அக்கினி நட்சத்திரம்
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், நேற்று முதல் தொடங்கியுள்ளது.
பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய நாட்களுக்கு பெயர்தான், அக்னி நட்சத்திரம். இது வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும்.
தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவது எப்படி என்பதற்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
இந்த நாட்களில் வழக்கமாக அருந்தும் தண்ணீரை விட அதிகமாக அருந்த வேண்டும் என பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் வெப்பத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளவது எப்படி என்பதற்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
இந்த நாட்களில் வழக்கமாக அருந்தும் தண்ணீரை விட அதிகமாக அருந்த வேண்டும் என பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
வெயிலின் வெப்பத்தால் ஏற்படும் வியர்வையால் உடலில் நீர் சத்து குறையும். எனவே அவ்வப்போது நீர் அருந்திக்கொண்டே இருப்பதுதான் மிகவும் நல்லது.
முக்கியமான அல்லது தேவை இல்லாத நேரத்தில் சூரியன் உச்சி வானில் இருக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்த்துகொள்வது உடலுக்கு அதிக நன்மை பயக்கும்.
நாம் அருந்தும் தண்ணீரில் உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பதால் உடலின் நீரிழப்பு சீர் செய்யப்படும்.
இந்த நாட்களில் காரமான எந்த உணவையும் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்துடன் அதிக மசாலாக்கள் கலந்த உணவுகளையும், எண்ணெய் பதார்த்தங்களையும் தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
வெயில் தாக்கம் அதிகமான நேரங்களில் அதிக அளவில் நீர்மோரை அருந்தலாம். இதேபோல் நீர் சத்து அதிகமாக உள்ள இளநீர், பனை நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களை அருந்தலாம். குறிப்பாக எலுமிச்சை பழ
ஜூஸ், மோர், சர்பத் உள்ளிட்டவையை பருகி வரலாம்.
வெயில் பாதிப்பில் இருந்து தப்ப சன் கிளாஸ்’அணிந்துகொள்வது நல்லது. நீண்டநேரம் சூரிய ஒளியின் புறஊதாக்கதிர்கள் உடலில் படுவதால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். எனவே வெயிலில் வெளியே செல்வதற்குமுன் சன்ஸ்கிரீன் லோஷனைத் தடவிக் கொள்ளலாம்.
கோடையில் சரும வறட்சியால் பாதங்களில் வெடிப்பு ஏற்படலாம். இதைத் தவிர்க்க தினமும் இரவில் பாதங்களைக் கழுவி, சுத்தப்படுத்திவிட்டு தேங்காய் எண்ணெய் அல்லது மாய்ஸ்ட்ரைசர் கிரீமை தடவலாம்.
இந்த நாட்களில் உடலில் ஈரம் தங்காத அளவுக்கு வியர்வையை உறிஞ்சும் பருத்தி ஆடைகளை அணியலாம். இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். இதனால் சருமத்தில் வியர்வை தங்கி அரிப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
-----------------------------------------------------------------