திங்கள், 27 ஜூலை, 2020

பேய்கள் அரசாண்டால்......

இங்குள்ள பால் உற்பத்தியாளர் 
வயிற்றிலடிக்கும் அரசுகள்!
ஆவினில் மோசடிகளை நிரந்தரமாக தடுக்க தமிழகம் முழுவதும் நடவடிக்கை பாய வேண்டும்." என தமிழக முதல்வருக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
அதில், “தமிழகம் முழுவதும் உள்ள ஆவின் ஒன்றியங்களில் இருக்கும் மொத்த பால் குளிர்விப்பான் (BMC) நிலையங்களிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் (Milk Cilling Centre) நீண்ட காலமாக பணியாற்றி வரும் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பால் குளிர்வு நிலைய பொறுப்பாளர்கள் இடைத்தரகர்களோடும், மோசடிப் பேர்வழிகளோடும் கூட்டு சேர்ந்து கூட்டுறவு சங்க உறுப்பினரிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு ஆவினுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே ஆவினுக்கு இழப்பை ஏற்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அதிரடி பறக்கும் படை அமைத்திட வேண்டும் என எங்களது சங்கத்தின் சார்பில் கடந்த 13.06.2020அன்று தமிழக முதல்வர் அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பியிருந்த கடிதத்தின் அடிப்படையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் கொள்முதல் நிலையங்கள் சிலவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு அங்கே பணியாற்றிய திருமங்கலம் ஆவின் மேலாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.ஆவின் நிறுவன நலன் மீது அக்கறை கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வரும் எங்களது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
மேலும் தமிழகம் முழுவதும் 25 ஒன்றியங்களில் ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலில் விற்பனை போக உபரியாகும் பாலினை சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, மதுரை மாவட்டங்களில் உள்ள ஆவின் பால் பண்ணைகளுக்கு அனுப்பி பவுடராக மாற்றி இருப்பு வைப்பது தான் வழக்கம்.
ஆனால் கடந்த ஆண்டு திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து நடைமுறைக்கு மாறாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டு அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பால் பவுடராக மாற்றிய பிறகு சுமார் இருநூறு டன் ஆவினுக்கு வந்து சேராமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே ஆவின் பால் பண்ணைகளில் பால் பவுடராக மாற்றுவதற்கான போதிய வசதிகள் இருந்தும் விதிமுறைகளுக்கு மாறாக தனியார் பால் நிறுவனத்தின் தொழிற்சாலையில் பவுடராக மாற்றிட கோவையில் ரகசிய ஒப்பந்தம் போட்ட விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் யார்..? யார்..? என்பது குறித்தும், திருச்சி மாவட்ட ஆவினில் இருந்து மட்டுமின்றி வேறு எந்தெந்த மாவட்ட ஆவினில் இருந்து தனியார் பால் தொழிற்சாலைக்கு பால் அனுப்பப்பட்டது என்பது குறித்தும், அந்த தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்ட பாலினை பவுடராக மாற்றிய பிறகும் ஆவினுக்கு இன்னும் வந்து சேராமல் இருப்பது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.அதுமட்டுமின்றி சென்னை பால் வளத்துறையில் பால் பத அலுவலராக இருந்த மருத்துவர் ஒருவர் தனியார் பால் பண்ணைகளோடு கைக்கோர்த்து கொண்டு நடத்திய தில்லுமுல்லுகள் காரணமாக அப்பதவியையும், மாதவரத்தில் அமைக்கப்பட்ட ஆய்வகத்தையும் மூடிடவும், அந்நபர் சென்னையிலேயே பணிபுரியக் கூடாதென்று வேலூர் மாவட்டத்துக்கு மாற்றிட உத்தரவிட்ட மேனாள் கால்நடை பராமரிப்புத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி அவர்கள், பால் வளத்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டுமென்று பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
