சனி, 31 ஆகஸ்ட், 2019

மந்தநிலை என்பது உண்மையில்லை ..?

  வங்கிகள் இணைத்தால்
 இந்திய பொருளாதாரம் 
உயரும்?
மோடி அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் 5 ரூபாய் பிஸ்கெட் தொடங்கி ஆட்டோ மொபைல் துறை வரை பல தொழில்கள் முற்றிலும் முடங்கி உள்ளது.

லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது.
பொருளாதாரவளர்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் ஜூன் வரையிலான பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதம் ஆக குறைந்துள்ளது.


நாடுமுழுவதும் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்த நிலையில் பல வங்கிகளை இணைத்து இனிமேல் 12 வங்கிகளாக செயல்படும் என அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

இதுமட்டுமின்றி பொதுத்துறை வங்கிகளுக்காக பல்வேறு சீர்திருத்தம் என்ற பெயரில் பல அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகளில் 14 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.
 பாங்க் ஆப் பரோடா, விஜயா பாங்க், தேனா பாங்க் ஆகியவை இணைக்கப்படும்.
 பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
 கனரா வங்கியும், சிண்டிகேட் வங்கியும் இணைக்கப்படும்.
 யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை இணைக்கப்படும்.
 இந்தியன் வங்கியும், அலகாபாத் வங்கியும் இணைக்கப்படும்.
 சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகியவை தனி வங்கிகளாக செயல்படும்
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, யூகோ பாங்க், பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் அண்ட் சிந்த் பாங் ஆகியவை அந்தந்த பகுதிகளில் தொடர்ந்து பணியாற்றும்.
  என கூறினார்.

நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு முடிவு சற்று முன்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, இந்தியாவின் ஜிடிபி 5% ஆகக் குறைந்து பொருளாதார நிபுணர்களையும், பொதுமக்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
சற்று முன்புதான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பைப் பற்றிப் பேசினார்.

பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கித் திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்த சிறிது நேரத்திலேயே இப்படியொரு அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
தனியார் நுகர்வில் ஏற்பட்டிருக்கும் சரிவே இந்த 0.8 சதவிகித ஜிடிபி சரிவுக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.

உற்பத்தித் துறையில் கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் இருந்த 12.1% வளர்ச்சி இந்தக் காலாண்டில் 0.6% ஆக குறைந்து பலத்த அடி வாங்கியுள்ளது.
கட்டுமானத்துறை கடந்த 2018-2019 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 9.6% ஆக இருந்தது தற்போது 5.7% ஆக சரிந்துள்ளது.
விவசாயம், வனங்கள், மீன்பிடித்தல் ஆகிய துறைகளின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் உற்பத்தி கடந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டிலிருந்து 3.1% குறைந்து வெறும் 2% ஆகச் சரிந்துள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2012-2013 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 4.9 ஆக இருந்தது.
அதற்குப் பின்னர் இப்படியொரு சரிவை இப்போதுதான் சந்தித்திருக்கிறது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

பொருளாதார மந்தநிலை என்பது உண்மையில்லை என்று கூறும் நிதியமைச்சர், இந்த ஜி.டி.பி சரிவை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறார் ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பொருளாதார மந்தநிலை ஏன்?..
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது.
" ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) என்பது பொருளாதார வளர்ச்சியின் அளவு கோலாகப் பார்க்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து சரிவைச் சந்திக்கும் பட்சத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலைக்குச் செல்லும்.
உலக அளவில் 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு நிலை, தற்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது.
உலக அளவில் கடந்த வாரம் ஊடகங்களில் வெளியான செய்திகளின் மூலம் இதை அறிய முடிகிறது.

அந்த வகையில், பொருளாதார வளர்ச்சி வேகத்தில் சீனாவுக்கு அடுத்தப்படியாக உள்ள இந்தியாவின் உண்மையான பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மொத்த உள்நாட்டு உற்பத்திஎன்பது தனியார் நுகர்வு, முதலீடுகள், அரசின் செலவினங்கள், நிகர ஏற்றுமதி (ஏற்றுமதி கழித்தல் இறக்குமதி) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
 இவைதான் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது.
இந்த நான்கு உள்ளீடுகளில் ஒவ்வொன்றின் நிலையைப் பற்றி பொருளாதார குறிகாட்டிகள் தெரிவிக்கும் தகவல்கள் நம்மை பிரமிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன.

 இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலகட்டத்தில் பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவுக்கு குறைந்துவிட்டன என்பதை பொருளாதாரக் குறிகாட்டிகள் வெளிப்படுத்துகின்றன. கார்ப்பரேட் போர்டுரூம்கள் மற்றும் கால்சென்டர்கள் முதல் சந்தைகள் வரை அனைவரும் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலையைப் பற்றி பேசுகிறார்கள்.
இந்த ஆண்டு (2019) தொடக்கத்திலிருந்தே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மெச்சும்படியாக இல்லாததே இதற்குக் காரணம். ஜிடிபியை வெளிக்காட்டும் பல்வேறு அளவீடுகளின் பகுப்பாய்வுகளும், பொருளாதார வளர்ச்சி எந்த அளவுக்கு மந்தநிலையில் உள்ளது என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது..!

இந்த ஆண்டு ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. அதேபோல, இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது. நுகர்வு: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு பெரும்பங்கு வகிக்கிறது.
இது இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் 5-இல் மூன்று பங்கு பங்களிப்பைக் கொண்டுள்ளது. நுகர்வில் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்களிடையே நுகர்வு சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 உள்நாட்டு கார்கள் விற்பனை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை, கிராமப்புறங்களின் தேவைப்பாட்டை உணர்த்தும் குறிகாட்டியான டிராக்டர்கள் விற்பனை, வணிக வாகனங்கள் விற்பனை ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டது. நிலைமை இப்படி இருக்கும் போது, எப்படி பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக கூற முடியாதே...!


முதலீடுகள்: மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிப் பாதையில் செல்வதற்கு புதிய முதலீடுகள் மிக முக்கியத் தேவையாகும்.
அப்போதுதான், எந்தவொரு பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதையில் இருக்க முடியும் என்பதுடன், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
 இது அதிக வருமானம் மற்றும் அதிக செலவுகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்குகிறது.
ஆனால், முதலீடுகள் விஷயத்தில் தற்போதைய நிலை நன்றாக இல்லை என்பது துரதிருஷ்டவசமாகும். எனவேதான், இக்குறியீடு, பொருளாதார வளர்ச்சியில் மந்தநிலை உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.


