என்னவாயிற்று?
இந்தியர்கள் 8 பேர் மரண தண்டனை. குறைத்தது கத்தார் நாடு நீதிமன்றம்.
“மனைவியை கைவிட்ட மோடியை, எப்படி ராமர் கோவில் பூஜைக்கு அனுமதிக்கலாம்? - சுப்பிரமணிய சுவாமி கேள்வி...
நிவாரணத் தொகை வழங்கும் பணி; அரசு அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் அறிவுரை .
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டாங்கொளத்தூர் அருகே பீர் பாட்டில்களை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.
.40 லட்சம் ரூபாய் லஞ்சம் விவகாரத்தில் 35 பேருக்கு தொடர்பு, 75 பேர் பட்டியல் சிக்கிய நிலையில் மூத்த அதிகாரிகளை காப்பாற்ற அங்கித் திவாரி மீது அமுலாக்குத்துறை திடீர் வழக்கு? கஸ்டடி என்ற பெயரில் டெல்லி அழைத்துச் செல்ல திட்டம்.
எடப்பாடி சிறைக்கு செல்லும் ரகசியத்தை உரிய நேரத்தில் சொல்வேன்: ஓபி.பன்னீர்செல்வம்.
தென்மாவட்ட சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி வழக்குஒன்றிய அரசு பதிலளிக்க உய்நீதிமன்றக் கிளை அறிவிப்பு.
நாடாளுமன்ற பாதுகாப்பு விதிமீறல் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி கோரி டெல்லி போலீஸ் மனு.
2005-06ல் நிலம் வாங்கி விற்ற விவகாரம் ஈடி விசாரணை வளையத்தில் முதல் முறையாக பிரியங்கா: கணவர் ராபர்ட் வத்ராவை தொடர்ந்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு.
பீகார் அரசியலில் பரபரப்பு; 14 எம்எல்ஏக்களால் நிதிஷ் குமார் பதவிக்கு சிக்கல்.முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தும் லாலு மகன் தேஜஸ்வி.
அமெரிக்காவில் படிப்பதற்காக, போலி கல்வி சான்றிதழ் தயாரித்து அமெரிக்க துணை தூதரகத்தில் கொடுத்த இன்ஜினியர் உள்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 12 பேரை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ஆணைபடி போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக இந்தியர் குடியேற்றம்.
அமெரிக்காவில் தஞ்சமடைய திட்டமிடும் வெளிநாட்டவருக்கு நிகரகுவா ஒரு தகுதியான இடமாக மாறியுள்ளது.2023ல் மட்டும் 96,917 இந்தியர்கள் சட்ட விரோதமாக தங்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இந்த எண்ணிக்கை 2022ம் ஆண்டை விட 51 புள்ளி 6.1 விழுக்காடு அதிகம்.
இதனை அமெரிக்கா சுங்கம் மற்றும் எல்லை கண்காணிப்பு துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு சட்ட விரோதமாக மெக்சிகோ வழியாக அமெரிக்காவில் குடிபுக முயற்சி செய்து பிடிபட்டவர்களில் 41,770 பேர் இந்தியர்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக குடியேறுவதற்கு வசதியாக நிகரகுவா போன்ற நாடுகள் இயக்கும் விமானங்கள் டன்கி விமானங்கள் என்று அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------
அல்போன்ஸ் புத்திரன் அவரது இன்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து குழப்பமான சர்ச்சைப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.
‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்.
அவர் இயக்கிய மலையாள படமான 'பிரேமம்' தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அல்போன்ஸ் இயக்கிய 'கோல்டு' படத்தில் பிருத்விராஜ், நயன்தாரா, செம்பன் வினோத் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் நடித்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், “நான் ரெட் ஜெயிண்ட் அலுவலகத்தில் உங்களிடம் அரசியலுக்கு வரும்படி தெரிவித்தேன் மற்றும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொன்றவர்களை கண்டுபிடிக்கும்படி அறிவுறுத்தினேன்.
இப்போது விஜயகாந்தை கொன்றவர்களையும் நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் சார் மற்றும் ஸ்டாலின் சாரை கொலை செய்ய முன்னதாக திட்டமிட்டு இருந்தனர்.
இதை நீங்கள் அப்படியே விட்டுவிட்டால் அவர்களின் அடுத்த இலக்கு நீங்களும், ஸ்டாலின் சாரும் தான்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதனால் அவரை இன்ஸ்டாவில் பின்பற்றுவோர் கடும் குழப்பத்தில் உள்ளனர்.
அல்போன்சுக்கு என்னவாயிற்று?
--------------------------------------------------------------