புடுச்சி உள்ளே போடுங்க சார்.

 பழங்குடியினர் நலத்துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி

மாதிரிப் படம்

அவருடைய கடிதத்திற்கு கிடைக்கப்பட்ட பதில் மூலம், மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இணைந்து தமிழக பழங்குடியினர் நலத்துறைக்கு கடந்த 2018-19, 2019-20, 2020-21 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் மொத்தம்ஆயிரத்து 310 கோடியே 94 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி உள்ளது தெரிகிறது.

ஆண்டுவாரியாக பார்க்கையில், 2018-19ம் ஆண்டில் 333 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயும்; 2019-20ம் ஆண்டில் 482 கோடியே 80 லட்சத்து 14 ஆயிரம் ரூபாயும்; 2020-21ம் ஆண்டில் 494 கோடியே 32 லட்சம் ரூபாயும் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் பழங்குடி நலத்துறையால் ஆயிரத்து 45 கோடியே 24 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

செலவு செய்தது போக, 2018-19ம் ஆண்டில் 38 கோடியே 75 லட்சம் ரூபாயும், 2019-20ம் ஆண்டில் 167 கோடியே 86 லட்சம் ரூபாயும், 2020-21ம் ஆண்டில் 59 கோடியே 8 லட்சம் ரூபாயும் என மொத்தம் 265 கோடியே 70 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது.

அப்படி அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிதியிலிருந்து 139 கோடி ரூபாய் நிதி பிற துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, 2019-20ம் ஆண்டில் வனத்துறைக்கு 10 கோடியும்; 2020-21ம் ஆண்டில் வனத்துறைக்கு 67.7 கோடியும், ஊரக வளர்ச்சித்துறைக்கு 58.17 கோடியும்,  பேரூராட்சிகள் துறைக்கு 4.05 கோடியும் செலவிடப்பட்டு உள்ளது.

"பழங்குடியின மக்களின் வாழ்வாதார தேவைகளான நில உரிமை பட்டா, வீடு, உணவு, தண்ணீர், கல்வி, சுகாதாரம், மின்சாரம், சாலை உள்ளிட்டவை இன்னமும் முழுமை பெறாமல் உள்ள நிலையில், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது" என்கிறார் சமூக ஆர்வலர் கார்த்திக்.

அரசிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிதியான 265 கோடி ரூபாயை மீண்டும் பழங்குடி மக்களின் நலனுக்காக செலவிட வேண்டும் என்றும், இத்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி முழுமையாக மக்கள் நலத்திட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும்  எனவும் அவர் ஆலோசனை கூறினார்.

--------------------------------------------------------------------------
அ.மலையை புடுச்சி  உள்ளே போடுங்க சார்.

ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவு வெளியிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க என்று நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

திருநெல்வேலி தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் முருகன். இவர் இன்று நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு ஒன்று அளித்துள்ளார். 
அதில், ட்விட்டரில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலையின் பக்கத்தை பின்தொடர்கிறேன். 
நேற்று அண்ணாமலை மோடியை வாழ்த்தி வெளியிட்ட பதிவில் இந்தியாவின் வளர்ச்சியை குறிப்பிடும்விதமாக from a pariah to viswa guru என்று குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார்.
 pariah (பறையா)என்றால் உலக அளவில் ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட அல்லது கீழானவர்கள் என பலபொருள் தரும்படி சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தீண்டத்தகாதவர்கள், இழிவானவர்கள் என்று குறிக்கும் அண்ணாமலை இதுபோன்று குறிப்பிட்ட சாதியை இழிவுப்படுத்தும் விதமாக பதிவு வெளியிடுகிறார். எனவே அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் மனுதில் கூறியிருந்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முருகன், ‘பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்துஇழிவாக பேசி வருகிறார்.  
பறையா என்ற வார்த்தை சட்டப்படி பயன்படுத்த கூடாது. எனவே அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆணையரிடம் மனு அளித்துள்ளேன் என்றார்.

பாஜக தலைவர் அண்ணமலை சமீபத்தில் ஊடகத்தினரை அறிவாலயத்தில் இருந்து 200,2000,3000 வாங்குவதாக   தரக்குறைவாக பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆனால் அண்ணாமலை பல செய்தியாளர்களுக்கு விலை உயர்ந்த சாம்சங் போன்களை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார் என்பது இவ்விவகாரத்தால் வெளிவந்துள்ளது.
-------+--------------------+-------------------+------------




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?