புதிய முதலீட்டுத் திட்டங்கள்: 2019 ஏப்ரல் - ஜூன் காலத்தில் அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு ஒட்டு மொத்தமாக ஆண்டுக்கு 79.5 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இது செப்டம்பர் 2004 முதல் இதுவரை இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

 உண்மையைச் சொல்லப் போனால், 2019, ஏப்ரல் - ஜூன் வரை அறிவிக்கப்பட்ட புதிய முதலீட்டுத் திட்டங்களின் மதிப்பு ரூ.71,337 கோடியாக இருந்தது, இது 2004 செப்டம்பருக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். இது நாட்டில் வர்த்தக நடவடிக்கைகள் வெகுவாகக் குறைந்துள்ளதையே காட்டுகிறது.
எதிர்கால இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை குறைந்துள்ளது என்பதையே இக்குறிகாட்டி சுட்டிக் காட்டுகிறது.

நிறைவடைந்த முதலீட்டுத் திட்டங்கள்: கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிறைவடைந்த முதலீட்டுத் திட்டங்கள் 48 சதவீதம் குறைந்துள்ளது.
இது செப்டம்பர் 2004-க்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச வீழ்ச்சியாகும். முழுமையான வகையில், ஏப்ரல் -ஜூன் காலாண்டில் நிறைவடைந்த திட்டங்களின் மதிப்பு, ரூ.69,494 கோடியாக இருந்தது, இது கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த அளவாகும்.
இது பொருளாதார வளர்ச்சியின் உண்மை நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது எனலாம்.

செலவினங்கள்: இந்திய பொருளாதாரத்தில் செலவினங்கள் பொதுவாக சுமார் 10-11 சதவீதமாக இருக்கும் (பணவீக்க புள்ளிவிவரத்தை ஈடுசெய்யாமல்).
கடந்த இரண்டு நிதியாண்டுகளில், அரசு செலவினங்களின் வளர்ச்சி 19.1% மற்றும் 13.2 சதவீதமாக இருந்தது, இது 2008-09 மற்றும் 2009-10 ஆகிய நிதி நெருக்கடியான ஆண்டுகளில் இருந்ததைவிட மிக அதிகமாகும்.
இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் இது எப்படி இருக்கும்? பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கு, அரசு அதிக செலவு செய்ய வேண்டும். அதற்காக வரி வளர்ச்சியும் முக்கியமானது.
2019 ஏப்ரல் - ஜூனில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் வெறும் 1.4 சதவீதம் அதிகரித்து ரூ. 4 லட்சம் கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில், மொத்த வரி வருவாய் 22.1% அதிகரித்திருந்தது. இது இந்தியப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் மந்தநிலையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
 நிகர ஏற்றுமதி: 2019 ஏப்ரல் - ஜூனில் நாட்டின் நிகர ஏற்றுமதி -46 பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனிலும் இதே நிலையில்தான் இருந்தது.
அதாவது 46.6 பில்லியன் டாலராகும்.

 இந்தக் கால கட்டத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டும் கடந்த ஆண்டைப் போல இருந்ததே இதற்கு முதன்மையான காரணமாகும்.
இதைப் பார்க்கும்போது, ஏற்றுமதியைப் பொருத்தமட்டில் எந்தவிதமான பொருளாதார நடவடிக்கைகளும் இல்லை என்பது தெளிவாகிறது. மொத்தத்தில் பார்த்தால், பொருளாதார குறிகாட்டிகள் அனைத்தும், நாம் பொருளாதார மந்தநிலையில் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. மேலும், இது மோசமடையக்கூடும் என்பதையும் மறைமுகமாக எச்சரிக்கிறது.
இதில் முரண்பாடு என்னவென்றால், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அரசைத் தவிர மற்ற அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.
இது நமக்கு விட்டுச் செல்லும் மிகப் பெரிய கேள்வி என்னவென்றால், ஒரு பிரச்னையை முதலில் ஒப்புக் கொள்ளாமல் அதற்கு எப்படித் தீர்வு காண்பது என்பதுதான்....!
மத்திய அரசு இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது!
அரசுக்கு சிந்தித்து துரிதமாகச் செயல்பட வேண்டிய சவாலான நேரம் இது..!

முடங்கிக் கிடக்கும் 12.80 லட்சம்அடுக்குமாடிக் குடியிருப்புகள்! இந்தியாவில் முன்னிலைப் பட்டியலில் உள்ள தலைநகர் தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை,பெங்களூர் உள்பட 30 பெருநகரங்களில் கடந்த மார்ச் நிலவரப்படி 12.80 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்கப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

 ரியல் எஸ்டேட் ஆராய்ச்சி நிறுவனமான லியாஸ் ஃபோராஸின் ஆய்வுத் தகவல் இதைத் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்சுடன் ஒப்பிடுகையில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை 7% உயர்ந்துள்ளது. 2018, மார்ச் நிலவரப்படி சுமார் 12 லட்சம் வீடுகள் விற்பனையாகாமல் இருந்தன.
கட்டுமானதாரர்கள் வீடுகளை அதிவேகமாகக் கட்டி முடித்துவிடுகின்றனர்.
ஆனால், அதற்கேற்ற வகையில் வாங்குவோர் இல்லை என்பதுதான் தற்போதைய யதார்த்த நிலை. ரியல் எஸ்டேட் துறையானது, சுமார் 250 துணைத் தொழில்களைக் கொண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாகச் செயல்படும்போது, எஃகு மற்றும் சிமெண்ட் முதல் அலங்கார சாதனங்கள், பெயிண்ட் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களும் சிறப்பான வளர்ச்சியைக் காணும்.

ஆனால், இவை தற்போது நடைமுறையில் இல்லாத ஒன்றாகிவிட்டது.
ரியல் எஸ்டேட் விலை பல ஆண்டுகளாக ஏற்றம் பெறாமல் முடங்கிக் கிடக்கிறது.
இதுவும் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாக உள்ளது.
 கடந்த 2003, 2012 ஆகிய ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் வாங்கியிருந்த வீடுகளைத்தான் தற்போது மக்கள் வாங்கி வருவதும், இவை புதிய வீடுகள் அல்ல என்பதுதான் இதற்கான காரணம் என விளக்கம் அளிக்கப்படுகிறது.
 இதை எந்த வகையிலும் பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறவே முடியாது என்கின்றனர் நிபுணர்கள்!

