வெள்ளி, 31 ஆகஸ்ட், 2018

பொய் +போட்டோஷாப்=பாஜக.

நான்காண்டு மோடி சாதனை.?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருகிறது. 
வியாழக்கிழமையன்று டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 70.82 பைசாவாக மாறி தள்ளாடிக் கொண்டிருக்கிறது. 

மோடி அரசு ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.59 ஆக இருந்தது. 
இந்த நான்காண்டு காலத்தில் இந்திய பணமதிப்பு மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனா உள்ளிட்ட நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு தான்தோன்றித்தனமாகத் திணித்துவரும் வரி உயர்வு, ஈரான் மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கை போன்றவை உலக பணச்சந்தையில் மோசமான அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. 


இதனால் டாலருக்கு நிகரான மற்ற வளரும் நாடுகளின் பணத்தின் மதிப்பு வீழ்ச்சி அடைகின்றது. 
அதன் ஒரு பகுதியாகவே இந்திய ரூபாயின் மதிப்பும் இந்த நிலைக்கு ஆட்பட்டிருக்கிறது என்று ஒருபகுதி பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இது உண்மையாக இருந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதில் மோடி அரசின் கொள்கைகள் தொலைநோக்குப் பார்வை கொண்டதாகவோ, உள்நாட்டு நலனைப் பாதுகாப்பதாகவோ இல்லை.

 சொல்லப்போனால் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை அமலாக்கமும் சேர்ந்து கொண்டு தன் பங்கிற்கு இந்திய ரூபாயின் மதிப்பை சரியச் செய்திருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்து, அந்நியச் செலாவணி போதுமான கையிருப்பு இருப்பதே அந்நாட்டின் பொருளாதார நிலை ஆரோக்கியமாக இருப்பதற்கான அறிகுறி. 

ஆனால் இந்திய ஏற்றுமதி அளவு மன்மோகன் சிங் அரசின் கடைசி ஆண்டில் 31,440 கோடி டாலராக இருந்தது.

 மோடி ஆட்சி புள்ளிவிபர கணக்குகளை மாற்றிக் காட்டிய பிறகும்கூட இப்போது 30,280 கோடி டாலராக குறைந்திருக்கிறது. அதேசமயம் இறக்குமதி அளவு 45,020 கோடி டாலரில் இருந்து 45,970 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது. 

எனவே வர்த்தகப் பற்றாக்குறை 15,680 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.
இந்திய ஏற்றுமதி கடந்த நான்கு ஆண்டுகளில் 5.1 சதவிகிதம் என மிதமாக உயர்ந்திருக்கும்போது, இறக்குமதி 22.8 சதவிகிதமாக பெருமளவுஅதிகரித்திருக்கிறது. 

கடந்த இரு நிதியாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 44.5 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையிலும் விலை உயர்ந்து வருகிறது. 

ஏற்கெனவே கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தபோதே உள்நாட்டில் எரிபொருட்கள் விலையை குறையாமல் பார்த்துக் கொண்ட மோடி அரசு தற்போதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தப் போவதில்லை. 

இதனால் வர்த்தகப் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்கும், டாலருக்கு நிகராக ரூபாய் மதிப்பு மேலும் சரியும், வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இந்திய மக்கள் மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவார்கள், உள்நாட்டுத் தொழில்கள் இன்னும் நலிவைச் சந்திக்கும் என்பதே ரூபாய் மதிப்பு சரிவு வெளிப்படுத்தும் அறிகுறியாகும்!
=====================================================================================
பொய் +போட்டோஷாப்=பாஜக .
கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ.25 கோடி நிதி அளித்தார்களா?
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு,பாஜக சார்பில் ரூ. 25 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டுள் ளது என்று பாஜகவினர் சமூகவலைத் தளங்களில் பிரச்சாரம் செய்தது  பொய்யான தகவல்  என்பது அம்பலமாகியுள்ளது.

கேரளம் மிகப்பெரிய அழிவைச் சந் தித்துள்ள போது, பலரும் தங்களால் இயன்ற உதவிகளை கேரளத்திற்கு அளித்து வருகின்றனர். 

ஆனால், ஆர்எஸ்எஸ், பாஜக-வினர்உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் மட்டும் கேரள வெள்ளப் பாதிப்பைக் கொண்டாடினர்

. கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவதும், ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்ததும்தான் இந்த பேரழிவுக்கு காரணம் என்று வன்மம் கக்கினர். 

