புதன், 31 மே, 2017

தரமற்ற ஆன்மிக வியாபாரி.
வியாபார சாமியார் பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 சதவீத பொருட்கள் தரக்குறைவானவை,அந்நிய நாட்டு மருத்துவக்கழிவுகள் உள்ளன என இந்திய அரசு  ஆயுர்வேத மற்றும் யுனானி ஆய்வகம் அறிவித்துள்ளது. 

வியாபார சாமியார்
பதஞ்சலி நிறுவனப் பொருட்கள் தரம்,ஆயுர்வேதம் முறைப்படிதான் தயாரிக்கப்படுகிறதா என்பது  குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. 
இதனால் ஆனமீக வியாபாரி பாபாராமதேவ் நிறுவனமான பதஞ்சலி பொருட்கள் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி அலுவலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், பதஞ்சலி நிறுவன பொருட்களில் 40 சதவீதம் பொருட்கள் முழுமையாகவே  ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்படவில்லை என்றும் அவைகளில் மருத்துவ தன்மைக்காக அந்நிய(ஆங்கில.ஓமியோபதி)நாட்டு மருத்துவ பொருட்கள் கலக்கப்பட்டவை என்றும் பதஞ்சலி  மருத்துவ தயாரிப்புகள் மிகவும்   தரக்குறைவானவை,ஆயுர்வேத தயாரிப்புகள் அல்ல  என்றும் தெரிய வந்ததாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதஞ்சலியின் ஆம்லா ஜூஸ் மற்றும் ஷிவிங்கி பீஜ் ஆகிய பொருட்கள் தரமற்றவை எனவும், இதில் 31.68 சதவீதம் அந்நிய நாட்டு மூலப் பொருட்கள் கலந்து இருப்பதும் முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு இதுவரை பாபா ராமதேவ் வாய் திறக்கவில்லை.
.

ஆனால்பாஜக அரசு அதன் பின்னரும் பதஞ்சலி நிறுவனப்பொருட்களுக்கு வரைசலுகை அளித்துள்ளது.

அதற்கும் மேலாக புதிய பதஞ்சலி தயாரிப்பு தொழிற்சாலையை இந்திய பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதற்காக 60 கோடிகள் ரூபாய் செலவில் இந்தியாவில் உள்ள அனைத்தும் ஆங்கில,மாநில மொழிகள் பத்திரிகைகளிலும் ,தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

ஆனால் நெல்லிசாறு (ஆம்லா ஜூஸ்)போலி விவகாரத்தில் அரசும்,மருத்துவக்கழகமும்  இதுவரை எந்த நடவடிக்கையு ம் எடுக்கப்படவில்லை. 

போலி ,தரங்கெட்ட பதஞ்சலி மருந்துப்பொருட்கள் விற்பனை தொடர்கிறது.விளம்பரங்களும் பக்கம்,பக்கமாக வெளியாகிறது.

தேன் ,நெல்லிசாறு ,நெல்லிக்காய் லேகியம்,அஸ்வகந்தா லேகியம்,உட் பட்ட பொருட்கள்,கோதுமை மாவு,நூடூல்ஸ் ஆகியவை இந்திய சுகாதாரத்துறையால் தரக்கேட்டவை என்று அறிவிக்கப்பட்ட பின்னரும் போலி சாமியார் பாபா ராமதேவ் தனது போலி பொருட்கள் விற்பனையை நிறுத்தாதது மட்டுமின்றி டாபர்,இமாலயா தேன் மற்றும் மருத்துவ பொருட்களைப்பற்றி தரக்குறைவாக விமர்சித்தும் தனது பொருட்களை உயர்த்தியும் விளம்பரம் செய்வது இன்னமும் தொடர்கிறது.
வியாபார சாமியார் பாபா ராம்தேவ்
"மாட்டிறைச்சி தின்ன தடையே கிடையாது. என்ன மாடுகளை இறைசிக்காக வெட்டக் கூடாது. இறைச்சிக்காக மாடுகளை  விவசாயிகள் விற்க கூடாது .
அப்படி  விற்றால் தண்டனை .மாடுகளை விற்க வேண்டுமானால் 
இறைச்சி  கொண்டு போனால் மாட்டு ஆர்வலர்களால் குறைந்த பட்சம் உயிர் இழப்பு உண்டாகும் அவ்வளவுதானே.பசுவை கண்ட இடத்தில் காலில் விழுந்து கும்பிடுங்கள் என்றா சொல்கிறோம்.
"மாட்டிறைசி தின்ன தடையே கிடையாது"என்று தெளிவாக கூறிய பின்னரும் இப்படி கூச்சல் போடுவது  தேவையா?
மேலும் மோடி பாஜக அரசு பன்றி,யானை,வரிக்குதிரை,கங்காரு இறைச்சி சாப்பிட தடை போடவில்லை.ஒட்டகத்துக்கு தடை ஒட்டக சிவிங்குக்கு தடை இல்லை என்பதை எல்லாம் கூச்சல் போடுபவர்கள் ஏன் கண்டு கொள்ளவில்லை.?
இதிலிருந்தே இவர்கள் ஆன்டி இந்தியன் என்பது தெளிவாகிறதே.
மேலே இருப்பது உலகளாவிய மாட்டிறைச்சி ஏற்றுமதி பட்டியல்.இன்றைய நிலையில் சமநிலையில் இருந்த பிரேசிலை இந்தியா  முந்தி விட்டது.
இதில் முக்கிய குறிப்பு.அதாவது உண்மை .
இந்திய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களில் 80% பாஜக  தலைகள்,பார்ப்பான் தொழிலதிபர்கள்தான்.
==========================================================================================

ன்று,
மே -31.
 • உலக  புகையிலை எதிர்ப்பு தினம்
 • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)
 • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)
 • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)
 • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)
===========================================================================================செவ்வாய், 30 மே, 2017

மாவீரன் மோடி.

இந்திய பாமர மக்களுக்கு எதிரான ஆணைகளை போட்ட விட்டு வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுவதே மோடியின் ராஜ தந்திரமாய் போய்விட்டது.

பணமதிப்பிழப்பு காலங்களில் 500,1000 செல்லாது என்று இரவில் அறிவித்து விட்டு பகலில் விமானம் ஏறி விட்டார்.இந்தியாவில் உள்ள மக்களில் 90% வாங்கி வரிசையில் சாப்பிட கூட இயலாமல்  காத்துக்கிடந்து மயங்கிய போதும் ,பணம் செல்லாதா என்று பலர் உயிரை இழந்து அவர்கள் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்த போதும்  இப்படித்தான் ஒடி வெளிநாடுகளில் போய் ஒளிந்து கொண்டார்.


அந்த பணமதிப்பிழப்பு மக்களை கொடுமைப்படுத்தியதை பற்றி  இந்திய வந்த பின்னரும் வாயே திறக்கவில்லை.

பாராளுமன்றத்தில் கேள்விகள்,ஆர்ப்பாட்டங்களும் நடந்த போதும் மன்மோகன் சிங்குக்கு அண்ணனாக வாயில் சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.

