புதன், 25 மே, 2022

விலை குறைந்த மோ( ச) டி

 பண வீக்கத்தில் இருந்து மக்களை மீட்பதாக கூறி ஒன்றிய அரசு பெட்ரோல் கலால் வரியை குறைத்த கையோடு, பெட்ரோல் அடிப்படை விலையை உயர்த்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயம் செய்கின்றன. 

கச்சா எண்ணெய் விலையை காரணம் காட்டி தொடர்ந்து உயர்த்தப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 100 ரூபாயைத் தாண்டியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். அத்தியாவசிய பொருட்கள் விலையும் கிடுகிடுவென அதிகரித்தது.

இந்நிலையில், பண வீக்கத்தில் இருந்து மக்களை மீட்பதாக கூறி, கலால் வரியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.8, டீசலுக்கு ரூ.6 என குறைக்கப்படுவதாக, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

 மேலும், இந்த நடவடிக்கையால் டெல்லியில் பெட்ரோலுக்கு ரூ.9.50, டீசலுக்கு ரூ.7 குறையும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிரப்பச்சென்ற வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 அதாவது, டெல்லியில் பெட்ரோல் விலை ரூ.9.50க்கு பதில் ரூ.8.69 மட்டுமே குறைந்திருந்தது. 

அதாவது, பெட்ரோல் விலை ரூ.95.91 என குறைவதற்கு பதிலாக, ரூ.96.72 என இருந்தது. அதாவது, நிர்மலா சீதாராமன் உறுதி அளித்த விலையை விட 81 காசு அதிகமாக இருந்தது.

அப்போதுதான், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மீதான அடிப்படை விலையை லிட்டருக்கு 58 காசு உயர்த்தியது தெரிய வந்தது. 

இதன்மூலம் பெட்ரோல் விலை குறைப்பில் ஏறக்குறைய ஒரு ரூபாய் எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபமாக சென்று விட்டது.  இதுபோல் சென்னையில் பெட்ரோல் 110.85 ரூபாயில் இருந்து ரூ.8.22 மட்டுமே குறைந்து, 102.63க்கு விற்கப்பட்டது. 

ஆனால், அடிப்படை விலை உயர்த்தப்பட்டதற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் காரணம் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், விலை குறைப்பு பலனை கிடைக்கவிடாமல் உடனே தடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

* மக்களை குழப்ப இப்படி ஒரு திட்டமா?
பெட்ரோல், டீசல் வரியை குறைத்து ஒன்றிய அரசு அறிவித்த பிறகு, ஒரே இரவில் அடிப்படை விலையை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென மாற்றி அமைத்துள்ளன. 

விலை உயர்வு தெரியாத அளவுக்கு செயல்படுத்தவே இப்படி உயர்த்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. அதாவது, ஓரிரு நாட்கள் கழித்து உயர்த்தியிருந்தால், அடிப்படை விலை உயர்வு கண்கூடாக அனைவருக்கும் தெரிந்து விடும். 

எனவேதான் ஒரே இரவில் அடிப்படை விலை மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்த அடிப்படை விலை மாற்றத்தால், ஒன்றிய அரசு கூறியபடி ஏன் விலை குறையவில்லை என்ற குழப்பம் பலரிடையே நிலவியது. இதற்கான காரணம் தற்போதுதான் அம்பலம் ஆகியுள்ளது.