கார்கள் விற்பனை 15 ஆண்டுகளில் கண்டிராத வீழ்ச்சி! 
இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனில் உள்நாட்டு கார்கள் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் சதவீதம் குறைந்துள்ளது.
இது 2004 முதல் இதுவரை (15 ஆண்டுகள்) கண்டிராத மிகப் பெரிய சரிவாகும். மேலும், இந்தியப் பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையத்தின் காலாண்டு தரவு, பொருளாதார பின்னடைவு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உணர வைக்கிறது.
கார் விற்பனையில் ஏற்படும் மந்த நிலையானது, டயர் உற்பத்தியாளர்கள் முதல் எஃகு உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டீயரிங் உற்பத்தியாளர்கள் வரை எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது.
முன்னோக்கிப் பார்த்தால், வாகன விற்பனை மையங்கள் மூடப்படுகின்றன அல்லது மூடப்படும் அபாயத்தில் உள்ளன.
மேலும், வாகனக் கடன் வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
இது கடந்த 5 ஆண்டுகளில் கண்டிராத கடுமையான வீழ்ச்சியாகும். இதன் தாக்கம் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

 இருசக்கர வாகனங்கள் விற்பனை: கார் விற்பனை பாதிக்கப்பட்ட அளவுக்கு இருசக்கர வாகனங்கள் விற்பனையில் பாதிப்பு இல்லை. இருப்பினும், ஏப்ரல் - ஜூன் காலத்தில் இரு சக்கர வாகன விற்பனை 11.7 சதவீதம் குறைந்துள்ளது. இது கடந்த 2018 அக்டோபர் - டிசம்பருக்கு அடுத்து ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியாகும். பொருளாதார மந்தநிலைதான் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மொபெட்டுகளை வாங்குவோரின் எண்ணிக்கைகூட வெகுவாகக் குறைந்துவிட்டது.
இதன் காரணமாக மொபெட் விற்பனை ஏப்ரல் - ஜூனில் 19.9 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. விற்பனை பெருமளவு குறைந்துவிட்டது. 

 டிராக்டர்கள் விற்பனை: நாட்டின் கிராமப்புறத் தேவைப்பாட்டின் அளவை எடுத்துக்காட்டுவது டிராக்டர் விற்பனைதான். கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் டிராக்டர்கள் விற்பனையும் 14.10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் கண்டிராத பெரிய வீழ்ச்சியாகும்.

 உள்நாட்டு வணிக வாகனங்கள் விற்பனை: இது தொழில் துறை நடவடிக்கைகளின் முக்கியப் பொருளாதார குறிகாட்டியாகப் பார்க்கப்படுகிறது. வேகமான விற்பனையானது, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் துறை முன்னேற்றத்தில் ஒரு வலுவான செயல்பாடு உள்ளதைக் குறிக்கிறது.
கடந்த ஏப்ரல் - ஜூன் காலத்தில் வணிக வாகனங்களின் விற்பனை 9.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக குறைந்த அளவாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் வணிக வாகன விற்பனை 51.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.

மக்களிடம் பொருள்கள் வாங்கும் திறன் குறைகிறது! 
எஃப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு, கடந்த ஓராண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டது.
பிரபல எஃப்எம்சிஜி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பொருள்கள் விற்பனை வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் காலத்தில் 5 சதவீதமாக இருந்தது.
 இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 12 சதவீதமாக இருந்தது. இதேபோன்று டாபர், பிரிட்டானியா விற்பனையும் குறைந்துள்ளது. இந்தத் தரவுகள் மக்களின் அன்றாடப் பொருள்கள் வாங்கும் திறன் குறைந்து கொண்டிருப்பதையே காட்டுகிறது.

 எண்ணெய், தங்கம், வெள்ளி அல்லாத இறக்குமதிகள்: இது நுகர்வோர் தேவையை வெளிப்படுத்தும் ஒரு நல்ல குறிகாட்டியாக பார்க்கப்படுகிறது.
 ஏனெனில், மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களை அதிக அளவு வாங்குவதைக் கணக்கிடும் ஓர் அளவீடாக இது உள்ளது.
இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூனில் இறக்குமதி 5.3 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது மூன்று ஆண்டுகளில் இல்லாத மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இது 6.3 சதவீதமாக இருந்தது.
டோல்கேட் வருமானம் எல்லாம் எங்கே?

அதாவது மக்களிடம் இறக்குமதிப் பொருள்கள் பயன்பாடு குறைந்துள்ளதையே இது வெளிப்படுத்துகிறது.

எஃகு நுகர்வு: எந்தவொரு புதிய உள்கட்டமைப்பு வசதியை உருவாக்க வேண்டுமானாலும், உலோகங்களில் முக்கியப் பொருளான எஃகு தேவைப்படுகிறது.
எனவே, முந்தைய காலங்களைவிட எஃகு நுகர்வு அதிகரிக்கும்போது, முதலீட்டு நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றிருப்பதாகக் கருதப்படும். இந்த வகையில், எஃகு நுகர்வு 2019, ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 6.6 சதவீதம்தான் அதிகரித்துள்ளது.
ஆனால், இது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது.  கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது, இது 8.8% வளர்ச்சியைக் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 ரயில் சரக்குப் போக்குவரத்து வருவாய்: இந்திய ரயில்வேயின் சரக்குப் போக்குவரத்தில் பெரும்பகுதி நிலக்கரி, சிமெண்ட், பெட்ரலியம், உரங்கள், இரும்புத் தாது போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சரக்குகளை ரயில்வே அதிக அளவில் கொண்டு செல்வது, முதலீடுகள் அதிகரித்துள்ளதையும், தொழில் துறை நடவடிக்கைகள் உத்வேகம் பெற்றுள்ளதையும் காட்டுவதாக அமையும்.
மேலும், இது பொருளாதார வளர்ச்சியில் நேர்மறை விளைவைத் தரும். நாட்டிற்கும் நல்ல செய்தியாகவும் அமையும்.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலாண்டில் இதன் வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாக மட்டுமே. இது கடந்த இரண்டரை ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்தபட்ச அளவாகும்.

 முரண்படும் புள்ளிவிவரங்கள்!
வங்கி சில்லறைக் கடன்கள் குறித்த ;தரவுகள் தற்போதைய போக்குக்கு எதிர்மறையாக உள்ளது.

 இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் வங்கிகளின் சில்லறை கடன்கள் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் வளர்ச்சி விகிதம் 16.6 சதவீதமாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், இது 17.9 சதவீதமாக இருந்தது.
 வளர்ச்சியில் சிறிய அளவில்தான் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
சில்லறைக் கடன்களில் வீட்டுக் கடன்களின் பங்களிப்பு 50 சதவீத்துக்கும் மேலாக உள்ளது. இந்தக் காலாண்டில் வீட்டுக் கடன்கள் வளர்ச்சி விகிதம் 18.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 15.8 சதவீதமாக இருந்தது.
வீட்டுக் கடன்கள் வளர்ச்சியைக் கண்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், ஏராளமான வீடுகள் விற்கப்படாமல் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இந்தத் தரவுகள் அனைத்தும்,தற்போதைய நிலவரத்துடன் ஒப்பிடும் போது, முரணாக அமைந்துள்ளன.