அனால் இன்றுவரை கறுப்புப்பணம் ஒழிந்ததாக ஆய்வுகள் அறிவிக்கவில்லை.மாறாக கறுப்புப்பணம் அதிகரித்திருப்பது வருமான,அமுலாக்க துறையினர் சோதனைகள் மூலம் தெரிகிறது.
இதுவரை 64 தடவைகள் வெளிநாடுகள் ,பயணங்கள்,ஒப்பந்தங்கள் இந்திய மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது.?

ஐ.டிதுறையில் வெளிநாடுகளின் முடிவால் பல லட்சம் பேருக்கு வேலை போகப்போவதுதான் உண்மை நிலவரம்.

அதை தடுத்து நிறுத்த கூட இப்போதைய மோடி பயனநிரலில் எந்த திட்டமும் இல்லை.

லட்சம் பேருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு என்ற மோடியின் மூன்றாண்டு சாதனை  ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேருக்கு என்ற கணக்கில் ஆறு லட்சம் பேர்கள் ஏற்கனவே தங்கள் பார்த்த வேலைகளை இழந்து தேருக்கு வரப்போகிறார்கள் என்பதுதான்.

மோடியின் பயணங்கள் அம்பானி,அதானி,டாடாக்களுக்குத்தான் பணம் மேலும் குவிக்க வைக்கிறது.பயணச்செலவு மட்டும் ஏழை மக்களின் வரிப்பணம்.

ஏழைகள் மதிப்பு கூட்டப்பட்ட உணவாக இருப்பது மாட்டிறைச்சிதான் .அவர்கள் உணவுக்காக பசுக்களை கொல்வதில்லை.பசுக்களின் பால் அவர்களுக்கும் தேவைதானே.

ஆனால் பாஜக அரசு ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை தலை மேற்கொண்டு அட்டகாசம் செய்கிறது.தேவையே இல்லாமல் மாட்டினத்தை கடவுள் உயரத்துக்கு கொண்டு சென்று கொலைவெறியோடு அலைகிறது.

ஆட்சியை கைப்பற்றியதால் பாஜக,ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை,மாட்டை வணங்குவதை  இந்திய மக்கள் அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்பது என்ன வகை மக்களாட்சி?

பாஜக ஆட்சியை கைப்பற்றியது என்றால் 100% மக்கள் ஆதரவில் அல்ல.வெறும் 35% வாக்குகள்தான்.
மீதி 65% பாஜக எதிர்ப்புதான் மக்களாட்சி முறையில்  மக்கள் வாக்காளர்  தொகையில் முக்கால்வாசி பாஜக ஆட்சியை விரும்பாதவர்கள்தான்.ஆனால் இந்த அடிப்படையை மோடி ஒதுக்கி வைத்து விட்டு ஒருமனதாக தேர்வானவர் போல் நடந்து கொள்கிறார்.

இதற்கு சரியான பெயர்  சர்வாதிகாரி என்பதுதான்.

உண்மையில் தன்  ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களவையில் எதிர் கொள்ளும் திராணியற்றவராகவே அவர்  உள்ளார்.

மக்களவையில் ஆட்சி,நிர்வாகத்தை பற்றி கேட்கப்படும் கேள்விகளுக்கு பாஜக கூட்டங்களில் கூட பதில் சொல்லாத மோடி வெளிநாடுகளிலும்,இந்தியாவிலும் கலந்து கொள்ளும் அரசு விழாக்களில் தன்னையும்,தமது ஆட்சி திறனையும் தானே  வானளாவ புகழ்ந்தும் எதிர்க்கடசியினரை தரக்குறைவாக ஆதராமே இல்லாமல் தாக்குவதையுமே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆக களத்தில் எதிராளி வாளுடன் காத்திருக்கையில் அந்தப்பக்கமே திரும்பி பார்க்காமல்,போட்டி காலம்  முடிந்த பின்னர் தனியாக ஆவேசத்துடன் வாள்  வீசி வெற்றி வாகை சூடும் மாவீரன்தான் மோடி.

===============================================================================================
ன்று,
மே-30.
 • பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)
 • திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)
 • அல்பேனியா தனி நாடாகியது(1913)
 • இந்தியாவில் கோவா தனி மாநிலமாகியது(1987)
===============================================================================================
தமிழ் நாட்டில் ஆள்வது அதிமுக அல்ல. பாஜக அடிமை ஆட்சி  என்பதை உறுதி செய்யும் ஒப்புதல்கடிதம்.

ராணுவத்திலும் தனியார் மயம்.
மோடியின் சாதனை மய்யம்.

படு பயங்கரமான முதலாளித்துவக் கொள்கை கொண்ட  நடுகளில் கூட  காவல்துறை,நீதித்துறை,ராணுவம் தனியார் மயம்,அந்நிய மயமாக்கள் கிடையாது.
மோடியின் பிதாமகன் தாராளமயமாக்கல் தாதா அமெரிக்காவில் கூட ராணுவத்தில் தனியார்களை பென்டகன் உள்ளே நுழைய விடுவதில்லை.
டாங்க்கியில் உள்ள சின்ன துருக்கு கூட அதற்கான பாதுகாப்பான தொழிற்ச்சாலையில்தான் செய்யப்படுகிறது.
அங்கு தனியார் ஆயுதத் தொழிற்சாலைகள்,ஆயுத வியாபாரிகள் அதிகம்.
ஆனால் அவைகளின் விற்பனை தளங்கள் அந்நிய நாடுகள்,தீவிரவாதிகள்,கொரில்லாக்கள்தாம்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை தன நாட்டில் உள்ள ஆயுதவியாபாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை.காரணம் அமெரிக்காவுக்கு எக்கசக்க எதிரிகள்.
அதேபோல் இந்தியாவுக்கு எப்போதும் குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தான்,எப்போதாவது எல்லை மீறும் சீனா என்றும் உள்ளே தீவிரவாதிகள்,நக்சல்கள் என  எதிரிகள் .
இப்படிப்பட்ட நிலையில் ராணுவத்தில் தனியார்களை நுழைப்பது,அவர்களிடம் ஆயுதங்கள் வாங்குவது சரியான மனநிலை உள்ளவர்கள் செய்யும் காரியமா?
தனியாராகில் தங்கள் லாபத்தை அதிகரிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் .அவர்களுடன் கொஞ்சி குலஸ்வும் மோடிக்கு தெரியாததல்ல.
குட்டி நாடும்,அமெரிக்காவிற்கு கொடுங்கனவாகவும் உள்ள வட கொரியாவே தனது நாட்டில் விதவிதமாக ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கு வேடிக்கை காட்டி வயிற்றே ச் சலை கொட்டி வரும் பொது இந்தியா இப்படி செய்வது புத்திசாலித்தனமா ?

மோடி அரசாங்கம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது. 

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதற்கு இந்திய மற்றும் அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன.இது நாட்டின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக "பீப்பிள்ஸ் டெமாக்ரசி" ஏட்டின் தலையங்கத்தில் (மே 28) கூறப்பட் டுள்ள அம்சங்கள் வருமாறு:ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய கொள்கையை பாது காப்பு அமைச்சகம் இறுதிப்படுத்தி இருக் கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள ஆறுநிறுவனங்களை அரசு அடையாளம் கண்டி ருக்கிறது. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபடும்.

தனியாருடன் இணைந்து ஹெலி காப்டர்கள், ஒரு என்ஜின் உள்ள போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயுதந்தாங்கிய கனரக வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க இருக்கிறார்கள்.ஏற்கனவே சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தியில் நுழைந் திருக்கின்றன.

டாட்டா குழுமம், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ் அடாக் (அனில் திருபாய் அம்பானி குழுமம்), மகிந்திரா குழுமம், லார்சன் & டுப்ரோ, பாரத் போர்ஜ், இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் முதலானவை இவ்வாறுநுழைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களி லிருந்து முதல் ஆறு கூட்டாளிகள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.

ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தபோதே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான திட்டம் உருவாகிவிட்டது. தொழில்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே நம்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்ப ட்டிருக்கின்றன.

தற்சமயம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற் சாலைகளால் (ordnance factories) மேற்கொள்ளப்பட்டு வந்தன. 
இவ்வாறு பொதுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த உற்பத்தியில் 60 இலிருந்து 70 சதவீதம் வரைக்குமான உரிமங்களை அரசு ரத்து செய்துவிட்டது. பொதுத்துறையில் உற்பத்தி செய்து வந்த தளவாடங்களில் முதல்கட்டமாக 25 சதவீதத்தைத் தனியாரிடம் தாரைவார்த்திட, அரசு திட்டமிட்டிருக்கிறது.

தனியார்துறையினர் ராணுவத் தள வாடங்கள் உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையொட்டி, அவர்கள் ராணுவம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்கான வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML-Bharat Earth Movers Ltd) என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளில் 26 சதவீதம் முதல் கட்டமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவம் சம்பந்தப்பட்ட மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். 

மிகவும் கேந்திரமான இத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திருப்பதானது, தனியார்துறையில் இயங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்திருக்கிறது.

ராணுவ உற்பத்தித்துறையைத் தனியாரிடம் தாரைவார்ப்பதில் நாட்டின் இறையாண்மைப் பிரச்சனையும் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை, இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துப் பரிவர்த்தனை ஒப்பந்தத்துடன் இணைத்துப் பார்த்திட வேண்டும்.

இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு என்னவிதமான ஆயுதங்கள் தேவை என்பதையும் அந்நிய மற்றும் இந்திய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டளை பிறப்பித்திடும்.ஏற்கனவே, அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ராணுவம் மற்றும் பொறியியல் கம்பெனி குஜராத் மாநிலம், பிபவாவ் என்னுமிடத்தில் உள்ள தன்னுடைய கப்பல்கட்டும் கம்பெனியில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பல்களைப் பழுது பார்த்திடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. 

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

ஆயுத உற்பத்தியில் இந்திய கார்ப்பரேட்டுகள் அமெரிக்க ராணுவத்தின் ஆயுத உற்பத்தி யாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி இருப்பது என்பது மிகவும் கேந்திரமான துறை யான ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தமான கொள்கைகளை வடிவமைப்பதில், இந்தியாவின் இறையாண்மைமீதான ஆக்கிரமிப்பு முத லானவை குறித்து பல்வேறு சங்கடத்திற்குரிய கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

ஆயுத உற்பத்தியில் பெரிய கார்ப்பரேட்டு கள் நுழைந்திருப்பதானது, இந்தியாவில் ‘ராணுவ தொழில் வளாகம்’ (military industrial complex)) அமைப்பதற்கான அடித்தளளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுத உற்பத்தியில் கார்ப்பரேட்டுகள் அதிகரித்துக்கொண்டி ருப்பது, இந்தியாவின் ராணுவ ரீதியான ராஜதந்திர மற்றும் அயல்துறைக் கொள்கையிலேயே கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.

அமெரிக்காவில், ராணுவ உற்பத்தியில் பெரும் ஆயுத உற்பத்தியாளர்கள் ஈடுபட்டி ருப்பது அந்நாட்டின் ராணுவமயத்திற்கு ஒருதூண்டுவிசையாக இருக்கிறது என்பதைநாம் அனுபவபூர்வமாக பார்த்துக்கொண்டி ருக்கிறோம். அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும். 

இங்கேயும் பிராந்தியவெறியை அதிகப்படுத்தி, ஆயுத மோதல்களை உருவாக்குவதற்கான வேலை களில் தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இறங்குவதற்கான சூழலை ஏற்படுத்திடும்.இவை நம்முடைய மிகவும் முக்கியமான முன்னுரிமைகளான நாட்டின் வளர்ச்சி மற்றும்சமூகநலம் ஆகியவற்றையே ஆபத்திற்குள்ளாக் கிடும், சீர்குலைத்திடும். 

ராணுவ உற்பத்தியில் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும். 

அதற்குப் பதிலாக பொதுத்துறையில் தற்போது நடை பெற்றுவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை விரிவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும். 

இதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.

திங்கள், 29 மே, 2017

ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு


ரஜினிக்கு,
ரஜினி ரசிகன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் துரை எழுதுவது
தங்களோடு நேரில் பேசிப் பழகியவன் என்ற முறையில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன்! வீட்டில், படப்பிடிப்பில் விழாக்களில், எப்போதுமே தாங்கள் பதற்றம் நிறைந்தவராகவே காணப்பட்டீர்கள்.
கொடி பறக்குது, படப்பிடிப்பின் போது வெள்ளை பேண்ட்டில் இருந்து, காக்கி பேண்ட்டிற்கு மாறியபடி என்னிடத்தில் பேசினீர்கள்.  அந்த எளிமை எனக்கு பிடித்திருந்தது.
"ரஜினி ரசிகன்" பத்திரிகை ஆசிரியர் துரை
தங்களது இமேஜை காப்பாற்றி கொள்ளக்கூட பொய் சொல்லத் தெரியாதவர்கள் நீங்கள். என்னை பொறுத்தவரை அடிப்படையிலேயே ‘யூவார் எ டிஸ்டர்ப்டு சைல்டு’ எப்போதுமே பதற்றம் நிறைந்தது. தங்கள் நடவடிக்கை என்பது எனது பார்வை.
தவிர்க்கவே முடியாமல் எம்.ஜி.ஆரை குறித்து சில விஷயங்களை பேசியாக வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே வறுமை, பசி, பட்டினியை அறிந்தவர் கஷ்டமறிந்து பலருக்கு உதவியவர்.
தனது 20 வயதிற்குள்ளாகவே அரசியல் குறித்து அவருக்கு ஒரு கனவு இருந்தது. அதற்காக திட்டமிட்டு கட்சியில் இணைந்தார். தனது படங்களில் வசனங்களில் பாடல்களில் கட்சி கொள்கையை பரப்பினார்
அவரது படங்களில் அவரது பெயரே கூட உதயசூரியன், கதிரவன் இப்படி இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.
5 ரூபாயிலிருந்து வசூலிக்க கூட்டங்களில் பங்கேற்றார். தலைவர்களோடு பேசிப் பழகினார்.
நடித்து சம்பாதித்த பணத்தை உதவி வள்ளல் என்று பெயர் எடுத்தார். கட்சியில் தன் முக்கியத்துவத்தில் எப்போதுமே கவனமாக இருந்தார். அமைச்சரவையை தீர்மானிக்கும் சக்தியாக கூட இருந்தார்.
தி.மு.கவிற்கும் அவரது ரசிகர் பட்டாளம் பலமாக விளங்கியது.
கட்சியில் இருக்கும்போதே சில மாறுபட்ட அதிரடி கருத்துக்களை முன்வைத்து தன் பலத்தை சோதித்து பார்த்தவர், எம்.ஜி.ஆர்
இதையெல்லாம் தாண்டி நாடோடி மன்னன் படத்திலேயே தனது அரசியல் ஆட்சி கருத்துக்களை ஆழமாக மக்கள் மனதில் பதிவு செய்தார்.
பெண்களின் வாக்கு வங்கி எம்.ஜி.ஆரைப் போல சாதகமாக வேறு யாருக்கும் இருந்ததில்லை
கண்ணதாசன், ஜெயகாந்தன் போன்றவர்களின் தொடர் பிரச்சாரத்தால் கூட இதைக் கலைக்க முடியவில்லை.
96ல் உங்களுக்கு இருந்த செல்வாக்கு வேறு; இப்போதைய நிலவரம் வேறு;
திரையுலகில் பாட்ஷா தான் உங்களது உச்சம்.
அதற்கு பின் வந்த படங்கள் எல்லாம் ஊதிபெருக்கி காட்டப்பட்டவையே. இன்றைக்கு
இதற்குள் உங்களுக்கும், உங்கள் ரசிகர்களுக்குமே கால இடைவேளி, வயது எல்லாம் மாறி விட்டது
நீங்கள் கார்ட்டூன் கேரக்டராக மாறி விட்டீர்கள்.
அதன் உச்சபட்சம் தான் கோச்சடையான் படுதோல்வி
ஜெயலலிதாவின் மறு எழுச்சிக்கு பின் உங்களுக்கு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் இடமேயில்லை.
உங்களுக்கு பின் அரசியலில் குதித்த விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்துக்கு உயர்ந்து சரிந்து விட்டார்.
சினிமா வியாபாரத்தில் உங்களது பழைய பிம்பத்தை வைத்து சுமாரான பிசினஸ் இருக்கு. அதை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் அரசியல் தெரிந்து கொள்வது யாரிடம் வைரமுத்து விடம் தானே.
அவரால் தனது சொந்த ஊரில் ஒரு வார்டு கவுன்சிலராகக் கூட முடியாது.
அரசியலில் இரவல் மூளை பயன்படாது.
எம்.ஜி.ஆர். ஒரே நாளிதழை இரண்டு பேரை படிக்கச் சொல்லி கருத்துக் கேட்டு மூன்றாவதாக தனதாக ஒன்றை உருவாக்கி படிக்கப்பட்டவர்
கட்சி தொடங்கி 6 மாதத்தில் இடைத் தேர்தலில் தனது வேட்பாளரை வெற்றி பெறச் செய்தது எம்.ஜி.ஆரின் பலம் மட்டுமல்ல; கருணாநிதிக்கு அப்போதிருந்த அதிகாரமானதை ஆளாவதும் கூட.
இருபத்தி நாலுமணி நேரமும் எல்லோருடனும் இருந்தாலும் எம்.ஜி.ஆர் எப்போது எதைச் செய்வார் என்ன அறிவிப்பார் என்று கூட இருந்தவர்களுக்கு புரியாத புதிராக இருந்தவர், அவர் உண்மையிலேயே லஞ்சம், ஊழலுக்கு  எதிராக 2 ஆண்டு ஆண்டார்.
அந்த ஆட்சி கவிழ்ந்த பின் பணமில்லாமல் அரசியல் பண்ண முடியாது என்று அவர் சரிந்தது தான் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, இத்தனை பொறியியல் கல்லூரி
இதையெல்லாம் தாண்டி, அவரிடம் ஏழை மக்களிடம் தணியாத அக்கரையும், கனிவும் இருந்ததை பல சாட்சிகளோடு சொல்ல முடியும்.
உங்களது 67 வயது வாழ்க்கையில் அதற்கான சிறு வெளிப்பாடு கூட பார்த்ததோ, கேட்டதோ இல்லை
அமிதாப் பச்சன் போல வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடியுங்கள்; சம்பாதியுங்கள்; சந்தோஷமாக இருங்கள்.
அரசியலுக்கு அடிப்படை தேவை, பொறுமை அது உங்களிடம் எப்போதுமே இருந்தது கிடையாது. இதுவரை பொறுமையாகத் தானே இருந்தார் என்று சொல்லலாம். இதுவரை அவரிடம் இருந்தது பயம். பொறுமையல்ல. ஜெயலலிதா இல்லை. சசிகலா, தினகரன் சிறையில், இரட்டை இலை முடக்கப்பட்டு விட்டது. அதிமுக இரு அணிகளாக உள்ளது. இதுதான் தருணம் என்று பயம் கலைந்து இருக்கிறார் என்பதே உண்மை.
உங்கள் பெயரையே ஒரு தாளில் நூறு முறை எழுதச் சொன்னால் அந்த தாளை கிழித்து எறிந்து விடக் கூடியவர், நீங்கள்.
பாபா பட வெளியீட்டிலேயே ஸ்டிக்கர், டிசர்ட், கீ செய்ன் விற்பனையில் ஈடுபட்ட உங்கள் மனைவியை தட்டிக் கேட்க முடியாதவர் நீங்கள்.
ஐ.நா. சபையிலே உங்கள் மகளை பரத நாட்டியம் ஆட வைத்தீர்களே! அது  ஒன்று போதும் தமிழர்களுக்கலைக்கும் நீங்கள் செய்த புண்ணியம்.
தெரிஞ்ச தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான். இது பஞ்ச் டயலாக் அல்ல; தமிழர்களின் முதுமொழி.
பச்சைத் தமிழன்னு அறிவிச்சச மேடையிலேயே தமிழர்கள் ஏன் இவ்வளவு கீழ் தரமாக இருக்கிறாங்கண்ணு பேசினீங்க
அதே வார்த்தையை உண்மையான தமிழர்களோ அல்லது  சீமானோ, பாரதிராஜாவோ, சரத்குமாரோ, கமல்ஹாசனோ வாக இருந்தால் நம்மாளுங்க ஏன் இப்படி கீழ் தரமாக இருந்தாங்கன்னு பேசியிருப்பாங்க
உங்கள் உள்ளத்தில் உள்ளதே உதட்டில் வந்தது.
இதுவரை உங்கள் நண்பர் கமல்ஹாசன் அவ்வப்போது எதிர்ப்புகளை கண்டு அசராமல் கருத்துக்களை அரசியலில் தெரிவிப்பதுபோல் நீங்கள் இதுவரை ஒரு முறைகூட சொன்னதில்லை.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிட்டு ,அவர் மீண்டும் ஆட்ச்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா தைரிய லட்சுமி,அதிர்ஷ்டலட்சுமி என்று பல்டி அடித்ததை மக்கள் பார்க்கத்தான் செய்தார்கள்.
காவிரி பிரசனையில் ஒட்டுமொத்த தமிழகமும் கர்நாடகாவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கையில் நீங்கள் அதில் கலந்து கொள்ளாமல் மக்கள் அசிங்கமாக திட்ட ஆரம்பித்தால் தனியாக உண்ணாவிரத நாடகம் நடத்தினீர்கள்.அதிலேயே உங்கள் கன்னடராகத்தான் இங்கு வாழ்கிறீர்கள் என்பது வெட்ட வெளிச்ச்சமாகி விட்டது,
காவிரி பிரச்னைக்கு ஒரு கோடி ரூபாய தருவதாக அறிவித்து கோடி நாட்களாகியும் உங்கள் கோடி என்னவாயிற்று என்பது உங்களுக்கே வெளிச்சம்.
எதிர்ப்பு மூலதனம் என்று ஆயிரம் பேர் முன்னால பேசி கைதட்டல் வாங்கலாம். நடைமுறைக்கு சாத்தியமல்ல.
எம்.ஜி.ஆர். உயிருக்கு குறி வைக்கப் பட்டது, அதையும் மீறி அவர் ஜெயித்தார்.
காலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும். நல்ல ஆசிரமம் அமைச்சு கடைசி காலத்துலேயாவது தான தர்மம் பண்ணுங்க
போகிற வழிக்கு புண்ணியம் சேரும்.
போங்க ரஜினி போங்க பேரன் பேத்திகளோட விளையாடி சந்தோஷமா இருக்குற உங்க ரசிகர்களை நிம்மதியா வாழ விடுங்க
ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு நினைச்சி குதிச்சிராதீங்க!
அன்புடன்,
துரை,
ஊடகவியலாளன்.நகங்கள் காட்டும் நோய்கள்

உங்கள் நகங்களில் ஏற்படும் நிறங்களை , மாற்றங்களை கொண்டு, உங்கள் உடல் நலத்தை உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.நோய் பாதிப்பு ஏற்பட்ட உடற்பகுதிகளை கண்டு கொள்ளலாம்.

நகங்களை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது,அவசியமம் கூட . 
உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள்தான் நமக்கு  நகமாக வளர்கின்றன. 
அதாவது உடலில் தேவையற்று வெளியேற்றப்படும் கெரட்டின் எனும் கழிவு தான், நகமாக வளர்கிறது.

நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.

இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நகத்தின்  செல்கள் வளர மூலமாக இருக்கிறது .

மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.

ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.

இது நாம்  சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.

நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. 
எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் நம் உடலின் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. 
நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் கண்ணாடி  போல செயல்படுகின்றன.நகங்களை கண்காணிப்பதன் மூலம் நம் உடலை பாதுகாக்கலாம்.அதற்கான எச்சரிக்கையைத்தான் நகங்களின் நிறங்கள்,கரடு முரடான பரப்புகள்  நமக்கு அறிவிக்கிறது.

நகங்கள் விரல்கள் முனைகளுக்கு பாதுகாப்புக்காக மட்டும்தான் என்று எண்ணுவது முற்றிலும் தவறு.
விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.


  நகங்கள் காட்டும் நோய்கள் பற்றிய சில விபரங்கள்.

பொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். 

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். 

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.

நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். 

இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.

சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்களாக காணப்படும்.

மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். 

நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.

நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. 
இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். 
நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.

பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். 
இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகிறது.

இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி -12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
==============================================================================================
ன்று,
மே-29.
 • உலக தம்பதியர் தினம்
 • உலக  அமைதி தினம்
 • ஆஸ்திரிய-ஹங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)
 • இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)
 • நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)
===============================================================================================
பெருகும்  இருசக்கர வாகனங்கள்.
தமிழகத்தில் இருசக்கர வாகனங்கள்  எண்ணிக்கை, இரண்டு கோடியை கடந்துள்ளது.தமிழகத்தில், 1993ல், 13.91 லட்சம் இருசக்கர வாகனங்கள் இருந்தன. 1997 முதல், அதன் விற்பனை வேகம் எடுத்தது. அந்தாண்டு மார்ச் முடிவில்    இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 24.54 லட்சத்தை எட்டியது. 1998 மார்ச்சில், 28.16 லட்சமாக உயர்ந்தது.
கடனுதவி அளிப்பவர்கள் அதிகரித்ததாலும், வாகன தயாரிப்பு நிறுவனங்களே, கடனுதவி அளித்ததாலும் இருசக்கர வாகனங்கள்  வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தபடி இருந்தது. அதன் மொத்த எண்ணிக்கை, 2003ல், 50 லட்சத்தை கடந்தது.
கடந்த, 2010ம் ஆண்டின் இடைப்பட்ட காலத் தில், தமிழகத்தில், அவற்றின் எண்ணிக்கை, முதல் முறையாக, ஒரு கோடியை கடந்தது. 
அதற்கடுத்த ஏழு ஆண்டுகளில்    இருசக்கர வாகனங்கள்எண்ணிக்கை, இரு மடங்காக அதிகரித்துள்ளது. 

2016 மார்ச் முடிவில், 1.84 கோடியாக இருந்த   இருசக்கர வாகனங்கள்எண்ணிக்கை, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இரண்டு கோடியாக, அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

தமிழகத்தில், மக்கள் தொகைக்கேற்ப, போதுமான அளவில் பஸ்கள் இயக்கப்படாததே 
 இருசக்கர வாகனங்கள் அசுர வளர்ச்சிக்கு காரணம் என, சமூகஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த நிதியாண்டில், 18 லட்சம் புதிய வாகனங்கள், தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், வாகனங்களின் மொத்த எண்ணிக்கை, 2.38 கோடியாக அதிகரித்துள்ளது. 2016 ஏப்., 1ல், தமிழ கத்தில், 2.20 கோடி வாகனங்கள் பதிவாகியிருந்தன. 

அதில்   
 இருசக்கர வாகனங்கள் எண்ணிக்கை, 1.85 கோடி. அவற் றில், மோட்டார் சைக்கிள், 1.09 கோடி; ஸ்கூட்டர், 25 லட்சம்; மொபட், 50.14 லட்சம்.மேலும், மொத்த வாகனங்களின் எண்ணிக்கையில், பஸ், வேன், லாரி உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள், 12.13 லட்சமாக இருந்தன. அதேநேரத்தில் இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ, ஜீப்போன்ற வாகனங்களின் எண்ணிக்கை, 2.08 கோடியாக இருந்தது.