கடந்த 3 ஆண்டில் மட்டும் பெட்ரோல், டீசல் கலால் வரி வருவாய் (2018-19 முதல் 2020-21 வரை) ரூ.8,01,940 கோடி

கலால் வரியும், கச்சா எண்ணெய் விலையும்
மாற்றப்பட்ட தேதி    பெட்ரோல்    டீசல்    கச்சா எண்ணெய் பேரல் (டாலரில்)
மார்ச் 1, 2020    ரூ.19.98    ரூ.15.83    33.36
ஜூன், 16, 2020    ரூ.32.98    ரூ.31.83    40.63
நவ. 4, 2021    ரூ.27.90    ரூ.21.80    80.64
மே 22, 2022    ரூ.90.90    ரூ.15.80    107.36

* ஒன்றிய அரசுக்கு கிடைத்த வருவாய்
பெட்ரோலிய பொருட்கள் மூலம் கடந்த 2014-15 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசுக்கு கிடைத்த வருவாய் விவரம்:
2014-15    ரூ.1,72,065 கோடி
2015-16    ரூ.2,54,297 கோடி
2016-17    ரூ.3,35,175 கோடி
2017-18    ரூ.3,36,163 கோடி
2018-19    ரூ.3,48,041 கோடி
2019-20    ரூ.3,34,315 கோடி
2020-21    ரூ.4,55,069 கோடி
2021-22 (ஏப்.-டிச.)    ரூ.3,54,264 கோடி
மொத்தம்    ரூ.25,89,389 கோடி.

இவ்வளவு வருமானம் வரும்போது ஏன் மக்களைக் கொடுமைப்படுத்தும் விதமாக தினசரி பெட்ரோல் விலையை ஒன்றிய அரசுஉயர்த்துகிறது.

இதனால் அனைத்து நிலைகளும், போக்குவரத்துக் கட்டணங்களும் உயரும், உயர்கிறது என நிதியமைச்சர் நிர்மலாவுக்குத் தெரியாதா? 

இதனால்தான் பணவீக்க நிலையே வருகிறது எனப் புரியாதா??

விலையேற்றத்தால் இலங்கை எரிவதை உணரவில்லையா???

சில குஜராத்தி கள் உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வருவதுதான் பா.ஜ.க.வின் பொருளாதாரக் கொள்கையா.

ஏழை நாடுகள் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறுவது தெரிந்தும் கண்மூடியிருப்பது ஏன்?


------------------------------------------------------------------------

வியாழன், 19 மே, 2022

இந்தியா முதலிடம்.

ஜி.எஸ்.டி. ஒன்றியத்துக்கு ஆப்பு.

இந்தியா முழுவதும் பல்வேறு துறைகள் மற்றும் சேவைகளில் ஜிஎஸ்டி வரி அமலில் இருக்கிறது.

. இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வரி விதிப்புகளை ஜிஎஸ்டி கவுன்சில்தான் பரிந்துரை செய்யும்.

இந்த நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. 

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முக்கியமான சில உத்தரவுகளை பிறப்பித்தது.

அதில், ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரைக்கும் அதிகாரங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவர்கள் கட்டாயப்படுத்த முடியாது.

 ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய & மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது.

 ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.

 இந்தியா ஒரு கூட்டாச்சி ஒன்றியம் என்பதால் ஒன்றிய அரசின் ஏகபோகத்துக்கு ,ஜிஎஸ்டி கவுன்சிலின் முடிவிற்கு கட்டுப்பட வேண்டியதில்லை என்று கூறியுள்ளது.

.
.

இந்த ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எதிரான தீர்ப்பு மாநில அரசுகளுக்கு ஆதரவான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

 ஏனென்றால் ஜிஎஸ்டி கவுன்சில் கொடுக்கும் பரிந்துரைகளை இனி கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நிலை மாநில அரசுகளுக்கு கிடையாது. அதோடு ஜிஎஸ்டி கவுன்சில் போடும் உத்தரவுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருப்பது மாநில உரிமைகளை காக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு என்பதால், ஒரு அமைப்பு மட்டும் கூடுதல் அதிகாரம் கொண்டு இருக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பாடம் எடுத்துள்ளது. 