தொழில் துறைக்கு வங்கிக் கடன்: இந்த முக்கியமான குறிகாட்டியானது, இரண்டு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியையும் காணவில்லை. மாறாக ஏற்றமோ, இறக்கமோ இல்லாமலும் உள்ளது. ஆனால், சமீப காலங்களில் இது மேம்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் இதன் வளர்ச்சி 0.9 சதவீதமாக இருந்தது.
ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில் 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பெரும்பாலும் பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவதன் காரணமாக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு 0.8 சதவீதமாக இருந்த இதன் வளர்ச்சி விகிதம், இப்போது 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிறு, குறுந் தொழில்களைப் பொருத்தமட்டில், கடன் வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டு 0.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.7 சதவீதமாக உள்ளது. இதில் பெரிய அளவில் மாற்றமில்லை.

பெரிய தொழில்களுக்கு கடன் வழங்குவது முக்கியமானதுதான். ஆனால்,எந்தவொரு பொருளாதாரத்திலும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது சிறு, குறுந் தொழில்கள்தான் என்பதை மறந்து விட முடியாது.

 சிறு, குறுந் தொழில் வளர்ச்சியைப் பெறாதபோது, எங்கிருந்து பொருளாதார வளர்ச்சியைக் காணமுடியும் என்பது நிபுணர்களின் கேள்வி?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

(ரிசர்வ்)"பேங்க் ஆப் இந்தியா"?

 ரிசர்வ்ஸ்(பணத்தை)வை கொடுத்ததால் இனி ரிசர்வ் "பேங்க் ஆப் இந்தியா"?
இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வாரியம் 1,76,051 கோடி ரூபாயை அரசுக்கு மாற்ற ஒப்புதல் அளித்தது, இதில் சர்ப்லஸ் அல்லது டிவிடெண்ட் 1,23,414 கோடி ரூபாயும், மற்றும் ஒரு முறை அதிகப்படியான ஒதுக்கீடு என்பதின் கீழ் ரூ .52,637 கோடியும் அடங்கும்.

ரிசர்வ் வங்கி வங்கிகளைப் ஒழுங்குபடுத்தும் பணிகளைச் செய்யும் ஒரு மைய வங்கி என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விசயங்களில் ஒன்றே.
ஆகையால்,  சாதாரண கமர்சியல் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள்  போலன்றி ரிசர்வ் வங்கி  டிவிடெண்ட்  அறிவிக்கும் அமைப்பு அல்ல .

பின், அதன் சர்ப்ளஸை எந்த தர்க்கத்தில் இந்திய அரசிடம்  பரிமாற்றம் செய்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்

மத்திய வங்கியாய் இருக்கும்  ரிசர்வ் வங்கி முதலில் எவ்வாறு லாபம் ஈட்டுகிறது?

ரிசர்வ் வங்கி பல சேவைகளை செய்யும் ஒரு முழுமையான மத்திய வங்கியாகும். இந்திய நாட்டின் பணவீக்கம் அல்லது பண மதிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இந்திய அரசு மற்றும் மாநில அரசாங்கங்களின் கடன்களையும் நிர்வகிக்கிறது.

மேலும், வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்து அவைகளை ஒழுங்குபடுத்துவதும்  செய்கிறது. நாட்டின் நாணயம் மற்றும் பண பரிவர்த்தன முறைகளை நிர்வகிக்கவும் செய்கிறது நமது  ரிசர்வ் வங்கி .
இந்த செயல்பாடுகளையெல்லாம் செய்யும்போது, ரிசர்வ் வங்கி தனக்கான லாபத்தை ஈட்டுகிறது. இயல்பாக,எந்த மத்திய வங்கியாக இருந்தாலும் அதனிடம் உள்ள அந்நிய செலவானி கையிருப்பின் மூலம் தனக்கான வருவாயை ஈட்டுகின்றன. இந்த  வருவாயை இந்திய ரிசர்வ் வங்கி பத்திரங்களாக மற்ற  மத்திய வங்கிகளில் வைப்புத்தொகையாக வைத்திருக்கும்.

ரிசர்வ் வங்கி சந்தையில் விற்கப்படும் ரூபாய் மதிப்பிடப்பட்ட அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்வதனால் வருவாய் அடைகிறது. மேலும், குறுகிய காலத்திற்கு வங்கிகளுக்கு தேவைப்படும் நிதியைக் கடன் கொடுக்கும் பொழுது ஓவர்நைட்  சார்ஜ் செய்கிறது.
இதையும் தாண்டி மத்திய  மற்றும் மாநில அரசுகள் கடன்களை மேலாண்மை செய்வதால் அதற்க்கென்று தனியாக கட்டணங்களையும் வசூலிக்கின்றது.


ரிசர்வ் வங்கியின் செலவீனங்களை பொறுத்தவரையில் இந்திய நாணயத்தாள்களை அச்சிடுவது, தனது ஊழியர்களுக்கு செய்யும் செலவு போன்றவைகளே முதன்மையாக இருக்கின்றது.
இதையும் தாண்டி, அரசாங்கத்தின் சார்பாக பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வங்கிகளுக்கு கொடுக்கப்படும் கமிஷன் தொகையும், இந்த  பரிவர்த்தனைகளால் ஏற்படும் இழப்புகளும் நமது ரிசர்வ் வங்கிக்கு செலவு கணக்கில் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிடெண்ட்  அல்லது இலாபங்களை மாற்றுவது தொடர்பாக அரசாங்கத்திற்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான ஏற்பாட்டின் தன்மை என்ன?
இதில், முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், ரிசர்வ் வங்கி தனது லாபத்தில் இருந்து இந்திய அரசாங்கத்திற்கு  டிவிடெண்ட்  கொடுக்க வில்லை என்பதே ஆகும்.
1935 ஆம் ஆண்டில் இதே  ரிசர்வ் வங்கி  ஒரு தனியார் பங்குதாரர்களின் வங்கியாக உருவாக்கம் செய்திருந்தாலும், 1949 ஜனவரியில்  ரிசர்வ் வங்கியை தேசியமயமாக்கி, தனது இறையாண்மையின் கீழ் கொண்டுவந்தது இந்திய அரசு.

1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) இன் படி, “சர்ப்லஸ் ” –  என்ற  வார்த்தைக்கு “செலவினம் போக மீதமுள்ள வருமானம்” என்று பொருள்கொள்ளப்பட்டு சர்ப்லஸ்  தொகையை இந்திய அரசாங்கத்திற்கு மாற்றுகிறது.

பிரிவு 47 (உபரி இலாபங்களை ஒதுக்கீடு) சொல்லப் பட்டவைகள் பின் வருமாறு:

“மோசமான மற்றும் சந்தேகத்திற்கிடமான கடன்களுக்கான ஏற்பாடுகளைச் செய்தபின், சொத்துக்களின் தேய்மானம், ஊழியர்களுக்கான பங்களிப்பு மற்றும் மேலதிக நிதியம் [மற்றும் பிற எல்லா விஷயங்களுக்கும்] சரி செய்த பின்  மீதமுள்ள , இலாபங்கள் மத்திய அரசுக்கு செலுத்தப்படும். ”
ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியம் ஜூலை-ஜூன் கணக்கியல் ஆண்டு முடிந்ததும் ஆகஸ்ட் தொடக்கத்தில் பிரிவு 47-ல் சொல்லப்பட்டுள்ள  இந்த சர்ப்லசை  ஆண்டு தோறும் பரிமாற்றம் செய்யும்.

