விஸ்வரூபம்44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது
இன்று இரவு 10 மணிக்குத்தான் நீதிபதி தீர்ப்பை வழங்குவதாக அறிவித்து விட்டார்.
காவல்துறையினரோ அப்பகுதியில் உள்ள கடைகளை அடை க்கக் கூறி பதட்டத்தை எற்படுத்திவருகிறார்களாம் .
விஸ்வரூபம் ஆரம்பம் முதலே பிரச்னைகளின் விஸ்வரூபமாகத்தான் இருக்கிறது.ஆனால் இவை அனைத்தும் தேவையற்ற பிரச்னைகள்தான்.சின்ன விடயத்தை பெரிதாக்கியதில் கண்டிப்பாக உள்நோக்கம் இருக்கிறது.தடை கேட்டவர்களுக்கு மட்டுமின்றி ,தடை கொடுத்த அரசுக்கும்.இது பற்றி நாம் பல முறை பல வழிகளில் பார்த்தாகி விட்டது.
ஆனால் பீஜே எனப்படும் இசுலாமிய சீர்திருத்தவாதி என்று தன்னை நம்பிக்கொண்டிருக்கும் நபர் உள்நோக்கம் பற்றித்தான் கவலையாக இருக்கிறது.
விஸ்வரூபத்தை சாக்காக வைத்து தமிழக மக்களையே இரண்டாக்கி விடுவார் போலிருக்கிறது.தன்னை உயர்த்தி பிடிக்க வழி தேடிக்கொண்டு உணர்வுடன் மட்டும் இருந்த அவர் இன்று போடும் ஆட்டம் கொஞ்சம் அதிகம்தான்.அரசு அவரை கொஞ்சம் கவனத்தில் கொள்ளாவிட்டால் மதக்கலவரம் தமிழத்தில் நிச்சயம்.அந்த நபர் படத்தில் இசுலாமிய எதிர்ப்பை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு இப்போது கமல்ஹாசன் என்ற தனி மனிதனை தரக்குறைவாக விமர்சித்து பேசி வருகிறார்.
அது அதையும் தாண்டி கமலின் மதம் சார்ந்து போய்க்கொண்டிருக்கிறது.கமல் மத நம்பிக்கை கொண்டவர் அல்ல.ஆனால் அவர் பிறப்பில் மதம் இருக்கிறதே.அது சார்பாக இவரைப்போல் மதவாதிகள் திருப்பி பதில் கொடுக்க ஆரம்பித்தால் விளைவு?
சரி.அரசுக்கு சொல்வதை சொல்லி விட்டோம்.அவர்கள் வாக்கு வங்கி அரசியலில் இது காதில் விழுந்தாலும் பயன் ஏதும் இருக்கப் போவதில்லை.
இப்போது வெப்துனியா தளத்தில் வந்த பதிவின் நகல் பதிவு அல்லது மீள் பதிவு.
ரேஸ் 2 யுகே யில் 76 திரையிடல்களில் 3.02 கோடிகளை வசூலித்துள்ளது.
இரண்டாவது இடத்தில் இருக்கும் விஸ்வரூபம் வெறும் 19 திரையிடல்களில் 81.23 லட்சங்களை வசூலித்துள்ளது. திரையிடலின் எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் விஸ்வரூபத்தின் ஆவரேஜ் ரேஸ் 2 படத்தைவிட மிக அதிகம்.
அமேரிக்காவி லும் முதலிடத்தில் ரேஸ் 2 படம் உள்ளது. இப்படம் 153 திரையிடல்களில் 4.77 கோடிகளை வசூலித்துள்ளது. விஸ்வரூபம்வெறும் 44 திரையிடல்களில் 3.43 கோடிகளை வசூலித்துள்ளது. இங்கும் திரையிடல் எண்ணிக்கையின் ஆவரேஜ் ரேஸ் 2 வைவிட விஸ்வரூபத்துக்கே மிக அதிகம்.ரேசை விட விஸ்வரூபம் 109 திரையிடல் குறைவு.
எந்த தமிழ்ப் படமும் அமெரிக்காவில் இவ்வளவு பெரிய வசூலை பெற்றதில்லை. இதை விட குறிப்பிடதக்கவிடயம்.அமெரிக்காவில் தெலுங்கு விஸ்வரூபமும் வெளியாகியுள்ளது.
இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. வெறும் 28 திரையிடல்களில் தெலுங்கு விஸ்வரூபம் 55.38 லட்சங்களை வசூலித்துள்ளது. இதனை ஒரு சாதனை என்றே சொல்ல வேண்டும்.