இந்த ஜிஎஸ்டி விவகாரத்தில் தமிழ்நாடு நிதிக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து பல பரிந்துரைகளை செய்து வந்தார். இந்த கவுன்சிலில் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

அதிலும் இவர் கலந்து கொண்ட முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலேயே அதிரடியான பரிந்துரைகளை மேற்கொண்டார். கவுன்சிலில் செய்ய வேண்டிய முக்கியமான மாற்றங்களை அவர் பரிந்துரை செய்தார் . கோவா மாநில நிதி அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் இவரின் பரிந்துரைகளை எதிர்த்ததும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு ஆதரவான ஜிஎஸ்டி குழுவுக்கு கடிவாளம் போடும் வகையில் பிறப்பித்துள்ள உத்தரவை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்று இருக்கிறார்.

-----------------------------------------------------------------------

இந்தியா முதலிடம்.

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. 

அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசுபாட்டாலும் நிகழ்ந்தவை என்று தெரிவிக்கிறது லான்செட் அறிக்கை.

உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் இறந்ததாக தெரிவிக்கும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

 • சுற்றுச்சூழல் மாசுபாட்டை பொறுத்தவரை இந்தியாதான் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவே தொடர்கிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர். உலகம் முழுக்க ஆண்டுதோறும் சுமார் 90 லட்சம் உயிரிழப்புகள் நடைபெறுவதற்கு மாசுபாடுதான் காரணமாக இருக்கிறது என்று உலகளாவிய நோய்கள், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்த ஆய்வின் (Global Burden of Diseases, Injuries and Risk Factors Study 2019) தரவுகள் தெரிவிப்பதையும் இந்த லான்செட் அறிக்கை குறிப்பிட்டது.
 • மக்களின் வீடுகளில் காற்று, நீர் ஆகியவை சுகாதாரமற்று இருப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் வறுமையுடன் தொடர்புடையவை. அப்படியான உயிரிழப்புகள் இந்த முறை குறைந்துள்ளன என்றாலும், அதற்கு காரணம் தொழிற்சாலை மாசுகள், சுற்றுப்புற மாசுகள் மற்றும் நச்சு வாயு மாசு ஆகியவற்றின் அதிகரிப்புதான்.
 • 90 லட்சம் மொத்த உயிரிழப்புகளில், 67 லட்சம் உயிரிழப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணம் என்றால், 14 லட்சம் உயிரிழப்புகளுக்கு காரணம் நீர் மாசுபாடாக இருக்கிறது.
 • மாசுபாட்டால் நிகழும் உயிரிழப்புகளில் சுமார் 90 சதவீதம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடைபெறுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 23.6 லட்சம் உயிரிழப்புகளுள் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் சீனா 21 லட்ச உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.
காற்று மாசுபாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

 • வழக்கமான மாசுபாட்டால் (நீர், நில, காற்று மாசுபாடுகள்) நிகழும் இழப்பைப் பொறுத்தவரை 2000 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2% ஆக இருந்தது. பின்னர் இறப்புவிகிதமும் பொருளாதார இழப்புகளும் குறைந்துகொண்டே வந்தன. ஆனால், தற்போதும் கூட மாசுபாட்டால் ஏற்படும் இழப்பு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆக தொடர்கிறது.
 •  2000 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில், சுற்றுப்புற மாசுபாடுகள், வேதிப்பொருட்களால் நிகழும் மாசுபாடுகள் என புதியவிதமான நவீன மாசுபாடுகள் உருவாகின. இவற்றின் அதிகரிப்பால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1% இழப்பு ஏற்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விதமாக 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மூலம் காற்று மாசுபாட்டை தடுக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் முழுமையாக சரிசெய்ய முடியவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • மேலும், "மாசுபாட்டுக்கான மூலங்களை குறைப்பதற்கான கருவிகள் மற்றும் முறைப்படுத்தல் ஆகியவற்றில் இந்தியா முன்னேறியிருக்கிறது. ஆனாலும், ஒரு மையப்படுத்தப்பட்ட முறைமை இல்லாததால், மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பரவலாக்க முடியவில்லை.

