துல்லியமாகச்

  சொன்னார்களா?

“மழை பற்றி 12 ஆம் தேதியே எச்­ச­ரித்­த­பி­ற­கும் தமிழ்­நாடு எடுத்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் என்ன?” என்று எது­வும் தெரி­யாத சிலர் கேள்வி எழுப்பி வரு­கி­றார்­கள். 

மழை பெய்­யும் என்று சொன்ன வானிலை ஆய்வு மையம், இந்­த­ள­வுக்கு மழை பெய்­யும் என்று எச்­ச­ரிக்­க­வில்லை என்­பதே உண்மை.

“தென் மண்­டல வானிலை ஆய்வு மையம் சென்­னை­யில்­தான் உள்­ளது. இந்த அலு­வ­ல­கம் சார்­பில் தென் மாநி­லங்­க­ளுக்­கான மழை அபா­யம் குறித்து 12 ஆம் தேதியே தக­வல் அளிக்­கப்­பட்­டுள்­ளது. 

அதில் 14 முதல் 16 வரை­ யி­லான மழை அறி­விப்பு இருந்­தது. இது அதி­ந­வீன மையம் என்­ப­தால் அடுத்த 5 நாட்­க­ளுக்­கான மழை குறித்து அறிந்து எச்­ச­ரிக்கை தரு­கின்­ற­னர். இது தவிர ஒவ்­வொரு 3 மணி நேரத்­துக்­கும் மழை எச்­ச­ரிக்­கை­யும் அளிக்­கப்­பட்டு வரு­கி­றது. 

தங்­க­ளுக்கு முன்­னெச்­ச­ரிக்கை கிடைக்­க­வில்லை என்று கூறு­ப­வர்­கள் இதை மன­தில் வைப்­பது அவ­சி­யம். அங்கு டோப்­ளர் எனும் 3 அதி­ந­வீன கரு­வி­கள் உள்­ளன. 

மழை பற்றி 12 ஆம் தேதியே அளித்த எச்­ச­ரிக்­கைக்­குத் தமி­ழக அரசு எடுத்த முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் என்ன? 

கன­மழை பெய்­யும் என்று முன்­கூட்­டியே எச்­ச­ரித்­தும் உரிய முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை மாநில அரசு எடுக்­க­வில்லை” என்று ஒன்­றிய அமைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் குற்­றம் சாட்டி இருக்­கி­றார்.

டிசம்­பர் 12 ஆம் தேதி வானிலை ஆய்வு மையம் என்ன சொன்­னது?

நாள்: 12-.12.-2023 நேரம்: 12:30 மணி வானிலை தக­வல்:

தென்­கி­ழக்கு அர­பிக்­க­டல் பகு­தி­க­ளில் ஒரு வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி நில­வு­கி­றது.

*12.12.2023: தமி­ழ­கத்­தில் ஓரிரு இடங்­க­ளி­லும், புதுவை மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் இடி மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும். கன்­னி­யா­கு­மரி, திரு­நெல்­வேலி, தூத்­துக்­குடி மற்­றும் இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டங்­க­ளில் ஓரிரு இடங்­க­ளில் கன­மழை பெய்ய வாய்ப்­புள்­ளது.

*13.12.2023 மற்­றும் 14.12.2023: தமி­ழ­கத்­தில் ஓரிரு இடங்­க­ளி­லும், புதுவை மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

*15.12.2023: தமி­ழ­கத்­தில் ஒரு­சில இடங்­க­ளி­லும், புதுவை மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

*16.12.2023: தமி­ழ­கத்­தில் ஒரு­சில இடங்­க­ளி­லும், புதுவை மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் இடி மின்­ன­லு­டன் கூடிய லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

 புதுக்­கோட்டை, தஞ்­சா­வூர், திரு­வா­ரூர், நாகப்­பட்­டி­னம்,மயி­லா­டு­துறை மாவட்­டங்­கள் மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளில் ஓரிரு இடங்­க­ளில்கன­மழை பெய்­ய­வாய்ப்­புள்­ளது.

*17.12.2023 மற்­றும் 18.12.2023: தமி­ழ­கத்­தில் ஒரு­சில இடங்­க­ளி­லும், புதுவை மற்­றும் காரைக்­கால் பகு­தி­க­ளி­லும் லேசா­னது முதல் மித­மான மழை பெய்­யக்­கூ­டும்.

இயக்­கு­னர் தென் மண்­டல தலை­வ­ருக்­காக மண்­டல வானிலை ஆய்வு மையம், சென்னை வெளி­யிட்ட அறிக்கை இது. மதி­யம் 12.30க்கும் வெளி­யான அறிக்கை இது. இரவு 7 மணிக்­கும், 10 மணிக்­கும் வெளி­யிட்ட அறிக்­கை­யில் ‘கன­மழை’ இருக்­கும் என்­றார்­கள்.

