வியாழன், 31 ஜனவரி, 2013

ஒரு அவசர செய்தி.....,உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் பக்குவப்பட்டவர்கள் .கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் என்பதற்கு பல உதாரணங்களைக்கூறலாம்.
இப்போது இசுலாமிய எதிர்ப்பு என்பதெல்லாம் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம்  ஆளுங்கட்சியின் அரசியல் ,சொந்த வெறுப்பு,பழிவாங்கல் என்று தெரிந்தும் கட்டுப்பாட்டுடன் இருப்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய விடயம்தான்.

இதோ நண்பர் கோவிந்தராஜூ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரு வேண்டு கோள்கள்.
கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் எத்தனை தடைகள் போட்டாலும் திரையரங்கில்தான் பார்ப்பேன்.திருட்டு விசிடி யில் பார்க்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலே  போதும். 


அது என்ன கரை என்பது புரியும்.ஆனால் திரையரங்கை தாக்க அக்கரை வேட்டியில் வர மாட்டார்கள் என்பதும்.இசுலாமிய வேடம்தரித்து வருவார்கள் என்பதும் புரியாதவர்களா நீங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் அருள்வாக்கு,

இத்தனை நாட்களுக்குப்பிறகு நம்மை ஆளும் அம்மா வாயைத்திறந்துள்ளார்.பொதுவாக இது போன்ற பரபரப்புகளில் வாயை திறக்காமல் காரியத்தில் கண்ணாயிருக்கும் அவர் இப்போது அறிக்கை விடுகிறார் என்றால் தன்னையறியாமல் ஒரு அச்சத்துக்கு ஆளாயிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
 இப்போதைய வழக்கும் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்து விடும்.தனக்கு அது அவமானமாகி விடும் என்ற கவலைதான் வாயை திறக்க வைத்திருக்கிறது.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு இரவு 11.30 அரசு தடை வாங்க நீதிபதியின் தூக்கத்தை கெடுத்து மேல்முறையீடு செய்து தடை நீக்கத்துக்கு தடை வாங்க என்ன காரணம் என்று அறிக்கையில் சொல்லப்படவில்லையே?
இசுலாமிய தலைவர்கள் கூட "நாங்கள் கூறிய காட்சிகளை கமல் நீக்க ஒத்துக்கொண்டார்.முதலில் தடை சரி.பின் இரண்டாவது ஒடி சென்று இத்தனை அவசரப்பட்டு தடை வாங்க வெண்டிய அவசியம் அரசுக்கு என்ன வந்தது.சன்டைககாரர்கள் ஒத்துமையாக போனபின் இவர்கள் தடை செய்ய அலைவதுக்கும் எங்களுக்கும்    தொடர்பில்லை.எங்கள்   பிரச்னை முடிந்தது."என்கிறார்கள்.
இந்தியா முழுக்க படம் வெளியான பின் தமிழ் நாட்டில் மட்டும்,அதுவும் தமிழன் எடுத்த படத்தை வெளியிட தடை என்றால் அது தமிழக அரசுக்கும் அவர்கள் ஆட்சியில் வாழும் மக்களுக்கும்தான் அசிங்கம்.
ஒன்று மட்டும் வெளிப்படையாகத்தெரிகிறது.ஜெயலலிதா என்றஜெயா  தொலைக்காட்சியின் 
மறைமுக பங்குதாரருக்கும் கமல்ஹாசன் என்ற படத்தயாரிப்பாளருக்குமான பிரச்னைதான் மூல வேர்.
அல்லது இப்படிகூட மாற்றி யோசிக்கலாம்.
90 கொடிகளுக்கும் மேல் படத்தில் போட்டு விட்டு இத்தனை பணம் வருமா?என்று கவலைப்பட்ட கமல்ஹாசனுக்கு உதவவே இத்தடை நாடகமாக இருக்கலாம்.
இதன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்குமே விஸ்வரூபத்தில் அப்படி என்னதான் இருக்கிறது அதையும் பார்த்து வைப்போம் என்று திரையரங்குக்கு வர ஆவலைத்தூண்டிவிட்டார்கள் அல்லவா?
கையை பிசைந்து நின்ற கமலுக்கு அரசு செய்த இலவச விளம்பரம்.
அதனால்தான் "தடையால் நட்டம் என்று பணம் அரசிடம் கேட்கக்கூடாது"என்று அம்மையார் வரிகளை சேர்த்திருப்பாரோ?  
கமல் தனக்கு எதிரி அல்ல என்று ஜெயா கூறியதை நம்ப இயலாது. 
அன்பத்தேடி படத்தில் புத்தர் வேட கமலை ஜெயலலிதா மயக்கி ஆடும் காட்சியிலேயே கமலின் நடிப்பை விமர்சித்து திரை உலகில் அடையாளம் தெரியாத  ஆளாக இருந்த கமலை வாங்கு வாங்கு என்று வாங்கியவர்.
அதன் பின் மூன்றாம் பிறை யில் கமல் தேசிய விருது பெற்றமைக்காக எம்ஜிஆர்  பாராட்டு விழாவை நடத்தக்கூடாது என்று எம்ஜிஆரிடம் சண்டையிட்டவர் இதே ஜெயலலிதா.அதன் பின் விக்ரம் பட விளம்பர விவகாராம்,இப்போது சிதம்பரம் கூட்ட பேச்சு,ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்காமல் விஸ்வருபத்தை நல்ல விலைக்கு அடுத்த தொலைக்காட்சிக்கு விற்றது என்று  பல உள்குத்துக்கள் உள்ளன.
அதை எல்லவற்றையும் விட தடை விதிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவை சந்தித்து கூழைக்கும்பிடு போடாமல் இருந்தது அவருக்கு தடையை நீக்க முடியாமல் சட்டம் ஒழங்கு பிரச்னை வந்து விட்டது. 
அட அப்போது கூட சந்திக்காமல் இருந்தது சரி.தடையை நீக்கும் உத்திரவுக்கு பின்னால் ,இசுலாமியருடன்  சுமுகமாக பேசி தீர்வு காண நீதிபதி சொன்னபோது கமல் இசுலாமியர்களுடன் பேசி சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதும் -அவர் வருவார் என்றும் அப்போது அம்மாவை பாருங்கள் அம்மா பெருந்தன்மையுடன் மன்னித்து விடலாம் என்று 
 கூற தலைமைச்செயலர்,உள்துறை செயலர் என்ற அதிகார மட்டங்கள் காத்திருந்த போது கமல் வராமல் பிரச்னையை இசுலாமியருடன் முடித்துக்கொண்டதும் தான் அம்மா விஸ்வரூப ம் எடுத்துஇரவு நீதிபதி வீட்டை  11.30 க்கு தட்ட வைத்து விட்டது.
அதுவும் போதாது என்று காவல்துறைக்கு எந்த  திரையரங்கிலும் தடை நீக்கம் என்று படத்தை போட்டு விடக்கூடாது.மதியம் மீண்டும் தடையை எப்படியும் வாங்கி விடுவோம் என்ற ஆணை பறந்து அதன் படியே ஏவல் மன்னிக்கவும் காவல்துறை படத்தை நிறுத்தி ரசிகர்களை அடித்து விரட்டியது.
அது போதாது என சிலரை எற்பாடு செய்து கமல் விளம்பர பதாதைகளை எரிக்க செய்தது.திரையரங்குகளை கல்லை எரியச்செய்தது.
 இதன் மூலம்  சட்டம்-ஒழங்கை நீதிமன்றத்தில் காட்டி அரசின் வாதத்தை வலுப்பெறச்செய்யலாம் என்பதுதான் ஆளுங்கட்சியின் தலைமையின் திட்டம் .
அரசு அல்லது ஆளுங்கட்சிதான் செய்தது என்பதற்கு ஆதாரம் பல.
சென்னை தேவி திரையரங்கில் இருந்து ரசிகர்கள்  ஆயிரக்கணக்கானோர் காவல்துறையால் வெளியேற்றப்பட்டு வாயில் கள்  பூட்டி காவல்துறையினர் நின்று கொண்டனர்.வெளியே ரசிகர்கள் கூட்டம்.ஆனால் உள்ளே கமல் பேனர்கள் தீப்பிடித்து எரிகிறது.காவல்துறையினர் அதை அப்புற ப்படுத்துகின்றனர்.யாரோ பெட்ரோல் குண்டை வைத்து எரித்து விட்டு ஒடி விட்டனராம். மு.தா.அறிக்கை பதிவு செய்து விட்டு செய்தியாளர்கள் வரும் முன் எதுவும் நடக்காதது போல் சுத்தமாக துடைத்து விட்டு ஒன்றும் இல்லையே என்று சொல்லியிருக்கிறது காவல்துறை.ஆனாலும் சுவரில் உள்ள கரியை படம் பிடித்து திரும்பியுள்ளனர் செய்தியாளர்கள்.இசுலாமிய மக்கள் மீது தானே இக்குற்றசாட்டு விழுகிறது?

