புதன், 29 ஆகஸ்ட், 2018

போதை தரும் மாமுல் .

தமிழக அரசின் பெயரளவிலான தடையை மீறி, மாநிலம் முழுவதும் நாள்தோறும் பல கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகின்றன. 
இவற்றை கடத்தி வரும் ' கும்பலின் 'நெட்வொர்க்' குறித்த பலத்  தகவல்கள் அதிரவைக்கின்றன . 


தமிழகத்தில் புகையிலை மற்றும் நிக்கோட்டின் கலப்புள்ள குட்கா, பான் மசாலா மற்றும் வாயில் போட்டு மெல்லக் கூடிய புகையிலைப் பொருட்களைத் தயாரிக்க, இருப்பு வைக்க, விற்பனை செய்ய தமிழக அரசு, கடந்த 2013ல் தடை விதித்தது. 

இந்த தடை உத்தரவை அமல் படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டன.

இருப்பினும் மறைமுகமாகவும், அதிகாரிகள் துணையுடனும் மாநிலம் முழுவதும் தங்கு தடையின்றி குட்கா, ஹான்ஸ், கணேஷ், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்பட்டன.


 குட்கா விற்பனையில் அமைச்சர்கள்,போலீஸ் அதிகாரி வரை ஆதாரப்பூர்வமாக மாட்டியும்  எந்த வித நடவடிக்கையும் எடப்பாடி அரசால் எடுக்கபப்டாததால் தற்போது முழு வீச்சில் தமிழகம் முழுக்க பான்பராக்,குட்கா வகைகளும் கஞ்சா உட்பட்ட போதைப்பொருட்களும்  விற்கப்படுகின்றன.

 இவ்வாறு தமிழகத்தில் தினமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான புகை யிலைப் பொருட்களின் வர்த்தகம் சட்டவிரோத மாக அல்ல அரசு ஆதரவுடனே நடக்கிறது.அதில் ஆள்வோருக்கும்,காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பங்கு கிடைக்கிறது என்கின்றனர்  கடத்தல் 'மாபியா'க்களின் 'நெட்வொர்க்'கை நன்கறிந்த உளவுத்துறை அதிகாரிகள்.
'கடந்த 2015ல், சென்னையில் குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலைபொருட்களை பதுக்கி விற்ற நிறுவனத்தினரி டம் அமைச்சர், போலீஸ் உயர் அதிகாரிகள் லட்சக்கணக்கில் மாமூல் பெற்றது தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், தமிழகத் தில் மீண்டும் குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துவிட்டது' என்றும் குற்றம் சாட்டி, ஆதாரங்களுடன் சில தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.

தென்மாநிலங்களில் தமிழகம்,கேரளா, ஆந்திரா வில் மட்டுமே குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் தடை செய்யப் பட்டுள்ளன; கர்நாட காவில் தடையில்லை. 

இதனால், கர்நாடக மாநிலத்திலிருந்தும், வடக்கில் டில்லி, உ.பி.,யில் இருந்தும்  லாரிகளில் மூட்டை, மூட்டையாக தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. 

இதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப் பவர்கள், 'கோவிந்தா' பெயர் கொண்ட மாமன், மச்சான் இருவரும்.

சட்ட விரோதமாக சென்னைக்கு சரக்கு கடத்தி வர ஐந்து மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கும் இவர்கள், 'சி அண்ட் எப்' (Clearing and Forwarding) என்றழைக்கப்படும் 'ஹேமந்த் மற்றும் கவுதம் ஆகியோரிடம் ஒப்படைக்கின்றனர். 


இவர்கள் ரகசிய குடோன்களில் பதுக்கி வைத்தோ அல்லது ரகசிய இடங்களில் சரக்குகளை வேறு வாகனங்களுக்கு மாற்றியோ பல்வேறு மாவட்டங் களுக்கும் சப்ளை செய்கின்றனர்.


 இவர்களில் பெரும்பாலோர் அதிமுக கட்சியின் பொறுப்புகளில் இருப்பவர்கள்.இதற்காகவே இவர்கள் தற்போது அதிமுகவில் சேர்ந்துள்ளனர்.திமுக ஆட்சி வந்தால் அதிலும் சேர்ந்து கொண்டு தங்கள் தொழிலை சிரமமின்றி அதிகாரிகள் துணையுடன் நடத்துவார்கள்.

கடத்தி வரப்படும் பொருட்கள்சில்லரை விற்பனை முறையில் கொள்ளை விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரண மாக, 100 பாக்கெட்கள் கொண்ட ஒரு மூட்டை 'ஹான்ஸ்' புகையிலையின் விலை 13 ஆயிரம் ரூபாய். ஒரு பாக்கெட்டில், 30 'பவுச்'கள் இருக்கும். 

இவை தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்டபின், 'சி அண்ட் எப்' என்றழைக்கப்படும் நபர்களால் நிர்ணயிக்கப்படும் விலை ரூ. 25 ஆயிரம் ரூபாய். இவர்களிடம் வாங்கிச் செல்லும் மாவட்ட ஏஜன்ட்கள், தங்களின் லாபத்தைக் கூட்டி, 40 ஆயிரத்துக்கு தள்ளிவிடுகின்றனர்.

இவர்களிடம் இருந்து வாங்கும் சில்லரை வியாபாரிகள், 6 ரூபாய் கொண்ட பாக்கெட்டை, 25 ரூபாய்க்கு விற்கின்றனர். 

ஹான்ஸ் போன்றே சாந்தி, விமல், ஆர்எம்டி, பான்பராக், புல்லட் ராணி, கணேஷ், 'கூல் மின்ட்' என்ற பெயர்களில் எண்ணற்ற புகையிலைப் பாக்கெட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
லாரி ஓட்டுநர் மட்டுமே கைது.