ஆர் எஸ்.எஸ்,காரன் ஒருவன் துபாயில் இருந்து கேரளமக்களை கிண்டல் செய்து வெள்ளநிவாரணமாக ஆணுறைகளை அனுப்பட்டுமா என்று கேட்டதுடன்.கம்யூனிஸ்ட்கள் ஆள்வதால்தான் இந்த வெள்ளம் வந்துள்ளது என்றும் டுவிட்டரில் இடுகையிட மிகப்பெரிய அளவில் அவனுக்கு எதிர்ப்பு கிளம்பு இடுகையை நீக்கிவிட்டான்.
ஆனாலும் கடும் எதிர்ப்பைக்கண்ட அவன் வேலை செய்யும் நிறுவனம் அவனது மனிதாபிமானமற்ற செயலைக்கரணம் கட்டி வேலையை விட்டு விலக்கி சொந்த மாநிலமான கேரளவுக்கே செல்ல கூறி ஆணையிட்டுவிட்டது.

கேரள நிவாரண நிதிக்குபாஜகவினர் நிதி அளிக்காதது மட்டுமன்றி, மற்றவர்களும் நிதியளிக்க வேண்டாம் என்று தடுத்த சம்பவங்களும்அரங்கேறின.
இது கேரள மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 

பாஜக-வின் உண்மை முகம் அறியாமல் இதுவரை அக்கட்சியில் இருந்த பலர், கூட்டம்கூட்டமாக அங்கிருந்து வெளியேறியதும் நடந்தது.

இதனால்  கேரள மக்களை சமாளிக்கும் வேலையில் தற்போது இறங்கியுள்ள பாஜகவினர் வழக்கம்போல, ‘போட்டோஷாப்’ கலை மூலம் போலியான புகைப்படங்களை வெளியிட்டு பொய்ப்பிரச் சாரங்களை அவிழ்த்துவிடத் துவங்கியுள்ளனர்.

அதில் ஒன்றாகத்தான், பாஜகவைச் சேர்ந்த ஸ்ரீதரன் நாயர் என்பவர், அவரது முகநூலில் “பாஜக அமைச்சர்களும்,நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர் ” என்று குறிப்பிட்டு, ஒரு புகைப்படத்தை உலவவிட்டார்.

அந்த புகைப்படத்தில், பாஜக மத்திய அமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், பாஜக எம்.பி. முரளிதரன் ஆகியோர்கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்குவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. 

எப்போது எப்போது என்று எதிர் பார்த்த கேரள பாஜக-வினரும், ஸ்ரீதரன்நாயர் வெளியிட்ட புகைப்படத்தை, இஷ்டத்திற்கு முகநூலிலும், ட்விட்டரிலும் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து, பெருமை பீற்ற ஆரம்பித்தனர்.
இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. 

நிதியளித்தது உண்மைதானா? என்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சைகள் எழுந்தன. 
அதற்கேற்பவே, கெட்டிக்காரன் புளுகு எட்டுநாள் என்பது போல, பாஜகவினரின் புளுகுக் கதை எட்டுமணிநேரம்கூட நீடிக்கவில்லை. 

மத்திய அமைச்சர் கண்ணந்தானம் தலைமையில் முதல்வரிடம் நிதியளிப் பது போன்ற புகைப்படம் உண்மைதான் , ஆனால், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பொரேசன் சார்பிலானநிதியளிப்பில்தான் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் சீக்கிரத்திலேயே வெளிப்பட்டு விட்டது.

படத்தை வெளியிட்ட ஸ்ரீதரன் நாயர்,கவனமாக இந்துஸ்தான் பெட்ரோலியநிறுவனத்தின் அதிகாரிகளை புகைப் படத்திலிருந்து வெட்டியெறிந்துவிட்டு, அமைச்சர் கண்ணந்தானமும், பாஜக எம்.பி. முரளிதரனும் இருப்பது போன்றபடத்தை மட்டும் போட்டு- பாஜக சார்பில்ரூ. 25 கோடி நிதி என்று கூறியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஒரு பைசா கூட நிதி அளிக்கப்படாத நிலையில், ஸ்ரீதரன் நாயர் உள்ளிட்ட பாஜகவினர் செய்த பொய்ப்பிரச்சாரம், கேரள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன், தற்போது பாஜக-வுக்கு எதிராகவே பூமாராங் ஆக திரும்பியுள்ளது.
பாஜக பொய்யை அம்பலப்படுத்திய கேரள மக்கள்.
========================================================================================
ஆஸ்துமா உள்ளோர், ஆஸ்துமாவே இல்லாதோரின் மூக்கில் ஒற்றிய மாதிரிகளை, மவுன்ட் சினாய் மருத்துவ அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சேகரித்தனர்.
அந்த மாதிரிகளை, 'ரிபோ நியூக்ளிக் ஆசிட்' சோதனைக்கு அனுப்பினர். அந்த முடிவுகளை, ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளிடம் தந்து, இதில் யாருக்கு ஆஸ்துமா உள்ளது என, கண்டறியுமாறு கேட்டனர்.