அடுத்து வாங்க பழகலாம் ரினாஷ் கான் தன்பதிவில் எழுதிய சம்பவம் .

இதுவும் தமிழ் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்திய விவகாரம்.இந்த பழியும் ஒன்றுமறியா இசுலாமியர் மீதுதான் விழுந்திருக்கும்.ஆனால் பூனை வெளியெ வந்து பிசுபிசுத்து விட்டது.

"[flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......
 என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 
இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....
அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ..."
 சின்னப்பிள்ளைத்தனம்,

பெங்களூருவில் 17  திரையரங்குகள்  


விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழக நடிகர்கள் -இயக்குனர்கள் மற்றையோர் ஆதரவு தெரிவித் துள்ளனர்.
ஆனால் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற அதிமுக தொழிற்சங்கம் மட்டும் முக்கிய வேலையில் இருப்பதால் இன்னமும் கருத்துகூட தெரிவிக்க வில்லை.
முக்கிய வேலை?
நடிகர் சரத் குமார் தனது அதிமுக ஓட்டுகட்சியை பலப்படுத்திவருவதுதான்.
ஆனால் இந்திய அளவில் ஆதரவு வார்த்தைகள் கமல்ஹாசனுக்கு பெருகி வருகிறது.ஆனால் இது பொன்றவற்றை நம் அம்மையார் கண்டு கொள்ளவே மாட்டார்.அவருக்கு பலி வாங்கல் மட்டுமே கவனத்தில் இருக்கு.சாலைப்பணியாளர்களுக்கு பணி வழங்க்கக்கூறி நீதிமன்றம் உத்திரவிட்டப்பின்னரும் என்ன செய்தார் என்பது நாம் அறியாததல்ல.இப்போது மக்கள் நலப்பணியாளர்கள் அம்மாவின் கண்பார்வைக்கு  ஆண்டுக்கணக்கில் தீர்ப்புக்குப்பின்னரும் காத்திருக்கிறார்கள்.
தான் மட்டும் நீதிமன்றம் செல்ல வாய்தா வாங்குவது மற்றவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டுவதுமே அவரின் பொழுது போக்காகி விட்டது.
ஸ்டாலின்,கருணாநிதி போன்றோரை சிறையில் தள்ளிவிட்டு பின்னர் வழக்குக்கு காரணம் தேடி கிடைக்காமல் அவர்கள்  வெளியெ  வந்தது பழிய கதைதானே ?
   கமல்ஹாசனை இதுவரை உள்ளே தள்ளாததே அம்மாவின் பெருந்தன்மையாக இருக்கும் போல் தெரிகிறது.சோ,சரத்குமார் ,ராதா ரவி  ஆகியோர் அதைத்தான் சொல்லுவர்.
தமிழ் நாட்டை த்தவிர மற்ற இந்தியா முழுக்க விஸ்வரூபம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் போது இங்கு மட்டும் தடை.
மற்ற மாநில அரசுகள் எல்லாம் அனுமதிக்கும்போது இங்கு வெளியிட்டால் உருவாகக்கூடிய சிறிய பிரச்னைகளை கையாளத் தெரியாத கையாலாகாதவர்களா இங்குள்ள ஆட்சியாளர்கள்-அதிகாரிகள்.
உச்ச நீதிமன்றம் கூறியும் தண்ணீரை திறக்காத கர்நாடாக அரசை நீதிமன்ற தீர்ப்பை வைத்து மேல் முறையீடு சென்று தண்ணீரை வாங்க முடியாத ஆட்சியாளர் ஒரு படத்தை திரையிடக்கூடாது என்பதற்காக அதிகாரத்தையும்,அரசுப்பணத்தையும் ,நேரத்தையும் வீணடித்துக்கொண்டிருக்கிறார்.
விஸ்வரூபம் படம் தடைக்காக  உச்ச நீதிமன்றம் கூட அரசு செல்லும் என்று அறிவித்திருப்பது  சின்னப்பிள்ளைத்தனமாக இருக்கிறது.அங்கு சென்றும் தடை போட்டது தவறு என்று தீர்ப்பாகி விட்டால் இவரது அரசுக்குத்தானே அசிங்கம்.அதை கண்டித்து ஐ.நா.சபைக்கு, அதன் பின் உ லக நீதிமன்றம் செல்லுவாரா என்ன?வே று என்ன சொல்ல?

இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்:- "இதுபோன்ற பிரச்சினைகளை நாங்களும் சந்தித்தோம். சுருக்கமாக கூறினால் ஒரு படத்துக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் ஒரு உயர்ந்த  கலைஞர். கமல் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.அதில் ஆட்செபரமான,இசுலாம் எதிர்ப்பு ஏதும்இருப்பதாக  முஸ்லீமான எனக்கு தெரியவில்லை.இது கமல்ஹாசன் மீதான தனிப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது."
நடிகர் நாகார்ஜுன்: "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை.தமிழ அரசின் பலி வாங்கலாகவே எனக்கு தெரிகிறது."
 

நடிகர் சித்தார்த்: மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு உள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்.

நடிகர் ரஜத் கபூர்: விஸ்வரூபம் படம் ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் வெளியாகி உள்ள நிலையில், அதனால் நாட்டின் ஒற்றுமைக்கு எப்படி பங்கம் வந்து விட்டது? தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கி இருக்கிறது. அது நாடு முழுமைக்கும் பொருந்தாதா அல்லது நம்மிடம் பல நாடுகள் இருக்கிறதா?

நடிகை ஜெயப்பிரதா: விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்.

இந்தி பட அதிபர் மகேஷ்பட்: கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்.

தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன்: தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்.

நடிகர் மனோஜ் பாஜ்பாய்: ஒரு படத்தை சுமுகமாக திரையிடுவதற்கு தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் உறுதி அளிக்கிறது. விஸ்வரூபம் படத்துக்கு அத்தகைய சான்றிதழ் கிடைத்த பிறகும் தமிழ்நாட்டில் அச்சத்தை தரும் சூழ்நிலையை  தமிழ் நாட்டின் அரசாங்கமே உருவாக்கிக்கொண்டிருப்பதுதான் ஆச்சரியம்.தமிழ் நாட்டில் அறிவிக்கப்படாத மிசா இருக்கிறது.   

-------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதன், 30 ஜனவரி, 2013

பூனை வெளியே வந்து விட்டது


சாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் .
இதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
 .தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும்.
ஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.
  .இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல்.
இங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு  உத்திரவிடப்பட்டுள்ளதாம்.
தனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா?
ரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார்?இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்று காவல்துறை சொல்லி வழக்கை எழதி பதிகிறதாம் .அப்படி யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.இவை எல்லாம் சட்டம் ஒழ்ங்கி பிரச்னை என நீதிமன்றத்தில் காட்ட ஆதாரமாக செய்யப்படுகிறதாம்ரசிகர்களை நாகர்கோவில் கார்த்திகை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பிறகு சிலர் வந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்து அலங்கார வளைவுகளுக்கு தீவைக்கின்றனராம்.அதை தடுக்க செல்லும் கமல் ரசிகர்களை அடித்து விரட்டி அந்த தீவைப்பாளர்களௌக்கு பாதுகாப்பு வழ்ங்க்கப்படுகிறதாம் அவர்கள் இசுலாமியர்கள அல்லவாம்.ஆளுங்கட்சி கட்சிக்காரர்கள் போல்தான் தெரிகிறதாம்.இதிலிருந்து பிரச்னை இசுலாமியர்களுக்கும் விஸ்வரூபம் படத்துக்கு முடிந்து இப்போது ஜெயலலிதா கமல்ஹாசனை பலி வாங்கும் படலம் தான் நடப்பதாக தெரிகிறது.
ஆனால் நிச்சயம் படம் வெளிவரும் இதற்கான பலனை ஜெயலலிதா விரைவில் அறுவடை செய்வார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
"வரும் 1 ம்தேதி, மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான் மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு பெருந்திரளாக கூடியுள்ளதால் மற்றவர்களுக்கு  இடையூறாக இருப்பதாக "அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில், கமல் ரசிகர்களை சந்தித்தார்.

 இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட் டிராப்ட்களையும்,பணக்கட்டுகளையும்  கமலிடம் அளிக்க அங்கு கொண்டு வந்திருந்ததாகவும் கமல்ஹாசன் அவற்றை வாங்க மறுத்து களைந்து அமைதியாக செல்லக் கூறினார் என்றும் அங்கிருந்து வந்த  தகவல்கள் கூறுகின்றன.

