தளர்வுகள்.

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன மூதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் 2 வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவதையெட்டி பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஉத்தரவு நவம்பர் 15-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாகேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறது

1-ம் வகுப்பு முதல் –ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையாள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

-----------------------------------------------------------------------

பன்றி உதவியில் மனிதன்.

பொதுவாக பன்றியின் உடல் உறுப்புகள், அளவின் அடிப்படையில் மனிதர்களுக்கு சிறப்பாக பொருந்திப் போகக்கூடியவை.

அந்த சிறுநீரகத்தை மனிதருக்குப் பொருத்திய பிறகு அடுத்த இரண்டரை நாட்களுக்கு சிறுநீரகத்தை தீவிரமாக கண்காணித்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை வல்லுநர்கள் மேற்கொண்டனர்.ஒரு பன்றியின் சிறுநீரகம், மனிதர்களின் சிறுநீரகத்தைப் போலவே செயல்படுவதைக் கண்டோம் என மருத்துவர் ராபர்ட் மான்ட்கொமெரி பிபிசி வேர்ல்ட் டுனைட் நிகழ்ச்சியில் கூறினார்.

"அந்த சிறுநீரகம் சீராக வேலை செய்தது, மனித உடல் அதை நிராகரிப்பது போலத் தெரியவில்லை" என்றார்.

அறுவை சிகிச்சை வல்லுநர்கள், சிறுநீரகத்தோடு பன்றியின் ஒரு சிறு பகுதி தைமஸ் சுரப்பியையும் மாற்றியுள்ளனர். நீண்ட காலத்தில், மனித உடல் சிறுநீரகத்தை நிராகரிப்பதிலிருந்து காப்பாற்ற, பன்றியின் திசுக்களோடு போராடும் மனித உடலின் எதிர்ப்புத் திறன் கொண்ட செல்களை திரட்டி, நிராகரிப்பைத் தடுக்க இந்த பாகம் உதவும் என மருத்துவ வல்லுநர்கள் கருதுகின்றனர்.

வழக்கமாக ஒருவர் உறுப்பு தானம் பெற வேண்டுமானால், தானம் கொடுப்பவர் இறக்க வேண்டும், அப்போது தான் மற்றொருவர் வாழ முடியும். இது நீண்ட காலத்துக்கு சரிப்பட்டு வராது என்கிறார் மருத்துவர் ராபர்ட்.

தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் 40 சதவீத நோயாளிகள், அவர்களுக்கான உறுப்பு கிடைப்பதற்கு முன்பே இறந்துவிடுகிறார்கள். நாம் பன்றியை உணவாக உட்கொள்கிறோம், பன்றியை மருத்துக்காகவும், அதன் ரத்த நாளங்களையும் பயன்படுத்துகிறோம். எனவே பன்றியின் உறுப்பை மனிதர்களுக்கு பயன்படுத்துவதும் பெரிய விஷயமல்ல என்கிறார் ராபர்ட்.

இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் தொடக்க கட்டத்தில்தான் இருக்கின்றன என்றும், இது குறித்து நிறைய ஆய்வுகள் தேவை என்றும் கூறியுள்ளார் மருத்துவர் ராபர்ட்.

இந்த அறுவை சிகிச்சையைப் மேற்கொள்ளப்பட்டவரின் குடும்பத்தினர், இந்த சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் எஃப்.டி.ஏ என்கிற உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பும் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை இது போன்ற ஆய்வுகளுக்கு பயன்படுத்த அனுமதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாண்டு காலத்தில் பன்றியின் இதயம், நுரையீரல், கல்லீரல் மனிதர்களுக்கு வழங்கப்படலாம் என நம்புகிறார் மருத்துவர் ராபர்ட்..


https://youtu.be/5rgeS70BY2M

தலை "எடுத்த" காதல்
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு