தற்செயலாக நடந்தது

 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தற்செயலாக நடந்தது சவுக்கு சங்கர் பித்தலாட்டம்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு ஆளும் வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

வேதாந்தா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடிகளாக செயல்படுகின்ற ஓட்டுக்கட்சிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கம் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக

லுவலக முற்றுகையை, 100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தை பாசிச முறையில் ஒடுக்க நடத்தப்பட்டது தான் துப்பாக்கிச் சூடு.

Video Player
01:10
01:10

ஸ்நீப்பர் செல் உட்பட அனைத்து விதமான போலீஸ் படையையும் கொண்டு வந்து தாக்குதல் நடத்திய போலீசு, இந்த ஊடக போலி சவுக்கு சங்கரிடம் மட்டும் விவாதித்தாம்.

இவர் கேட்டாராம் என்ன சார் இப்படி நடந்து விட்டதே என்று!
அவர்கள் சொன்னார்களாம் தற்செயலாக நடந்துவிட்டது என்று.

சோனா என்ற பெண்ணை வாயிலேயே அருகில் இருந்து சுட்டார்களே எனக்கேட்டபோது பல குண்டுகள் போகிறபோது எங்கே தாக்கும் என்று தெரியாதே. என்கிறார் சவுக்கு சங்கர்.

அப்போ கண்மூடித்தனமாக சுட்டார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறார்தானே?

இவர் வேலையே பார்க்காமல் வசதியாக வாழ்கிறார் என்றால் எப்படி முடிகிறது.

பல ரகசிய ஆதாரங்கள், அரசு கடிதங்கள் உடனே இவருக்கு கிடைப்பதெப்படி.

இந்த ஆதவன் நிறுவனமும் பா.ஜக.வின் கைக்கூலி, ஆதரவு நிறுவனம்தான்.

கேட்பவர்கள் கேனை என்றால் ‘பூனை புஷ்பக விமானத்தை ஓட்டுமாம்’!


சமீபகாலமாக ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு, பாஜகவின் திராவிட ஒழிப்பு திட்டங்களில் ஒன்றான திமுகவை தமிழகத்தில் இருந்து ஒழித்துக் கட்டுவது என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்கு பொருத்தமாக ஏவி விடப்பட்டு திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பாஜகவின் பினாமி கும்பலான பல்வேறு ஊடக நரிகளின் சவுக்கு சங்கர் ஒருவர் என்பதை இந்த காணொளி நமக்கு நிரூபிக்கிறது.


.-----------------------------------------------------------------------------------

"இளைய பாரதம்."

யூடியூபர் கைது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலம், ரூ.50 லட்சம் பணம் வசூல் செய்த ‘இளைய பாரதம்’ யூடியூப் சேனல் நடத்திவரும் கார்த்திக் கோபிநாத் என்பவர் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராக அவதூறு வீடியோ வெளியிட்ட வழக்கு மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சிறுவாச்சூர் திருக்கோயில் பெயரை வைத்து 50 லட்ச ரூபாய் வரை பணம் வசூல் செய்த மோசடி செய்த விவகாரத்தில், இந்து சமய அறநிலையத்துறை ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தது.



இந்நிலையில் ஆவடி மிட்டனமல்லியில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து யூடுபார் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி காவல் ஆனையரக மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், மற்றும் உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் கார்த்திக் கோபிநாத் தனது சொந்த செலவில் சிலைகளை சீரமைத்து தருகிறேன் என அறநிலையத்துறைக்கு விண்ணப்பம் வழங்கிவிட்டு, பொது மக்களிடம் நன்கொடை வசூல் செய்தது விசாரணையில் தெரியவந்தது.


இதனிடையே மதுரகாளியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை சார்பில் கார்த்திக் கோபிநாத் வக்கீல் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. 

அந்த நோட்டீஸில், கோவில் சீரமைப்பு செய்வதாக கூறி வசூல் செய்த பணத்தை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவேளை பெற்ற பணத்தை ஒப்படைக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.

-------------------------------------------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?