செவ்வாய், 29 ஜனவரி, 2013

அரசு தடை செய்ய வேண்டியதுகமல்ஹாசனின் ரசிகன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் அமீர் நிறைய விளக்கெண்ணையில் வதக்கிய வெண்டைக்காய் களை சாப்பிடுவார் போலிருக்கிறது.
அவரின் அறிக்கை அப்படித்தான் இருக்கிறது.அதில் பொதுவான தமிழக இயக்குனர தான் என்ற நட்நிலை காணாமல் பொய் அடிப்படை வாதம் தான் வெளிப்படுகிறது. 
ஆயிரத்தெட்டு முற்போக்குகளை பேசினாலும் தானும் ஒரு அடிப்படைவாத இசுலாமியந்தான் என்பதை அவரின் இந்த அறிக்கை வெளிச்சம் போட்டுவிட்டது.இவர் மட்டும் இந்துவை வைத்து" ராம் "என்ற மனநிலை பிரண்ட கதை யை எடுக்கலாம்.இந்துக்கள் எல்லாரும் என்ன மனநிலை சரியில்லாதவர்களா?
இப்படி எல்லாம் மற்றவர்களுக்கு கேட்க முடியாதா?இதற்கு மட்டும் கருத்து சுதந்திரம் எங்கிருந்து வரும்?அடுத்த படம் ஆதிபகவன் என்று எடுக்கும் படத்திலும் இந்துக்களைத்தானெ படம் எடுக்கிறார்.இப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால் படமே எடுக்க முடியாது.
இவர் இந்துக்கள் மிக்க நாடு என்பதால் பருத்தி வீரன்,ராம்,ஆதிபகவன்,யோகி என்று இந்துக்கள பெயரில் படம் எடுத்தார்.அதில் எப்படி தவறு இருக்க முடியாதோ அதே போல்தான் ஆப்கனில் நடக்கும் கதையில்  இசுலாமியரை காட்டாமல் ,அங்கு தினமும் நடக்கும் தாலிபான்கள் தீவிரவாதத்தையும் சுட்டிக்காட்டாமல்,அமெரிக்க-தாலிபான் மோதலை காட்டாமால் படமாக்க முடியாது.இவை அங்கு தினசரி நிகழ்வுகள் .
அவற்றை காட்டி உலகில் எத்தைனையோ படங்கள் வந்து விட்டது.விஸ்வரூபம் தமிழில் முதல் படம் .அதுதான் இத்தனை பரபரப்புகளுக்கும் அடிப்படை.
இந்த பதிவை எழுதும்போதே இந்த செய்தி வந்து விட்டது.
இது தின மணி செய்தி :
"அமீர் இயக்கி விரைவில் வெளிவரவுள்ள ஆதிபகவன் திரைப்படத்தில் இந்து கடவுள்கள் பற்றி அவதூறான காட்சி இருப்பதாக தகவல் வெளி வருவதால், அப் படத்தை இந்து அமைப்பினருக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,  எம்.துரைசெல்வன் ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு கொடுத்தனர்.
அவர்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
"திரைப்பட இயக்குநர் அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ஆதிபகவன் திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. ஆதிபகவன் என்பது இந்துக்களின் முழு முதற் கடவுள்களான சிவனையும், விநாயகரையும் குறிப்பதாகும். எனவே இந்த திரைப்படத்தின் பெயரை மாற்றுவது நல்லது.

 மேலும் இந்த திரைப்படத்தில் இந்துக்களையும், இந்து கடவுள்களையும், இந்து மத நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக எங்களுக்கு தகவல்கள் வருகின்றன. எனவே இந்தப் படத்தை திரையிடுவதற்கு முன்பு,  படத்தை இந்து இயக்கங்களின் நிர்வாகிகளுக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும். அவர்களின் அனுமதியை பெற்ற பின்னரே படத்தை திரையிட வேண்டும்.
 இந்துக்களின் கடவுள் பெயர் கொண்ட ராம் திரைப்படத்தை இயக்கி வெளியிட்ட அமீர்,  அந்தப் திரைப்படத்தில் கதாநாயகனை மனநிலை பாதித்தவராகக் காட்டினார். இதனால் பல இந்துக்களின் மனம் புண்பட்டது. 
எனவே, அப்படியொரு நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருப்பதற்கும், எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்கும் ஆதிபகவன் திரைப்படத்தை இந்து அமைப்புகளின் அனுமதி பெற்றே வெளியிட வேண்டும் "என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  
 இதைத்தான் ,இப்படி ஆளாளுக்கு கையில் தடையை எடுத்துக்கொண்டு அலையக்கூடாது என்றுதான் ஒரு பயம் இருந்தது.அதை நினைவாக்கியது தமிழக அரசுதான்.
அரசியல் &சொந்த காரனங்களுக்காக விதித்ததடை தான் இதற்கெல்லா ம்  காரணங்களாக  அமைந்து விட்டது.