சென்னை நகரில், மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, மார்ச் மாதத்தில், 50 லட்சத்தை, முதல் முறையாக கடந்துள்ளது. சென்னை யில், தற்போது, 50.73 லட்சம் வாகனங்கள் இயங்குகின்றன. அதில்   இருசக்கர வாகனங்கள் எண் ணிக்கை மட்டும், 80 சதவீதம். அவற்றின் எண் ணிக்கை, ஏப்., மாதம், 40 லட்சத்தை கடந்துள் ளது.சென்னையில், 2016 ஏப்., 1ல், 37.41 லட்சம்   இருசக்கர வாகனங்கள் உட்பட, 47.58 லட்சம் வாகனங்கள் இருந்தன. ஒரே ஆண்டில், 2.45 லட்சம் வாகனங் கள் அதிகரித்துள்ளன.ஞாயிறு, 28 மே, 2017

கலைஞரை வாழ்த்தும் கலைஞன்.


இன்னும் 700 நாட்கள் அபாயம்?

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 3 வருடங்கள் முடிந்துவிட்டன. 

ஆயிரம் நாட்கள் கடந்து விட்டது.
நாட்களை சொல்வதற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது. 

அமெரிக்க குடிமக்கள் ஒரு ஜனாதிபதியைத் தேர்ந்தெடுத்து விட்டு, 70 நாட்களே முடிந்த நிலையில் இவருடைய பதவிக்காலம் சீக்கிரம் முடிய வேண்டுமே என்றுகையைப் பிசைந்து கொண்டிருப்பதைப் போலவே இந்திய மக்களும் இருக்கிறார்கள். 

இதேபோன்ற பேச்சுக்களை பிரதமர் வேட்பாளராக இருந்த போதே நரேந்திர மோடி பேசினார். 

"அலெக்சாண்டர் கங்கை நதிக்கரையில் தோற்கடிக்கப்பட்டார். 

திருச்சியிலிருந்து வஉசி வேதாரண்யத்திற்கு உப்பு காய்ச்ச சென்றார். 

பெண்களை அதிகாரப்படுத்துவதில் குஜராத் முன்னணியில் இருக்கிறது. 
சியாமா பிரசாத் முகர்ஜியின் அஸ்தியை நான்தான் எடுத்து வந்தேன்.

பட்டேலின் இறுதி நிகழ்ச்சியில் ஜவஹர்லால் நேரு கலந்து கொள்ளவில்லை" என்றெல்லாம் தப்பும் தவறுமாக எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக, பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். 

இந்திய இடதுசாரிகளும், அறிவுசார் சமூகமும் நரேந்திரமோடி இந்திய அரசியலில் மிகப்பெரிய பேரழிவை உருவாக்கக்கூடும் என்றே எச்சரித்தார்கள். ஆயினும் கூட, முந்தைய ஐக்கிய முற்போக்குகூட்டணி அரசு மீதிருந்த கோபம், நரேந்திர மோடியின் வாக்கு சாதுர்யம், இந்திய பெருமுதலாளிகளின் அரவணைப்பு, கார்ப்பரேட் ஊடகங்களின் ஜால்ரா சத்தம், ஆர்எஸ்எஸ் என்கிற பாஜகவின் தாய் அமைப்பின் தந்திரங்கள், இவை அனைத்துமாக நரேந்திர மோடியை ஆட்சிக்கட்டிலில் ஏற்றி விட்டன. 

தேர்தல் ஆரம்பித்த பிறகு, ஒருவாரம் கழித்துதான் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
அதுமட்டுமன்றி, பிரச்சார பொதுக்கூட்டங்களிலும் தேர்தல் அறிக்கையிலும் பாரதிய ஜனதா கட்சி பலவாக்குறுதிகளை அள்ளி வீசியது. அமைதியும்,நிம்மதியும், வளமும் இந்திய நாட்டில் கோலோச்சும் என்பது போலவும், எல்லோரும் எல்லாமும் பெற்ற நாடாக மாறி விடும் என்பதுபோலவும், அவர் வெற்றி பெற்று விட்டால் அண்டை நாடுகள் எல்லாம் இந்தியாவை கண்டு அஞ்சி நடக்கும் என்றும் உலக நாடுகளே கூட நரேந்திர மோடி மகுடாபிசேகம் செய்து கொள்ள இருப்பதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது போலவும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன.

சொல்வார் செய்யமாட்டார்

வெளிநாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டெடுத்து ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் கொடுப்பதாக சொன்னார். லோக் பால் சட்டத்தை கொண்டு வந்து இந்தியாவில் ஊழலை ஒழித்து விடப்போவதாக சபதம் செய்தார். விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவேன், அதன் மூலம் தற்கொலைகளை தடுத்து நிறுத்தி விடுவேன்என்று தம்பட்டம் அடித்தார். 

அனைவருக்குமான பொதுவிநியோக முறையை அமல்படுத்துவேன், சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலை தானாக குறையும்வகையில் விலை நிர்ணயத்தை அரசு கைவிடுகிறது . இதன் மூலம் விலை குறைப்புஏற்படும் போதெல்லாம் பெட்ரோலியப்பொருட்களை பயன்படுத்துவோர் பயன் பெறுவார்கள்.

குறைந்த அரசாங்கம் கூடுதலானசேவை, பொதுத்துறைகளை வலுப்படுத்துவோம், ஆதார் அவசியமற்றது, அட்டூழியமானது, தாவுத் இப்ராஹிமை புறங்கையை கட்டிஇழுத்து வரமுடியாதா? நீதிபதிகளின் பணிஇடங்கள் காலியாக இருப்பதை நாங்கள் வந்தால் நிரப்பி விடுவோம் என்றெல்லாம் அவர்ஆவேசமாக பேசினார். 
ஆனால், 3 ஆண்டுகள்கழித்து விட்டபிறகு, இவையெல்லாம் யாரோ கொடுத்த வாக்குறுதி போலவும், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போலவும் ஊர் சுற்றி திரிகிறார்.

நரேந்திர மோடி வாக்குகளைப் பெறுவதற்காக பேசி விட்டு, இப்போது பம்மித்திரியும் அவரது உத்தரவாதங்கள். கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை என்பது திருக்குறள். ஒரு சொல் திறம்பினாலே கற்பு கெட்டவன் என்கிறது இந்த மூத்தோர் சொல். 

சொன்ன சொல் ஒவ்வொன்றையும் காப்பாற்ற முயற்சி எடுக்காத அல்லது கண்டு கொள்ளாத மோடிக்கு இந்த தமிழ் வார்த்தைக்கு சொந்தக்காரர்கள் என்ன பெயர் வைப்பார்கள் என்று தெரியவில்லை.

பொய் விதைத்து துயரம் அறுவடை செய்பவர்

தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் பலரோடு டீ குடித்துக் கொண்டு அலைந்தார். அதில் முக்கியமான ஒன்று விவசாயம் பொய்த்ததால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரோடு இவர் குடித்த டீ. விதவைப்பெண்களையும், தந்தையை இழந்து எதிர்காலம் என்னவென்று புரியாத கலங்கிநின்ற குழந்தைகளையும் வைத்துக் கொண்டுதான் வந்தால் விவசாயத்தை மீட்டு எடுத்துவிடுவேன் என்று கூறினார்.