இது கமல்ஹாசனின் பேட்டி:
"என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும் செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு இருக்கும் இந்த வீடு ‌எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம் முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை செய்கிறார்கள் என்று புரியவி‌ல்லை. 
என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர் கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும் எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும், காடாகும். ஆனால் விதை நான் போட்டது. 
எனது பட வசனமே எனக்கு உதவிக்கு வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால் நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு வெளியேறவும் நான் தயார். 
வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும் இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள்.
 அவர்களில் பலர் முஸ்லிம்கள். 
அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. 
என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது. தாமதிக்கப்படும் நீதி பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார்.

கீழேயுள்ளது "வினவு"தளம் வெளியிட்ட பதிவு நன்றியுடன் மீள் பதிவிட்டுள்ளேன்.

"விஸ்வரூபம் படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் கெஞ்சியிருக்கிறார்  அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன்.
 நீதிபதி அதை ஏற்கவில்லை. 
எனவே இரவோடு இரவாக 12 மணிக்கு சென்று தலைமை நீதிபதியின் வீட்டு  கதவை  தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.
“இத்திரைப்படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.
“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இசுலாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.
தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.
“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.
“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.
அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.
32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே application of mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.
“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.
“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.
கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பல இசுலாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.
நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

கீழேயுள்ளது கருணாநிதியின் வாதங்கள்: 

தி .மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக விஸ்வரூபம் படத்ததை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை.
ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.
பெரியார் அடிக்கடி  என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது".

இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்துள்ளது .
விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?."
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

-

இதை செய்வாரா கமல்ஹாசன்? விஸ்வரூபம் படம் வெளிவரக்கூடாது என்பதில் இசுலாமிய  சில தலைவர் களை விட தமிழக் அரசுதான் தீவிரவாதியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தானிலும் ,பாகிஸ்தானிலும் கூட படம் வெளியாவதில் இத்தனை கடுமை இராது.
ஆனால் தமிழக  அரசு  தடை வெறி விஸ்வரூபமாக இருக்கிறது.
நேற்று இரவு தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் புதன்கிழமை மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தீர்ப்பை நிறுத்திவைக்குமாறும் தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 
ஆனால், நீதிபதி கே.வெங்கட்ராமன் இந்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
இதைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன் தலைமையிலான வழக்குரைஞர்கள், நீதிபதி எலிபி தர்மாராவின் வீட்டிற்கு செவ்வாய்க்கிழமை இரவு 11 மணிக்குச் சென்று முறையிட்டனர்.
அவர்களிடம் பேசிய நீதிபதி இப்போது முதல் அமர்வுக்கான நீதிபதி இல்லாததால், புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முதல் அமர்வில் இது தொடர்பாக முறையிடுமாறும், இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிப்பதாகவும் அவர்களிடம் கூறினார்.
ஏன் தமிழ் நாட்டு அரசுக்கு இந்த தடை வெறி.
இந்த வெறிக்கு காரணம் இசுலாமியர் எதிர்ப்பு மனு மட்டுமே காரணம் அல்ல.அது மட்டும் என்றால் கர்நாடகா.கேரளா போன்று பாதுகாப்புடன் படத்தை வெளியிடச்செய்திருக்கலாமெ.
அதையும் தாண்டி புனிதமான காரணம் எதோ ஆட்சியாளர்கள் மனதில் ஒடிக்கொண்டிரூக்கிறது.அதை முந்தைய  பதிவுகளில் தந்துள்ளோம். மீண்டும் சின்னதாக :
டிடிஎச் வெளியீடு ஏர்டெல் முதல் சன்  வரை சென்றது.சூரியன் என்றாலே அரசுக்கு ஒவ்வாமை.
'வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக ப.சி ,க்கு தகுதியிருக்கிறது என்றது.ஏ ன் சேலை கட்டியவருக்கு தகுதி இல்லையா என்ற கிண்டல்."இவை போன்ற வைதான் அம்மாவிற்க்கு 
தடை என்ற கதாயுதத்தை கையில் எடுக்க வைத்து விட்டது.
இத்தனை அவசரமாக தடை கிடைக்கும் என்று மனு  இசுலாமிய தலைவர்கள் கூட  எதிர்பார்க்க வில்லையாம்.
இப்போது மீண்டும் உச்ச நீதிமன்றம் வரைப் போக அரசு வழக்குரைஞர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாம்.
இத்தனை விஸ்வரூப அரசினை சாந்தப்படுத்த வழியும் இல்லாமல் இல்லை.
அரசு அனுமதியுடன்-பாதுகாப்புடன் விஸ்வரூபம் வெளியாகிவிடும் .அப்போது எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுக்கு சிறை கூட கிடைக்க வாய்ப்புள்ளது.
அதற்கு  கமல்ஹாசன் அம்மாவை பார்த்து அமைச்சர்கள் போல்குனிந்து போக்கே கொடுத்து சரண்டர் ஆனால் போதும்.
இதை செய்வாரா கமல்ஹாசன்?செவ்வாய், 29 ஜனவரி, 2013

தடைகளை தகர்த்து வெளிவருகிறது "விஸ்வரூபம்"

கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடைகளை தகர்த்து வெளிவருகிறது "விஸ்வரூபம்"

உயர்நீதிமன்றம் தீர்ப்பு .

இரவு 10 மணிக்கு வெளியானது.