  • "நாட்டின் 93% பகுதிகளில் மாசுபாடு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேலேயே தொடர்கிறது" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  காற்று மாசுபாடு

  பட மூலாதாரம்,GETTY IMAGES

  • உலகளாவிய மாசுபாட்டு தரவரிசைகளில் இந்திய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. 
  • வட இந்தியாவில் சுமார் 48 கோடிக்கும் அதிகமான மக்கள் 'உலகின் மோசமான மாசுபட்ட காற்றை' எதிர்கொள்கின்றனர் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.
  • அதேபோல, இந்திய தலைநகர் டெல்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலத்தில் இன்னும் 10 ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. 
  • அதற்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி, காற்றில் கனமீட்டருக்கு 10 மைக்ரோகிராம் நுண்துகள்கள் என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், 2019இல் இந்தியாவின் சராசரி நுண்துகள்களின் அளவு கனமீட்டருக்கு 70 மைக்ரோகிராமாக இருந்தது. இதுதான் உலகிலேயே அதிகமும் கூட.
  • இப்படி உலக அளவில் மோசமான சுற்று சூழலில் இந்தியா இருக்கையில் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஸ்டெர்லைட் போன்ற நாசகார ஆலைகளுக்கு ஆதரவாக ஒன்றிய அரசு செயல்படுவது மக்கள் நலனை விட கார்பரேட், குஜராத்தி முதலாளிகள் பலன்தான் முக்கியம் என்பதுபோல் உள்ளது.
  • -----------------------------------------------------------------புதன், 18 மே, 2022

பேரறிவாளன் விடுதலை

 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்..

 இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவைக் கடந்த இரண்டு வாரங்களாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது.

மேலும்,பேரறிவாளனை விடுவிப்பது குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றமே விடுதலை செய்யும் என கடந்த வாரம் நீதிமன்றம் அதிரடியாகக் கூறி வழக்கை ஒத்திவைத்தது.

 மேலும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை முன்வைத்திருந்தது.

இந்நிலையில், இன்று உச்சதீமின்றம் ஜாமினில் உள்ள பேரறிவாளனை முழுமையாக விடுதலை செய்து அதிரடியாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் பேசும் போது, மாநில அரசு அனுப்பக் கூடியே பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரிங்களுக்குள் போகாமல் நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?. மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கேடு விதித்து உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் நடராஜ் ஆஜரானார். அப்போது பேசிய கூடுதல் சொலிசிட்டர் பேரரிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசு தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்?. ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் ஒன்றிய அரசின் வாதம் உள்ளது.

14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72 படி குடியரசு தலைவரும், 161 படி ஆளுனரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுனர் ஏன் முடிவு முடியாது என்பதுதான் கேள்வி என நீதிபதிகள் சாடினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.

ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை, குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் கூறிய அனைத்து வாதங்களையும் நிராகரித்தது உச்சநீதிமன்றம். மாநில உரிமைகளை நிலைநாட்டும் வண்ணம் பேரறிவாளன் விவகாரத்தில் முடிவெடுத்துள்ளது உச்சநீதிமன்றம்!

------------------------------------------------------------------------------------

31 ஆண்டுகால சிறைவாசத்தில், சிறையிலிருந்தபடியே பேரறிவாளன் பி.சி.ஏ., எம்.சி.ஏ படிப்புகளை முடித்துள்ளார். ஐந்துக்கும் மேற்பட்ட சான்றிதழ் படிப்புகளையும் முடித்துள்ளார்!

------------------------------------------------------------------------------

ரவிக்கு குட்டு.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, நீதிபதிகள், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. 

மேலும், ஆளுநர் முடிவு எடுக்கும் அதிகாரம் பற்றி ஒவ்வொரு கோப்பையும் ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

பின்னர் ஆளுநர், குடியரசுத் தலைவர்களின் அதிகாரிங்களுக்குள் போகாமல் நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது?.

 மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும். பேரறிவாளனை விடுவிப்பது குறித்து தனது நிலைப்பாட்டை ஒருவாரத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கேடு விதித்து உத்தரவிட்டார்.

வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.

மேலும், ஆளுநர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும் போது அவருக்காக ஒன்றிய அரசு ஆஜராவது ஏன்?. 

ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் ஒன்றிய அரசின் வாதம் உள்ளது.

14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72 படி குடியரசு தலைவரும், 161 படி ஆளுனரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்பளித்துள்ளது. 

இந்த வழக்கில் ஆளுனர் ஏன் முடிவு முடியாது என்பதுதான் கேள்வி என நீதிபதிகள் சாடினார்கள்.

இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என நீதிபதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு.

ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது.

மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை. பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. 

பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

___________________________________________________செவ்வாய், 17 மே, 2022

சமாதி மர்மம்

 வலைதளங்களைத் திறந்தாலே, சாமியார் நித்தியானந்தா தொடர்பான செய்திகள்தான் பரபரக்கிறது. 

அவர் மரணமடைந்துவிட்டதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக, நித்தியானந்தாவின் சில போட்டோக்கள் அவரின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. `திரும்ப வந்துட்டேனு சொல்லு' என அவரே கைப்பட எழுதியதாக ஒரு கடிதமும் வெளியானது.

 'தன்னுடைய தியான வகுப்புக்கு ஆள் கிடைக்காததால்தான், தான் இறந்துவிட்டதாக நித்தியானந்தாவே ஒரு வதந்தியைப் பரப்பி விளம்பரம் தேடுகிறார்' என நித்தியானந்தாவுக்கு எதிர்முகாமில் இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் எதிர்கருத்தை பதியவைக்கிறார்கள்.

 'உண்மையிலேயே நித்தியானந்தாவுக்கு என்னதான் ஆச்சு?', பரபரவென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள், பெங்களூரு, திருவண்ணாமலை, மதுரையிலுள்ள அவரின் ஆசிரமவாசிகள் எனப் பலரிடமும் பேசினோம்.


நித்தியானந்தா

"நித்தியானந்தா தினமும் காலை 3:40 மணிக்கு இமயமலையில் தான் கற்று வந்த தியானத்தை தொடங்கி, நடுவில் சில மணிநேரம் சமாதி நிலையிலிருந்து வெளியே வந்து எங்களுடன் இணையம் வழியாகப் பேசுகிறார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தியான வகுப்பு தொடர்பான திட்டமிடல்களில் விவாதிக்கிறார். 

பிறகு, மீண்டும் சமாதி நிலைக்குச் செல்பவர் இரவு முழுவதும் தியான நிலையில் இருக்கிறார். அதிகாலை 3 மணிக்கு குளித்துவிட்டு மீண்டும் தியானத்தை தொடர்கிறார்.

 இதுபோல, தொடர்ந்து 21 நாள்கள் தியானத்தை மேற்கொள்ளவிருக்கிறார் நித்தியானந்தா.

அவருக்கு கால பைரவர் மீது அளப்பரிய நம்பிக்கை உண்டு. அவரை நோக்கி வைக்கப்படும் தியானமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். 

இந்தக் காலத்தில் வேப்பிலை, கிராம்பு உள்ளிட்ட சில மூலிகைகள் கலந்த சாறை மட்டுமே உட்கொள்வது நித்தியானந்தாவின் வழக்கம். தியானத்தின் மூலமாக மனித உடலை நீண்ட ஆண்டுகளுக்கு தளர்வடையவிடாமல் வைத்திருக்கும் சூட்சமத்தை ஏற்கெனவே நித்தியானந்தா கண்டறிந்துள்ளார். 

கடல் பிரயானங்களால், அவரது உடல், மனம் இரண்டும் சோர்வடைந்தது நிஜம்தான். இந்த தியானப் பயிற்சி விரைவில் முடிந்தவுடன், பக்தர்களுடன் அவர் கலந்துரையாடும் நிகழ்ச்சி வழக்கம் போல தொடரும். அவர் மரணிக்கவில்லை. விளம்பரத்திற்காக நடிக்கவும் இல்லை" என்றனர் விரிவாக.