 இசுலாமிய அமைப்புகளின் மனுவை வைத்து நடுநிலையாக நடந்திருந்தால் மத உணர்வு நிலை விஸ்வரூபம் எடுத்திருக்காது.
படத்தை பார்த்திருக்க வேண்டும் .மத உணர்வை அசிங்கப்படுத்தும் காட்சிகள்-வசனங்கள் இருந்திருந்தால்  அதை நீக்கி வெளியிட சொல்லியிருக்க வேண்டும்.ஏற்கனவே மத்திய திரைப்படத் தணிக்கை முடித்து சான்றிதழ் பெற்ற படம் என்பதை கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்.
அதையும் மீறி மத அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்தால அழைத்துப்பேசி சமாதானம் செய்திருக்க வேண்டும். மீறினால் படம் வெளியிட பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும்.
இதுதான் ஒரு மத சார்பற்ற நாட்டை ஆள்வோர் செய்திருக்கும்,செய்யக்கூடிய செயல்கள்.
ஆனால் ம்முஸ்லீம் நாடான மலேசியாவில் படத்தை வெளியிட்ட பின் தமிழக அரசு தடை விதித்திருப்பதை காரணமாகக் கூறியெ படம் தடை செய்யப்பட்டுள்ளது.இலங்கையிலும் மற்ற தடை செய்யப்பட இடங்களிலும் தமிழக அரசின் தடைதான் முன் மாதிரியாக கொள்ளப்பட்டிருக்கிறது.
இன்று இசுலாமியர் போல் இந்து அமைப்புகளும் இந்த தடை விவகாரத்தை கையில் எடுத்தால் திரைப்பட உலகும் ,கலையுலகும் ஒன்றும் செய்ய முடியாத நிலை ஆகி விடும்.
அமெரிக்காவில் நபிகளை கிண்டல் செய்து எடுத்த குறும் படத்தையே கருத்து சுதந்திரம் என்று  அரசு தடை செய்யவே இல்லை.ஒரு அப்பாவி தூதரை இசுலாமியர்கள் கொன்ற போதுகூடதடை இல்லை.படத்தை எத்த்தவரை கைதும் செய்ய வில்லை.வெறு காரணத்துக்காகத்தான் அவர் பின்னாளில் கைது ஆனார்.
இனி வரும் காலங்களில் திரை உலகில் கதை எழுதியதும் ஜமாத்தில் கொடுத்து அவர்கள் படித்து பின் தூவா செய்த பின்னர்தான் அல்லது இந்து முன்னணி,ராம கோபாலன்,அர்ஜூன் போன்றவர்களிடம் கொடுத்து படித்து அனுமதித்து திருநீறு வழங்கிய பின்னர்தான் படமாக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிக்கொண்டிருக்கிறது.
கடைசியாக பீஜே இடம் ஒரு கேள்வி "அரபு நாட்டில் உள்ள சட்டத்தை எதிர்க்க -விமர்சிக்க இங்கிருக்கும் இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?"
என்று ரிசானா படு கொலைக்கு ஆதரவாக மனுஷ்ய புத்திரனுக்கு கேள்வி தொடுத்தீர்களே .
அது போல் இங்கு தணிக்கைக்குழு சான்றுக்குப்பின்னும் தடையைக்கொரும் -விமர்சிக்கும் அதிகாரம் உங்களுக்கு எப்படி வந்தது.?
"ரிசானா படுகொலையை வைத்துக்கொண்டு இங்குள்ள முஸ்லிகளை 
விமர்சிக்க கூடாது .அது அங்குள்ள நிலை,சட்டம்."
இதுவும் உங்கள் வாதம்தான்.
அப்படி என்றால் ஆப்கன் போராட்டம்,தாலிபான் தீவிரவாதத்தை காட்ட மட்டும் எதற்கு எதிர்ப்பு.?
இந்திய முஸ்லீகள் கதைக்குள்ளேயே வரவில்லையே.?
உங்கள் கோபம் உங்கள் வாதப்படியே நியாயமானதாக இல்லையே/
கடைசியில்  ஒரு சிறு கேள்வி .ஆப்கானிஸ்தான் -அமெரிக்க தீவிரவாத கதையில் வெடிப்புகளையும்,து ப்பாக்கிகளையும் காட்டாமல் படம் எடுப்பது எப்படி?தாலிபான்கள் வெடி குண்டு முயற்சி களை அழிப்பதாக காட்டுவதுதான் உங்கள் கோபத்துக்கு காரணமா?தாலிபான்கள் தீவிரவாதம்  படத்தில் கடைசியில் தோல்வியை தழுவுவதுதான் உங்களின் மதத்துக்கெதிரான கருத்துக்களாகத் தெரிகிறதா?அப்படியானால்அரசு  தடை செய்ய வேண்டியது 'விஸ்வரூபம்"படத்தை அல்ல.உங்களின் தீவிரவாதத்திற்கு  ஆதரவானப் போக்கைத்தான்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------