ஒரு அவசர செய்தி.....,



உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் பக்குவப்பட்டவர்கள் .கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் என்பதற்கு பல உதாரணங்களைக்கூறலாம்.
இப்போது இசுலாமிய எதிர்ப்பு என்பதெல்லாம் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம்  ஆளுங்கட்சியின் அரசியல் ,சொந்த வெறுப்பு,பழிவாங்கல் என்று தெரிந்தும் கட்டுப்பாட்டுடன் இருப்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய விடயம்தான்.

இதோ நண்பர் கோவிந்தராஜூ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரு வேண்டு கோள்கள்.
கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் எத்தனை தடைகள் போட்டாலும் திரையரங்கில்தான் பார்ப்பேன்.திருட்டு விசிடி யில் பார்க்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலே  போதும். 


அது என்ன கரை என்பது புரியும்.ஆனால் திரையரங்கை தாக்க அக்கரை வேட்டியில் வர மாட்டார்கள் என்பதும்.இசுலாமிய வேடம்தரித்து வருவார்கள் என்பதும் புரியாதவர்களா நீங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் அருள்வாக்கு,

இத்தனை நாட்களுக்குப்பிறகு நம்மை ஆளும் அம்மா வாயைத்திறந்துள்ளார்.பொதுவாக இது போன்ற பரபரப்புகளில் வாயை திறக்காமல் காரியத்தில் கண்ணாயிருக்கும் அவர் இப்போது அறிக்கை விடுகிறார் என்றால் தன்னையறியாமல் ஒரு அச்சத்துக்கு ஆளாயிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
 இப்போதைய வழக்கும் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்து விடும்.தனக்கு அது அவமானமாகி விடும் என்ற கவலைதான் வாயை திறக்க வைத்திருக்கிறது.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு இரவு 11.30 அரசு தடை வாங்க நீதிபதியின் தூக்கத்தை கெடுத்து மேல்முறையீடு செய்து தடை நீக்கத்துக்கு தடை வாங்க என்ன காரணம் என்று அறிக்கையில் சொல்லப்படவில்லையே?
இசுலாமிய தலைவர்கள் கூட "நாங்கள் கூறிய காட்சிகளை கமல் நீக்க ஒத்துக்கொண்டார்.முதலில் தடை சரி.பின் இரண்டாவது ஒடி சென்று இத்தனை அவசரப்பட்டு தடை வாங்க வெண்டிய அவசியம் அரசுக்கு என்ன வந்தது.சன்டைககாரர்கள் ஒத்துமையாக போனபின் இவர்கள் தடை செய்ய அலைவதுக்கும் எங்களுக்கும்    தொடர்பில்லை.எங்கள்   பிரச்னை முடிந்தது."என்கிறார்கள்.
இந்தியா முழுக்க படம் வெளியான பின் தமிழ் நாட்டில் மட்டும்,அதுவும் தமிழன் எடுத்த படத்தை வெளியிட தடை என்றால் அது தமிழக அரசுக்கும் அவர்கள் ஆட்சியில் வாழும் மக்களுக்கும்தான் அசிங்கம்.
ஒன்று மட்டும் வெளிப்படையாகத்தெரிகிறது.ஜெயலலிதா என்றஜெயா  தொலைக்காட்சியின் 
மறைமுக பங்குதாரருக்கும் கமல்ஹாசன் என்ற படத்தயாரிப்பாளருக்குமான பிரச்னைதான் மூல வேர்.
அல்லது இப்படிகூட மாற்றி யோசிக்கலாம்.
90 கொடிகளுக்கும் மேல் படத்தில் போட்டு விட்டு இத்தனை பணம் வருமா?என்று கவலைப்பட்ட கமல்ஹாசனுக்கு உதவவே இத்தடை நாடகமாக இருக்கலாம்.
இதன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்குமே விஸ்வரூபத்தில் அப்படி என்னதான் இருக்கிறது அதையும் பார்த்து வைப்போம் என்று திரையரங்குக்கு வர ஆவலைத்தூண்டிவிட்டார்கள் அல்லவா?
கையை பிசைந்து நின்ற கமலுக்கு அரசு செய்த இலவச விளம்பரம்.
அதனால்தான் "தடையால் நட்டம் என்று பணம் அரசிடம் கேட்கக்கூடாது"என்று அம்மையார் வரிகளை சேர்த்திருப்பாரோ?  
கமல் தனக்கு எதிரி அல்ல என்று ஜெயா கூறியதை நம்ப இயலாது. 