விஸ்வரூபம்44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது

இன்று  இரவு 10 மணிக்குத்தான் நீதிபதி தீர்ப்பை வழங்குவதாக அறிவித்து விட்டார்.
காவல்துறையினரோ அப்பகுதியில் உள்ள கடைகளை அடை க்கக் கூறி பதட்டத்தை எற்படுத்திவருகிறார்களாம் .
விஸ்வரூபம் ஆரம்பம் முதலே பிரச்னைகளின் விஸ்வரூபமாகத்தான் இருக்கிறது.ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற பிரச்னைகள்தான்.சின்ன விடயத்தை பெரிதாக்கியதில் கண்டிப்பாக உள்நோக்கம் இருக்கிறது.தடை கேட்டவர்களுக்கு மட்டுமின்றி ,தடை கொடுத்த அரசுக்கும்.இது பற்றி நாம் பல முறை பல வழிகளில் பார்த்தாகி விட்டது.
ஆனால் பீஜே எனப்படும் இசுலாமிய சீர்திருத்தவாதி என்று தன்னை நம்பிக்கொண்டிருக்கும் நபர் உள்நோக்கம் பற்றித்தான் கவலையாக இருக்கிறது.
விஸ்வரூபத்தை சாக்காக வைத்து தமிழக மக்களையே இரண்டாக்கி விடுவார் போலிருக்கிறது.தன்னை உயர்த்தி பிடிக்க வழி தேடிக்கொண்டு உணர்வுடன் மட்டும் இருந்த அவர் இன்று போடும் ஆட்டம் கொஞ்சம் அதிகம்தான்.அரசு அவரை கொஞ்சம் கவனத்தில் கொள்ளாவிட்டால்  மதக்கலவரம் தமிழத்தில் நிச்சயம்.அந்த நபர் படத்தில் இசுலாமிய எதிர்ப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இப்போது கமல்ஹாசன் என்ற தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்து பேசி வருகிறார்.
அது அதையும் தாண்டி கமலின் மதம் சார்ந்து போய்க்கொண்டிருக்கிறது.கமல் மத நம்பிக்கை கொண்டவர் அல்ல.ஆனால் அவர் பிறப்பில் மதம் இருக்கிறதே.அது சார்பாக இவரைப்போல் மதவாதிகள் திருப்பி பதில் கொடுக்க ஆரம்பித்தால்  விளைவு?
சரி.அரசுக்கு சொல்வதை சொல்லி விட்டோம்.அவர்கள் வாக்கு வங்கி அரசியலில் இது காதில் விழுந்தாலும் பயன் ஏதும்  இருக்கப் போவதில்லை.
இப்போது வெப்துனியா தளத்தில் வந்த பதிவின் நகல் பதிவு அல்லது மீள் பதிவு.
"இங்கிலாந்தில் [யுகே ] தற்போது ஓடிக் கொண்டிருக்கும் இந்தியப் படங்களில் விஸ்வரூபம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடம் இந்திப் படமான ரேஸ் 2.
ரேஸ் 2 யுகே யில் 76 திரையிடல்களில் 3.02 கோடிகளை வசூலித்துள்ளது
இரண்டாவது இடத்தில் இருக்கும் விஸ்வரூபம் வெறும் 19 திரையிடல்களில் 81.23 லட்சங்களை வசூலித்துள்ளது. திரையிடலின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் விஸ்வரூபத்தின் ஆவரேஜ் ரேஸ் 2 படத்தைவிட மிக அதிகம்.
அமேரிக்காவி லும் முதலிடத்தில் ரேஸ் 2 படம் உள்ளது. இப்படம் 153 திரையிடல்களில் 4.77 கோடிகளை வசூலித்துள்ளது. விஸ்வரூபம்வெறும்  44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது. இங்கும் திரையிடல் எண்ணிக்கையின் ஆவரேஜ் ரேஸ் 2 வைவிட விஸ்வரூபத்துக்கே மிக  அதிகம்.ரேசை விட விஸ்வரூபம் 109 திரையிடல் குறைவு.
 எந்த தமிழ்ப் படமும் அமெரிக்காவில்  இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. இதை விட குறிப்பிடதக்கவிடயம்.அமெரிக்காவில் தெலுங்கு விஸ்வரூபமும் வெளியாகியுள்ளது. 
இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 28 திரையிடல்களில் தெலுங்கு விஸ்வரூபம் 55.38 லட்சங்களை வசூலித்துள்ளது. இதனை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.

2013 ஆண்டின் ஆரம்பத்திலேயே 
யுஎஸ்ஏ யில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், அதன் பின் விஸ்வரூபத்துக்கு முன்பே வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா இரண்டு படங்களும்  இதுவரை 25 லட்சங்களைகூட வசூலிக்காத நிலையில் விஸ்வரூபம் தெலுங்குப் பதிப்பு மூன்றே தினங்களில் 55 லட்சத்திற்கு மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அது தவிர இந்த இரு நாடுகளிலும் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள்  வந்துள்ளன.
 தகவல் சரி யெனில் விஸ்வரூபம் இவ்விரு நாடுகளிலும் வசூலில்; சாதனை படைக்க வாய்ப்புள்ளது."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது ஒரு சோகம்.
------------------------
தாய் யானை படுத்துக்கிடக்க ,குட்டி அதை தொட்டுக்கொண்டிருப்பது போல் இருந்தாலும் இது ஒரு சோகம்தான்.
காரணம் தாய் யானை எவ்வாறோ விட த்தை உண்டு விட்டதால் இறந்து விட்டது.அதை அறியாத குட்டி அம்மாவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
இச்சம்பவம் மலேசியா நாட்டில் நடந்துள்ளது.
suran
உலகில் மிகவும் அரிதாயக் காணப்படும் குள்ள யானை இனத்தை சேர்ந்த 10 யானைகள் சபா மாநிலத்தில் உள்ள போர்னியோ தீவில் இறந்து காணப்பட்டுள்ளன.