தற்போது அவையனைத்தும் களையப்பட்டு, மீண்டும் தவறுகள் தலைதூக்கும் அவலத்தை களைந்திடவும், பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கைத் துறை இயக்குனர் அரசுக்கு அனுப்பியுள்ள சிறப்பு தணிக்கைத் தடை அறிக்கைகளை நிதித் துறைச்செயலாளர் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள ஒன்றியங்களில் அரங்கேறியுள்ள பால் உற்பத்தியாளர்களுக்கு கிட்ட வேண்டிய தொகை எப்படியெல்லாம் வீணடிக்கப் பட்டுள்ளதென்ற உண்மைகளை முதல்வர் உணர முடியும் என்பதையும் மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மேலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாத்திட அயல்நாடுகளில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதி செய்ய தடை விதித்தார். ஆனால் கொரோனா பேரிடர் காலமான தற்போது ஊரடங்கு 5வது மாதத்தை நெருங்கியுள்ள நேரத்தில் வணிகம் சார்ந்த பால் விற்பனை என்பது வெகுவாக குறைந்து பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு பால் பவுடர் இறக்குமதிக்கான தடையை நீக்கி சுமார் 10ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதியளித்துள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளது.இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுலில் இருக்கும் காரணத்தால் தமிழகத்தில் பால் விற்பனை கடுமையான வீழ்ச்சியை சந்திருக்கிறது. அதனால் பால் கொள்முதல் விலையும் கடும் சரிவை கண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் கறவை மாடுகளை பராமரிக்க முடியாமலும், மாட்டுத்தீவனம் வாங்கிட முடியாமல் அல்லல்படும் சூழலும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அயல்நாடுகளில் இருந்து சுமார் 10ஆயிரம் டன் பால் பவுடர் இறக்குமதி செய்ய அனுமதித்தால் தற்போதுள்ள சூழலில் நமது பால் உற்பத்தியாளர்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். அதனால் மாடுகளை பராமரிக்க முடியாமல் இறைச்சிக்காக விற்பனை செய்யும் நிலைக்கு பால் உற்பத்தியாளர்கள் தள்ளப்படுவார்கள். எனவே பால் உற்பத்தியாளர்களை பாதிக்கும் பால் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதிக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்திட வேண்டுகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------
கொரோனா பேரிடரில் 
இந்தியாவை கொள்ளையடிக்கும் பா.ஜ.க ஆட்சி.
நாடாளுமன்றம் கூடாத “சுகாதார பேரிடர்” கால நெருக்கடியைப் பயன்படுத்தி - பல்வேறு அவசரச் சட்டங்களைப் பிறப்பித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுடன் கைகுலுக்கி, புதிய “சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020”-யை வெளியிட்டிருப்பதற்குக் கடும் எதிர்ப்பு உள்ளது.
ஏற்கனவே இருக்கும் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.
1972-ம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் “மனித சூழல் குறித்த ஸ்டாக்ஹோம் மாநாடு பிரகடனத்தின்” அடிப்படையில், “சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் அடிப்படைக் கடமை” (Fundamental Duty) என்பது 1976-ல் கொண்டு வரப்பட்ட 42-வது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில்தான் “போபால்” துயரத்திற்குப் பிறகு - “சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986” நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டது.ஆனால், “இருக்கிற சட்டங்களையும் மதிப்பதில்லை; மக்களைப் பாதுகாக்கும் சட்டங்களையும் கொண்டு வருவதில்லை” என்பதில் தீர்மானமாக இருக்கும் மத்திய பா.ஜ.க.அரசு, சுற்றுப்புறச்சூழலுக்கு ஆபத்தாக உள்ள பல்வேறு திட்டங்களை “மறுவகைப்படுத்தி”- அதுபோன்று ஆபத்து விளைவிக்கும் திட்டங்களுக்கு எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை” என்று அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
“பொதுமக்கள் கருத்துக் கேட்பு” என்பது வெறும் காகிதப்புலியாக்கப்பட்டு - தங்களின் இயற்கை வளத்தை - வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை மக்களிடமிருந்து அடியோடு பறிக்கப்பட்டுள்ளது.
மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் மளமளவென பெருகவும் - விவசாயிகளின் நிலங்களைக் கைப்பற்றி சாலை அமைக்கும் திட்டங்களை நிறைவேற்றவும் - மாநில உரிமையைப் பறித்து நவீன நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றவும், “திட்டம் துவங்கும் முன்பே” பெற வேண்டிய “சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி தேவையில்லை” என்று புதிய அறிவிக்கை “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு” ‘கார்ப்பெட்’ விரித்துள்ளது.
பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் - நலன் இரண்டும் காற்றில் பறக்கவிடப்பட்டு - அவசர கதியில் இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை உறுதி செய்ய - கொரோனா காலத்தில் - குறிப்பாக நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கருத்துக் கேட்கிறது என்றால் எத்தகைய கொடுமையான நிர்வாக நடவடிக்கை இது?
கொரோனா காலத்தில் கூட மத்திய பா.ஜ.க. அரசின் கவனம் முழுவதும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவுவதிலும் - அவர்களுக்கு செவ்வனே கடமையாற்றுவதிலுமே இருக்கிறது என்பது மிகுந்த கவலைக்குரியது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் திருமதி. பிருந்தா காரத் அவர்கள், “இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை ஜனநாயக விரோதமானது, அநியாயமானது” என்று மத்திய சுற்றுப்புறச்சூழல் துறை அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். முன்னாள் மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சரும் தற்போது அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகளுக்கான நாடாளுமன்றக்குழுத் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் அவர்கள், “இந்த அறிவிக்கை சுற்றுப்புறச் சூழல் விதிகளே ஒரு தேவையற்ற சுமை என்று இந்த அரசு நினைப்பதை வெளிப்படுத்துகிறது. பின் தேதியிட்டு திட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்பது மக்களின் சுகாதாரம் மற்றும் நலனில் அக்கறையற்ற செயல்” என்று விமர்சித்து விட்டு, “மாநில சுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழுவின் தலைவரையும், உறுப்பினர்களையும் மத்திய அரசே நியமிப்பது கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தைச் சவப்பெட்டியில் தள்ளி அடிக்கும் கடைசி ஆணி” என்று கடுமையாகவே சாடியிருக்கிறார்.
அந்த அளவிற்கு மத்திய - மாநில உறவுகளைக் கொச்சைப்படுத்தும் விதத்திலும் - சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பில் மாநிலங்களைப் புறக்கணிக்கும் விதத்திலும் இந்த புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள்- இந்த அறிவிக்கை திரும்பப் பெற வேண்டும் என்று போர்க்குரல் எழுப்பியுள்ள நேரத்தில், “இந்த அறிவிக்கை மீதான கருத்துக் கேட்பிற்குக் கால அவகாசம் வழங்கி, அறிவிக்கையை அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்” என்று டெல்லி உயர்நீதிமன்றமே மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. ஆகவே நாடே கொந்தளிக்கும் “சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020 மக்களுக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல” என்ற குரல் எங்கும் இன்றைக்கு எதிரொலிக்கிறது.
தமிழகத்தைப் பொறுத்தமட்டில் சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக மக்களும், விவசாயிகளும் போராடி வரும் நிலையில் - காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டக் கூடாது என்று தமிழகமே ஓங்கிக் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காவிரி டெல்டா பகுதியை சகாரா பாலைவனமாக்க அ.தி.மு.க. அரசின் ஒத்திசைவுடன் மத்திய அரசு ஒவ்வொரு திட்டமாக அனுமதித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுப்புறச்சூழல் முன் அனுமதி பெற வேண்டிய எண்ணற்ற திட்டங்களை “மறுவகைப்படுத்தி” – அவற்றை எல்லாம் “சுற்றுப்புறச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லாத” பட்டியலில் சேர்த்திருப்பது, “மெஜாரிட்டி” இருக்கிறது என்பதற்காக - அதைத் துஷ்பிரயோகம் செய்யும் முறையில் மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டுள்ள - மக்கள் விரோத சுற்றுப்புறச்சூழல் தாக்க அறிவிக்கையாகவே இருக்கிறது.