இதனிடையே நித்தியானந்தா ஆசிரமத்திற்கு பல கோடி அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஏற்பட்ட பிரச்னைதான் இந்த சமாதிநிலை நாடகமெல்லாம் என்கிறது நித்தியானந்தாவுக்கு நெருக்கமாக இருந்து பிரிந்தவர்கள் தரப்பு. 

நம்மிடம் பேசிய நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்கள் சிலர், "இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, பல கோடி அமெரிக்க டாலர் பணத்தை தங்கக் கட்டிகளாக மாற்றிக் கொண்டார் நித்தியானந்தா. 

துபாய், இஸ்தான்புல் வழியாக பெருமளவில் இந்தத் தங்கக் கட்டிகள் கரீபிய தீவு பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சர்வதேச வங்கியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. 

பேருந்து கட்டணம் உயர்வா?

அந்த வங்கிக் கணக்கின் பாதுகாவலர்களாக, அமெரிக்காவைச் சேர்ந்த தன் சீடர்கள் இருவரை நியமித்த நித்தியானந்தா, மாதம் ஒருமுறை அந்த தங்கக் கட்டிகளை ஆய்வு செய்யுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார். அவர்கள் மூலமாகத்தான் கைலாசாவை சில ஆப்பரிக்க நாடுகள் அங்கீகரிப்பதற்கு உண்டான வேலைகள் நடந்தன. 

இதற்காக வறுமையில் வாடும் சில மேற்கு, மத்திய ஆப்பரிக்க நாடுகளின் பிரதிநிதிகளை அணுகிப் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

இதற்கிடையே, ஐ.நா அரங்கில் 'கைலாசா' பிரதிநிதியைப் பேச வைத்தோம், அமெரிக்க மேயர்களிடமிருந்து வாழ்த்துக் கடிதங்களைப் பெற்றிருக்கிறோம் என அந்த அமெரிக்க சீடர்கள் இருவரும் தனித்தனியாக 'பில்' போட்டுக் கொண்டனர். 

தான் ஏமாற்றப்படுவது தெரிந்தும், தனக்கு வேறு வழியில்லாததால் அவர்களை நம்பியே நித்தியானந்தா இருக்க வேண்டியதாகிவிட்டது. 

சமீபத்தில், கரீபிய தீவிலுள்ள தங்கக் கட்டிகளை தங்களால் ஆய்வு செய்ய முடியவில்லை என அந்த அமெரிக்க சீடர்கள் நித்தியானந்தாவிடம் கை விரித்திருக்கிறார்கள். 

பல கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய அந்த தங்கம் தன் கையைவிட்டுப் போய்விடுமோ என்கிற பதற்றம் நித்தியானந்தாவைத் தொற்றிக் கொண்டது.

தனக்குத் தெரிந்த சில இடைத்தரகர்கள் மூலமாக அந்த வங்கியைத் தொடர்பு கொண்டபோது, 'தங்கத்தையெல்லாம் கடந்த மாதமே எடுத்துச் சென்றுவிட்டனர்' என்கிற பதில்தான் கிடைத்திருக்கிறது. இதில்தான் நிலைகுலைந்து போயிருக்கிறார் நித்தியானந்தா. 

அல்பேனியாவைச் சேர்ந்த சில மாஃபியாக்கள் கூட்டணியுடன், அந்த தங்கக் கட்டிகள் அனைத்தையும் எடுத்துச் சென்றிருக்கிறார்கள் அமெரிக்க சீடர்கள். இதில், கேரளாவைச் சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். தற்போது அந்த சீடர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியவில்லை.
நித்தியானந்தா

பணத்தின் மீது நித்தியானந்தாவுக்கு ஆசை இல்லை. கிலோ கணக்கில் நகைகளை அள்ளிப் போட்டுக் கொள்வதுகூட மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகத்தானே தவிர, அவற்றின் மீதுகூட நித்தியானந்தாவுக்கு விருப்பம் இருந்ததில்லை. 