குணாங் ராரா வனப்பகுதியில் திரிந்த இந்த யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.தற்பொது 1500 குள்ள யானைகளே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்கார் வரலாற்றிலேயே 

  இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் மிக வயது குறைந்த நடிகை தான் குவாஞ்சனே வாலிஸ் (Quvenzhane Wallis)என்ற 9 வயதுச் சிறுமி.
த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் (The Beasts of the Southern Wild) என்ற குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தக் குழந்தையின் அபாரத் திறமைக்காக அவளின் பெயர் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உலகத் தொடர்புகளின்றி, பின்னடைந்த சமூகமொன்றின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கின்ற இந்தப் படத்தில் ஹஷ் பப்பி என்ற பாத்திரத்தில் குவாஞ்சனே வாலிஸ் நடித்துள்ளார்.

நேர்முகத் தேர்வில் கிட்டத்தட்ட 4000 குழந்தைகளுடன் போட்டியிட்டு தான் குவாஞ்சனே வாலிஸ் ஹஷ் பப்பி பாத்திரத்தில் நடிக்கத் தெரிவானார். 
குவஞ்ச்னே வாலிஸ் 

இந்தப் படத்துக்கான படப்பிடிப்புத் தொடங்கியபோது அவளுக்கு வெறும் 6 வயது தான்.

த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் படம் மிகச் சிறந்த திரைப்படம், மிகச் சிறந்த திரைக்கதை, மிகச் சிறந்த இயக்குநர் ஆகியன உள்ளடங்கலாக நான்கு துறைகளில் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிறுமியும் அவளது சமூகமும் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறன. அவர்களின் வாழ்க்கையில் புயலும் வெள்ளமும் குறுக்கிடுகின்றன, கொடூரமான கற்பனை காட்டு விலங்கொன்றும் வந்து அச்சுறுத்திவிட்டுப் போகின்றது.

ஹஷ் பப்பிக்கும் அவளுக்கு ரொம்பவும் பிடித்த அவளது அப்பாவுக்கும் இடையிலான உறவையும் அவர்களின் இருப்புக்கான போராட்டத்தையும் திரைப்படம் அழகாக சித்தரித்திருக்கிறது.

'நான் செய்திருக்கின்ற ஒரு வேலைக்காக எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று என்னை மக்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்காக நானும் அவர்களை மதிக்கிறேன்' என்றாள் குவாஞ்சனே வாலிஸ்.
த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் திரைப்படம் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு படக்கம்பனி அல்லது சினிமா துறைசார்ந்த தனிநபர்களின் அனுசரணை எதுவுமின்றி கொஞ்சப் பணத்தை செலவழித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு தடை செய்ய வேண்டியதுகமல்ஹாசனின் ரசிகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அமீர் நிறைய விளக்கெண்ணையில் வதக்கிய வெண்டைக்காய் களை சாப்பிடுவார் போலிருக்கிறது.
அவரின் அறிக்கை அப்படித்தான் இருக்கிறது.அதில் பொதுவான தமிழக இயக்குனர தான் என்ற நட்நிலை காணாமல் பொய் அடிப்படை வாதம் தான் வெளிப்படுகிறது. 
ஆயிரத்தெட்டு முற்போக்குகளை பேசினாலும் தானும் ஒரு அடிப்படைவாத இசுலாமியந்தான் என்பதை அவரின் இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுவிட்டது.இவர் மட்டும் இந்துவை வைத்து" ராம் "என்ற மனநிலை பிரண்ட கதை யை எடுக்கலாம்.இந்துக்கள் எல்லாரும் என்ன மனநிலை சரியில்லாதவர்களா?
இப்படி எல்லாம் மற்றவர்களுக்கு கேட்க முடியாதா?இதற்கு மட்டும் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வரும்?அடுத்த படம் ஆதிபகவன் என்று எடுக்கும் படத்திலும் இந்துக்களைத்தானெ படம் எடுக்கிறார்.இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால் படமே எடுக்க முடியாது.
இவர் இந்துக்கள் மிக்க நாடு என்பதால் பருத்தி வீரன்,ராம்,ஆதிபகவன்,யோகி என்று இந்துக்கள பெயரில் படம் எடுத்தார்.அதில் எப்படி தவறு இருக்க முடியாதோ அதே போல்தான் ஆப்கனில் நடக்கும் கதையில்  இசுலாமியரை காட்டாமல் ,அங்கு தினமும் நடக்கும் தாலிபான்கள் தீவிரவாதத்தையும் சுட்டிக்காட்டாமல்,அமெரிக்க-தாலிபான் மோதலை காட்டாமால் படமாக்க முடியாது.இவை அங்கு தினசரி நிகழ்வுகள் .
அவற்றை காட்டி உலகில் எத்தைனையோ படங்கள் வந்து விட்டது.விஸ்வரூபம் தமிழில் முதல் படம் .அதுதான் இத்தனை பரபரப்புகளுக்கும் அடிப்படை.
இந்த பதிவை எழுதும்போதே இந்த செய்தி வந்து விட்டது.
இது தின மணி செய்தி :
"அமீர் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள ஆதிபகவன் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் பற்றி அவதூறான காட்சி இருப்பதாக தகவல் வெளி வருவதால், அப் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  எம்.துரைசெல்வன் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
"திரைப்பட இயக்குநர் அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ஆதிபகவன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆதிபகவன் என்பது இந்துக்களின் முழு முதற் கடவுள்களான சிவனையும், விநாயகரையும் குறிப்பதாகும். எனவே இந்த திரைப்படத்தின் பெயரை மாற்றுவது நல்லது.

