இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீட்டுக்கு அடுத்த ஆப்பு?

படம்
  மருத்துவக் கல்லூரி சேர்க்கை மற்றும் தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகள் காரணமாகத்  தென் மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாத  மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  இந்தியாவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கை உள்ளிட்ட மருத்துவக் கல்வி தொடர்பான விதிகளை வகுக்க 'இந்திய மருத்துவ கவுன்சில்' செயல்பட்டு வந்த நிலையில், கடந்த 2020 செப்டம்பர் மாதம் இது 'தேசிய மருத்துவ ஆணையம்' (என்எம்சி - National Medical Commission) என மாற்றப்பட்டது.  இந்த நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி மருத்துவ சேர்க்கை மற்றும் மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள்தான் தென்னிந்திய மாநிலங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.  ஏனெனில், இதன் காரணமாகத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இனி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவோ ஏற்கெனவே உள்ள கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்கவோ முடியாது.  இந்த விதிகள் வரும் கல்வியாண்டு

எச்சரிக்கையாக இருங்கள்!

படம்
  உலக பல்கலைகழக தர வரிசை பட்டியலில் 91 இந்திய பல்கலைகழகங்களுக்கு இடம். " அதிமுக-பாஜ பிரிவு உட்கட்சி தகராறுதான் மோடி, அமித்ஷா பேசினால் மீண்டும் கூட்டணி வந்துவிடும்."-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுபெற்ற 10,205 பேருக்கு பணி ஆணை.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்"2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை "எனவும் அறிவிப்பு . காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கூடாது எனக்கூறி தமிழ்நாட்டிற்கு எதிராக குரல் கொடுக்கும் அண்ணாமலை நண்பர் தேஜஸ்வி சூர்யா. அக்.27ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. நெஞ்சுவலி என வந்த பெண்ணின் கை அகற்றம்.. ராஜூவ் காந்தி மருத்துவமனை மீது கணவர் குற்றச்சாட்டு. “வாட்ஸ் அப்பில் உலா வரும் செய்திகள்; பகுத்தறிவோடு சிந்தியுங்கள்” - உதயநிதிஸ்டாலின் வேண்டுகோள். --------------------------------------------- எச்சரிக்கையாக இருங்கள்! கோவிட் முடிவல்ல தொடக்கம்' என தொடர்ச்சியாக பல ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்து வருவதைக் காண முடிகிறது. அந்த வரிசையில் `டிசீஸ் எக்ஸ்’ (Disease X) என்ற பெருந்தொற்று மனித உயிர்களைக் கொல்லக் காத்திருக்கிறது என எச்சரித்து

நிபா ஆபத்து.

படம்
  ஆன்லைன் வர்த்தக நடைமுறைக்கான சட்ட விதிகளை மீறியதாக அமேசான் நிறுவனம் மீது வழக்கு.அமெரிக்க அரசு தொடர்ந்தது. அக்.1 முதல் கட்டணங்கள் காசோலை, வரைவோலை, ஆன்லைனில் மட்டுமே குடிநீர் வரி செலுத்த வேண்டும்.    ரொக்கமாக பெறப்படாது  குடிநீர் வாரியம் அறிவிப்பு . ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து புதுச்சேரியில் கல்லூரி மாணவர் போராட்டம். சென்னை ஐடி நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை. ஈராக்கில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 113 பேர் #உயிரிழப்பு.. 150 பேர் படுகாயம்.. மணமக்களும் பலி. வெளிநாடுகளில் போலி கணக்குகள் மூலம் பல கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் மற்றும் பாஜ க சென்னை மாவட்ட தலைவர் காளிதாஸ் , பாஜ மாநில தலைமை அலுவலக ஊழியர் ஜோதிகுமார் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு முதலீடு ஆவணங்கள், பினாமி பெயரில் உள்ள சொத்துக்கள் சிக்கியதாக தகவல் . ------------------------------------------- நிபா ஆபத்து. கேரளா, கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில்

மூடநம்பிக்கை உருவம்.