இந்த வருவாய் அல்லது இலாபங்களுக்கு ரிசர்வ் வங்கி வரி செலுத்துகிறதா?
இல்லை. ரிசர்வ் வங்கியின் சட்டம், 1934 இன் பிரிவு 48, ரிசர்வ் வங்கிக்கு வருமான வரி மற்றும்  சொத்து வரி உட்பட வேறு எந்த வரியையும் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

சர்ப்ளஸ் விநியோகம் குறித்து வெளிப்படையான கொள்கை உள்ளதா?
தெளிவான வெளிப்படையான கொள்கை இல்லை என்றே சொல்லாம்.  ஆனால்  ஒய்.எச்.மாலேகம்  தலைமையிலான குழு 2013 ல் இருப்புக்களின் போதுமான அளவு மற்றும் உபரி விநியோகக் கொள்கையை மறுஆய்வு செய்த போது, அரசாங்கத்திற்கு அதிக பணபரிமாற்றம் செய்ய வேண்டும் என்று  பரிந்துரை செய்தது.
2013க்கு முன், ரிசர்வ் வங்கி  தனது சர்ப்லஸின் ஒரு பகுதியை தற்செயல் நிதி யாக வைத்திருக்கும்.
இந்த நிதி மூலம்,எதிர்பாராத சூழ்நிலைகளை சந்திப்பதற்காகவும், உள் மூலதனச் செலவுகள் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் முதலீடுகளைச் சந்திப்பதற்காகவும் இயங்கி  வந்தன.

 இந்த தற்செயல் நிதியை தனது மொத்த கணக்கு வழக்கில் பன்னிரண்டு சதவீதமாக ரிசர்வ் வங்கி  நடைமுறைப் படுத்தி வந்தது குறிப்பிடத்தகது
ஆனால் மாலேகம் குழு பரிந்துரைக்குப் பின்னர், 2013-14 ஆம் ஆண்டில், ரிசர்வ் வங்கி உபரி மொத்த வருமானத்தில் 99.99% வரை  அரசாங்கத்திற்கு பரிமாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டன.
 2012-13 ஆம் ஆண்டில் இந்த சர்ப்லஸ் மரிமாற்றம் வெறும்  53.40 சதவீதமாகத் தான் இருந்தன.

இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் வேறுபடுகின்றனவா?
ரிசர்வ் வங்கியின் இருப்புக்கள் அதன் தேவைகளை விட அதிகமாக உள்ளன என்ற கருத்தை இந்திய அரசாங்கம் நீண்ட காலமாக முன் வைக்கத்தான் செய்கின்றன.
 இந்த நிதியை அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கிகளுக்கு மூலதனத்தை வழங்க பயன்படுத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியனும்  பரிந்துரைத்திருந்தார்.

ஆனால், மத்திய வங்கியோ………நிதி அதிர்ச்சிகளிலிருந்து ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை மனதில் வைத்தும், நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து சந்தைகளுக்கு நம்பிக்கையை வழங்க வேண்டியதன் அவசியத்தை உனர்ந்தும் அதன் இருப்புக்களை அரசாங்கத்திற்கு பகிராமல் கட்டமைக்கத் தான் விரும்பின.

மேலும், அதன் பார்வையில், இருப்பு நிலையின் அளவைப் பொறுத்தே ஒரு  மத்திய வங்கியின் சுயாட்சியைப் பேணிக்காக்க முடியும் என்று எண்ணி வந்தது.
எவ்வாறாயினும்,பண பரிமாற்றத்தின் அளவு  மத்திய வங்கியின் அரசாங்கத்துடனான உறவை வரையறுப்பதில் ஒரு முக்கிய காரணியாக இருக்கவில்லை என்பது முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் கருத்தாய் உள்ளது.
 இது பற்றி அவர் தெரிவிக்கையில் “இரு தரப்பினரும் சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டி ஒரு தீர்வு எடுத்துள்ளனர்” என்று  தெரிவித்து உள்ளார்.ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் பண பரிமாறறதுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பதவியிலிருந்து கட்டாயமாக விலகி செல்லவைக்கப்பட்டு பாஜக,ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைக்சேர்ந்த குருமூர்த்தி போன்றவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அது சார்பான சக்திகாந்ததாஸ் ரிசர்வ் வங்கி ஆளுனராக்கப்பட்டுள்ளார்.
இவர் பொருளாதாரத்தை முதனிலைப்படிப்பாக கொண்டவர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இவரது பொருளாதாரக்கொள்கை வலதுசாரித்தனமிக்கது.

உபரி பரிமாற்றத்தை மற்ற மத்திய வங்கிகள் எவ்வாறு நிர்வகிக்கின்றன?
இந்தியாவைப் போலவே, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் அரசாங்கத்துடன் கலந்தாலோசித்த பின்னர் முடிவு செய்கின்றன.
 ஆனால் ஜப்பானில், அரசாங்கமே தீர்மானிக்கிறது.

மிகவும், குறிப்போடு சொல்ல வேண்டும் என்றால், எந்த நாட்டிலும் இந்த பண பரிமாற்றம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவீதத்தை தாண்டாது.ஆனால் தற்போது இந்தியாவில் பணப்பரிமாற்றம் உலகிலேயே அதிக விகிதம் கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
   இஞ்சி சமையலறை மருத்துவர்!
 
1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
3. இஞ்சியை சுட்டு சிறிது உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.
4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.
7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

8. பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.

9. இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.

10. இஞ்சி சாறில், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட நல்ல பசி ஏற்படும்.
11. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட ஜீரணம் ஏற்படும்.
12. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர வயிற்றுப் போக்கு தீரும்.
13. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.
14. இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

15. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
16. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யோசிக்கவில்லை... -

பதவி விலகிய கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்

காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370 நீக்கப்பட்டதன் காரணமாகத்தான் நீங்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தீர்கள் அது குறித்து?

நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இந்த முடிவினை எடுக்கவில்லை.
மிகவும் ஆராய்ந்து தான் இம்முடிவை எடுத்தேன். நான் பார்க்கின்ற வேலையும், செய்கின்ற சேவையும் என்னுடைய எண்ணங்களை வெளிப்படையாக பேசவிடுவதில்லை.
நான் சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பினேன். அதனால் தான் எனக்கு என்னுடைய சுதந்திரம் தேவை என்று விரும்பினேன்.
 அதற்காக நான் வேலையை ராஜினாமா செய்வதும் சரிதான் என்று முடிவெடுத்தேன். காஷ்மீரில் பேசும் சுதந்திரம் முற்றிலுமாக தடை செய்யப்பட்டதை நாம் கண்டும் காணாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றோம்.
காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரம் ரத்து என்ற முடிவு, என்னுடைய ராஜினாமாவால் மாறிவிடப்போவதில்லை என்பதை நான் உறுதியாக உங்களிடம் கூற விரும்புகிறேன்.
இது போன்ற முடிவுகளை எடுக்க முழுமையான அங்கீகாரம் ஒரு அரசுக்கு உள்ளது.
ஆனால்  சட்டப்பூர்வமாக, ஜனநாயகத்தோடு, அரசியல் சாசன முடிவாக அது அமைய வேண்டும். ஒரு குழந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நாம் ஒரு ஊசி போடுகின்றோம்.
வலியில் ஒரு குழந்தை அழவும் கூடாது என்றால் அது எப்படி?
 நாம் அவர்களின் குரலை, அவர்களின் எண்ணங்களை கேட்கவேண்டும். அவர்களின் கோபங்களை சரிசெய்ய பல்வேறு வழிகள் இருக்கின்றன.
ஆனாலும் நாம் அவர்களின் எண்ணங்களை கேட்க வேண்டும்.

இந்த நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திக்கு மட்டும் குரல் கொடுத்தது ஏன்?

இந்த நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றது தான்.
ஏன் இது இல்லாமல் அது என்ற கேள்விகள் எப்போதும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது. பல்வேறு பிரச்சனைகளுக்காக எப்போதும் ஒரே விதமான தாக்குதல்களால் உந்தப்பட்டு மக்கள் குரல் கொடுப்பதில்லை. ஆனால் நம் எண்ணங்களையும் கருத்துகளையும் சுதந்திரமாக அறிவிப்பதற்கான சூழலில் பிரச்சனை என்பது என்னை உறுத்திக் கொண்டே இருந்ததால் தான் இம்முடிவு.

காஷ்மீர் விவகாரத்தில் மட்டும் அல்ல.
 எங்கெல்லாம் குரல்கள் ஒடுக்கப்படுகின்றதோ அங்கெல்லாம் குரல் கொடுக்கும் கட்டாயம் நமக்கு இருக்கின்றது.

நீங்கள் தற்போது உங்களின் பதவியை விட்டு விலகி விட்டீர்கள்.

 தற்போது உங்களின் கருத்து சுதந்திரத்தை எப்படி இந்த பிரச்சனையை இணைத்து போராடப்போகின்றீர்கள்?

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா வெளியிட்ட அஃபிடிவிட் படித்தேன். நம் அரசாங்கம் எதையாவது செய்து கொண்டே இருக்கும். ஆனால் நம் நாட்டின் இதர தனி அங்கங்களும், அரசின் முடிவுகளுக்கு சாதகாமாக எப்படி இயங்குகிறது என்று தான் தெரியவில்லை. நம்முடைய சில துறைகள் அரசின் கீழ் இயங்குவதில்லை. நாம் அனைவரும் அரசின் கீழ் எப்போதும் இருப்பதில்லை .
நான் அரசின் ஒரு அங்கமாக இருந்த போது, நான் ஏன் இதை செய்தேன் என்ற கேள்வி மிகவும் முக்கியமானதாகவும், அதற்கு நான் பதில் அளிக்க கடமைப்பட்டவனாகவும் இருக்க வேண்டும். ஆனால் தற்போது அந்நிலை இல்லை. எதிர்ப்புகளையும் மாற்றுக் கருத்துகளையும் எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்ந்த ஒரு முதிர்ச்சியான ஜனநாயகமாக இந்தியா செயல்பட வேண்டும்.

உங்களுடைய முடிவுகள் குறித்து உங்களுடன் பயின்ற,பயிற்சிப்பெற்ற சக Ias அலுவலர்கள்என்ன கூறினார்கள்.?

ஐ.ஏ.எஸ் வட்டாரத்தின் உள்ளும் வெளியும் இருக்கும் நண்பர்களும் சரி, இதர நண்பர்களும் சரி, இதை எப்படி எடுத்துக் கொண்டாலும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவை மதிக்க கற்றுக் கொண்டுள்ளோம். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்பதால் என்னுடைய நண்பர்கள் எனக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் நீங்கள் பணி புரி்ந்துள்ளீர்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக நீங்கள் நிறைய போராட்டங்களையும் தடையையும் பார்த்திருப்பீர்கள் தானே?

ஒரு மாவட்ட ஆட்சியராக, ஒரு போராட்டம் வந்தால் அதனை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான கடமையாகும். போராட்டங்கள் தடை செய்யப்படுமே தவிர, கருத்து சுதந்திரத்திற்கு எங்கும் தடையில்லை. இரண்டுக்குமான வித்தியாசத்தை உணர வேண்டியது ஒரு கலெக்டரின் முக்கிய பங்கு. கலவரங்கள் ஒடுக்கப்பட வேண்டும். ஆனால் அமைதி வழியிலான போராட்டங்களை மேற்கொள்ள மக்களுக்கு என்றும் உரிமையுண்டு. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நம் நாட்டில் இந்த போராட்டங்களையும் ஒடுக்க நினைப்பது எப்படி சரியாகும்?

அரசியலுக்கு வரும் எண்ணம் ?

இப்போதைக்கு இந்த ராஜினாமா தான் மிகவும் முக்கியம். உண்மையை சொன்னால், நான் அடுத்து என்ன செய்யப் போகின்றேன் என்றும் கூட யோசிக்கவில்லை. ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் தேவையில்லை. நான் மக்களுடன் இணைந்து செயல்படவே விரும்புகின்றேன். நான் அரசியலில் சேர்வது குறித்தும் யோசிக்கவில்லை. நான் அரசியலில் இணைகின்றோனோ இல்லையோ, அரசியலில் இணைவதை தவறான முன்னுதாரணமாக இளம் தலைமுறையினர் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.

 மத்திய அரசின் தனிவிவகாரத்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீங்கள் உங்களின் சேவையை தொடர வேண்டும் என டையூ டாமன் நிர்வாகம் அவருடைய வீட்டின் முன்பு அறிவிக்கை செய்தியை ஒட்டியுள்ளது.
சில்வஸ்ஸாவில் இருக்கும் அரசு விருந்தினர் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த கண்ணன் கோபிநாதன் தற்போது அங்கு இல்லை. 
ஆனால் அந்த வீட்டில் அரசு ஒட்டியுள்ள அறிவிக்கையில்
“ஒரு சிவில் சேவை செய்யும் ஒருவரின் ராஜினாமா கடிதத்தை அரசு ஏற்றுக் கொண்டால் மட்டுமே அந்த ராஜினாமா செல்லுபடியாகும். உங்களின் கடிதம் குறித்து இதுநாள் வரையிலும் எம்முடிவும் எட்டப்பட்டவில்லை. முடிவுகள் எடுக்கும் வரை உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கடமையையும் பொறுப்பையும் நீங்கள் நிறைவேற்ற வேண்டும்” 
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலாய் லாமாவின் மறுபிறவி மரணம்.
தாய்லாந்தில் வசித்து வந்தவர் பிரபல புத்ததுறவி சோங்யால் லேக்கல்.
வயது 72.