அந்த மென்பொருள், ஆஸ்துமா உள்ளோரின் மூக்கு திரவ மாதிரிகளில் இருக்கும், 90 விதமான பயோ மார்க்கர்ஸ் எனும் உயிரிக் குறியீடுகளை ஒப்பு நோக்கி, யாருக்கு ஆஸ்துமா இருக்கிறது என்பதை துல்லியமாக சொல்லிவிட்டது.
இந்த எளிமையான மூக்கு சோதனை முறையை, மேலும் பலரிடம் நடத்தி, அதன் துல்லியத்தை உறுதிப்படுத்த, விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
அதில், அவர்களுக்கு வெற்றி கிடைத்தால், மெல்லிய ஆஸ்துமா இருப்போர் கூட, கடுமையான, பி.டி.எப்., போன்ற சோதனைகளை செய்யாமலேயே, நோய் இருப்பதை கண்டறியலாம்.

=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-31


 • மலேசிய விடுதலை தினம்(1957)

 • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)

 • வடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)
======================================================================================
ஹாஹ் ஹா 
"மோடி ஒரு முட்டாள்" என்ற வாசகத்தை தாங்கிப் பிடித்திருந்த ஒருவரை பிரதமரை கிண்டல் செய்வதாக  டெல்லி போலீஸ் கைது செய்தது.
போலீஸ் கைது செய்ய வரும் போது, அந்த சமூக(செயற்பாட்டாளர் )விரோதி  "நான் நீரவ் மோடியைத்தான் அப்படி கூறினேன், (நரேந்திர மோடியை அல்ல) என்றார்.
ஆனால் அதை டெல்லி போலீஸ் ஏற்க மறுத்தது. 
" நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது. ஏனென்றால், எங்களுக்கு தெரியும், எந்த யார் முட்டாள்  என்று"
ஆண்களே உங்கள் உடல் பற்றி சில தகவல்கள் 
ஆண்களின் உடல் பற்றிய பல ஆச்சர்யமூட்டும் அதிர்ச்சிகரமான தகவல்களை ஆண்களே அறிந்திருக்க வாய்ப்பில்லை...
பெண்களின் மார்பகங்களில் மட்டும் தான் பால் சுரக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஆணும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவன் தான் என்பதை நாம் நினைவில் கொள்வதே இல்லை. ஆண்களின் மார்புப் பகுதியிலும் பால் சுரக்க வைக்க முடியும். ஆனால் குழந்தை பசியாறும் அளவுக்கு சுரக்கவோ குழந்தைக்கு பாலூட்டவோ முடியாது. அது ஹார்மோன்களால் தீர்மானிக்கப்படுகிறது.
பெண்கள் மாதவிலக்கால் படும் அவதி அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று கூறுவார்கள். 
ஆனால் ஆண்களுக்கும் மாதவிலக்கு பருவம் உண்டு என்றால் நம்புவீர்களா? 
ஆனால் அதுதான் உண்மை.
மாதத்தின் சில நாட்களில் இந்த அறிகுறிகள் இருக்கும். அந்த சமயங்களில் பெண்களைப் போல அவர்களுக்கு ரத்தப்போக்கு உண்டாவதில்லை. ஆனால், உலகில் 26 சதவீதம் பேர் இந்த விஷயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.
மாதத்தின் குறிப்பிட்ட அந்த நாட்களில், கொடூரமான பசி, அதீத கோபம், சோர்வு ஆகியவை உண்டாகும். ஏன் சில சமயங்களில் அழுகை கூட வருமாம். பெண்களைப் போலவே ஆண்களுக்கும் ஹார்மோன் சுழற்சி உண்டு.
ஆண்களுடைய பாதங்கள் பெண்களின் பாதங்களைவிட அகலமாக இருக்கும். ஆண் பெண் இருவரும் ஒரே உயரமுடையவராக இருந்தாலும் கூட, ஆணின் பாதத்தைவிட பெண்ணின் பாதம் அகலம் குறைவாகத்தான் இருக்குமாம்.
ஆண்களின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் முடி வளர்வதைத் தான் நாம் தாடி என்கிறோம். இந்த தாடி 5000 முதல் 25000 முடி வரை வளர்ந்திருக்குமாம்.
ஆண்களுடைய தாடி வருடத்துக்கு 6 இன்ச் வரையிலும் வளரக்கூடியது. 
ஆண்கள் தங்களுடைய வாழ்நாள் முழுக்க 27 அடி நீளம் வரையிருக்கும் முடியை ஷேவ் செய்கிறார்களாம். ஆண்கள் ஒரு வருடத்துக்கு ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் மொத்தம் 60 மணி நேரம். 
வாழ்நாளில் 5 மாத காலங்கள் ஷேவ் செய்ய மட்டுமே எடுத்துக் கொள்ளப்படுகிறதாம்.
========================================================================================
2016ம் ஆண்டு குடியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருப்பது சீனா அங்கு குடியால் பாதிக்கப்பட்டு இறந்த பெண்களின் எண்ணிக்கை 59,000 இறந்த ஆண்கணின் எண்ணிக்கை 6,50,000.
இராண்டாவது இட்த்தில் இருக்கும் இந்தியாவில் குடியால் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 42,000 ஆண்களின் எண்ணிக்கை 2,90,000. உலக அளவில் முதிர்ச்சியடையாமல் உயிரிழந்தவர் எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் பொழுது ஏழாவது முக்கிய காரணமாக இருப்பது மதுக்குடியாகும். இதுவும் 2016ம் ஆண்டு புள்ளி விவரமாகும்.
=========================================================================================வியாழன், 30 ஆகஸ்ட், 2018