அவர்கள் கட்சியின்தேர்தல் அறிக்கை விவசாயத்தை மீட்டெடுக்க விவசாயிகளுக்கு வாழ்வளிக்க 3 முக்கியமான வாக்குறுதிகளை எழுத்துப்பூர்வமாக அளித்திருக்கிறது. ஒன்று, விளைபொருளுக்கு உற்பத்திசெலவைப்போல ஒன்றரை மடங்கு விலைகொடுப்போம். இரண்டாவது அனைத்து இடுபொருட்களும் (விதை, களைக்கொல்லி , பூச்சிக்கொல்லி உள்ளிட்ட) குறைந்த விலையில் தரப்படும். 

மூன்றாவதாக, விவசாயத்திற்குஅரசு நிதி ஒதுக்கீடு மற்றும் பொதுச்செலவினங்கள் அதிகரிக்கப்படும் என்றது.

இந்த மூன்றில் எதையேனும் முயற்சித்தாரா? 
முயற்சித்து முடியாமல் போனதால் கைவிட்டு விட்டாரா? 
இல்லை. 
மாறாக, இது எதையும் அவர் அமல்படுத்த முனையவில்லை. 2015ஆம்ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு வருகிறது. வழக்கைத் தொடர்ந்தவர் விளைபொருளுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவதாக சொன்னீர்களே இன்னும் தரவில்லையே அதை தர வேண்டும்என்று உச்சநீதிமன்றம் மூலமாக முறையிடுகிறார்.

பாஜகவின் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் ஒன்றரை மடங்கு விலை சாத்தியமேயில்லை என்று சாதித்தது. இத்தனைக்கும் அதை அமல்படுத்தி அது சாத்தியமற்று போனது என்று சொல்லி இருந்தால் கூடபிரச்சனையில்லை. இதன் பொருள் என்னவெனில், அது சும்மா தேர்தலுக்காக சொன்னது, அதையெல்லாம் தூக்கிக் கொண்டு நீதிமன்றம் வரலாமா என்ற எகத்தாளம்தான் அதற்குள் இருந்தது.

வேலையற்ற வேலை

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் 10ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி தான் இருந்தது என்று குறிப்பிட்டு இந்தக்காலத்தில் ஏற்பட்ட வேலைஇழப்பையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் காலத்தில் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்குவேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று பேசினார்கள். வேலை வாய்ப்புக்கு காத்திருந்த இளைஞர்கள் வேலைக்காக ஏங்கி வந்த பட்டதாரிகள் மத்தியில் இந்த வார்த்தை ஒரு மந்திரம் போல பற்றிக் கொண்டது. 

தாங்கள் சந்திக்கிற பிரச்சனைகள் , அவமானங்கள் இவற்றிலிருந்து வெளியேற இத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் அது தங்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக அமையும் என்றுநினைத்தார்கள்.
ஆனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஆயிரம் நாட்களை கடந்துவிட்ட பிறகு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என்பது பற்றி எந்த வார்த்தையும் பேசவில்லை. அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. 2016ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒட்டு மொத்த வேலை வாய்ப்பு வெறும் 2,31,000,இது இந்தியா முழுவதற்குமான கணக்கு, கடந்தஆண்டும் கிட்டத்தட்ட இதே நிலைதான். 

அதற்கு முந்தைய ஆண்டு இதே நிலைதான் என்றாலும், அதற்கு மோடியை குறைசொல்லிவிட முடியாது. 
2 கோடி எங்கே, 2 லட்சம்எங்கே? 
2009ஆம் ஆண்டு 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருந்தன. 
இவர் வேலையை உருவாக்குவோம் என்றார், இப்போது வேலையற்றவர்களை உருவாக்கி கொண்டிருக்கிறார்.

கட்டெறும்பு வளர்ந்து கழுதையான கதை

பாஜக தேர்தல் அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்ட ஒரு அம்சம் குறைந்த அரசுநிறைவான சேவை, ஆரம்பத்தில் அவர்கள் பதவி ஏற்றபோது மொத்தம் 45 அமைச்சர்கள் மட்டுமேஇருந்தார்கள். 

பத்திரிகைகளும், பாஜகவினரும் ஆஹா, எங்கள் பிரதமர் அரிச்சந்திரர் சொன்னதுபோல செய்து விட்டார், வெறும் 45 பேர்தான் அமைச்சர்கள் என்றெல்லாம் கொண்டாடித் திரிந்தார்கள். கொஞ்சம் காலம் ஆனது. இப்போது மத்திய அமைச்சர்கள் எண்ணிக்கை 78. அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம். சமீப காலத்தில் ஐக்கியமுற்போக்குகூட்டணி அரசாங்கம் இதேஎண்ணிக்கையில் மைச்சர்களை வைத்திருந்தார்கள். 

அதற்கடுத்து இதுதான் பெரிய மந்திரி சபை. இவர்களின் குறைவான அரசாங்கம் என்பதன் லட்சணம் இதுதான்.

பொதுவிநியோக முறை
உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ஆம் ஆண்டு அமலுக்கு வந்து விட்டது. 2014ஆம் ஆண்டு தேர்தல் சில கட்டங்கள் நடந்துவிட்ட பிறகுதான் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல்அறிக்கையில் அனைவருக்குமான பொதுவிநியோக திட்டம்தான் தங்கள் கொள்கை என்றது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சிறப்பான பொதுவிநியோக திட்டங்கள் நடந்த கேரளா, தமிழ்நாடு அரசாங்கங்களை நிர்ப்பந்தித்து உணவு பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டுமென்று ஏற்றுக் கொள்ள வைத்துவிட்டார்கள். 

தமிழகத்தில்50 சதவீதத்திற்கும் மேல் ரேசன் பொருட்கள் கிடையாது என்று அறிவித்து விட்டார்கள். இந்த அரசு ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் பொதுவிநியோக முறையில் அதை மேம்படுத்த எடுத்த ஏதாவது ஒரு நடவடிக்கையை கூற முடியுமா?

எல்லைப் பாதுகாப்பு

மோடிக்கு 56 அங்குலம் மார்பு, அந்நியதேசமெல்லாம் பயந்து போகும். இந்தியாவின் மீது கைவைக்க எவனுக்கும் துணிவிருக்காது என்றெல்லாம் பேசினார்கள். ஏதோ அடியாட்கள்தான் உலகத்திலேயே சிறந்த ஆட்சியாளர்கள் என பொதுபுத்தியை கட்டமைத்தார்கள். 

இந்தியாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 3 முறை ஓராண்டுகாலத்திற்குள் ராணுவத்தளங்களின் மீது தாக்குதல் நடத்தியது இப்போதுதான் என்பதைஅவர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பதான்கோட்டில் 7 பேர், உரியில் 17 பேர், நக்ரோட்டாவில் 7 பேர் என 31 பேர் 3ராணுவ தளத்தில் நடைபெற்ற தாக்குதல்களில் மட்டும் கொல்லப்பட்டவர்கள். இது தவிர்த்து எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதும் 8 வருட காலத்தில் 2016இல் தான் மிக அதிகம்.82 பேர் கொல்லப்பட்டார்கள்.
வெட்டிப்பேச்சும்வெற்றுக்கூச்சலும் வெற்றிகளைத் தந்துவிடாதுஎன்பதற்கான உதாரணம் மோடி அரசு.உள்நாட்டிற்குள் ஏதேனும் ஒருபிரச்சனைஎன்று எவரேனும் சொல்ல ஆரம்பித்தால் எல்லையில் ராணுவம் இக்கட்டான நிலையில்இருக்கிறது அவர்கள்எல்லாம் எவ்வளவு சிரமத்தில் இருக்கிறார்கள்என்று கதைப்பார்கள்.