படம்
  இந்தியா.  2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதலில் முதல் தங்கம் வென்றது . எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை. மகளிருக்கு 33 % இடஒதுக்கீடு வரும், ஆனா வராது.மோடி அரசு வைத்த 3  தடைகள். நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் நிறைவேறினாலும் உடனடி பலன் இல்லை. அதிமுகவை தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதால் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறுமா ?அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இன்று  முடிவு. கிருஷ்ணகிரி ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில் முறைபேடுகள் செய்த வார்டனை பணி இடை நீக்கம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஏஜென்டாக செயல்படுகிறார் ஆளுநர் ரவி. ------------------------------------ மூடநம்பிக்கை உருவம். புது நாடாளுமன்றக் கட்டிடம்! சிவசேனா  கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், “டெல்லி அரசாங்கம் மூடநம்பிக்கைகளாலும், குருட்டுப் பின்பற்றுபவர்களாலும் சூழப்பட்டுள்ளது. நாட்டை நடத்துபவர்களின் மனதில் மூடநம்பிக்கை, கிரகங்கள் மற்றும் ஜாதகங்களின் தாக்கம் உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுள்ள

உறுப்பு தானம்: உரிய மரியாதை

படம்
  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு. "ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளடக்கிய 4 வேட்பாளர்களை பாஜக களமிறக்குகிறது"-மல்லிகார்ஜுன கார்கே. சீனாவின் ஹாங்சோவ் நகரில் கோலாகலமாக தொடங்கிய 19 வது ஆசிய விளையாட்டுப்போட்டி. சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார். தமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்  "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது.  குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்."  எனத்  தெரிவித்துள்ளார்.  - ---------

தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்

படம்
 ".  INDIA கூட்டணியை பார்த்து ஊழல்வாதிகளின் கூட்டணி என குற்றம்சாட்டும் மோடி. பாஜக ஒன்றிய ஆட்சி குறித்து சிஏஜி வெளியிட்ட அறிக்கையை படித்துப் பார்த்தீர்களா?"மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி. "சனாதனம் என்ற ஒரு வார்த்தை சொன்னதற்காக இவ்வளவு பெரிய பிரச்னையை உருவாக்குகிறார்கள். எங்களுக்கு அந்த வார்த்தையை சொன்னவர் பெரியார்; திமுகவோ, வேறு எந்த கட்சியோ மட்டும் பெரியாரை சொந்தம் கொண்டாட முடியாது, பெரியாரை தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும்; இந்தி ஒழிக என கூறவில்லை, தமிழ் வாழ்க என கூறுகிறோம்; இந்தி பேசினால் தான் வேலை என்றால் அந்த வேலை எங்களுக்கு வேண்டாம்;அன்பு ஒன்றுதான் எனக்கு தெரிந்த மதம்" - கோவையில்  கமல்ஹாசன் பேச்சு பாஜவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பிறகு அண்ணாமலையை மாற்ற டெல்லியில் முகாமிட்ட அதிமுக வினரை சந்திக்க அமித்ஷா மறுப்பு.நட்டாவுடன் மட்டும் சந்திப்பு . நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத வகையில் மக்களவையில் பாஜ எம்.பி. எம்.பி. ரமேஷ் பிதூரி ஆபாச பேச்சு. அவர்  மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக்கோரி மக்களவை சபாநாயகர் ஒம்பிர்லாவுக்கு காங்கிரஸ் கடிதம்.எதிர்க்கட்சிகள் கடும

பேருதாங்க பம்பர் பரிசு!

படம்
  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து தீ பிடித்தது. கிருஷ்ணகிரி கேஆர்பி அணை நிரம்பியது...#தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. அரசின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு ₹560 கோடி இழப்பீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. "இந்தியா நிலவை அடைந்தபோது உலக நாடுகளிடம் நிதிக்காக பாகிஸ்தான் கையேந்துகிறது"-முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வேதனை. சேலம் மாவட்டத்தில் செப்டம்பர் 28, அக்டோபர் 2ல் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவு. பாப்பாரப்பட்டி அருகே பனைகுளம் அரசு பள்ளியில் குடிநீர் தொட்டியில் துர்நாற்றம்.மலம் கலக்கப்பட்டதா?-கல்வி அதிகாரிகள் விசாரணை . கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை-ஆவின் புதிய நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்? -பா.ஜ.க விற்கு காங்கிரஸ் கேள்வி? பேருதாங்க 25 கோடி பம்பர் . தமிழகத்தில் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் அவ்வப்போது லாட்டரி டிக்கெட்டுகளில் தமிழர்கள் வெற்றி பெற்று பரிசுத்தொகையை

சீரற்ற சீரமைப்பு.