பாம்பின்கால் பாம்பறியும்

2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை இன்று வெளியானது. அதில் பணமதிப்பிழக்கத்திற்கு பின்பு அச்சிடப்பட்டு வெளியிடப்பட்ட பணத்தில் 99.30 சதவீதம் பணம் மீண்டும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தேசம் முழுவதும் பரவலாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் விமானங்கள் மூலமாக இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தங்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் கூட மக்கள் காலை முதல் நள்ளிரவு வரை வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் நின்று பணத்தினைப் பெற்றார்கள்.
முன்னறிவுப்பு இன்றி எடுக்கப்பட்ட அந்த நடவடிக்கைகளால்  இந்திய மக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
2917-18க்கான இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை.

கருப்பு பணத்தின் பயன்பாட்டினை ஒழிக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக மத்திய அரசு கூறியது. 

இதனால்  அச்சமயத்தில் சுமார் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாயினை அச்சிட்டது ரிசர்வ் வங்கி.

ஆனால் அதில் 15 லட்சத்து 31 கோடி ரூபாயை மக்கள் மீண்டும் வங்கிகளிலேயே டெபாசிட் செய்திருப்பதாக 2017 – 18ஆம் ஆண்டிற்கான மத்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. 

மிச்சம் இருக்கும் 13 ஆயிரம் கோடிகள்  வங்கிக்கு திரும்பவில்லை என்று கூறியுள்ளது.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் இந்தியாவுக்கு தேவையற்ற அதிக இழப்புதான். 

இழப்பான 13000,00,00,000.கோடிகள்.

இந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் இதனால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி குறித்து, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்

ஏற்கனவே கறுப்புப்பணம் வைத்திருக்கும் பணமுதலைகள் வசம்தான் முடங்கியுள்ளது.அவை சுவிஸ் வங்கியில் முதலீடாக இருக்கலாம்.பூடான்,நேபாளத்தில் இருக்கலாம் என்கிறார் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

பாம்பின்கால் பாம்பறியும் என்றுதானே சொல்வார்கள்.

இதனாலே பணவீக்கம் அதிகரிக்கிறது.டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்கிறது .

.

====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-30

   உலக  காணாமல் போனோர் தினம்


 • ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

 • கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)
 • ==================================================================================
கலைவாணர்  என்.எஸ்.கிருஷ்ணன்

பிறப்பு: நவம்பர் 29, 1908
 நாகர்கோயில்
மறைவு : ஆகஸ்ட் 30, 1957
அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில்,‘சுடலையாண்டிபிள்ளை‘இசக்கியம்மாலுக்கு மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. 
நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். 
நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. 
இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். 

பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார்.
 மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர்.
 தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். 
யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர்.
 பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். 
இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.இவையாவும் அவர் நடித்தப்படங்கள்.
‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).இவையாவும் அவர் படி மக்களை கவர்ந்த இனிய பாடல்கள்.பாடல்களில் கருத்துக்களும்,சுயமரியாதை-பகுத்தறிவு சிந்தனைகளும் கண்டிப்பாக இடம்பெறும்.
1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். 
அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். 
இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.
1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார்.
 அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். 
இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.
இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். 

சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.
தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. 
கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். 
உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாக வாழ்ந்துவருகிறார் .

புதன், 29 ஆகஸ்ட், 2018

போதை தரும் மாமுல் .