 இவர் சோங்கல் ரிம்போசே என்றும் அழைக்கப்பட்டு வந்தார்.
1947ல் திபெத்தில் பிறந்த இவர், பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஒப்பீட்டு மதம் குறித்த ஆய்வு படிப்பை முடித்தவர்.

திபெத்திய வாழ்க்கை மற்றும் இறப்பு என்ற புத்தகத்தை இவர் எழுதினார்.
இந்தப் புத்தகம் 30 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்று சாதனை படைத்தது.
 இந்த நூலின் ஒலிப்பேழையும் விற்பனையில் சாதனைப் படைத்தது.

இதனைத் தொடர்ந்து இவரை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர ஆரம்பித்தனர்.
முகநூல், காணொளிகளில் இவரது சொற்பொழிவுகள் பிரபலமாயின.
 உலகெங்கும் 23 நாடுகளில் இவருக்கு ஆதரவாளர்கள் பெருகினர்.


இவருடைய சீடர்கள், சோங்யாலை 13வது தலாய் லாமா குருவின் மறுபிறவி என்று நம்பி வந்தனர். இவருடைய புகழும் பரவியது.
இந்நிலையில், கடந்த 1994ம் ஆண்டு பெண் சீடர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
நீதிமன்றத்திற்கு வெளியே இந்த வழக்கினை சோங்யால் தீர்த்துக் கொண்டார்.

இதன்தொடர்ச்சியாக பல இளம்பெண்கள் சோங்யால் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர்.
ஆதாரம் இல்லாததால் சோங்யாலுக்கு எந்தவித தண்டனையும் கிடைக்கவில்லை.

ஆனால், புத்த விசாரணை ஆணையம் சோங்யாலுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியது. 
பல்வேறு புகார்கள் உண்மை என்ற போதும், குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 
இது ஒருபக்கம் இருக்க, சோங்யாலுக்கு ஆதரவாளர்கள் பெருகி அவர் பிரபலமான புத்ததுறவியாக அடையாளம் காணப்பட்டார்.

எழுத்தாளர் மேரி ஃபின்னிகன் என்பவர், திபெத்திய பௌத்த மதத்தில் பாலியல் மற்றும் வன்முறை என்ற ஆய்வு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், புத்ததுறவி சோங்யாலை ஒரு கவர்ச்சியான, இரக்கமற்ற தலைவர் என்று எழுதினார். இதனடிப்படையிலும் சோங்யால் பரபரப்பாக பேசப்பட்டவர்.

இவ்வாறாக சர்ச்சையின் நெருங்கிய நண்பராக இருந்த சோங்யால் தாய்லாந்தில் நேற்று காலமானார்.

தலாய்லாமாவின் மறுபதிப்பான இவருக்கு புற்றுநோய் இருந்ததாகவும் அதன்காரணமாக  இறந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வியாழன், 29 ஆகஸ்ட், 2019

இந்திய பொருளாதாரத்தை மீட்க RBI-யின் ரூ.1.76 லட்சம் கோடி உதவுமா?

பூமியின் நுரையீரலில் தீ

உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது.

அரிய வகை  ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள்,  ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன.
  உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி  வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன.
 உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு,  மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே.  அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

உலகிற்கே  உயிர் கொடுத்து வரும் அமேசான் காடு இன்று கார்ப்பரேட்களின் லாபவெறி யால் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
 இந்த பூவுலகின்  55 லட்சம் சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள்தான், இன்றும் அரிய உயிரினங்களின் புகலிடமாக இருந்து வருகிறது.
அரிய வகை  ஜாக்குவார் சிறுத்தை, அனகோண்டா பாம்புகள், ஆட்களை கொல்லும் எலக்ட்ரிக் ஈஸ்ல் என்ற மீன், விஷத் தவளைகள்,  ஆட்கொல்லி வவ்வால் உள்ளிட்ட ஏராளமான அரிய வகை உயிரினங்கள் இங்கு இருக்கின்றன.

 உலகில் வெளியிடப்படும் மொத்த கார்பனில் 25 விழுக்காடை இந்த காடுகளே உள்வாங்கி  வெப்ப மயமாதலை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின் றன.
உலகிற்கு தேவையான ஆக்ஸிஜனில் 20 விழுக்காட்டை உருவாக்கிக் கொடுப்பதோடு,  மனி தர்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 40 விழுக்காட் டையும் தருவது இந்த காடுகளே.  அப்படிப்பட்ட அமேசான் காடு கடந்த 20 நாட்களாக  பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

இடதுசாரி அரசுகள் இருந்த வரை கார்ப்பரேட் களால் உள்ளே நுழைய முடியவில்லை.

வலதுசாரி அரசு அமைந்தவுடன் முதல் வேலையே அமே சான் காடுகளை அழிப்பதாகத்தான் இருந்தது.
கடந்த ஜூலை மாதம் மட்டும் 1345 சதுர கி.மீட்டர் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன.
அரசு தடுக்கவில்லை. காடுகள் அழிக்கப்படுவது தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. உடனே பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி முகமையின் தலைவரை பணிநீக்கம் செய்தார் ஜனாதிபதி.
 அடுத்து சுரங்க நிறுவனங்க ளை அனுமதிக்க அரசு முடிவு செய்தது.
அதற்கு எதிராக பழங்குடிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றனர்.
  இதையடுத்தே  அமேசான்  காடுகள் தீவிர மாக பற்றியெறிய துவங்கியிருக்கின்றன.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 72,843 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இது கடந்தாண்டை விட 83 சதவிகிதம் அதிகம் ஆகும்.
 நிதிமூலதனத் தின்  லாபவெறிக்கு இந்த பூமியின் நுரையீரலில் தீ பற்றவைக்கப்பட்டிருக்கிறது.
இதனை உடனே அனைத்து நிதிமூலதனத்தின் லாபவெறிக்கு தீ வைத்தால்தான் நாம் உயிர் பிழைக்க முடியும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
  ஏண்டா இப்படி?
பாஜக முன்னாள் மத்திய அமைச்சரும், சாமியாருமான சின்மயானந்தா, மாணவிகள் பலரின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டதாக சட்டக் கல்லூரிமாணவி ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 லக்னோவில் இருந்து 200 கி.மீ.தூரத்தில் இருக்கிறது சுவாமி சுக்தேவானந்தா கல்லூரி.

