திங்கள், 21 செப்டம்பர், 2020

தலைகீழ் முன்னேற்றம்

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 

உற்பத்தி, கட்டுமானம், சேவைகள் உள்ளிட்ட தொழில் துறை முடங்கியுள்ள நிலையில் பலரும் வேலையிழந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டு தொழில் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியிருந்தாலும், வருவாய் இழப்பைச் சரிசெய்ய சம்பளத்தைக் குறைப்பது, வேலையை விட்டு நீக்குவது போன்ற நடவடிக்கைகளை நிறுவனங்கள் மேற்கொண்டுவருகின்றன.

இதனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலையின்மை விகிதம் மிகக் கடுமையாக அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்டுள்ள வேலையிழப்பு பாதிப்புகள் குறித்து இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

“மே - ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 60 லட்சம் பேர் வேலையிழப்பு”: பொருளாதாரத்தில் பலத்த அடி வாங்கும் மோடி அரசு!

அதாவது, நடப்பாண்டின் மே - ஆகஸ்ட் காலத்தில், இந்தியாவில் ‘வொயிட் காலர்’ ஜாப் (White collarprofessional jobs) எனப் படும் ‘அழுக்குப்படாத வேலைகள்’ பிரிவில் 60 லட்சம் பேர்வேலையிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வொயிட் காலர் பிரிவில், 2016- ம் ஆண்டின் மே - ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 1 கோடியே 25 லட் சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றிருந்தனர். இது கடந்த நான்கு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைந்து. 2019 மே - ஆகஸ்ட்காலகட்டத்தில் மொத்தம் 1 கோடியே 88 லட்சம் வொயிட்காலர் வேலைகளாக உயர்ந்திருந்தது.

ஆனால், கொரோனா காரணமாக, 2020 மே - ஆகஸ்ட் காலத்தில், கடந்த நான்காண்டு வளர்ச்சி ஒட்டுமொத்தமாக துடைத்தெறியப்பட்டு, 1 கோடியே 22 லட்சம் வேலைவாய்ப்புகளாக வீழ்ச்சியடைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொழிற்துறை உற்பத்திப் பிரிவில்தான் கொரோனா பாதிப்பால் அதிகமான வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. இத்துறையில் மட்டும் 50 லட்சம் பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

-----------------+------------------+------------------

மக்களுக்கு விரோதமாக

ஆள்வோருக்கு ஜால்ரா அடிக்கும்

இவர்களுக்கேன் மக்களவைப் பதவி.

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு கடந்த ஆட்சியின்போது நிறைவேற்ற முடியாமல் போன திட்டங்கள் அனைத்தையும் தனக்கிருக்கும் பெரும்பான்மை பலத்தினால் இந்த ஆட்சியில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. பா.ஜ.க அரசு கொண்டு வரும் திட்டங்கள் யாவும் கார்ப்பரேட் நலன் சார்ந்ததாகவும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்துத்வா சித்தாந்தங்களின் அடிப்படையிலும் இருந்து வருகிறது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதும், குடியுரிமை சட்டம் மூலம் மக்களை பிளவுபடுத்தும் வேலைகளையும் செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில், வர்ணாசிரம கொள்கையின்படி புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்துள்ளது.

அந்த புதிய கல்விக் கொள்கையில் ஏழை மாணவர்களின் கல்வி கனவினைத் தகர்க்கும் வகையிலும் தமிழகம் போன்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கையைப் பாடத்திட்டத்தின் வழியாகக் கொண்டு வந்து இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கப் பார்க்கிறது.

ஆப்செண்ட் ஆன அன்புமணி; ஆதரித்து பேசிய ஓ.பி.ஆர் : வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசு !

கொரோனா பேரிடரைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகளின் அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தச் சூழலிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டாத பா.ஜ.க அரசு, ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி சில அவசர சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறது.

அந்தவகையில் ஊரடங்கு காலத்தில் புதிய கல்விக் கொள்கைக்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 இல் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும், தேசியக் கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை வரைவு மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களை மோடி அரசு தாக்கல் செய்துள்ளது.

ஆப்செண்ட் ஆன அன்புமணி; ஆதரித்து பேசிய ஓ.பி.ஆர் : வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசு !

விவசாய உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா 2020, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை பெரும்பான்மையை பயன்படுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவகைகளும் மத்திய மோடி அரசு நிறைவேற்றியது.

இதற்கு எதிர்க்கட்சிகளிடையே கடுமையான எதிர்ப்புகள் நிலவி வந்தன. மாநிலங்களவையில் உள்ள தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இந்த மசோதாக்கள் மூலம் சந்தைக்குச் செல்லும் விவசாய விளை பொருள்களின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் பெரு வணிகர்களிடமும், கார்பரேட் நிறுவனங்களிடமும் சென்றுவிடும் என குற்றஞ்சாட்டினர்.