தமிழக அரசின் பெயரளவிலான தடையை மீறி, மாநிலம் முழுவதும் நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. 
இவற்றை கடத்தி வரும் ' கும்பலின் 'நெட்வொர்க்' குறித்த பலத்  தகவல்கள் அதிரவைக்கின்றன . 


தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலப்புள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் போட்டு மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு, கடந்த 2013ல் தடை விதித்தது. 

இந்த தடை உத்தரவை அமல் படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.

இருப்பினும் மறைமுகமாகவும், அதிகாரிகள் துணையுடனும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி குட்கா, ஹான்ஸ், கணேஷ், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டன.


 குட்கா விற்பனையில் அமைச்சர்கள்,போலீஸ் அதிகாரி வரை ஆதாரப்பூர்வமாக மாட்டியும்  எந்த வித நடவடிக்கையும் எடப்பாடி அரசால் எடுக்கபப்டாததால் தற்போது முழு வீச்சில் தமிழகம் முழுக்க பான்பராக்,குட்கா வகைகளும் கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களும்  விற்கப்படுகின்றன.

 இவ்வாறு தமிழகத்தில் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான புகை யிலைப் பொருட்களின் வர்த்தகம் சட்டவிரோத மாக அல்ல அரசு ஆதரவுடனே நடக்கிறது.அதில் ஆள்வோருக்கும்,காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கிடைக்கிறது என்கின்றனர்  கடத்தல் 'மாபியா'க்களின் 'நெட்வொர்க்'கை நன்கறிந்த உளவுத்துறை அதிகாரிகள்.
'கடந்த 2015ல், சென்னையில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைபொருட்களை பதுக்கி விற்ற நிறுவனத்தினரி டம் அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் லட்சக்கணக்கில் மாமூல் பெற்றது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், தமிழகத் தில் மீண்டும் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டது' என்றும் குற்றம் சாட்டி, ஆதாரங்களுடன் சில தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

தென்மாநிலங்களில் தமிழகம்,கேரளா, ஆந்திரா வில் மட்டுமே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப் பட்டுள்ளன; கர்நாட காவில் தடையில்லை. 

இதனால், கர்நாடக மாநிலத்திலிருந்தும், வடக்கில் டில்லி, உ.பி.,யில் இருந்தும்  லாரிகளில் மூட்டை, மூட்டையாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. 

இதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப் பவர்கள், 'கோவிந்தா' பெயர் கொண்ட மாமன், மச்சான் இருவரும்.

சட்ட விரோதமாக சென்னைக்கு சரக்கு கடத்தி வர ஐந்து மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கும் இவர்கள், 'சி அண்ட் எப்' (Clearing and Forwarding) என்றழைக்கப்படும் 'ஹேமந்த் மற்றும் கவுதம் ஆகியோரிடம் ஒப்படைக்கின்றனர். 


இவர்கள் ரகசிய குடோன்களில் பதுக்கி வைத்தோ அல்லது ரகசிய இடங்களில் சரக்குகளை வேறு வாகனங்களுக்கு மாற்றியோ பல்வேறு மாவட்டங் களுக்கும் சப்ளை செய்கின்றனர்.


 இவர்களில் பெரும்பாலோர் அதிமுக கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள்.இதற்காகவே இவர்கள் தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.திமுக ஆட்சி வந்தால் அதிலும் சேர்ந்து கொண்டு தங்கள் தொழிலை சிரமமின்றி அதிகாரிகள் துணையுடன் நடத்துவார்கள்.

கடத்தி வரப்படும் பொருட்கள்சில்லரை விற்பனை முறையில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரண மாக, 100 பாக்கெட்கள் கொண்ட ஒரு மூட்டை 'ஹான்ஸ்' புகையிலையின் விலை 13 ஆயிரம் ரூபாய். ஒரு பாக்கெட்டில், 30 'பவுச்'கள் இருக்கும். 

இவை தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டபின், 'சி அண்ட் எப்' என்றழைக்கப்படும் நபர்களால் நிர்ணயிக்கப்படும் விலை ரூ. 25 ஆயிரம் ரூபாய். இவர்களிடம் வாங்கிச் செல்லும் மாவட்ட ஏஜன்ட்கள், தங்களின் லாபத்தைக் கூட்டி, 40 ஆயிரத்துக்கு தள்ளிவிடுகின்றனர்.

இவர்களிடம் இருந்து வாங்கும் சில்லரை வியாபாரிகள், 6 ரூபாய் கொண்ட பாக்கெட்டை, 25 ரூபாய்க்கு விற்கின்றனர். 

ஹான்ஸ் போன்றே சாந்தி, விமல், ஆர்எம்டி, பான்பராக், புல்லட் ராணி, கணேஷ், 'கூல் மின்ட்' என்ற பெயர்களில் எண்ணற்ற புகையிலைப் பாக்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி ஓட்டுநர் மட்டுமே கைது.


