"சாதி"முகவரி
55.21 விநாடிகளில் 1 லிட்டர் தக்காளி Sauce-ஐ குடித்து கின்னஸ் சாதனை படைத்த ஆன்ட்ரே என்ற இளைஞர்.
தாமிரபரணியில் இருந்து விநாடிக்கு 10,100 கன அடி நீர் வெளியேற்றம்.
திறப்பு விழாவுக்கு தயாரான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்.
திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம் .வனத்துறையினர் எச்சரிக்கை.
இராமநாதபுரம் லாந்தை கிராமத்தில் நேற்று பாஜக மாவட்ட தலைவரால், உரிய முன் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட ‘நிர்மலா சீத்தாராமன் சாலை’ என்ற பலகை அதிகாரிகள் அகற்றினர்.
கர்நாடகா சிவமோகாவில் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்த புள்ளு முதல்வர் பணியிடை நீக்கம்.
அடுத்த3மணிநேரத்தில் கடலூர்,மயிலாடுதுறை,நாகை,ராமநாதபுரம்,தூத்துக்குடி,நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி,தேனி ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மும்பையில் இருந்து அசாமிற்கு, பழைய ஏர் இந்தியா விமானத்தை லாரியில் வைத்து கொண்டுசென்றபோது பாலத்திற்கு அடியில் விமானம் சிக்கிக்கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு. பலத்த போராட்டத்திற்கு பின் லாரி மீட்கப்பட்டது.
பெரிய அச்சத்தை தரும் வகையில் கொரோனா பாதிப்பு இல்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி .
சரியான முகவரி இல்லாமல் 'சாதி'யை குறிப்பிட்டு தபால் அனுப்பிய இந்தியத் தபால் துறை.
2024-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி ஜன.6-ல் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெறும் என அறிவிப்பு.
சென்னை போதிய பயணிகள் இல்லாததால் 3 விமானங்கள் நிறுத்தம்.
ஜம்மு -காஷ்மீருக்கான அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு அமைதி நிலவுவதாகவும் தீவிரவாத செயல்கள் குறைந்து விட்டதாகவும் பாஜக அரசு பீற்றிக் கொண்டது.
இது பொய் என்பதை பல தகவல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன. கடந்த வாரம் ரஜோரி மற்றும் பூஞ்ச் பகுதியில் விசாரணைக்காக ராணு வத்தால் அழைத்துச் செல்லப்பட்ட 15 பேரில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
அவர்கள் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. 3 பேரை ராணுவ வீரர்கள் கட்டைகளால் கடுமையாக தாக்கும் 29 வினாடிகள் கொண்ட காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த காணொலியில் தாக்கப்படும் நபர்கள் அனைவரும் அப்பாவிகள் என்று ஊடகத்தினரி டம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் மத்தியில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் ராணுவத்திற்கு எதிராகவும் கடும் கோபம் எழுந் தது. இதனால் ஏற்பட்ட நிர்பந்தம் காரணமாகவே ஒன்றிய அரசு தலையிட்டது. கொலைவழக்கு பதிவுசெய்யப்பட்டது.
ஆனால் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. எனவே இந்த சம்ப வத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஜம்மு-காஷ்மீர் துணை நிலை ஆளுந ரும் பொறுப்பேற்கவேண்டும்.
கொல்லப்பட்ட 3பேரது குடும்பத்தினருக்கு அரசு வேலையும் இழப்பீடும் வழங்கப்படும் என யூனியன் பிரதேச அரசு அவசர அவசரமாக அறிவித்துள்ளதை பார்க்கும் போது தவறு தங்கள் பக்கம் உள்ளதை ஒப்புக்கொண்டுள்ளதா கவே கருதவேண்டியுள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளைஞர் ஒருவர் ஊடகத்தினரி டம் பேசுகையில், தாங்கள் ராணுவ முகாமில் நாள் முழுவதும் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்ட போது, இரக்கமில்லாத ராணுவ வீரர்கள் காய மடைந்த இடத்தில் உப்பையும் மிளகாய் பொடி யையும் தூவினார்களாம்.
ஜம்மு-காஷ்மீரில் தெருவுக்கு தெரு ராணுவ வீரர்களை நிறுத்தி வைத்துக்கொண்டு அங்கு அமைதி நிலவுவதாக அரசு கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
மனித உரிமை மீறல் களை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அரசி யல் கட்சித்தலைவர்களை நிர்வாகம் வீட்டுக் காவலில் வைக்கிறது.
ராணுவத்தினரால் விசாரணைக்கு பிடித்துச் செல்லப்பட்ட 3 பேர் உயிரிழந்த சம்பவம் கொடு மையானது. மக்களை சித்ரவதை செய்யும் இஸ்ரேல் ராணுவத்தை போன்று இந்திய ராணுவத்தையும் பாஜக அரசு மாற்றப்பார்க்கிறதோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
எனவே 3 பேர் மரணத் திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்கப்படவேண்டும்.
விசாரணையை விரைவுபடுத்தி, குற்றவாளிக ளுக்கு தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்படிசெய்தால் மட்டுமே மனித உரிமை மீறல்களுக்கு கடிவாளம் போடமுடியும்.