போலிகளின் ஆட்சி..,

இந்தியாவில் கடந்த 10மாத காலத்தில் சுமார் 60 லட் சம் பேர், வேலையிலிருந்து வெளியேறி இருப்பது,அல்லது வேலையிழந்திருப்பது  மத்தியஅரசே வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. 

இவர்களில் சுமார் 46 லட்சம் பேர் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் அமைந்துள் ளது.

ஏற்கெனவே பார்த்தவேலையைக் கைவிட்டவர்கள் குறித்த தகவல்களை, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகுதற்போது அரசு வெளியிட்டுள்ளது. 

இதில், அமைப்பு சார்ந்தவேலைகளிலிருந்து விலகிய நபர்களின் எண்ணிக்கையை, தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பு அளித்த தரவுகள் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.


அதில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும், 2018ஆம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பில் 1 கோடியே 7 லட்சம் பேர் இணைந்துள்ளனர் என்றால், இதே காலத் தில் 60 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அமைப்பு சார்ந்த துறைகளில் உருவாக்கப்படும் வேலைகள் மற்றும் இழக்கப்படும் வேலைகளின் எண்ணிக்கை குறித்து அளவிடுவதற்கு, தொழிலாளர் சேமநல நிதியத்தின் தரவுகளைத் தான் அண்மைக்காலமாக மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. 

 தொழிலாளர் சேமநல நிதிய அமைப்பை விட்டு ஏன் இவ்வளவுஊழியர்கள் வெளியேறுகின்றனர் என்பது குறித்த தகவல்களை அரசு தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை.
====================================================================================
போலிகளின் ஆட்சி.
மீட்புப் பணியை ராணுவத்திடம் ஒப்படைக்க மறுத்ததாகக் கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக ஒரு போலி காணொளி  சமூக வலைத்தளங்களில் உலவுகிறது. 
ராணுவ உடையணிந்த ஒருவர் இப்படிப் பேசுவதாக அது காட்டுகிறது.
தலச்சேரி மஹிளா மோர்ச்சா என்கிற பெயரில் சங்கிகள் நடத்தும் ஒரு அமைப்பு இந்த  காணொளியை  28000 முறை பகிர்ந்திருக்கிறது. 

இந்த காணொளி(வீடியோ) போலி என்று அறிவித்த இந்திய ராணுவம் இந்த செயலை கடுமையாகக் கண்டித்திருக்கிறது. 
கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உட்கார்ந்திருப்பது போல் போலி காணொளி வெளியிட்ட எச்ச கும்பல்தான்  இதையும் செய்துள்ளது.
ராணுவத்தையும் விட்டுவைக்க வில்லை போட்டோஷாப் புகழ்  ,போலி காணொளி தேசபக்தர்கள்!
கண்டித்ததோடு இல்லாமல் நாட்டின் பாதுகாப்பையே அசிங்கப்படுத்தும் இந்த சங்கிகள் யார் என்று கண்டு பிடித்து ராணுவத்தை அசிங்கப்படுத்தியதற்கான நடவடிக்கை எடுத்து தண்டணை  வழங்க வேண்டும்.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-28.
  • ஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)
  • வில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
  • சயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)
  • குவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)
======================================================================================

செயல்"தலைவர்".
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.
திமுக தலைவர் கலைஞரின் மறைவையடுத்து, தலைவர் பதவியை செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. 

இதனையடுத்து 28ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் எனவும், அன்றைய தினம் தலைவர் - பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.


இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலினும் துரைமுருகனும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியது.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதற்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கு நேற்று காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 

அதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினுடைய பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டன. 
பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பொதுச் செயலாளரிடத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை காலை (இன்று) 9 மணிக்குத் தொடங்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல், அதன் பிறகு தலைவர், பொருளாளர் தேர்தல் முடிவுகளை பொதுச் செயலாளர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கும், துரைமுருகனுக்கும் பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.
நாமும் வாழ்த்துகளைத்தெரிவித்துக்கொள்கிறோம்.
    தளபதி மு.க.ஸ்டாலின் அரசியல் பயணம்.
1968 இளைஞர் மன்றம்
1971 மாவட்டப் பிரதிநிதி
1973 பொதுக்குழு உறுப்பினர்
1976 மிசாகைது ஓராண்டுச்சிறை
1982 இளைஞரணி அமைப்பு
செயலாளர்
1989 முதலாவதாக சட்டமன்ற உறுப்பினர் 
1996 மேயர்
2003 துணைப் பொதுச்செயலாளர்
2006 அமைச்சர்
2008 பொருளாளர்
2009 துணைமுதல்வர்
2016 எதிர்க்கட்சி தலைவர்
2017 செயல் தலைவர்
2018 திமுக தலைவர்
    ?    முதல்வர்   👍🏻
=====================================================================================
செயற்கை இறைச்சி 
அசைவ உணவுகளுக்காக விலங்குகளை கொல்லாமல், அதற்குப் பரிசோதனை மையத்திலேயே இறைச்சி வளர்க்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்புவதற்கான முயற்சிகள் இந்தியாவில் துவங்கியுள் ளன.
 இதன் மூலம், மிகவும் சுகாதாரமான இறைச்சி வகைகள் கிடைப்பதுடன், மற்ற நாடு களின் போட்டியையும் சமாளிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாதில், 'புரோட்டினின் எதிர்காலம்- புதிய உணவு புரட்சி' என்ற தலைப்பில், சமீபத்தில் ஒரு கருத்தரங் கம் நடந்தது. அதில், எதிர்காலத்தில் அசைவ உணவுகளில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித் தும்,அதை எதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 


