இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைகீழ் முன்னேற்றம்

படம்
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்  உற்பத்தி, கட்டுமானம், சேவைகள் உள்ளிட்ட தொழில் துறை முடங்கியுள்ள நிலையில் பலரும் வேலையிழந்துள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், வருவாய் இழப்பைச் சரிசெய்ய சம்பளத்தைக் குறைப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன. இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு பாதிப்புகள் குறித்து இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, நடப்பாண்டின் மே - ஆகஸ்ட் காலத்தில், இந்தியாவில் ‘வொயிட் காலர்’ ஜாப் (White collarprofessional jobs) எனப் படும் ‘அழுக்குப்படாத வேலைகள்’ பிரிவில் 60 லட்சம் பேர்வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வொயிட் காலர் பிரிவில், 2016- ம் ஆண்டின் மே - ஆகஸ்ட் மாதங்களில

எல்லாவற்றுக்கும் கொரோனாதானா பழி.

படம்
  இந்திய பொருளாதாரத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட கொரோனா மட்டுமே காரணமல்ல என்றும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்திய பொருளாதாரம் சரிவில் இருந்து பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது என்றும் விமர்சிக்கிறார் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன். கடந்த ஆண்டின் காலாண்டு ஜிடிபி புள்ளிவிவரங்களோடு இந்த ஆண்டு வெளியாகியுள்ள முதல் காலாண்டு தகவல்களை ஒப்பிட்டு கூறும் ஜெயரஞ்சன், இந்த ஆண்டு இந்தியா சந்தித்துள்ள வீழ்ச்சியின் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கும் என்கிறார். கேள்வி :  இந்தியா  பொருளாதாரம் 24 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவை சந்தித்துள்ளதற்கு கொரோனா ஊரடங்கு முக்கிய காரணமா? பட மூலாதாரம், FACEBOOK படக்குறிப்பு, ஜெயரஞ்சன் இன்று இந்தியா சந்தித்துள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு கொரோனா ஒரு காரணம் ஆனால் அதுமட்டுமே காரணம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் கீழ்நோக்கி பயணம் செய்துகொண்டிருந்தது என்பதை கவனியுங்கள். கொரோனா முடக்கத்தால் மேலும் பாதிப்படைந்து (மைனஸ்)-23.9சதவீதத்திற்கு சென்றுவிட்டது. ஏற்கனவே இருந்த பொருளாதார மந்தநிலை, கொரோனா முடக்கமும் சேர்ந்து பெரிய பாதிப்பை ஏற