 அதாவது, சின்மயானந்தாவிற்கு சொந்தமான கல்லூரி. பாஜக தலைவர்களில் ஒருவரான இவர்மத்திய அமைச்சராகவும் இருந்தவர். இந்நிலையில், இங்கு படிக்கும்மாணவி ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன் வீடியோ மூலமாக பகிரங்கபுகார் ஒன்றை வெளியிட்டார்.
 “சனந்த் சமாஜ் அமைப்பை சேர்ந்தபெரிய தலைவர் (சின்மயானந்தா) ஒருவர் பல பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்துவிட்டார். அவர் தற்போதுஎன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
 யோகி ஜி, மோடி ஜி பிளீஸ்உதவி செய்யுங்கள், எங்களை காப்பாற்றுங்கள்.
                   சின்மயானந்தா                  புகார் கொடுத்தவர்                      

நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்று தெரியும்.
ஆனால்நான் இனியும் உயிரோடு இருப்பேனாஎன்று தெரியாது. அந்த சந்நியாசியிடம் போலீசும், நீதிபதிகளும் கட்டுப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.
அவரின் பாக்கெட்டில் எல்லோரும் இருப்பதாக சந்நியாசி என்னிடம் கூறுகிறார்.
ஆனால் அவருக்கு எதிராக எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது” என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அந்த வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில், சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி காணாமல் போய்உள்ளார். நான்கு நாட்கள் ஆகியும் அந்த பெண் எங்கே போனார் என்ற விவரம் தெரியவில்லை.
இது தொடர்பாக அந்த பெண்ணின்தந்தை, தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.
 பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தாதான் தன்னுடைய மகளை கடத்தி உள்ளார்.

அவர் என்னுடைய மகளை கொலை செய்திருக்கக் கூட வாய்ப்புள்ளது. போலீசார் இதை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, சின்மயானந்தா மீது, கடத்தல் மற்றும் குற்றச்செயல் பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 ஏண்டா இப்படி?போலி சாமியார் என்பதினால் சின்மயானந்தா இப்படியா? பாஜகவில் இருப்பதால் இப்படியா??
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 முடி உதிர்கிறதா?
முடி உதிர பல காரணங்கள் உள்ளன. ஆனால், முக்கிய காரணமாகவும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட காரணமாக இருப்பது இரண்டு உண்டு. அவை உடல் சூடும் மன அழுத்தமும் தான்.
உடல் சூட்டால் முடி உதிரும், மன அழுத்த பிரச்சனையும் ஏற்படும். உடல் சூட்டைக் குறைத்து முடி உதிர்வை தடுத்து, முடி வளர வழி என்ன எனப் பார்க்கலாம்.
பெண்கள் செவ்வாய், வெள்ளியன்று எண்ணெய்த் தேய்த்து குளிப்பது, ஆண்கள் புதன், சனியன்று எண்ணெய் தேய்த்து குளித்து வர உடல் சூடு குறையும். முடி உதிர்வு நிற்கும்.
உள்ளங்கை, உள்ளங்காலில் மருதாணி வைப்பதும் உடல் சூட்டைக் குறைக்கும்.


வாரம் ஒருமுறை நெல்லி முள்ளியை, அதிகம் புளிக்காத தயிரில் ஊறவைத்து அரைக்கவும். இதை தலையில் ஹேர் பேக்காக போட்டு, 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம். உடல் சூடு தணியும்.
மனஅழுத்தம் நீங்கும்.
முடி உதிர்வு பிரச்சனை நிற்கும்.

சோற்று கற்றாழை ஜெல்லுடன் சம அளவு கறிவேப்பிலை எடுத்து அரைத்து, இரண்டையும் நன்றாக கலக்கவும். இதை கூந்தலில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளித்திட உடல் சூடு தணிந்து முடி வளரும்.
கரிசலாங்கண்ணி இலை, நெல்லிக்காய், கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் எடுத்து, மூன்றையும் அரைத்து, சிறு சிறு தட்டைகளாக தட்டி வெயிலில் காயவைக்கவும்.
இதை தேங்காய் எண்ணெயில் போட்டு, இந்த எண்ணெயை தினமும் தடவி, 50 முறை சீப்பால் வாரி ஒரு மணி கழித்து குளித்து வர முடி கருமையாக வளரும்.

கற்றாழை லேகியம், வெண்பூசணி லேகியம், கற்றாழை ஜூஸ், நீர் மோர், பாதாம் பிஸின், சப்ஜா விதை, வெள்ளரி விதை, தர்பூசணி விதை, சுரைக்காய் விதை ஆகியவை உடல் சூட்டைக் குறைக்கும். இதனால் முடி உதிர்வு நிற்கும்.

மன அழுத்தம் நீங்கிட சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது முக்கியம்.
வாழைப்பழம், டார்க் சாக்லேட், முட்டை, பாதாம், வால்நட், விதைகள், கேரட், ஈரல், கீரைகள், உலர் அத்தி, மாம்பழம், கொய்யா, மீன், மாதுளை போன்றவை சாப்பிட மகிழ்ச்சி தரும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.
இவற்றை பின்பற்றுங்கள், உடல் சூடும், மன அழுத்தமும் குறையும்.
முடி உதிரல் நிற்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 "சாமிக்கும் உண்டிங்கே சாதி".
பீகார் கவர்னர் பாகு சவுகானை கவுரவிக்கும் நிகழ்ச்சி பாட்னாவில் நடந்தது.
பிரிஜ் கிஷோர்

 இதில் துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, அமைச்சர் பிரிஜ் கிஷோர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர் பிரிஜ் கிஷோர் பேசுகையில்" கடவுள் சிவபெருமான், சமூகம், கல்வியில் பின்தங்கிய "பிந்த்"  ஜாதியை சேர்ந்தவர்.
அவர் சுடுகாடு,சாம்பல் என்று அலைந்ததிலிருந்தே இது தெரிந்திருக்கும்."
 எனக் கூறினார். 
இதுவரை மதம் ,சாதியை வைத்து மக்களை பிரித்து வாக்குக்களை சூறையாடி வந்த பாஜக தற்போது கடவுளர்களையும் சாதிவைத்து ஒதுக்க ஆரம்பிக்கின்றனர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
 நடைப்பயிற்சி
நடைப்பயிற்சியை தொடர்ந்து செய்வதால் உடல் மற்றும் மனதிற்கு நல்லது என்று நாம் அறிவோம். ஆனால் ஒவ்வொரு உறுப்புகளுக்கும் எத்தகைய நன்மைகளை வழங்குகிறது என்பதை அறிவீர்களா ?