இவற்றின் விற்பனை மூலம் கடத்தல்காரர்களால் அடிக்கப்படும் கொள்ளையில் இருந்தே, உணவு பாது காப்புதுறை, போலீஸ், சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறை என, பல துறைகளுக்கும் மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாமூல் படியளக்கப் படுகிறது.


இந்தியாவில் சிகரெட், பீடி, குட்கா போன்ற புகை யிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள்' என்கிறது புள்ளி விவரம். 


அவ்வாறிருந்தும்,இந்த உயிர் கொல்லி பொருட் களை விற்க மாமூலில் திளைத்த அதிமுக முக்கிய அமைச்சர்கள், அரசு மற்றும்  போலீஸ் துறை தலைமை அதிகாரிகளில் சிலர் பங்களிப்பு இருப்பதும் அவர்கள் இதற்காக மாதம் பல லட்சங்களில் கையூட்டு பெறுவதும் மக்களிடம்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இதில் சமீபத்தில் மாட்டியுள்ள கடத்தல் ஆசாமிகளின் நாட்குறிப்பில் அமைச்சர்கள்,,முக்கிய காவல்துறை அதிகாரி,தலையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் போக தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் பலலட்சங்கள் மிகை ஊதியமாக (போனஸ்) கொடுத்ததுதான் இந்த போதை கதாஹதத்தில் தொழில் எவ்வளவுதூரம் விரிவாக கொடிகட்டி பார்க்கிறது என்பதை வேதனையாக எடுத்துக்காட்டுகிறது.

 உணவுப் பொருள் பாதுகாப்பு துறைஅதிகாரி ஒருவர் 
"குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது விற்கப்படுவதாகவோ பொது மக்களிடம் இருந்து தகவல் வரப்பெற்றால் உடனடியாக, சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி பறிமுதல் செய்கிறோம்.
பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி, அதன் முடிவு அறிக்கையைப் பெற்று கோர்ட் டில் தாக்கல் செய்கிறோம்.

 பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப கோர்ட் அபராதம் விதிக்கிறது. தனியாக வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கிறோம். 
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ.17 கோடி மதிப்பிலான புகை யிலை வஸ்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.ஆனால் கடத்தல் காரர்கள் உடனே எந்த வித குறையுமின்றி வெளிவந்து தொழிலைத்தொடர்கிறார்கள்.'என்றார்.

அதிகாரிகள் ஒரு புறம் நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் கடத்தலும் விற்பனை யும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கையூட்டு  அரசின் கடமை. தங்களைப்புனிதர்களாக காட்டுடி வாய்பேசும்  ஆட்சியாளர்கள் எப்படிசெய்வார்கள்?

'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை இனி விற்கப்போவதில்லை என, இதுவரை விற்று வந்த வியாபாரிகளில் பலரும் நல்லதொரு முடிவெடுத்து, ஒன்றிணைந்துள்ளனர். இவர்களில், 130 பேர், கடந்த மாதம், கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள 'கிளாசிக்' ஓட்டலில், ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில் பேசிய பலரும், 'கடத்தல் கும்பல்கள் வருமானம் பார்க்க, நாம் ஏன் 'ரிஸ்க்' எடுத்து 
புகையிலைப்பொருட்களை விற்க வேண்டும்; இனி, யாரும் இந்த விற்பனையில் ஈடுபடக் கூடாது' என, முடிவு செய்தனர். இதையறிந்த, குட்கா கடத்தல் பேர்வழிகள், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த வியாபாரிகளை போனில் அழைத்து மிரட்டியுள்ளனர்.


அதை காவல்துறையில் கூறியபோது கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, கடந்த 19ம் தேதி, ஈரோட்டில் உள்ள 'கிளப்'பில் கூட்டம் நடத்திய, 18 மாவட் டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கடத்தல் பேர்வழிகள் தொடர்ந்து மிரட்டினால் காவல்துறையிடம்  புகார் அளித்து பாதுகாப்பு கேட்பது எனவும் ,காவல்துறை வழமை போல் கண்டு கொள்ளாவிட்டால்  காவல்துறை நடவடிக்கை கேட்டு நீதிமன்றம் செல்வது எனவும்  முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாட்டின் தடை செய்யப்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை வேலை செய்ய நீதிமன்றம் போக வேண்டிய நிலையில்தான் அதிமுக அரசின் சட்டம் &ஒழுங்கு நிலை உள்ளது.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-29.
மைக்கேல் பாரடே

 • இந்திய தேசிய விளையாட்டு தினம்

 • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)

 • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)

 • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
=====================================================================================
முதல்வர் துணை முதல்வர்  இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருவதால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.


செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

போலிகளின் ஆட்சி..,

இந்தியாவில் கடந்த 10மாத காலத்தில் சுமார் 60 லட் சம் பேர், வேலையிலிருந்து வெளியேறி இருப்பது,அல்லது வேலையிழந்திருப்பது  மத்தியஅரசே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

இவர்களில் சுமார் 46 லட்சம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள் ளது.

ஏற்கெனவே பார்த்தவேலையைக் கைவிட்டவர்கள் குறித்த தகவல்களை, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதற்போது அரசு வெளியிட்டுள்ளது. 

இதில், அமைப்பு சார்ந்தவேலைகளிலிருந்து விலகிய நபர்களின் எண்ணிக்கையை, தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பு அளித்த தரவுகள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.


அதில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பில் 1 கோடியே 7 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றால், இதே காலத் தில் 60 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைகள் மற்றும் இழக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை குறித்து அளவிடுவதற்கு, தொழிலாளர் சேமநல நிதியத்தின் தரவுகளைத் தான் அண்மைக்காலமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. 

 தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பை விட்டு ஏன் இவ்வளவுஊழியர்கள் வெளியேறுகின்றனர் என்பது குறித்த தகவல்களை அரசு தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
====================================================================================
போலிகளின் ஆட்சி.
மீட்புப் பணியை ராணுவத்திடம் ஒப்படைக்க மறுத்ததாகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக ஒரு போலி காணொளி  சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. 
ராணுவ உடையணிந்த ஒருவர் இப்படிப் பேசுவதாக அது காட்டுகிறது.
தலச்சேரி மஹிளா மோர்ச்சா என்கிற பெயரில் சங்கிகள் நடத்தும் ஒரு அமைப்பு இந்த  காணொளியை  28000 முறை பகிர்ந்திருக்கிறது. 

இந்த காணொளி(வீடியோ) போலி என்று அறிவித்த இந்திய ராணுவம் இந்த செயலை கடுமையாகக் கண்டித்திருக்கிறது. 
கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உட்கார்ந்திருப்பது போல் போலி காணொளி வெளியிட்ட எச்ச கும்பல்தான்  இதையும் செய்துள்ளது.
ராணுவத்தையும் விட்டுவைக்க வில்லை போட்டோஷாப் புகழ்  ,போலி காணொளி தேசபக்தர்கள்!
கண்டித்ததோடு இல்லாமல் நாட்டின் பாதுகாப்பையே அசிங்கப்படுத்தும் இந்த சங்கிகள் யார் என்று கண்டு பிடித்து ராணுவத்தை அசிங்கப்படுத்தியதற்கான நடவடிக்கை எடுத்து தண்டணை  வழங்க வேண்டும்.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-28.
 • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
 • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
 • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
 • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
======================================================================================

செயல்"தலைவர்".
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் மறைவையடுத்து, தலைவர் பதவியை செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. 

இதனையடுத்து 28ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் எனவும், அன்றைய தினம் தலைவர் - பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.


இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலினும் துரைமுருகனும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியது.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதற்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கு நேற்று காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 

அதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினுடைய பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டன. 
பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பொதுச் செயலாளரிடத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை காலை (இன்று) 9 மணிக்குத் தொடங்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல், அதன் பிறகு தலைவர், பொருளாளர் தேர்தல் முடிவுகளை பொதுச் செயலாளர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
நாமும் வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
    தளபதி மு.க.ஸ்டாலின் அரசியல் பயணம்.
1968 இளைஞர் மன்றம்
1971 மாவட்டப் பிரதிநிதி
1973 பொதுக்குழு உறுப்பினர்
1976 மிசாகைது ஓராண்டுச்சிறை
1982 இளைஞரணி அமைப்பு
செயலாளர்
1989 முதலாவதாக சட்டமன்ற உறுப்பினர் 
1996 மேயர்
2003 துணைப் பொதுச்செயலாளர்
2006 அமைச்சர்
2008 பொருளாளர்
2009 துணைமுதல்வர்
2016 எதிர்க்கட்சி தலைவர்
2017 செயல் தலைவர்
2018 திமுக தலைவர்
    ?    முதல்வர்   👍🏻
=====================================================================================
செயற்கை இறைச்சி 
அசைவ உணவுகளுக்காக விலங்குகளை கொல்லாமல், அதற்குப் பரிசோதனை மையத்திலேயே இறைச்சி வளர்க்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் இந்தியாவில் துவங்கியுள் ளன.
 இதன் மூலம், மிகவும் சுகாதாரமான இறைச்சி வகைகள் கிடைப்பதுடன், மற்ற நாடு களின் போட்டியையும் சமாளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாதில், 'புரோட்டினின் எதிர்காலம்- புதிய உணவு புரட்சி' என்ற தலைப்பில், சமீபத்தில் ஒரு கருத்தரங் கம் நடந்தது. அதில், எதிர்காலத்தில் அசைவ உணவுகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித் தும்,அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


