வெள்ளி, 22 அக்டோபர், 2021

மாட்டிக் கொண்ட வலது கை இளங்கோ

 ஊழல் செய்தவர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஊழல் செய்தவர்களுக்கு கருணை காட்டமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி நீட்டி முழக்கி யுள்ளார். குஜராத் மாநிலம் கீவாடியாவில் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கூட்டுக் கூட்டத்தில் பேசிய அவர் 2017ஆம் ஆண்டு தாம் ஆட்சிப் பொறுப்பேற்றபிறகு ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தமக்குத் தானே நற்சான்றிதழ் வழங்கி கொண்டிருக்கிறார். 

இவர் ஊழலை ஒழித்த லட்சணத்தை ஊரறி யும், உலகறியும். பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய்களை சுருட்டிக் கொண்டு வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வர்களில் ஒருவரைக்கூட பிடித்து வந்து நீதியின்  முன்னால் இவரது ஆட்சியால் நிறுத்த முடியவில்லை. மாறாக மல்லையா, நீரவ் மோடி, சோக்சி உள்ளிட்ட ஊழல் குற்றவாளிகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த லட்சணத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கருணைக் காட்ட மாட்டோம் என்ற சவடால் வேறு.

ரபேல் ஊழல் ஒன்று போதும் மோடி அரசின் நேர்மையான செயல்பாட்டிற்கு. புலனாய்வு அமைப்புகளை கையில் போட்டுக் கொண்டு, நீதித்துறையையும் வளைத்து ஊழலை மறைக்க முயன்றாலும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் அதுகுறித்து நடைபெறும் விசாரணை உண்மையை உலகிற்கு சொல்லும். 

மோடி அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கூட ஒரு உலக மகா ஊழல்தான். அதில் பாஜகவினரும், கார்ப்பரேட் முதலாளி களும் பெரும் லாபமடைந்தனர். நாட்டின் பெரும்பகுதி மக்கள் நடுத்தெருவில் விடப்பட்ட னர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் மகன் குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கி கள் மூலம் பெரும் தொகையை பண மதிப்பிழப்பு காலத்தில் சுருட்டியது எந்தக் கணக்கில் சேரும் என்று தெரியவில்லை.

தேர்தல் செலவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி சுருட்டிக் கொண்டிருக்கிறது பாஜக. ஊழலுக்கு தலைமை தாங்குவதில் முதலிடத்தில் இருப்பது மோடி தலைமையிலான பாஜகதான்.   

முறைகேட்டை  தடுப்பதற்காக சமையல் எரிவாயு முன்பதிவு மற்றும் விநியோகத்தை ஆன்லைன் மூலமாக செய்வதாகவும், கூறியுள்ள பிரதமர் இதுவும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைதான் என்கிறார். உங்கள் பணம் உங்கள் கையில் என்று கூறி சமையல் எரிவாயுக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதாக கூறிவிட்டு அவ்வாறு செலுத்தாமல் மோசடி செய்தது ஊழல் கணக்கில் சேராதா? 

--------------

தமிழக மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் இளங்கோவன் என்று கூறப்பட்டு வருகிறது. சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் இவர் உள்ளார். இளங்கோவன் மற்றும் அவருடைய மகன் ப்ரவீன்குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


முதல் தகவல் அறிக்கை நகல்


இளங்கோவன் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை
2014 – 2020 வரையில் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் ரூ. 3.78 கோடி சொத்துகளை குவித்ததாக புகார் எழுந்த நிலையில் சென்னை மற்றும் திருச்சியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகிறது. கரூர் லாலாபேட்டையில் உள்ள 5 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் இளங்கோவனின் நெருங்கிய வட்டத்தை சேர்ந்த ராஜ் நாராயணன் என்பவர் வீட்டிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. சமீபத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.சி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. பணமும், சொத்து குவிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கின.இதையடுத்து முசிறியில் இயங்கிவரும் MIT வேளாண் பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி பாலிடெக்னிக் கல்லூரி, கல்லூரியின் செயலாளர் ஆதித்யா, சுவாமி ஐயப்பன் அறகட்டளை ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலிஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.https://youtu.be/MhNDDCkP9Vs