 மேலும் இந்த திரைப்படத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. எனவே இந்தப் படத்தை திரையிடுவதற்கு முன்பு,  படத்தை இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும். அவர்களின் அனுமதியை பெற்ற பின்னரே படத்தை திரையிட வேண்டும்.
 இந்துக்களின் கடவுள் பெயர் கொண்ட ராம் திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட அமீர்,  அந்தப் திரைப்படத்தில் கதாநாயகனை மனநிலை பாதித்தவராகக் காட்டினார். இதனால் பல இந்துக்களின் மனம் புண்பட்டது. 
எனவே, அப்படியொரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கும் ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்புகளின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் "என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  
 இதைத்தான் ,இப்படி ஆளாளுக்கு கையில் தடையை எடுத்துக்கொண்டு அலையக்கூடாது என்றுதான் ஒரு பயம் இருந்தது.அதை நினைவாக்கியது தமிழக அரசுதான்.
அரசியல் &சொந்த காரனங்களுக்காக விதித்ததடை தான் இதற்கெல்லா ம்  காரணங்களாக  அமைந்து விட்டது.
 இசுலாமிய அமைப்புகளின் மனுவை வைத்து நடுநிலையாக நடந்திருந்தால் மத உணர்வு நிலை விஸ்வரூபம் எடுத்திருக்காது.
படத்தை பார்த்திருக்க வேண்டும் .மத உணர்வை அசிங்கப்படுத்தும் காட்சிகள்-வசனங்கள் இருந்திருந்தால்  அதை நீக்கி வெளியிட சொல்லியிருக்க வேண்டும்.ஏற்கனவே மத்திய திரைப்படத் தணிக்கை முடித்து சான்றிதழ் பெற்ற படம் என்பதை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.
அதையும் மீறி மத அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால அழைத்துப்பேசி சமாதானம் செய்திருக்க வேண்டும். மீறினால் படம் வெளியிட பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
இதுதான் ஒரு மத சார்பற்ற நாட்டை ஆள்வோர் செய்திருக்கும்,செய்யக்கூடிய செயல்கள்.
ஆனால் ம்முஸ்லீம் நாடான மலேசியாவில் படத்தை வெளியிட்ட பின் தமிழக அரசு தடை விதித்திருப்பதை காரணமாகக் கூறியெ படம் தடை செய்யப்பட்டுள்ளது.இலங்கையிலும் மற்ற தடை செய்யப்பட இடங்களிலும் தமிழக அரசின் தடைதான் முன் மாதிரியாக கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்று இசுலாமியர் போல் இந்து அமைப்புகளும் இந்த தடை விவகாரத்தை கையில் எடுத்தால் திரைப்பட உலகும் ,கலையுலகும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகி விடும்.
அமெரிக்காவில் நபிகளை கிண்டல் செய்து எடுத்த குறும் படத்தையே கருத்து சுதந்திரம் என்று  அரசு தடை செய்யவே இல்லை.ஒரு அப்பாவி தூதரை இசுலாமியர்கள் கொன்ற போதுகூடதடை இல்லை.படத்தை எத்த்தவரை கைதும் செய்ய வில்லை.வெறு காரணத்துக்காகத்தான் அவர் பின்னாளில் கைது ஆனார்.
இனி வரும் காலங்களில் திரை உலகில் கதை எழுதியதும் ஜமாத்தில் கொடுத்து அவர்கள் படித்து பின் தூவா செய்த பின்னர்தான் அல்லது இந்து முன்னணி,ராம கோபாலன்,அர்ஜூன் போன்றவர்களிடம் கொடுத்து படித்து அனுமதித்து திருநீறு வழங்கிய பின்னர்தான் படமாக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிக்கொண்டிருக்கிறது.
கடைசியாக பீஜே இடம் ஒரு கேள்வி "அரபு நாட்டில் உள்ள சட்டத்தை எதிர்க்க -விமர்சிக்க இங்கிருக்கும் இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?"
என்று ரிசானா படு கொலைக்கு ஆதரவாக மனுஷ்ய புத்திரனுக்கு கேள்வி தொடுத்தீர்களே .
அது போல் இங்கு தணிக்கைக்குழு சான்றுக்குப்பின்னும் தடையைக்கொரும் -விமர்சிக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி வந்தது.?
"ரிசானா படுகொலையை வைத்துக்கொண்டு இங்குள்ள முஸ்லிகளை 
விமர்சிக்க கூடாது .அது அங்குள்ள நிலை,சட்டம்."
இதுவும் உங்கள் வாதம்தான்.
அப்படி என்றால் ஆப்கன் போராட்டம்,தாலிபான் தீவிரவாதத்தை காட்ட மட்டும் எதற்கு எதிர்ப்பு.?
இந்திய முஸ்லீகள் கதைக்குள்ளேயே வரவில்லையே.?
உங்கள் கோபம் உங்கள் வாதப்படியே நியாயமானதாக இல்லையே/
கடைசியில்  ஒரு சிறு கேள்வி .ஆப்கானிஸ்தான் -அமெரிக்க தீவிரவாத கதையில் வெடிப்புகளையும்,து ப்பாக்கிகளையும் காட்டாமல் படம் எடுப்பது எப்படி?தாலிபான்கள் வெடி குண்டு முயற்சி களை அழிப்பதாக காட்டுவதுதான் உங்கள் கோபத்துக்கு காரணமா?தாலிபான்கள் தீவிரவாதம்  படத்தில் கடைசியில் தோல்வியை தழுவுவதுதான் உங்களின் மதத்துக்கெதிரான கருத்துக்களாகத் தெரிகிறதா?அப்படியானால்அரசு  தடை செய்ய வேண்டியது 'விஸ்வரூபம்"படத்தை அல்ல.உங்களின் தீவிரவாதத்திற்கு  ஆதரவானப் போக்கைத்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
திங்கள், 28 ஜனவரி, 2013

