பூனை வெளியே வந்து விட்டது
சாதாரண விஸ்வரூபம் படம் இப்படி விஸ்வரூபம் எடுக்க ஆளுவோரின் சொந்த காழ்ப்புணர்ச்சிதான் .
இதற்கு இசுலாமிய தலைவர்களபகடைகளாகஆக்கப்பட்டுள்ளனர்.அவர்களை தூண்டி விட்டதே அரசாள்வோர்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
.தடை விதிப்பு நீக்கப்பட்டதும் பொறுப்பான அரசு படத்தை வெளியிட ஒத்துழைப்பு தந்திருக்க வெண்டும்.சுமுகமாக இல்லாவிட்டால் பாதுகாப்பு கொடுக்க வெண்டும்.
ஆனால் ஜெயா அரசோ இரவோடு சென்று தடையை வாங்கி படத்தை வெளியிடச்செய்யாமல் போராடுகிறது.
.இது இசுலாமிய மக்கள் எதிர்ப்பை வைத்து செய்யப்படும் சுய நல அரசியல்.
இங்கும் தடை நீக்கம் வந்து விட்டால் உச்ச நீதி மன்றம் சென்றாவது படத்தை வர விடாமல் தடுக்க அரசு வழக்குரைஞர்களுக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாம்.
தனது ஜெயா டிவிக்கு படத்தை விற்காதது இவ்வளவு பெரிய குற்றமா?
ரசிகர்கள் கூடி வெளியெ நிற்கையில் காவல்துறையினர் திரையரங்கை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நிற்கையில் உள்ளெ வைக்கப்பட்டிருக்கும் கமல் பட பதாகைகள் தீவைத்து கொளுத்தப்படுகிறதாம்.அது எப்படி சாத்தியம்தீவைத்தது யார்?இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு பொய் விட்டார்கள் என்று காவல்துறை சொல்லி வழக்கை எழதி பதிகிறதாம் .அப்படி யாரும் வரவில்லை என்று ரசிகர்கள் சொல்லுகிறார்கள்.இவை எல்லாம் சட்டம் ஒழ்ங்கி பிரச்னை என நீதிமன்றத்தில் காட்ட ஆதாரமாக செய்யப்படுகிறதாம்ரசிகர்களை நாகர்கோவில் கார்த்திகை திரையரங்கில் இருந்து வெளியேற்றிய பிறகு சிலர் வந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் வந்து அலங்கார வளைவுகளுக்கு தீவைக்கின்றனராம்.அதை தடுக்க செல்லும் கமல் ரசிகர்களை அடித்து விரட்டி அந்த தீவைப்பாளர்களௌக்கு பாதுகாப்பு வழ்ங்க்கப்படுகிறதாம் அவர்கள் இசுலாமியர்கள அல்லவாம்.ஆளுங்கட்சி கட்சிக்காரர்கள் போல்தான் தெரிகிறதாம்.இதிலிருந்து பிரச்னை இசுலாமியர்களுக்கும் விஸ்வரூபம் படத்துக்கு முடிந்து இப்போது ஜெயலலிதா கமல்ஹாசனை பலி வாங்கும் படலம் தான் நடப்பதாக தெரிகிறது.
ஆனால் நிச்சயம் படம் வெளிவரும் இதற்கான பலனை ஜெயலலிதா விரைவில் அறுவடை செய்வார்.
விஸ்வரூபம் பட விவகாரத்தில் விரைவில் வெற்றி பெறுவோம் என்று நடிகர்
கமல்ஹாசன் கூறியுள்ளார். தனது வீட்டின் முன் குவிந்த ஆயிரக்கணக்கான
ரசிகர்களுக்கு மத்தியில் பேசிய கமல்ஹாசன் கூறியதாவது:
"வரும் 1 ம்தேதி,
மும்பையில் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக, நான்
மும்பைக்கு செல்கிறேன். அங்கு வெற்றிப்படப் மகிழ்ச்சியில் நான் உங்களை
மீண்டும் சந்திக்கிறேன். எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. தாங்கள்
இங்கிருந்து கலைந்து செல்லுங்கள், அமைதியாக இருங்கள். தாங்கள் இங்கு
பெருந்திரளாக கூடியுள்ளதால் மற்றவர்களுக்கு
இடையூறாக இருப்பதாக "அவர் கூறினார். 2 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட ரசிகர்கள் அங்கு குழுமியிருந்த நிலையில், இரவு 08.40 மணியளவில்,
கமல் ரசிகர்களை சந்தித்தார்.
