ஆளுநர் தலையீடு..

 இந்தியாவில் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து அந்தந்த மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாற்றப்பட்டு ஆர்.என். ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சர்ச்சைக்குரிய நபராக  அறியப்படும் ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் அப்போதே காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரவியின் நியமனத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால், ரவி தமிழ்நாட்டில் நியமிக்கப்பட்ட பின்னர் சத்தமின்றி  அவர் நேரடியாக தமிழ்நாட்டின் அரசுத்துறைகளில் தலையிட்டு அதிகாரிகளுடன் பேசி சில கோப்புகளைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் சில ஆங்கில ஊடகங்களில் வெளியானது. இப்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசு நலத்திட்டங்களின் விபரங்கள்  அதற்காக எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படுகின்றன? பயனடைந்த மகக்ளின் விபரங்களை ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்க தயாராக இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் இறையன்பு அரசுத்துறை செயலாளர்களுக்கு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றது முதல் பாஜக அரசை தனிப்பட்ட முறையிலும் கலவரங்களை தூண்டும் வகையிலும் பேசி வருகிறது. இன்னொரு பக்கம் அதிமுக ஆளுநரிடம் தமிழக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வருகிறது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியினர் வன்முறையை தூண்டும் நோக்கோடு பேசி வருகிறார்கள். இதற்கிடையில் ஆளுநரும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் மீது தலையிட்டு வருகிறார்.

---------------------------------



நீரிழிவை வெல்வோம்

ஆறுமுகசாமி மீது நம்பிக்கையில்லை்

2016-ஆம் ஆண்டு உடல் நலம்குன்றிய ஜெயலலிதா 70 நாள் சிகிச்சைப்பின்னர் இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அதிமுக தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சர்ச்சையைக் கிளப்பினர். தர்மயுத்தம் நடத்தினார்.

சசிகலாதான் ஜெயலலிதாவை விஷம் வைத்துக் கொன்றார் என்பது அதிமுகவினரில் ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு . பின்னர் எடப்பாடி பழனிசாமியும்  பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்த பின்னர் ஜெயலலிதா மர்ம மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தை அமைத்தனர். இந்த ஆணையம் சசிகலாதான் ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ற முன் முடிவோடு விசாரணையை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில்,

“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தால் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் பெயர் களங்கப்பட்டிருக்கிறது. அப்போதைய அதிமுக அரசு கூறித்தான் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் இருந்த கேமிராவை அகற்றினோம். காரணம் அது அவருடைய பிரைவசியை தொந்தரவு செய்யலாம் என்று அரசு சொன்னதால் கேமிராவை அகற்றினோம். ஆறுமுகச்சாமியின்  விசாரணை ஆணையத்தில் மருத்துவர்கள் இல்லை. விசாரணையும் அந்த நோக்கில் இல்லை. ஆனால்  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கிய வாக்குமூலங்களே போதுமானவை ஆகும்.

ஜெயலலிதா மரணம் மர்மமானது எனவே ம  விசாரணை  ஆணையம் அமைக்க வேண்டும் என்று கூறிய அதிமுக தலைவர்கள்,முன்னாள் அமைச்சர்களை இந்த ஆணையம் அழைத்து விசாரணை செய்யவில்லை. 

அழைத்த சிலரும் ஆணையம் முன் முன்னிலையாகி வாக குமூலம் தரவேயில்லை.

எனவே ஆறுமுகச்சாமி விசாரணை ஆணையத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கயில்லை” என அப்பல்லோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

----------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?