இவற்றின் விற்பனை மூலம் கடத்தல்காரர்களால் அடிக்கப்படும் கொள்ளையில் இருந்தே, உணவு பாது காப்புதுறை, போலீஸ், சுகாதாரத்துறை உள்ளாட்சித் துறை என, பல துறைகளுக்கும் மாதம் தோறும் லட்சக்கணக்கில் மாமூல் படியளக்கப் படுகிறது.


இந்தியாவில் சிகரெட், பீடி, குட்கா போன்ற புகை யிலைப் பொருட்களால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் மெல்லும் வகையிலான புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள்' என்கிறது புள்ளி விவரம். 


அவ்வாறிருந்தும்,இந்த உயிர் கொல்லி பொருட் களை விற்க மாமூலில் திளைத்த அதிமுக முக்கிய அமைச்சர்கள், அரசு மற்றும்  போலீஸ் துறை தலைமை அதிகாரிகளில் சிலர் பங்களிப்பு இருப்பதும் அவர்கள் இதற்காக மாதம் பல லட்சங்களில் கையூட்டு பெறுவதும் மக்களிடம்கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
இதில் சமீபத்தில் மாட்டியுள்ள கடத்தல் ஆசாமிகளின் நாட்குறிப்பில் அமைச்சர்கள்,,முக்கிய காவல்துறை அதிகாரி,தலையில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு மாத சம்பளம் போக தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளில் பலலட்சங்கள் மிகை ஊதியமாக (போனஸ்) கொடுத்ததுதான் இந்த போதை கதாஹதத்தில் தொழில் எவ்வளவுதூரம் விரிவாக கொடிகட்டி பார்க்கிறது என்பதை வேதனையாக எடுத்துக்காட்டுகிறது.

 உணவுப் பொருள் பாதுகாப்பு துறைஅதிகாரி ஒருவர் 
"குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவோ அல்லது விற்கப்படுவதாகவோ பொது மக்களிடம் இருந்து தகவல் வரப்பெற்றால் உடனடியாக, சம்பந்தப்பட்ட இடத்தில் சோதனை நடத்தி பறிமுதல் செய்கிறோம்.
பறிமுதல் செய்யப்படும் பொருட்களின் மாதிரிகளை ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பி, அதன் முடிவு அறிக்கையைப் பெற்று கோர்ட் டில் தாக்கல் செய்கிறோம்.

 பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப கோர்ட் அபராதம் விதிக்கிறது. தனியாக வழக்குப் பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கிறோம். 
கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ரூ.17 கோடி மதிப்பிலான புகை யிலை வஸ்துகளை பறிமுதல் செய்துள்ளோம்.ஆனால் கடத்தல் காரர்கள் உடனே எந்த வித குறையுமின்றி வெளிவந்து தொழிலைத்தொடர்கிறார்கள்.'என்றார்.

அதிகாரிகள் ஒரு புறம் நடவடிக்கை எடுத்தாலும், மறுபுறம் கடத்தலும் விற்பனை யும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கையூட்டு  அரசின் கடமை. தங்களைப்புனிதர்களாக காட்டுடி வாய்பேசும்  ஆட்சியாளர்கள் எப்படிசெய்வார்கள்?

'தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை இனி விற்கப்போவதில்லை என, இதுவரை விற்று வந்த வியாபாரிகளில் பலரும் நல்லதொரு முடிவெடுத்து, ஒன்றிணைந்துள்ளனர். இவர்களில், 130 பேர், கடந்த மாதம், கர்நாடக மாநிலம், பெங்களூருவிலுள்ள 'கிளாசிக்' ஓட்டலில், ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
அதில் பேசிய பலரும், 'கடத்தல் கும்பல்கள் வருமானம் பார்க்க, நாம் ஏன் 'ரிஸ்க்' எடுத்து 
புகையிலைப்பொருட்களை விற்க வேண்டும்; இனி, யாரும் இந்த விற்பனையில் ஈடுபடக் கூடாது' என, முடிவு செய்தனர். இதையறிந்த, குட்கா கடத்தல் பேர்வழிகள், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த வியாபாரிகளை போனில் அழைத்து மிரட்டியுள்ளனர்.


அதை காவல்துறையில் கூறியபோது கண்டுகொள்ளவில்லை.

இதையடுத்து, கடந்த 19ம் தேதி, ஈரோட்டில் உள்ள 'கிளப்'பில் கூட்டம் நடத்திய, 18 மாவட் டங்களைச் சேர்ந்த வியாபாரிகள், கடத்தல் பேர்வழிகள் தொடர்ந்து மிரட்டினால் காவல்துறையிடம்  புகார் அளித்து பாதுகாப்பு கேட்பது எனவும் ,காவல்துறை வழமை போல் கண்டு கொள்ளாவிட்டால்  காவல்துறை நடவடிக்கை கேட்டு நீதிமன்றம் செல்வது எனவும்  முடிவு செய்துள்ளனர்.


தமிழ்நாட்டின் தடை செய்யப்பட போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க காவல்துறை வேலை செய்ய நீதிமன்றம் போக வேண்டிய நிலையில்தான் அதிமுக அரசின் சட்டம் &ஒழுங்கு நிலை உள்ளது.
=====================================================================================
ன்று,
ஆகஸ்ட்-29.
மைக்கேல் பாரடே

  • இந்திய தேசிய விளையாட்டு தினம்

  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)

  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)

  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
=====================================================================================
முதல்வர் துணை முதல்வர்  இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வருவதால் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணைக்கு ஒத்துழைப்புத்தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.