இந்தக் கருத்தரங்கின் போது, ஐதராபாதை தலைமையிடமாக கொண்ட, சி.சி. எம்.பி.,எனப்படும்,செல் மற்றும் மூலக்கூறுகள் உயிரியல் மையம்,பரிசோதனை மையங்களில் இறைச்சியை உருவாக்கும் புதிய திட்டம் குறித்துவிவரித்தது. 


இது தொடர்பாக,இந்த ஆய்வு திட்டத்தில் ஈடு பட்டுள்ள விஞ்ஞானிகள்,கூறியதாவது:

 தற்போது அசைவ உணவுக்காக பயன்படுத்தப்படும், ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகள், சைவ உணவுகளையே சாப்பிடுகின்றன.
இதனால், அதிக அளவில் தண்ணீர் மற்றும் உணவு தானியங்கள் செலவாகின்றன.
இதைத் தவிர, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பைஏற்படுத்தும் மீத்தேன் வாயுவை, இந்த விலங்குகள் வெளியிடுகின்றன.ஒரு கிலோ இறைச்சிக்கு, 11 கிலோ தானியங்கள் செலவிட வேண்டி உள்ளது. இந்த தானியங்களை உற்பத்தி செய்ய, அதிக தண்ணீர் செலவிட வேண்டியுள்ளது. அதனால், இதில் மாற்று முறை குறித்து ஆராயப்பட வேண்டி உள்ளது.

தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில், 'கிளீன் மீட்' எனப்படும், பரிசோதனை மையங்களில் இறைச்சியைஉருவாக்கும் ஆராய்ச்சிகள் நடக்கின் றன. அடுத்த2 ஆண்டுகளுக்குள் இந்த இறைச்சி, அங்கு விற்பனைக்கு வர அதிக வாய்ப்புள்ளது.இந்த நாடுகள், அந்த தொழில் நுட்பத்தை மற்றவர்களுக்கு தராது. 


அதே நேரத்தில்,பரிசோதனை மையத்தில் உருவாக் கப்படும் இறைச்சியை, நம் நாட்டில் சந்தைப்படுத்த விரும்புவர்.அதனால், இந்த தொழில் நுட்பத்தை நாமே ஏன் உருவாக்கக் கூடாது என்ற நோக்கத்தில், அதற்கான பணிகள் துவங்கியுள்ளன. சி.சி.எம்.பி., இந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அடல் புதுமை மையம் திட்டத்தின் கீழ் செயல்படும், 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள், சி.எஸ்.ஐ.ஆர்., எனப் படும் அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சிலின் பரிசோதனை மையங்கள் ஆகியவற் றின் உதவியுடன், சி.சி.எம்.பி., இந்த புதிய தொழில் நுட்பத்தை உருவாக்கும். 
இந்த தொழில் நுட்பத்தில் உருவாக்கப்படும் இறைச்சியை, சந்தைப்படுத்தும் அளவுக்கு உற்பத்தி செய்வது குறித்தும் ஆராயப் படுகிறது.
:அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்,தங்களுடைய தொழில் நுட்பத்தில் உருவாக் கும் இறைச்சியை, இங்கு, அதிக விலைக்கு விற்க முனைவர். தொழில் நுட் பத்தை நமக்கு அளிக்க முன்வர மாட்டார்கள். 
மற்ற நாடுகளை விட, தொழில் நுட்ப வளர்ச்சி யில் நாம் சளைத்தவர்கள் அல்ல.ஐந்து ஆண்டு களுக்குள், இந்தத் தொழில்நுட்பம் உருவாக்கப் பட்டு, பரிசோதனை மையத்தில் உருவான இறைச்சி விற்பனைக்கு வரும் என, எதிர்பார்க் கலாம். 
'கிட்டத்தட்ட, குளோனிங் முறைப்படி தான், பரிசோதனை மையங்களில் இறைச்சி உரு வாக்கும் திட்டமும் இருக்கும். 
அதாவது ஒரு குறிப்பிட்ட கால்நடையின் செல்கள், பரி சோதனை மையத்தில் இறைச்சியாக வளர்க் கப்படும். இதன் மூலம், 100 சதவீத இறைச்சி கிடைக்கும். 
தற்போது சுகாதாரமற்ற முறை யில் வெட்டப்படுவது போன்றவையும் தடுக்கப் படும் என  விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 
இதனால் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு குறைந்து போகும்.இதனால் பிற்காலத்தில் அந்த இனங்களே இல்லாமல் போகும் அபாயமுண்டு.
ஆனால்  இறைச்சியை வைத்திருந்தார் என்ற காரணத்தினால் இந்துத்துவா வெறியினர் செய்யும் படுகொலைகளுக்கு ஒரு முடிவு வரலாம்.
======================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?