இதனிடையே, கமல் கடனில் தத்தளிப்பதாக வந்த
தகவலை தொடர்ந்து, ரசிகர்கள் நிதிஉதவி செய்யும் பொருட்டு, டிமாண்ட்
டிராப்ட்களையும்,பணக்கட்டுகளையும் கமலிடம் அளிக்க அங்கு கொண்டு வந்திருந்ததாகவும் கமல்ஹாசன் அவற்றை வாங்க மறுத்து களைந்து அமைதியாக செல்லக் கூறினார் என்றும் அங்கிருந்து வந்த தகவல்கள் கூறுகின்றன.
இது கமல்ஹாசனின் பேட்டி:
"என்னுடைய படம் நடக்கும் களம் ஆப்கானிஸ்தான். இது இந்திய முஸ்லிம்களை
எப்படி கேலி செய்ய முடியும். என்னுடைய இந்த படத்தை எடுத்திருப்பதாக பெரும்
செலவு செய்திருக்கிறேன். என்னுடைய திரையுலகை அனுபவத்தையும் எனக்கு
இருக்கும் தொழில்நுட்பத்தை கொண்டும் இந்த படத்தை எடுத்துள்ளேன்.
இந்தபடத்துக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் அடகு வைத்துள்ளேன். படம்
ரிலீஸ் ஆகவில்லை என்றால் இப்போது நான் உங்களுக்கு பேட்டி அளித்து கொண்டு
இருக்கும் இந்த வீடு எனது இல்லை. கோர்ட்டில் வழக்கு நடந்தபோது நீதிபதி
கேட்டார். ஒருவரின் முதலீடுக்காக நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டுமா
என்று கேட்டார். நான் இப்போதும் சொல்கிறேன். நாட்டின் ஒற்றுமை தான்
முக்கியம். நாட்டுக்காக எனது சொத்துக்கள் அனைத்தையும் இழக்க தயாராக
இருக்கிறேன். எனக்கு மதம் கிடையாது, அரசியல் கிடையாது. எனக்கு மனிதநேயம்
முக்கியம். மனதில் பட்டதை தைரியமாக எடுத்து சொல்பவன். இந்தப்படம் நிச்சயம்
இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் கிடையாது. எதற்காக எனது படத்தை தடை
செய்கிறார்கள் என்று புரியவில்லை.
என்னை வீழ்த்தி விடலாம் என்று சிலர்
கருதுகின்றனர். நான் விழுந்தால் விதையாக விழுவேன். மீண்டும் மீண்டும்
எழுவேன். சுதந்திரப் பறவைகள் வந்தமரும் மரமாக உயர்வேன். இது சோலையாகும்,
காடாகும். ஆனால் விதை நான் போட்டது.
எனது பட வசனமே எனக்கு உதவிக்கு
வருகிறது. ஒருவேளை தமிழகம் மதச்சார்ப்பற்ற மாநிலமாக இல்லாமல் போய்விட்டால்
நிச்சயம் வேறு ஒரு மாநிலத்தை தேடி போவேன். அதற்காக தமிழகத்தை விட்டு
வெளியேறவும் நான் தயார்.
வேறு மாநிலமும் கிடைக்காவிட்டால் வேறு நாட்டை தேடி
போவேன். இன்று படம் பார்க்கச் சென்ற எனது ரசிகர்களை தியேட்டர்களை விட்டு
வெளியேற்றியுள்ளனர். அது ஏன் என்று விளங்கவில்லை. என்னிடம் இப்போது எதுவும்
இல்லை. இழப்பதற்கு இனி ஒன்றும் இல்லை. எனது ரசிகர்கள் அமைதியானவர்கள்.
அவர்களில் பலர் முஸ்லிம்கள்.
அவர்கள் அனைவரும் தொடர்ந்து அமைதியாகவே
இருப்பார்கள். கேரளாவில் மலபார், ஐதராபாத்தில் படம் அமைதியாக போய்க்
கொண்டிருக்கிறது.
என்னைப் பொறுத்தவரையில் எனது நீதி தாமதப்பட்டுள்ளது.
தாமதிக்கப்படும் நீதி பொறுத்திருந்து பார்ப்போம்". இவ்வாறு பேசினார்.
கீழேயுள்ளது "வினவு"தளம் வெளியிட்ட பதிவு நன்றியுடன் மீள் பதிவிட்டுள்ளேன்.
"விஸ்வரூபம் படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல்
காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை
வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று
உயர்நீதிமன்றத்தில் கெஞ்சியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத
கிருஷ்ணன்.
நீதிபதி அதை ஏற்கவில்லை.