ஆனால், தன்னுடைய நாட்டைக் கட்டியமைப்பதற்கு வைத்திருந்த தங்கம் மாயமானது தெரிந்தவுடன், என்ன செய்வது என்றே அவருக்குப் புரியவில்லை. தனக்குத் தெரிந்த சில ஐரோப்பிய துணைத் தூதர்கள் மூலமாக, அல்பேனிய மாஃபியாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைந்தார். அதுவும் கைகூடவில்லை. இப்படியே உட்கார்ந்திருந்தால் வேலைக்கு ஆகாது என்பது தெரிந்தவுடன்தான், தியானப் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். 

அந்த பயிற்சி வகுப்புக்கு முன்னதாக, 'நித்தியானந்தா மரணமடைந்துவிட்டார்' என்கிற வதந்தியைக் கிளப்பினால், தன்னைப் பார்ப்பதற்கு நிறைய பேர் பயிற்சி வகுப்பில் இணைவார்கள், அதன்மூலமாக கல்லாவை நிரப்பிக் கொள்ளலாம் என்பதே நித்தியானந்தாவின் திட்டம். அந்தத் திட்டம்தான் 'சமாதி நிலை' என்கிற ரூபத்தில் அரங்கேறுகிறது" என்றனர் விலாவரியாக.

நித்தியானந்தாவின் பேச்சுதான் அவ்வப்போது அதிரடிக்கும். இப்போது, அவரைச் சுற்றி நடப்பதும் அதிரடி சரவெடியைக் கிளப்புகிறது.

அவரை இந்தியாவுக்கு ப் பிடித்துக் கொண்டுவந்தால் மட்டுமே எல்லா  சர்ச்சைகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும்.

-----------------------------------------------------------------------------

கோதுமையின் விலை  வரலாற்று உச்சத்தை ரா எட்டியது, 

கோதுமையின் விலை திங்களன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது, 

கோடை கால வெளியில் உற்பத்தியை பாதித்ததால் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்தது.

இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன்னுக்கு 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.


கோதுமையின் விலை திங்களன்று புதிய வரலாற்று உச்சத்தை எட்டியது, கோடை கால வெளியில் உற்பத்தியை பாதித்ததால் பொருட்களின் ஏற்றுமதியைத் தடை செய்ய இந்தியா முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து ஐரோப்பிய சந்தை துவங்கியதும் ஒரு டன்னுக்கு 435 யூரோ-வாக ($453) விலை உயர்ந்ததுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் கோதுமை உற்பத்தியில் பெரியது அளவிலான வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவும் உக்ரைனும் சேர்ந்து உலகின் மொத்த கோதுமை ஏற்றுமதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கோதுமை ஏற்றுமதி 8.14 பில்லியன் டாலராக இருந்தது, உக்ரைன் சுமார் 3.11 பில்லியன் டாலர் கோதுமையை ஏற்றுமதி செய்தது. தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான போரின் காரணமாகக் கோதுமை உற்பத்தி குறைந்து தட்டுப்பாடு உருவாகி விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் கோதுமையைச் சேர்த்து உள்ளது. 

இந்தத் தடை மூலம் இந்திய மக்களுக்கான உணவு பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அண்டை நாடுகளுக்கும், அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கும் உதவி செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளது.

மேலும் பிற நாடுகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்திச் செய்ய வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும், தத்தம் அரசின் கோரிக்கையின் அடிப்படையிலும் ஏற்றுமதிகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் முதன்முறையாக இந்தியாவில் இருந்து 50,000 டன் கோதுமையைத் துருக்கி ஆர்டர் கொடுத்துள்ளது. 

இது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்குப் பயனளிக்கும் அதே வேளையில், இது நாட்டில் கோதுமை விலையை மேலும் அதிகரிக்கும் நிலை உருவானது.----------------------------------------------------------------------