இந்தியாவுக்கு இலங்கை எச்சரிக்கை

 இந்தியாவின் பொருளாதாரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என உலக வங்கி எச்சரிக்கிறது. 

இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சொல்கின்றனர். இலங்கையில் போராட்டம் மிகப்பெரிய அளவில் வெடித்து உலகையே திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது.

இலங்கையில் மக்களின் போராட்டம் ஓங்கியுள்ளதால். இலங்கை அரசின் கையில் ஏற்கெனவே பணம் இல்லாத காரணத்தால், மாற்று அரசு அமைந்தாலும் உடனடியாகத் தலைநிமிர வாய்ப்பு இல்லை என்கின்றனர் பொருளாதார ஆய்வாளர்கள்.

ஏனெனில், இலங்கையிடம் வெறும் 50 மில்லியன் டாலர் அளவிலான அன்னிய செலாவணியும், 50 பில்லியன் டாலர் அளவிலான கடன் சுமையும் உள்ளது.
 கடன் சுமையால் வீழ்ச்சி அடைந்துள்ள முதல் நாடு இலங்கையாக இருக்கும் நிலையில் பல நாடுகள் அடுத்தடுத்து வீழும் என ஐ.நா, உலக வங்கி தனது கணிப்புகள் மூலம் எச்சரித்துள்ளது. 
பொருளாதார வீழ்ச்சியில் தெற்காசிய நாடுகள், இலங்கை, நேப்பாளம், பாகிஸ்தான்... அடுத்தது யார்... என்பதுதான் இன்றைய நிலை?! 
அதில் இந்தியாவும் இடம் பிடிக்கும் என்றும் சொல்கின்றனர்.

David Malpass
David Malpass

உலகெங்கிலும், கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் மும்முனை நெருக்கடியுடன் போராடி வருகின்றன.

 கொரோனா தொற்று மற்றும் அதன் பொருளாதார வர்த்தகப் பாதிப்புகள், தொடர்ந்து அதிகரித்து வரும் கடன், ரஷ்யாவின் போர் காரணமாக உணவு மற்றும் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு போன்றவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் கூறுகையில், ``தற்போது வளரும் நாடுகள் பற்றித்தான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது. எரிசக்தி, உரம் மற்றும் உணவுக்கான திடீர் விலை உயர்வு மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பு ஆகியவை வளரும் நாடுகளில் இருக்கும் கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர மக்களைக் கடுமையாகத் தாக்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக ஐ.நா-வின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டுப் பிரிவான UNCTAD, சமீபத்திய அறிக்கையில் 107 நாடுகள் குறைந்தபட்சம் மூன்று அதிர்ச்சிகளில் ஒன்றை எதிர்கொள்வதாகக் கூறுகிறது.

 மூன்று பாதிப்புகளையும் சுமார் 69 நாடுகள் எதிர்கொண்டு வருகிறது.

இதில் ஆப்பிரிக்காவில் 25, ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளில் 25, மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் பசிபிக் நாடுகளில் 19 உள்ளது என ஐ.நா தெரிவித்துள்ளது. இதன்படி தற்போது ஐ.எம்.எஃப் இலங்கையைப் போலவே துருக்கி, எகிப்து, துனிசியா, பாகிஸ்தான், கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா, அர்ஜென்டினா, எல் சால்வடார், பெரு ஆகிய நாடுகள் உடன் நிதியுதவிக்காகவும், புதிய கடனுக்காகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இதனால் கொரோனாவுக்குப் பின்பு வீழ்ந்த முதல் நாடு என்ற பெயரை இலங்கை வாங்கியுள்ளது. இதேபோல் இலங்கையைத் தொடர்ந்து பல நாடுகள் வீழ்ச்சி அடைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன என்பதை உலக வங்கி, ஐ.நா, ஐ.எம்.எஃப் தரவுகள் வாயிலாகத் தெரிகிறது.

வெளிநாட்டு முதலீடுகள் விலக்கிக்கொள்ளப்படுகின்றன.அவை டாலர்களாக வெளியேறுவதால் அந்நிய செலவாணி கையிருப்பு பாதாளத்தில்.

பங்கு சந்தையும் வீழ்ச்சியில்.LIC பங்கு விற்பனையும் பரபரப்பில்லை.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய பொருளாதாரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் முதலீட்டாளர்கள் முதல் சாமானிய மக்கள் வரையில் பொருளாதார நிலையில் குழப்பமான நிலையை உருவாக்கி இருக்கிறது.

இந்தக் குழப்பத்தை போக்க  மோடி என்ன செய்யப்போகிறார் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

2000 கங்களில்  உலகமே பொருளாதாரம் சீர்கெட்டு நிற்கையில், அமெரிக்காவே திண்டாடியது.அமெரிக்க வங்கிகள் பல திவாலானது.

ஆனால் இந்தியாவில் பாதிப்பில்லாமல் இருந்தது. அதற்கு காரணம் தேசமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள்,எல்.ஐ.சி, ஆகியவையும்.ரிசர்வ் வங்கி கையிருப்பும், பிரதமர் மன்மோகன் சிங்கின் பொருளாதார அறிவும், நடவடிக்கைகளும்தான்.

ஆனால் இன்று அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், எல்.ஐ.சியும் விற்பனைக்கு.

வரிகள் மாதாமாதம் அதிகரிப்பு.

ஏழைகள், வேலைவாய்ப்பின்மையும் பெருகிக் கொண்டிருக்கையில் அதானியும், அம்பானி மும் உலகப் பணக்காரர்களில் 4,5இடங்களுக்குள்.

அதானி, அம்பானி கார்பரேட் கள் நலனை மட்டுமே தங்கள் கொள்கையாகும் கொண்டு செயல்படுவதை நிறுத்திவிட்டு மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாவிட்டால் இந்தியாவை அந்த ராமரால் கூட காப்பாற்ற முடியாது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?