இந்தி வெறியர்கள்

 ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர்.

நேற்று மாலை ஆறு மணியளவில் விகாஸ் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்தப் பதிவில், தான் ஜொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்தபோது, தான் ஆர்டர் செய்ததில், ஒரு உணவுப் பொருள் வராதது குறித்து ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரிவைத் தொடர்பு கொண்டு பேசியதாக கூறியுள்ளார்.

அந்த பிரதிநிதி, "இந்தி தெரியாததால் பணத்தைக் கொடுக்க முடியாது," என கூறியதாகவும், அந்த வாடிக்கையாளர் பிரதிநிதிக்கு தமிழ் தெரியாததால், தன்னைப் பொய்யர் என கூறியதாகவும் விகாஸ் தெரிவித்திருந்தார்.

அத்துடன் அந்த ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதியுடன் தான் நடத்திய சாட் உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட்களையும் விகாஸ் ட்விட்டர் பக்கத்தில் இணைத்திருந்தார்.

அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் "இந்த விவகாரம் குறித்து ஹோட்டலைச் சேர்ந்தவர்களிடம் பேச முயன்றாலும் மொழிப் பிரச்னை காரணமாக முழுமையாகப் பேச முடியவில்லை" என அந்த பிரதிநிதி கூறுகிறார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

அதற்கு விகாஸ், "அது என் பிரச்னையில்லை. ஜொமமேட்டோ தமிழ்நாட்டில் இயங்கும்போது, மொழி புரிந்தவர்களை பணிக்கு அமர்த்தியிருக்க வேண்டும். வேறொருவருக்கு இந்த விவகாரத்தை மாற்றிவிட்டு, எனக்குப் பணத்தை வாங்கித்தாருங்கள்," என்கிறார்.

இதற்குப் பதிலளித்த ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதி, "உங்களது அன்பான கவனத்திற்கு... இந்தி நமது தேசிய மொழி. அதனால், ஒவ்வொருவரும் சிறிதளவாவது இந்தி அறிந்திருக்க வேண்டும்," என குறிப்பிடுகிறார்.

இந்த ஸ்க்ரீன் ஷாட்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விகாஸ், இதற்கு பதிலளிக்கும்படி ஜொமேட்டோவை டேக் செய்து விளக்கம் கோரியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள ஜொமேட்டோ, "இது ஏற்க முடியாதது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் இதனைத் தீர்க்கப் பார்க்கிறோம். உங்களது தொலைபேசி எண்ணை பகிருங்கள்" எனக் கூறியிருந்தது.

தன்னைப் பொய்யர் என்று கூறியதோடு இந்தி கற்றுக்கொள்ளும்படி தெரிவித்த நபர் இது தொடர்பாக, வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பதிலளித்தார் விகாஸ்.

இதையடுத்து, "தொலைபேசி மூலம் பேசி இந்த விஷயம் தீர்க்கப்பட்டு விட்டதாக" ஜொமேட்டோ தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தை விகாஸ் ட்விட்டரில் வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் செந்தில்குமார், "எப்போதிலிருந்து இந்தி இந்தியாவின் தேசிய மொழியானது?" என தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக ஜொமேட்டோவை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், "தமிழ்நாட்டில் உள்ள வாடிக்கையாளர் ஏன் இந்தியைத் தெரிந்து கொள்ள வேண்டும்? சிறிதளவாவது இந்தி தெரிந்திருக்கவேண்டும் என உங்களது வாடிக்கையாளர்களுக்கு எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்? இந்த வாடிக்கையாளரின் பிரச்னையைத் தீர்த்து, மன்னிப்புக் கேளுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

வேறு சிலர், ஜொமோட்டோ செயலிக்கு, மிகக் குறைந்த ரேட்டிங்கை அளிக்கும்படி ட்விட்டர்வாசிகளிடம் பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர். இதையடுத்து, #RejectZomoto என்பது இந்திய அளவில் ட்ரெண்டாக ஆக ஆரம்பித்தது.

இன்று காலையில் இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த திமுக எம்பி கனிமொழி, "குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகின்றன. எந்த மாநில மொழியில் சேவை தரப்படுகிறதோ அந்த மாநில மொழியில் பேசுவதை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை" என்று கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 4

Twitter பதிவின் முடிவு, 4

இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தேசிய அளவில் பேசப்பட ஆரம்பித்ததையடுத்து, அந்த வாடிக்கையாளருக்கு நடந்த அனுபவத்துக்காக உடனடியாக வருத்தம் தெரிவித்திருக்கிறது ஜொமேட்டோ நிறுவனம்.

மன்னிப்பு கேட்ட ஜொமேட்டோ

"வணக்கம் விகாஸ். எங்களுடைய வாடிக்கையாளர் பிரிவு பணியாளரின் நடத்தைக்காக மன்னிப்புக் கோருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக எங்களுடைய அதிகாரபூர்வமான அறிக்கை இது. அடுத்த முறை உங்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற வாய்ப்பளிப்பீர்கள் என நம்புகிறோம். தயவுசெய்து எங்களை நிராகரிக்காதீர்கள்" எனக் கூறியிருக்கிறது.

Twitter பதிவை கடந்து செல்ல, 5

எங்களது வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாசாரத்தின் மீதான எதிர்க்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரைப் பணி நீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்துக்களைப் பரப்பக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சியளிக்கிறோம்.

இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் கருத்துகள், மொழி அல்லது சகிப்புத்தன்மை குறித்த எங்கள் நிறுவனத்தின் நிலைப்பாட்டை குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக, நாங்கள் ஒரு முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். நாங்கள் ஏற்கெனவே தமிழில் சந்தைப்படுத்துதல் முயற்சிகளை உள்ளூர்மயமாக்கியுள்ளோம். மேலும் கோயம்புத்தூரில் ஒரு உள்ளூர் தமிழ் கால் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.

உணவும் மொழியும் ஒவ்வொரு மாநில கலாசாரத்தின் இரண்டு அடித்தளங்கள் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம்" என ஜொமேட்டோவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Vanakkam Vikash, we apologise for our customer care agent's behaviour. Here's our official statement on this incident. We hope you give us a chance to serve you better next time. Pls don't #Reject_Zomato ♥️
Image
Image
Vikash
@Vikash67456607
Ordered food in zomato and an item was missed. Customer care says amount can't be refunded as I didn't know Hindi. Also takes lesson that being an Indian I should know Hindi. Tagged me a liar as he didn't know Tamil. @zomato not the way you talk to a customer. @zomatocare
Image
Image
Image
Image
3K
494
Share this Tweet

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?