ஞாயிறு, 29 மே, 2022

கதறல் ஏன்?

 சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய தமிழகமுதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து தமிழத்திற்கு விலக்கு, கச்சத் தீவு மீட்பு, தமிழக திட்டங்களுக்கு நிதி பங்களிப்பதை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினார்.

பிரதமர்மோடியை மேடையில் வைத்தே தமிழக முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியதை திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெகுவாகப் பாராட்டியதோடு சமூக வலைத்தளங்களில் பலத்த

 விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

அதே நேரத்தில் மேடையில் முதல் பிரதமர் வைத்துக் கொண்டே இவ்வாறு பேசுவது ஏற்புடையது அல்ல எனவும் பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

 இந்நிலையில் அதிக அளவு ஜிஎஸ்டி வசூல் தமிழத்திலிருந்து இருந்தாலும், மத்திய அரசு தமிழகத்துக்கு திருப்பி தருவது 1.21 சதவீதம்தான் என பிரதமரை வைத்துக்கொண்டே மேடையில் முதல்வர் பேசும் துணிச்சல் தான் பாஜகவினரின் கதறலுக்கு காரணம் என திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

.
.

'திராவிட மாடல் என்பது பொருளாதாரத்தையும் சமூகநீதியும் உள்ளடக்கிய வளர்ச்சி. இரண்டையும் உள்ளடக்கி தமிழகத்தில் நடக்கின்ற இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். கோரிக்கைகளை வைப்பதற்கு தான் முதல்வர் இருக்கிறார்.

இந்த மாநிலத்தின் தேவைகளை நம் கோரிக்கைகளை பிரதமருக்கு எடுத்துச் செல்வது என்பது ஒரு முதலமைச்சரின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இது முன்மாதிரியான நிகழ்வு இல்லை. நேரு மேடையில் இருந்த போதுதான் காமராசர் கோரிக்கைகளை வைத்தார். இதை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும். மேடையில் முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விளக்கம் தருகிறேன் என பிரதமர் கூறியிருந்தால் உண்மையாக பிரதமருக்கு பெருமையும் புகழும் சேர்ந்திருக்கும்.

அண்ணாமலை ஆதங்கப்படுகிற அளவுக்கு கூடுதலாக கைதட்டல்களும் கிடைத்திருக்கும். முதல்வர் மேடையில் கூறிய புள்ளிவிவரத்தின் கடைசியில் வைத்த ஒரு வரிதான் பா.ஜ.க-வினர் கதறும் அதற்குக் காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு மாநிலம் தர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு 3.44 சதவீதம். பல மாநிலங்கள் இதை தருவதில்லை. மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் இதை ஈடுகட்டுகிறது. கொடுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு 9.22 சதவீதம் கூடுதலாக தருவதாகவும், ஒன்றிய அரசு தமிழகத்துக்கு திருப்பி தரவது 1.21 சதவீதம்தான். பிரதமரை வைத்துக்கொண்டு சொல்லும் துணிச்சல் தான் பாஜகவினரை கதற வைப்பதாகும்' என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------------------------------

முதல்வர்பேச்சு கிளப்பிய தீப்பொறி.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் அரசு என்றால் என்ன என தமிழிலும் ஆங்கிலத்திலுமாக விவரித்திருந்தார்.

 அப்போது, தமிழ்நாட்டின் வளர்ச்சியானது பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல; சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி. தமிழ்நாட்டின் வளர்ச்சியே திராவிட மாடலாகும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தான் திராவிட மாடல் ஆட்சி என கூறியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

முதல்வரின் இந்த திராவிட மாடல் விளக்கம் பெரும் வரவேற்பை பெற்றது. அத்துடன் திராவிட மாடல் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

.
.

இப்போது திராவிட மாடல், திராவிடம் குறித்த விவாதங்கள் மீண்டும் அண்டை மாநிலங்களிலும் களைகட்டியிருக்கிறது.

 கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். திராவிடர்களா? அவர்கள் ஆரியர்கள். அவர்கள் இந்தியர்களா?. திராவிடர்கள் தான் இந்திய நாட்டின் பூர்வ குடிகள்.

 ஆகையால் நாட்டின் வரலாற்றை யாரும் கிளறி பார்க்க கூடாது. அம்பேத்கர், வரலாறு தெரியாதவர்களால் எதிர்காலத்தை வடிவமைக்க முடியாது என்று கூறினார். உண்மையான வரலாறு குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு பயம் உள்ளது. 

உண்மையான வரலாற்றை உழைக்கும் வர்க்கத்தினர், திராவிடர்கள் தெரிந்து கொண்டால் என்ன ஆகும் என்பது ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினருக்கு தெரியும். அதனால் தான் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள் என கூறியிருந்தார்.

சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை இது குறித்து கூறுகையில் ,சித்தராமையா ஆரியரா? திராவிடரா? இதற்கு முதலில் அவர் பதில் சொல்ல வேண்டும் என்றார். முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா கூறுகையில், சித்தராமையா நாடோடி. சோனியா காந்தியை திருப்திப்படுத்த இப்படி பேசுகிறார். ஆர்.எஸ்.எஸ். நாட்டிற்கு சேவையாற்றும், தேசபக்தியை வளர்க்கும் அமைப்பு என்றார். 

இப்போது சித்தாரமையா ஆரியம்- திராவிடத்தை தொடர்ந்து, ஆர்.எஸ்.எஸ். இயக்கம், பாஜகவில் உள்ளவர்கள்தான் இந்துக்களா? இந்து பெற்றோருக்கு பிறந்தவர்கள் இந்துக்கள் இல்லையா? ஆரியர்களின் பூர்வோத்திரம் எது? என மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானாவிலும் ஆரியம்- திராவிடம் விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. மஜ்லிஸ் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான ஓவைசி, இந்தியா என்பது திராவிடர்களுக்கும் ஆதி குடிமக்களுக்குமே சொந்தமானது; பாஜக, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சித்தாந்தங்கள் முகலாயர் ஆட்சிக்குப் பின்னர் வந்தவை. இந்த தேசம் என்பது மோடிக்கும் அமித்ஷாவுக்கும் சொந்தமானது அல்ல என்றார்.

 தமிழகத்தில் திராவிடம் என்பது பல நூற்றாண்டு சித்தாந்தம்; கடந்த ஒரு நூற்றாண்டு அரசியல் சித்தாந்தம்; திராவிட அரசுகள் என்பது அரை நூற்றாண்டுகால வரலாறு. திராவிடத்தின் தேவையை ஆரியத்தின் எதிர்ப்பை காலந்தோறும் தமிழ் நிலம் முன்வைத்து வருகிறது. 

இப்போது தென்னிந்திய நிலமும் வலுவாக ஆரியர் எதிர்ப்பு நோக்கி பயணிக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். 

--------------------------------------------------------------------------

இந்தியாவில் கள்ளநோட்டுகளின் புழக்கம் இருமடங்காக அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் கள்ள நோட்டுகளின் புழக்கம் இருமடங்காக அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்புக்குப் பின்பு, ரூ.500 கள்ளநோட்டுகள் அதிக அளவில் அச்சடிக்கப்பட்டுள்ளது. 2022 இல் ரூ.500 கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 101.9% உயர்ந்து 79,669 ஆகவும் ரூ.2,000 கள்ளநோட்டுகளின் எண்ணிக்கை 54% உயர்ந்து 13,604 ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

2016 ல் 18 லட்சம் கோடியாக இருந்தது.மோடியின பணமதிப்பிழப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்து 2022 ல் 31 லட்சம் கோடியாக கருப்புப் பணம் உள்ளது.

என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

---------------------------------