எனவே இரவோடு இரவாக 12 மணிக்கு சென்று தலைமை நீதிபதியின்
வீட்டு கதவை தட்டி எழுப்பி தடை உத்தரவு
கேட்டிருக்கிறார்கள். ‘காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை
எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.
நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப்
பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு
நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.
“இத்திரைப்படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லீம் அமைப்புகள்
எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை
ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை
விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.
“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க
வைத்திருக்கிறான்” என்று கூறி, இசுலாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை”
தூண்டி வருகின்றன இசுலாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த
அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று
நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி
விட்டார்.
தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு
விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு
உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.
“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.
“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான்
தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு
தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற
பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.
அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.
32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர்
அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட
ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி
யோசிப்பதையே application of mind என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த
மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த
முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.
“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை
செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள்
உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின்
வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து
விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க
வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம்
சாட்டினார்.
இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.
“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம்
புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல.
எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை
மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.
கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும்
ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு
காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால்
சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய
தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும்
தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது
எல்லோரும் அறிந்ததுதான்.
முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல்
மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.
அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள்
தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.
பல இசுலாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே
நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ,
அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி
வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை
முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.
நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில்,
“பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று
கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள்
அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை
வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன்
வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து
மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின்
பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார்
என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.
கீழேயுள்ளது கருணாநிதியின் வாதங்கள்:
தி .மு.க., தலைவர் கருணாநிதி, முதல்முறையாக விஸ்வரூபம் படத்ததை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பாக தமிழக அரசு ஏன் இவ்வளவு கடுமை காட்டுகிறது என்று தெரியவில்லை.
ஒரு சாரார் கூறும் போது, விஸ்வரூபம் திரைப்படத்தை அ.தி.மு.க.,வுக்குச் சொந்தமான டி.வி., ஒன்று அடிமாட்டு விலைக்கு கேட்டதாகவும், ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாங்கள் ரூ. 100 கோடிக்கு மேல் பணத்தை செலவழித்து படம் எடுத்துள்ளதாக கூறி மறுத்து விட்டு, வேறு ஒரு டி.வி.,க்கு கொடுத்து விட்டதால் இந்த கோபம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அமைச்சர் சிதம்பரம் தொடர்பான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், வேட்டி கட்டிய தமிழன் தான் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், கமலுக்கும் ஜெயலலிதாவுக்குமான பகை இன்று நேற்றல்ல, அது எம்.ஜி.ஆர்., காலத்திலேயே துவங்கி விட்டது. கமல் நடித்த விக்ரம் பட சிறப்பு காட்சியில் எம்.ஜி.ஆர்., கலந்து கொண்டார். அப்போது எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, உங்களை அவமானப்படுத்தும் விதமாக கமல், நீங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை விளம்பரப்படுத்தவில்லை. ஆனால் படத்திற்கு ஒவ்வொரு பேப்பரிலும் முழுப்பக்க விளம்பரம் தருகிறார். நீங்கள் இதை பார்த்தீர்களோ இல்லையோ, நான் பார்த்தேன். அவர் உங்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறார் என்று கூறியுள்ளார்.
பெரியார் அடிக்கடி என்று கூறுவார். தற்போது நடக்கும் நிகழ்ச்சியைப் பார்க்கும் போதும் அது தான் எனக்கு நினைவுக்கு வருகிறது".
இந்த படத்தை விசாரிக்கும் ஐகோர்ட் நீதிபதி, விஸ்வரூபம் பட சிறப்பு காட்சியை நேரில் பார்த்தார். பின்னர் 28ம் தேதி நடந்த விசாரணையின் போது, கமல் தரப்பும், அரசு தரப்பும் பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என தெரிவித்தார். ஆனால் இதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபடவில்லை. விஸ்வரூபம் மீதான தடையை ரத்து செய்யாததால் நேற்று ஐகோர்ட்டில் 6 மணி நேரம் வழக்கு நடந்துள்ளது .
விஸ்வரூபம் படம் மீதான வழக்கில், இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, நேற்று இரவு 10.15 மணியளவில் தான் தனது தீர்ப்பினை அளித்துள்ளார், இதன் பின்னர் அதிமுக அரசு, இரவோடு இரவாக நள்ளிரவு 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ள நீதிபதி எலிபி தர்மாராவ் வீட்டிற்கு சென்று தீர்ப்பை எதிர்த்து, அப்பீல் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று தலைமை நீதிபதி, இன்று காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன ?."
இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------