படம்
  தமிழ்நாட்டின் பிரதிநித்துவத்தை மக்களவையில் குறைக்க தொகுதி மறுசீரமைப்பு ஒன்றிய அரசு கொண்டுவருகிறது.என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேசியுள்ளார். என்ன விளைவுகள் மறுசீரமைப்பால் உண்டாகும்.? தமிழ்நாடு,கேரளா,தெலுங்கானா என தென்னிந்தியாவின் மொத்த பிரதிநிதித்துவம் குறைந்து,வட இந்தியா தொகுதிகள் கூடவே இந்த மறுசீரமைப்பு உதவும். வட மாநிலங்களில் மக்கள்தொகை வளர்ச்சி தென்னிந்தியாவை விட வேகமாக உள்ளது.  ஒப்பீட்டளவில் குறைவான மக்கள்தொகை வளர்ச்சியின் விளைவாக, தொகுதி மறுவரையறை நிர்ணயத்திற்குப் பிறகு, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளாவில் சில மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொகுதி மறுவரையறை நிர்ணயம் என்பது மக்கள்தொகை எண்ணிக்கையின் அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை நிர்ணயம் செய்யும் செயலாகும். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் சரியான பிரதிநிதித்துவத்திற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தோராயமாக ஒரே எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடைமுறையின் முதன்மை நோக்கம் ஆகும்.  உத்தரப் பிரதேசத்தில் தற்போத

ஷவர்மா;உயிர் பலி உணவா?

படம்
  புதுச்சேரி சலசலப்பு முதல்வர் மீது ஆளுநரிடம் பாஜக எம்எல்ஏக்கள் புகார்: சபாநாயகரை கண்டித்து திமுக, காங். வெளிநடப்பு.25 நிமிடத்தில் முடிந்த்து சட்டசபை கூட்டத்தொடர். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாடு மக்களவை உறுப்பினர் குறைக்கும் அரசியல் சூழ்ச்சி முறியடிக்கப்பட வேண்டும்:  -முதல்வர் மு.க.ஸ்டாலின் அனல்மின் நிலையங்களுக்கு பொருள் இறக்குமதி செய்ததில் வரி ஏய்ப்பு தமிழ்நாட்டில் 40 இடங்களில் வ.வரி சோதனை மின்வாரிய முன்னாள் அதிகாரிகள் வீடு, மின்வாரிய நிறுவனங்களில் நடந்தது - இந்தியாவுடன் மோதல் எதிரொலி: ஜம்மு - காஷ்மீர் செல்ல வேண்டாம்! நாட்டு மக்களுக்கு கனடா அறிவுறுத்தல். '0'மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவ மேற்படிப்பில் சேரலாம்.நீட் தேறினால் போதும் என ஒன்றிய அரசு அறிவிப்பு. " நீட் தேர்வை ரத்து செய்ய திமுக இளைஞரணி சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்"-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் . சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு ஆளுநர் ரவி அமைத்த குழுவை மாற்றி அமைத்து தமிழ்நாடு அரசு புதிய குழு அமைத்து அரசிதழ் வெளியிட்டது. உயிரிழக்கவா உணவு? ----------------------

கடத்தல் அதிகாரிகள்

படம்
  ஆதித்யா விண்கலத்தின் புவி சுற்றுபாதை நிறைவு எல்1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்க தொடங்கியது: இஸ்ரோ தகவல். தமிழ்நாட்டில் உள்ள மோசமான சாலைகளை மழைக்காலத்திற்குள் சீரமைக்க வேண்டும்.-முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்திரவு. சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத்குமார் விவாகரத்து கோரி மனு. தமிழ்நாட்டில் 12 வாரங்களில் ஆட்டோ கட்டணம் மாற்றி அமைக்கப்படும் -தமிழ்நாடு அரசு . தமிழ்நாட்டில் நடந்த போராட்டத்தால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டது -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  சேலம் மாநகரில் 33 ஹோட்டல்களில் தரமற்ற முறையில் 182 கிலோ சிக்கன் பறிமுதல். ‘அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தயார் செய்துள்ளது’ – கே.சி. பழனிசாமி . புதிய நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல்: மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்த பின்தான் என்ற விதியால் ஆறு ஆண்டுகளுக்கு பின்னரே ஒருவேளை அமலாக வாய்ப்பு . காவிரி பங்கீடு விவகாரம்: தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் - ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு வலியுறுத்தல் இந்திய எல்லையில் இலங்கை கடற்பட