*கன­மழை என்­றால் மஞ்­சள்

*மிக கன­மழை என்­றால் ஆரஞ்ச்

*அதி கன­மழை என்­றால் சிவப்பு வண்­ணத்­தில் வானிலை ஆய்வு மையம் செய்தி வெளி­யி­டும்.

 ஆனால் 12 ஆம் தேதி வெளி­யான அறிக்­கை­யில் சிவப்பு நிறம் இல்லை, மஞ்­ச­ளில்­தான் வெளி­யிட்­டார்­கள்.

நெல்லை, தூத்­துக்­கு­டி­யில் பெய்த மழை அளவு எவ்­வ­ளவு?

17 ஆம் தேதி­யன்று தூத்­துக்­குடி மாவட்­டம் ஸ்ரீவை­குண்­டத்­தில் 48 செ.மீட்­ட­ரும், திருச்­செந்­தூ­ரில் 36 செ.மீட்­ட­ரும், கோவில்­பட்­டி­யில் 36 செ.மீட்­ட­ரும் பெய்­தது. 

இதே போல் நெல்லை மாவட்­டத்­தில் 25 முதல் 35 செ.மீட்­டர் மழை பெய்­தது.

18 ஆம் தேதி காயல்­பட்­டி­னத்­தில் 95 செ.மீட்­ட­ருக்கு மழை பெய்­துள்­ளது. மேற்­குத் தொடர்ச்சி மலை­யைச் சுற்­றி­யுள்ள அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் 39 இடங்­க­ளில் அதி­க­ன­மழை பெய்­தது.

 33 இடங்­க­ளில் மிக கன­மழை பெய்­தது. 12 இடங்­க­ளில் கன­மழை பெய்­தது. நெல்லை மாவட்­டத்­தில் அதி­க­பட்­ச­மாக 62 செ.மீட்­டர் மழை பெய்­தது. தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் சரா­ச­ரி­யாக 38 செ.மீட்­டர் மழை பெய்­தது. இவை வானிலை ஆய்வு மையமே எதிர்­பா­ரா­தது ஆகும்.

18 ஆம் தேதி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளித்த வானிலை மையத்­தின்தென் மண்­ட­லத் தலை­வர் பாலச்­சந்­தி­ரன்,“பொது­வாக புயல், தாழ்வு மண்­ட­லம், தாழ்­வுப் பகுதி போன்ற நிகழ்­வு­கள் வரும் போது­தான் அதி­க­ன­மழை இருக்­கும்.

 ஆனால் வளி­மண்­டல சுழற்சி உரு­வாகி, அதில் அதி­க­ன­மழை வரை இப்­போது பெய்­தி­ருக்­கி­றது. இது போல் பெய்­தது இல்லை”என்று சொன்­னார். ( தினத்­தந்தி 19.12.2023)

வானிலை ஆய்வு மையம் சொன்­னது ‘கன­மழை’ மட்­டும் தான். 

ஆனால், பெய்­தது – ‘மிக கன­ம­ழை’­­யை­யும் தாண்­டிய ‘அதி­க­ன­மழை’ ஆகும். ‘இது போல் பெய்­தது இல்லை’ என்று பாலச்­சந்­தி­ரனே சொல்லி விட்­டார்.

சென்னை வானிலை ஆய்வு மையத்­தின் முன்­னாள் இயக்­கு­நர் எஸ்.ஆர். ரம­ணன் அளித்­துள்ள பேட்­டி­யில்,“வானிலை ஆய்­வைப் பொறுத்­த­வ­ரை­யில் துல்­லி­யம் என்ற பேச்­சுக்கே இட­மில்லை. 

வானிலை என்­பது நொடிக்கு நொடிமாறக் கூடி­யது. சில தர­வு­கள், முன் அனு­ப­வங்­கள் மூல­மா­கக் கணிக்க முடி­யும். மழை­யைக் கணிக்­கும் அள­வு­கோ­லின் உச்­ச­பட்ச அளவே 20 செண்டி மீட்­டர் தான். 

அதற்கு மேல் மழை என்­றால் 20க்கும் மேல் என்று சொல்­வ­து­தான் நடை­மு­றை­யில் இருக்­கி­றது. அதைத் தான் ரெட் அலர்ட் என்­கி­றோம். அது 30 செ.மீ., 40 செ.மீ. ராக இருக்­க­லாம். துல்­லி­ய­மா­கச் சொல்ல முடி­யாது. இவை எல்­லாம் முன்­ன­றி­விப்­பு­கள், கணிப்­பு­கள் மட்­டும்­தான்”என்று சொல்லி இருக்­கி­றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?