------------------------------------------------------------------------------------

suran
ஆகஸ்ட் 30: திரைப்பட நகைச்சுவை நடிகர், கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு தினம் 
நாகரிகக் கோமாளி...
 நூற்றாண்டைக் கடந்து வாழும் கலைவாணர்!...

நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தவர். தந்தை சுடலைமுத்துப் பிள்ளை. தாயார் இசக்கி அம்மாள். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே!

வறுமையின் காரணமாக நான்காம் வகுப்புடன் கலைவாணரின் பள்ளிக்கூடப் படிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு நாடகக் கொட்டகையில் சோடா, கலர் விற்கத் தொடங்கினார். அப்படித்தான் நாடக ஆர்வம் ஆரம்பமாயிற்று.
ஆனந்த விகடனில் இவர் எழுதிய 'சதிலீலாவதி' தொடரை அதே பெயரில் படமாக்கினார் என்.எஸ்.வாசன்.
அதுதான் கலைவாணரின் முதல் படம்.
ஆனால், 'சதிலீலாவதி'யை முந்திக்கொண்டு என்.எஸ்.கே. அடுத்து நடித்த 'மேனகா' படமே முதலில் திரைக்கு வந்தது.
மொத்தம் 122 படங்களில் நடித்திருக்கிறார்!

இவரது மனைவி மதுரமும் பிரபலமான நடிகை என்பதால் இருவரும் இணைந்தே பல படங்களில் நடித்தனர்.
நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தவர்.
சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.

பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். பழங்கலைகளின் பண்பு கெடாமல் அவற்றைப் புதுமைப்படுத்தி மக்கள் மன்றத்திற்குத் தந்தவர்.
அவர் நடத்திய கிந்தனார் கதாகாலட்சேபமும், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு போன்றவைகளும் இதற்குச் சான்று.

1957 ஆம் ஆண்டு இதே தேதியில் தேதி தனது 49வது வயதில் கலைவாணர் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார். 
தமிழ்நாடு அரசு இவரது நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது. 

------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தியா  ---- சீனா
-----------------------------

* ஜி.டி.பி. எனப்படும் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் இந்தியா 5% சீனா 7.8 சதவிகிதமாக உள்ளது.


 * வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 2011-12 கணக்கெடுப்பின் படி 21.9 சதவிகிதமாகவும், சீனாவில் 10.2 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது. 

* இந்தியாவில் உள்ள வனப்பகுதியின் அளவு 23 சதவிதமாகவும், சீனாவில் அது 21.3 சதவிகிதமாகவும் இருந்து வருகிறது. 

 * இந்தியாவும் சீனாவும் ஒத்துப் போகிறது என்றால் அது மேம்படுத்தப்பட்ட குடிநீர் பயன்படுத்துவோர் விகிதத்தில்தான். இரு நாடுகளிலும் 92%  பேர் மேம்படுத்தப்பட்ட குடிநீரை பயன்படுத்தி வருகின்றனர்.
* அதே போல நகர்புற குடிசைவாழ் மக்களின் எண்ணிக்கை விகிதத்திலும் இரு நாடுகளும் சம நிலையில் உள்ளன. இரு நாடுகளின் நகர்புற குடிசைவாழ் மக்களின் சதவிகிதம் 29.4%.
* இந்தியாவில் வாழும் மக்களில் ஒரு லட்சத்திற்கு 249 பேரிடம் காச நோய் பரவி காணப்படுகிறது. இது சீனாவில் ஒரு லட்சத்திற்கு 104 பேரிடம் இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?