அன்பத்தேடி படத்தில் புத்தர் வேட கமலை ஜெயலலிதா மயக்கி ஆடும் காட்சியிலேயே கமலின் நடிப்பை விமர்சித்து திரை உலகில் அடையாளம் தெரியாத  ஆளாக இருந்த கமலை வாங்கு வாங்கு என்று வாங்கியவர்.
அதன் பின் மூன்றாம் பிறை யில் கமல் தேசிய விருது பெற்றமைக்காக எம்ஜிஆர்  பாராட்டு விழாவை நடத்தக்கூடாது என்று எம்ஜிஆரிடம் சண்டையிட்டவர் இதே ஜெயலலிதா.அதன் பின் விக்ரம் பட விளம்பர விவகாராம்,இப்போது சிதம்பரம் கூட்ட பேச்சு,ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்காமல் விஸ்வருபத்தை நல்ல விலைக்கு அடுத்த தொலைக்காட்சிக்கு விற்றது என்று  பல உள்குத்துக்கள் உள்ளன.
அதை எல்லவற்றையும் விட தடை விதிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவை சந்தித்து கூழைக்கும்பிடு போடாமல் இருந்தது அவருக்கு தடையை நீக்க முடியாமல் சட்டம் ஒழங்கு பிரச்னை வந்து விட்டது. 
அட அப்போது கூட சந்திக்காமல் இருந்தது சரி.தடையை நீக்கும் உத்திரவுக்கு பின்னால் ,இசுலாமியருடன்  சுமுகமாக பேசி தீர்வு காண நீதிபதி சொன்னபோது கமல் இசுலாமியர்களுடன் பேசி சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதும் -அவர் வருவார் என்றும் அப்போது அம்மாவை பாருங்கள் அம்மா பெருந்தன்மையுடன் மன்னித்து விடலாம் என்று 
 கூற தலைமைச்செயலர்,உள்துறை செயலர் என்ற அதிகார மட்டங்கள் காத்திருந்த போது கமல் வராமல் பிரச்னையை இசுலாமியருடன் முடித்துக்கொண்டதும் தான் அம்மா விஸ்வரூப ம் எடுத்துஇரவு நீதிபதி வீட்டை  11.30 க்கு தட்ட வைத்து விட்டது.
அதுவும் போதாது என்று காவல்துறைக்கு எந்த  திரையரங்கிலும் தடை நீக்கம் என்று படத்தை போட்டு விடக்கூடாது.மதியம் மீண்டும் தடையை எப்படியும் வாங்கி விடுவோம் என்ற ஆணை பறந்து அதன் படியே ஏவல் மன்னிக்கவும் காவல்துறை படத்தை நிறுத்தி ரசிகர்களை அடித்து விரட்டியது.
அது போதாது என சிலரை எற்பாடு செய்து கமல் விளம்பர பதாதைகளை எரிக்க செய்தது.திரையரங்குகளை கல்லை எரியச்செய்தது.
 இதன் மூலம்  சட்டம்-ஒழங்கை நீதிமன்றத்தில் காட்டி அரசின் வாதத்தை வலுப்பெறச்செய்யலாம் என்பதுதான் ஆளுங்கட்சியின் தலைமையின் திட்டம் .
அரசு அல்லது ஆளுங்கட்சிதான் செய்தது என்பதற்கு ஆதாரம் பல.
சென்னை தேவி திரையரங்கில் இருந்து ரசிகர்கள்  ஆயிரக்கணக்கானோர் காவல்துறையால் வெளியேற்றப்பட்டு வாயில் கள்  பூட்டி காவல்துறையினர் நின்று கொண்டனர்.வெளியே ரசிகர்கள் கூட்டம்.ஆனால் உள்ளே கமல் பேனர்கள் தீப்பிடித்து எரிகிறது.காவல்துறையினர் அதை அப்புற ப்படுத்துகின்றனர்.யாரோ பெட்ரோல் குண்டை வைத்து எரித்து விட்டு ஒடி விட்டனராம். மு.தா.அறிக்கை பதிவு செய்து விட்டு செய்தியாளர்கள் வரும் முன் எதுவும் நடக்காதது போல் சுத்தமாக துடைத்து விட்டு ஒன்றும் இல்லையே என்று சொல்லியிருக்கிறது காவல்துறை.ஆனாலும் சுவரில் உள்ள கரியை படம் பிடித்து திரும்பியுள்ளனர் செய்தியாளர்கள்.இசுலாமிய மக்கள் மீது தானே இக்குற்றசாட்டு விழுகிறது?

அடுத்து வாங்க பழகலாம் ரினாஷ் கான் தன்பதிவில் எழுதிய சம்பவம் .

இதுவும் தமிழ் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்திய விவகாரம்.இந்த பழியும் ஒன்றுமறியா இசுலாமியர் மீதுதான் விழுந்திருக்கும்.ஆனால் பூனை வெளியெ வந்து பிசுபிசுத்து விட்டது.

"[flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......
 என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 
இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....
அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ..."
 



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?