விவசாயிகளுக்கு எதிரான மசோதாக்களை தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு விட வேண்டும் என தி.மு.க. எம்.பி திருச்சி சிவா திருத்த தீர்மானத்தையும் தாக்கல் செய்திருந்தார். ஆயினும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள், எதிர்ப்புகளை கருத்திலேயே கொள்ளாமல், மத்திய பாஜக அரசு மாநிலங்களவையிலும் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆப்செண்ட் ஆன அன்புமணி; ஆதரித்து பேசிய ஓ.பி.ஆர் : வேளாண் மசோதாவை நிறைவேற்றிய மோடி அரசு !

நாடே எதிர்க்கும் வேளாண் மசோதாக்களை தமிழகத்தில் ஆட்சி செய்யும் அ.தி.மு.க அரசு ஆதரித்து வாக்களித்ததுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் அ.தி.மு.க எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் ஆதரித்து பேசினார்.

அதேப்போல் வழக்கமாக நாடாளுமன்றத்திற்கே செல்லாமல் பா.ம.கவின் எம்.பி அன்புமணி ராமதாஸ் இருந்துள்ளது. தமிழக மக்களுக்கு இதுபோல துரோகங்களை அ.தி.மு.க., பா.ம.க தொடர்சியாக செய்வதாக பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

மேலும், மத்திய மோடி அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு அ.தி.மு.க ஆதரவு அளித்துள்ளது தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ளவே இப்பாதகத்தைச் செய்தேன் என முதலமைச்சர் பழனிசாமி, “ஒப்புதல் வாக்குமூலம்” அளித்து - விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்” என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

--------------------------+--------------------------

"விவசாயி"

பெயரை கேவலப்படுத்தும் பழனிச்சாமி.

விவசாயத்தின் வேரில் வெந்நீரை ஊற்றும் வேளாண்மை மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் அதிமுகஆதரவு அளித்ததோடு, அந்த மசோதாக்களை நியாயப்படுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீண்ட நெடிய நீட்டோலை வாசித்திருக்கிறார். 

பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிரோமணி அகாலிதளம் கட்சியின் அமைச்சர் ஹர் சிம்ரத்  கவுர் பாதல் இந்த சட்டங்களை எதிர்த்து ராஜினாமா செய்துள்ள நிலையில், மாநில பட்டியலில் உள்ள விவசாயத்தை கிட்டத்தட்ட மத்திய பட்டியலுக்கு கொண்டு சென்று மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய இந்தச் சட்டங்களை அதிமுக ஆதரிப்பது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகமாகும். ‘நானும் ஒரு விவசாயி’ என்று மீண்டும் மீண்டும் மாறுதட்டிக் கொள்ளும் முதல்வர் எடப்பாடிபழனிசாமி, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்குத் தான் இந்த சட்டம் பாதிப்பை ஏற்படுத்தும்; தமிழகத்தை பாதிக்காது என்று அசட்டுத்தைரியத்தில் அறிக்கை விடுகிறார். நீட் தேர்விலிருந்து, புதிய கல்விக்கொள்கை வரை மத்திய அரசு கொண்டுவந்த அனைத்தும் தமிழகத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இந்நிலையில் இந்த வேளாண் மசோதாக்கள் தமிழகத்தைப் பாதிக்காது என்று எப்படி முதல்வர் கூறுகிறார்? தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்ற சுயநல நோக்கம் அன்றி விவசாயிகளின் நலன்குறித்து இவர்களுக்கு கொஞ்சமும் அக்கறை இல்லை.விளைபொருளுக்கு அரசு அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைவிட தனியார் நிர்ணயிக்கும் விலை குறையக்கூடாது என்பதற்குஎந்த உத்தரவாதமும் இல்லை.

மேலும் விளைபொருளுக்கு விவசாயிகள் பேரம் பேசும் உரிமையையும் இம்மசோதா பறிக்கிறது. இலட்சக்கணக்கான சிறு-குறு விவசாயி களை அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றி கார்ப்பரேட் சூதாடிகளிடம் விவசாயத்தை ஒப்படைக்கும் வகையிலேயே இம்மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று தங்களது விளைபொருளை விற்றுக்கொள்ளலாம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வார்த்தைகளேயன்றி வேறல்ல.கடந்த தேர்தல் அறிக்கையிலேயே பாஜக விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவோம் என்று வாய்ப்பந்தல் போட்டது. அதே வார்த்தைகளை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என்று பாஜக கூறியது. ஆனால்விவசாயிகளின் தற்கொலை பல மடங்குஉயர்ந்ததேயன்றி விவசாயிகளின்  வருமானம் உயரவில்லை என்பது மட்டுமல்ல,கடுமையாக சரிந்தது. விவசாயம் ஏற்கெனவே கட்டுபடியாகாத தொழிலாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் பாஜகவின் இந்த புதிய சட்டங்கள் விவசாயத்துறையையும் கார்ப்பரேட்டுகளுக்கு கைமாற்றிவிடுகிற கயமையே தவிர வேறல்ல.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராடும் நிலையில் தமிழகத்திலும் போராட்டக்களத்திற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ஆளும் அதிமுக இம்மசோதாவை ஆதரித்தாலும் தமிழக மக்கள்தங்கள் போராட்டத்தின் மூலமாக இந்த தீய சட்டங்களை நிராகரிப்பார்கள் என்பது உறுதி.----------------7---------------6-------------9----------------8