வதந்தி கிளப்பும் சேட்டன்மார்
கேரளாவில் அதிகமாக மழை பெய்கிறது. ஆனால் சிலருக்கு முல்லைப் பெரியாறு அணையைப் பார்த்தால் ஏனோ வேர்க்கிறது. அதிகமாக மழை பெய்வதைக் காரணமாகக் காட்டி, முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று வதந்தியைக் கிளப்பி விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதிகமாக மழை பெய்வதுகூட அவர்களுக்கு ஒரு காரணம்தானே தவிர, உண்மையான உள்நோக்கம் அவர்களுக்கு முல்லைப் பெரியாறு அணைதான் உருத்துகிறது முல்லைப் பெரியாறு அணை கம்பீரமானது. அதற்கு எந்த ஆபத்தும் இல்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் சக்திகள் தான், ‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமானது’ என்பதை தொடர்ந்து ஒரு பொய்ப் பிரச்சாரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.இந்த விவகாரத்திற்கு ஆரம்ப நிலையிலேயே கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்திருப்பதை பாராட்ட வேண்டும். “முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளது எனவும் லட்சக்கணக் கானவர்கள் உயிரிழக்கப் போகிறார்கள் எனவும் சமூக வலைத்தளம் மூலம் சிலர் பரப்புகின்றனர். உண்மையில் அதுபோன்ற ஆபத்து ஏதும் இல்லை. முல்லைப் பெரியாறு அணை ஆபத்தான நிலையில் உள்ளதாக பொய் பரப்புரை செய்பவர்கள் மீது சட்டப்படி ந...