இந்தக் கருத்தரங்கின் போது, ஐதராபாதை தலைமையிடமாக கொண்ட, சி.சி. எம்.பி.,எனப்படும்,செல் மற்றும் மூலக்கூறுகள் உயிரியல் மையம்,பரிசோதனை மையங்களில் இறைச்சியை உருவாக்கும் புதிய திட்டம் குறித்துவிவரித்தது. 


இது தொடர்பாக,இந்த ஆய்வு திட்டத்தில் ஈடு பட்டுள்ள விஞ்ஞானிகள்,கூறியதாவது:

 தற்போது அசைவ உணவுக்காக பயன்படுத்தப்படும், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள், சைவ உணவுகளையே சாப்பிடுகின்றன.
இதனால், அதிக அளவில் தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் செலவாகின்றன.
இதைத் தவிர, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பைஏற்படுத்தும் மீத்தேன் வாயுவை, இந்த விலங்குகள் வெளியிடுகின்றன.ஒரு கிலோ இறைச்சிக்கு, 11 கிலோ தானியங்கள் செலவிட வேண்டி உள்ளது. இந்த தானியங்களை உற்பத்தி செய்ய, அதிக தண்ணீர் செலவிட வேண்டியுள்ளது. அதனால், இதில் மாற்று முறை குறித்து ஆராயப்பட வேண்டி உள்ளது.

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், 'கிளீன் மீட்' எனப்படும், பரிசோதனை மையங்களில் இறைச்சியைஉருவாக்கும் ஆராய்ச்சிகள் நடக்கின் றன. அடுத்த2 ஆண்டுகளுக்குள் இந்த இறைச்சி, அங்கு விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.இந்த நாடுகள், அந்த தொழில் நுட்பத்தை மற்றவர்களுக்கு தராது. 


அதே நேரத்தில்,பரிசோதனை மையத்தில் உருவாக் கப்படும் இறைச்சியை, நம் நாட்டில் சந்தைப்படுத்த விரும்புவர்.அதனால், இந்த தொழில் நுட்பத்தை நாமே ஏன் உருவாக்கக் கூடாது என்ற நோக்கத்தில், அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. சி.சி.எம்.பி., இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அடல் புதுமை மையம் திட்டத்தின் கீழ் செயல்படும், 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள், சி.எஸ்.ஐ.ஆர்., எனப் படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் பரிசோதனை மையங்கள் ஆகியவற் றின் உதவியுடன், சி.சி.எம்.பி., இந்த புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கும். 
இந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை, சந்தைப்படுத்தும் அளவுக்கு உற்பத்தி செய்வது குறித்தும் ஆராயப் படுகிறது.
:அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்,தங்களுடைய தொழில் நுட்பத்தில் உருவாக் கும் இறைச்சியை, இங்கு, அதிக விலைக்கு விற்க முனைவர். தொழில் நுட் பத்தை நமக்கு அளிக்க முன்வர மாட்டார்கள். 
மற்ற நாடுகளை விட, தொழில் நுட்ப வளர்ச்சி யில் நாம் சளைத்தவர்கள் அல்ல.ஐந்து ஆண்டு களுக்குள், இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டு, பரிசோதனை மையத்தில் உருவான இறைச்சி விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க் கலாம். 
'கிட்டத்தட்ட, குளோனிங் முறைப்படி தான், பரிசோதனை மையங்களில் இறைச்சி உரு வாக்கும் திட்டமும் இருக்கும். 
அதாவது ஒரு குறிப்பிட்ட கால்நடையின் செல்கள், பரி சோதனை மையத்தில் இறைச்சியாக வளர்க் கப்படும். இதன் மூலம், 100 சதவீத இறைச்சி கிடைக்கும். 
தற்போது சுகாதாரமற்ற முறை யில் வெட்டப்படுவது போன்றவையும் தடுக்கப் படும் என  விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
இதனால் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு குறைந்து போகும்.இதனால் பிற்காலத்தில் அந்த இனங்களே இல்லாமல் போகும் அபாயமுண்டு.
ஆனால்  இறைச்சியை வைத்திருந்தார் என்ற காரணத்தினால் இந்துத்துவா வெறியினர் செய்யும் படுகொலைகளுக்கு ஒரு முடிவு வரலாம்.
======================================================================================