ஆனால், எல்லையிலிருந்த ராணுவ வீரரொருவர்தங்களுக்கு சாப்பாடு என்ற பெயரில் திரவம் தருவார்கள். அடியிலிருந்து அள்ளினால் அதுகூட்டு, கலக்கிவிட்டு அள்ளினால் அது சாம்பார்,தெளிய வைத்து ஊற்றிக்கொண்டால் அது ரசம்என்று சொல்லி இருந்ததை பார்த்ததும் இவர்கள்பொங்கி எழுந்தார்கள். ஏதோ சரி செய்யப்போகிறார்கள் என்று நினைத்தால் அப்படி சொன்னவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
குடிநீருக்கும் ஆபத்து

இவர்கள் எந்தஅளவு மக்கள் விரோதிகள் என்பதற்கு தேசிய நீர்க்கொள்கை சட்டமுன்வரைவு 2016 ஒரு நல்ல உதாரணம். இனிமேல் தண்ணீர் பொதுப்பண்டமல்லவாம், அது வியாபாரப்பண்டமாம். குடிநீர் கூட வறுமைக்கோட்டிற்கு கீழிருந்து உயர் பணக்காரர்கள், நடுத்தர வகுப்பினர் என்று வகை வைத்துதான் தருவார்கள்.
 ஒவ்வொருவருக்கும் ஒருவிலை. கொடுக்கப்படும் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான செலவையும், அதாவது கொடுக்கப்பட்ட நல்ல தண்ணீரை நாம் பயன்படுத்திய பிறகு அதை,சுத்திகரிப்பதற்கான செலவையும் சேர்த்து வாங்கிக் கொள்வார்கள். இப்படித்தான் இருக்கிறது இவர்களின் நீர்க்கொள்கை.

எதைத்தான் விட்டு வைத்தார்கள்?

ஆதாரை ஆபத்து என்றவர்கள் இப்போதுகட்டாயமாக்கி நிர்ப்பந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக தமிழகத்தில் மட்டும்13 லட்சம் ரேசன் கார்டுகளுக்கு பொருள் வழங்குவது நிறுத்தப்பட்டு விட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இங்கும் குறையும் என்று பேசினார்கள். 

ஆனால்விலை குறைந்த போதெல்லாம் கலால் வரியைஉயர்த்தி பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை 2 மடங்குக்கு அதிகமாக்கி விட்டார்கள்.கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பொதுமக்களுக்கு விலைகுறையாத ஒருவிநோதவித்தையை இவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேரடி மானியம் கொடுத்தால் இன்னும் விலைகுறையும், ஏழைகளுக்கெல்லாம் நிறைய கிடைக்கப் போகிறது என்று பேசினார்கள். 

இதோ, அவர்கள் ஆட்சிக்கு வந்து 3ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், ஆட்சிக்குவந்தபோது 399 ரூபாயாக இருந்த சமையல்எரிவாயு சிலிண்டர் விலை ஏறத்தாழ இரட்டிப்பாக 785 ரூபாயாக மாறி விட்டது. ஆனால்,ஏழை, எளிய மக்கள் பெற்றுக்கொண்டிருக்கும் மானியம் மட்டும் 141 ரூபாயில் நிலை பெற்றிருக்கிறது.

அடுத்து சொன்னார்கள்-வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அதை திருப்பிகட்டாமல் இருக்கும் தொகை பெருத்துக் கிடக்கிறது. நாங்கள் வந்தால் அதை குறைத்து விடுவோம் என்று பேசினார்கள். குறைக்காதது மட்டுமல்ல, மாறாக, பெரு முதலாளிகளான கடன்காரர்களிடமிருந்து வசூலிக்கும் தொகை குறைந்திருக்கிறது. 

2014 மார்ச் கணக்கின்படி இந்தத்தொகை 1,73,800 கோடி. 
அந்த ஆண்டு 32,000 கோடி ரூபாய் மீண்டும் பெறப்பட்டது.
இது 18.4சதவிகிதம். 
2016ஆம் ஆண்டு ஆட்சி இத்தகைய வராக்கடன் 2,21,400 கோடி. 
இதில் 22,800 கோடி மட்டுமேவந்திருக்கிறது.
 இது 10.3 சதவிகிதம். இதுதான் இவர்கள் வேகமாக செயல்படும் லட்சணம். 
சு.கனகராஜ் 
இப்படி ஒவ்வொரு துறையிலும் ஏற்கெனவே இருந்ததை விட இந்தியா கீழேபோயிருக்கிறது.

ஆனால், இந்தியா வளர்ந்திருப்பதாக கூலிக்கு ஆள் வைத்து பிரகடனம் செய்கிறார்கள். ஊடகங்களை விலைக்கு வாங்கியும், விளம்பரம் கொடுத்தும் அப்படி பேச வைக்கிறார்கள். இப்படித்தான் இவர்களது முன்னோர் வாஜ்பாய் காலத்தில் இந்தியா ஒளிர்கிறது என்று தம்பட்டம் அடித்தார்கள். 

இருண்டு கொண்டிருந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் தேர்தல் நேரத்தில் அந்த அரசாங்கத்தை ஒழிப்பதுதான் இந்தியாவை ஒளியூட்ட ஒரே வழி என்று முடிவுக்கு வந்தார்கள். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. 

ஆனாலும், 
வேறு வழியில்லை.
இன்னும் 700 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஆனால் மாட்டிறைசிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற தடை மோடியால் தற்போது விதிக்கப்பட்டுள்ளது.இத்தடை இந்தியா முழுக்க அதிர்ச்சியை எழுப்பியுள்ளது.மக்களால் எதிர்க்கப்படுகிறது.
ஆனால் மூன்றாண்டுகளில்  எந்த ஆணியையுமே புடுங்கத மோடியின் ஆர்.எஸ்.எஸ், அரசு தனது உணராண்டு தோல்வியை மறைக்கவே இப்படி ஆணைகளை பிறப்பித்து  மக்களிடம் பதட்டத்தை உருவாக்கி அதேநிலையில் மத வெறியை தூண்டி குளிர்காயவும்,அடுத்த தேர்தலை சந்திக்கவும் தயாராகிவருகிறது.
இது இந்தியாவை குப்புறத்தள்ளி குழி பறிக்கும் வேலை.ஆனால் ஆர்.எஸ்.எஸ்.குழுமத்துக்கு அது அகண்ட பாரதம் அமைக்கும் தனி வழி.

===========================================================================================
ன்று,
மே-28.
 • ஆர்மீனியா குடியரசு தினம்
 • நேபாள குடியரசு தினம்
 • தமிழ் மருத்துவ ஆய்வாளர்  சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)
 • கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)
=============================================================================================