2013 ஆண்டின் ஆரம்பத்திலேயே யுஎஸ்ஏ யில் வெளியான அலெக்ஸ் பாண்டியன், அதன் பின் விஸ்வரூபத்துக்கு முன்பே வந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா இரண்டு படங்களும் இதுவரை 25 லட்சங்களைகூட வசூலிக்காத நிலையில் விஸ்வரூபம் தெலுங்குப் பதிப்பு மூன்றே தினங்களில் 55 லட்சத்திற்கு மேல் வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அது தவிர இந்த இரு நாடுகளிலும் அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தகவல் சரி யெனில் விஸ்வரூபம் இவ்விரு நாடுகளிலும் வசூலில்; சாதனை படைக்க வாய்ப்புள்ளது."
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
இது ஒரு சோகம்.
------------------------
தாய் யானை படுத்துக்கிடக்க ,குட்டி அதை தொட்டுக்கொண்டிருப்பது போல் இருந்தாலும் இது ஒரு சோகம்தான்.
காரணம் தாய் யானை எவ்வாறோ விட த்தை உண்டு விட்டதால் இறந்து விட்டது.அதை அறியாத குட்டி அம்மாவை எழுப்ப முயற்சித்துக்கொண்டிருக்கிறது.
இச்சம்பவம் மலேசியா நாட்டில் நடந்துள்ளது.
உலகில் மிகவும் அரிதாயக் காணப்படும் குள்ள யானை இனத்தை
சேர்ந்த 10 யானைகள் சபா மாநிலத்தில் உள்ள போர்னியோ தீவில் இறந்து
காணப்பட்டுள்ளன.
குணாங் ராரா வனப்பகுதியில் திரிந்த இந்த யானைகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.தற்பொது 1500 குள்ள யானைகளே இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆஸ்கார் வரலாற்றிலேயே இதுவரை பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் மிக வயது குறைந்த நடிகை தான் குவாஞ்சனே வாலிஸ் (Quvenzhane Wallis)என்ற 9 வயதுச் சிறுமி.
த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் (The Beasts of the Southern Wild)
என்ற குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படத்தில் முக்கிய பாத்திரத்தில்
நடித்துள்ள இந்தக் குழந்தையின் அபாரத் திறமைக்காக அவளின் பெயர் ஆஸ்கார்
விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உலகத் தொடர்புகளின்றி, பின்னடைந்த சமூகமொன்றின் வாழ்க்கைப் போராட்டத்தை சித்தரிக்கின்ற இந்தப் படத்தில் ஹஷ் பப்பி என்ற பாத்திரத்தில் குவாஞ்சனே வாலிஸ் நடித்துள்ளார்.
நேர்முகத் தேர்வில் கிட்டத்தட்ட 4000 குழந்தைகளுடன் போட்டியிட்டு தான் குவாஞ்சனே வாலிஸ் ஹஷ் பப்பி பாத்திரத்தில் நடிக்கத் தெரிவானார்.
குவஞ்ச்னே வாலிஸ் |
இந்தப் படத்துக்கான படப்பிடிப்புத் தொடங்கியபோது அவளுக்கு வெறும் 6 வயது தான்.
த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட் படம்
மிகச் சிறந்த திரைப்படம், மிகச் சிறந்த திரைக்கதை, மிகச் சிறந்த இயக்குநர்
ஆகியன உள்ளடங்கலாக நான்கு துறைகளில் ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
ஒரு சிறுமியும் அவளது சமூகமும் அச்சுறுத்தலை
எதிர்கொண்டிருக்கிறன. அவர்களின் வாழ்க்கையில் புயலும் வெள்ளமும்
குறுக்கிடுகின்றன, கொடூரமான கற்பனை காட்டு விலங்கொன்றும் வந்து
அச்சுறுத்திவிட்டுப் போகின்றது.
ஹஷ் பப்பிக்கும் அவளுக்கு ரொம்பவும் பிடித்த அவளது
அப்பாவுக்கும் இடையிலான உறவையும் அவர்களின் இருப்புக்கான போராட்டத்தையும்
திரைப்படம் அழகாக சித்தரித்திருக்கிறது.
'நான் செய்திருக்கின்ற ஒரு வேலைக்காக எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று என்னை மக்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்காக நானும் அவர்களை மதிக்கிறேன்' என்றாள் குவாஞ்சனே வாலிஸ்.
த பீஸ்ட்ஸ் ஆஃப் த சதர்ன் வைல்ட்
திரைப்படம் தனிப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு
படக்கம்பனி அல்லது சினிமா துறைசார்ந்த தனிநபர்களின் அனுசரணை எதுவுமின்றி
கொஞ்சப் பணத்தை செலவழித்து எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும்
குறிப்பிடத்தக்கது.
'நான் செய்திருக்கின்ற ஒரு வேலைக்காக எனக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று என்னை மக்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்காக நானும் அவர்களை மதிக்கிறேன்' என்றாள் குவாஞ்சனே வாலிஸ்.