படவரிசை பத்து

 இலங்கையில் விஸ்வரூபம்.
-----------------------------------------
இலங்கையில் விஸ்வரூபம் திரைப்படத்தை வெளியிடுவதற்கு மிக விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை திரைப்பட தணிக்கைச் சபை தெரிவித்துள்ளது.
எந்தவொரு சமூகத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடிய கருத்துக்கள் அந்தப் படத்தில் இல்லை என்று தாங்கள் கருதுவதாகவும் இலங்கை தணிக்கைச் சபையின் தலைவர் காமினி சுமனசேகர தெரிவித்துள்ளார்.
"தமிழ் நாட்டில் தடை விதிக்கப்பட்டு விஸ்வரூபம் தொடர்பாக   நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததனாலும் இலங்கையில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் முதலில் படத்தை வெளியிடாமல் நிறுத்தி வைத்ததாகவும் .இப்போது படத்தை பார்த்து பாதிப்பான கருத்துக்கள் இல்லை என்று உணரப்பட்டதால் விஸ்வரூபம் படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளதாகவும் " காமினி சுமனசேகர தெரிவித்துள்ளா ர்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
;  சில உயிர்கள்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

தாத்தா தொலை பேசி
இன்று அங்கிங்கில்லாமல் எங்கும் இருக்கும்,எல்லோர் கையிலும் இருக்கும் அலைபேசியின் தாத்தா தொலை பேசி இன்றுதான் அதாவது இதே தேதியில்தான் 1882 இல் சென்னை மாகாணத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது 131 ஆண்டுகளாகி விட்டது.
அதன் வளர்ச்சி இன்று "விஸ்வரூபத்"தில் இருக்கிறது.தனியாக ஒரு இடத்தில் பொறுத்தி பேச ஒரு குழாய் கேட்க ஒரு குழாய் என்று இருந்து பின்னர் மேசையில் ஒரு இடத்தை அடைத்து வெறுமனே எடுத்து காதில்வைத்து தொலைபேசி அலுவலகத்தில் இருந்து ஹலோ 
சொன்னபிறகு வேண்டிய எண்ணை அல்லது பெயரை சொல்லி இணைப்பு கேட்டு பேசியது போய் ,நாமே எண்ணை சுழற்றி உள்ளூர்களிலும் வெளியீர்களுக்கு டிரங்க்காலும் போட்டு பேசியதும் போய் இன்று எல்லாரும் சட்டைப்பையில் வைக்கும் அளவிற்கு வாமன த்தில் இருந்து" விஸ்வரூபம் "[விஸ்வரூபம் என்று எழுத தடை கிடையாது அல்லவா?]எடுத்துள்ள தொலை பேசியின் ஆரம்ப கால கதையை  கொஞ்சம் பார்ப்போம்.
கிரகாம்பெல் 
தொலைபேசி என்றதும் நம் நினைவில் வரும் பெயர் அலெக்சாண்டர் கிரகாம்பெல். இவரது தந்தை பிறவியிலேயே காது கேட்கும் திறனும் வாய் பேசவும் இயலாதவர். எனினும், உதட்டின் அசைவுகளை வைத்து எப்படி சொல்ல வந்த கருத்தை விளக்கலாம் என்று நூல் எழுதிப் புகழ்பெற்ற அலெக்சாண்டர் மெல்வில்பில் என்பவராவார்.
கிரகாம்பெல் 1871ஆம் ஆண்டு அமெரிக்காவில் செவிடர் ஊமைப் பள்ளியின் ஆசிரியராகச் சேர்ந்தார். அப்போது செவிட்டுத் தன்மையை நீக்கி ஒலி உணர்வதற்கான சாதனம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டார். காது கேட்கும் திறனற்றவர்களை செயற்கைக் காதினால் கேட்க வைக்க முடியுமா என்ற உந்துதல் ஏற்பட பிணக்கிடங்கிலிருந்து காதினை அறுத்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
suran
தனது உதவிக்காக தாமஸ் வாட்சன் என்பவரை வைத்திருந்தார். போஸ்டன் நகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து அதில் கம்பி மூலம் ஒலியை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.
1874ஆம் ஆண்டு கிரகாம்பெல் மாடியில் ஒரு அறையிலும் வாட்சன் கீழே ஒரு அறையிலும் அமர்ந்தனர். இயந்திரம் முன்பிருந்து சில மாற்றங்களைச் செய்தார் பெல். எதிர்பார்த்தபடி இயந்திரம் வேலை செய்யவில்லை. எனவே, வெறுப்பில் கோபத்தில் எழுந்தார். அருகிலிருந்த அமிலக் குடுவை கீழே சாய்ந்து அவரது உடையில் கொட்டியது. உடனே, உதவிக்கு வரும்படி வாட்சனை உரக்கக் கத்தி அழைத்தார்.
பெல் அழைத்தது கீழே அறையிலிருந்த வாட்சனுக்குக் கேட்டது. காரணம், டிரான்மிஷன் என்னும் இயந்திரத்தின் முன் நின்று பெல் கத்தினார். இவ்வளவு விரைவில் ஆராய்ச்சியின் பயன் கிடைத்ததை எண்ணி வாட்சனும் பெல்லும் மகிழ்ந்தனர்.
மக்களிடம் தங்கள் கண்டுபிடிப்பை எடுத்துக்கூறியபோது யாரும் நம்பவில்லை. பின்பு பிலடெல்பியாவில் ஆய்வு செய்து காட்டினர். விக்டோரியா மகாராணியார் முன்பு செயல்படுத்திக் காட்டினர். 
பலர் தொலைபேசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனவே, பேடண்ட் உரிமைக்காக பெல் போராட வேண்டியிருந்தது. 
பல ஆராய்ச்சிகளுக்குப்பின் தொலைப்பேசியை அறிமுகப்படுத்தினார். அப்போது தொலைப்பேசி வசதி வேண்டி விண்ணப்பித்தோர் 8 பேர்களே. 
1922இல் பெல் இறந்தபோது அமெரிக்கர்கள் தொலைப்பேசிகளை ஒரு நிமிடம் இயங்காமல் வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------