ஆறு 'ஜி '. 6G
உ லகின் பல்வேறு நாடுகளில் இனிமேல்தான் 5ஜி (5G) தொழில்நுட்பம் நடைமுறைக்கு வரவிருக்கிறது. ஆனால் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தில் அடுத்த கட்டமான 6ஜி (6G)-யை கைகொள்ளும் போட்டியில் சீனாவும் அமெரிக்காவும் கடுமையாக ஈடுபட்டுள்ளன. 6ஜி தொழில்நுட்பத்தை முதலில் தயாரித்து அறிமுகப்படுத்தும் நாடுதான் அடுத்த தொழிற்புரட்சி என்று சொல்லப்படும் 4.0ல் வெற்றியாளராக இருக்கமுடியும். 5ஜி-யின் உச்சபட்ச வேகத்தைவிட 6ஜி தொழில்நுட்பத்தின் வேகம், 100 மடங்கு அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. 6ஜி தொழில்நுட்பம் இன்னும் கோட்பாட்டு அளவிலானதாக இருந்தாலும், அதுசார்ந்து படிப்படியான வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. 6ஜி-யை நடைமுறைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர இன்னும் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் ஆகும். 6ஜி-யை கொண்டு இதுவரை அறிவியல் புனைகதைகளில் கூறப்பட்டு வந்த தொழில்நுட்பங்களையும் கூட நடைமுறைக்கு கொண்டுவர முடியுமென்பதால் அதற்கான போட்டியில் தற்போதே அமெரிக்காவும் சீனாவும் அதிக கவனம் செலுத்துகின்றன. ஏற்கெனவே இருந்த 5ஜி தொழில்நுட்பத்தில் அமெரிக்கா – சீனா இடையிலான போட்டி உலகமறிந்ததே. 5ஜி தொழில்நுட்பத்தில் முன்னேறி உலகளாவி...