மக்களின் நலனோ - சுற்றுப்புறச்சூழல் பற்றிய கவலையோ இந்த அரசுக்கு துளியும் இருப்பதாகத் தெரியவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை காட்டினால் போதும் - அதுவும் வரம்புகளை - எல்லைகளை மீறி நாம் சலுகை காட்டினாலும் யார் கேட்க முடியும்? என்ற “சர்வாதிகார” மனப்பான்மையுடன் தங்களுக்குக் கிடைத்த பெரும்பான்மையை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது; வாக்களித்த பெருமக்கள் இந்த அணுகுமுறையைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020-ஐ ஏற்கனவே உள்ள 2006, அறிவிக்கையை விடக் கடுமையாக்கி - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தும் அதேவேளையில் - இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு - மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அந்த ஜனநாயக நடைமுறை இயலாது என்று பா.ஜ.க. அரசு கருதுமேயானால் - கொரோனா காலத்தில் இந்த அறிவிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்கும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு - அறிவிக்கையைத் திரும்பப் பெற்று - நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி - சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும்.
“நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி வேண்டும்” – ஆனால் அதே நேரத்தில், “ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வுரிமை” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மனதில் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும்.
----------------------------------------------------------------
"பேய் அரசாண்டால்" 

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தபோது, அலைந்து திரிந்து குழந்தைகளுக்கு ஆக்சிஜன் ஏற்பாடு செய்து பல உயிர்களைக் காப்பாற்றியவர் என கூறப்பட்ட டாக்டர் கஃபீல் கான் 6 மாதங்களாகச் சிறையில் உள்ளார்.
வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவ செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஜாமீனும் வழங்கியது. ஆனால் விடுதலையாவதற்கு முன்பு, அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, அவர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டதையும், தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையையும் எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்று மருத்துவர் கஃபீலின் சகோதரர் ஆதில் அகமது கூறுகிறார்.
உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் விசாரணை இதுவரை 11 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் இப்போது ஜூலை 27 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் என்றும் ஆதில் அகமது கூறுகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், டாக்டர் கஃபீல் கான் அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ)எதிராக வெறுப்பைத் தூண்டும் விதமாக உரையாற்றியதாக அலிகர் சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜனவரி 29 அன்று, உத்தரப்பிரதேச அரசின் சிறப்புப் நடவடிக்கைப் படை (எஸ்.டி.எஃப்) அவரை மும்பையில் கைது செய்தது.
மதுரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த டாக்டர் கஃபீலுக்கு, பிப்ரவரி 10 ம் தேதி ஜாமீன் கிடைத்தது, ஆனால் மூன்று நாட்கள் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்படவில்லை. அதற்குள், அலிகார் மாவட்ட நிர்வாகம் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகித்தது.
டாக்டர் கஃபீலை இதுவரை இரண்டு முறை உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படை கைது செய்துள்ளது. உத்தரப்பிரதேச சிறப்புக் காவல் படையின் ஐ ஜி அமிதாப் யஷ், பி பி சி-யிடம் பேசியபோது, "அலிகரில் கபீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, நாங்கள் அவரை மும்பையில் கைது செய்து அலிகார் போலீசில் ஒப்படைத்தோம். இதற்கு முன்னர், கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரி வழக்கிலும் எஸ்.டி.எஃப் அவரைக் கைது செய்தது." என்று கூறினார்.
நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்ற போதிலும், கஃபீல் கான் மூன்று நாட்கள் வரை விடுதலை செய்யப்படாதது ஏன் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது ஏன் என்ற கேள்விகள் எழுகின்றன.
மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கஃபீலின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர், காரணம், ஜாமீன் பெற்ற பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டம் விதிக்க முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கால அளவு மூன்று மாதங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டது.
கபீலின் சகோதரர் ஆதில் கான் இது பற்றிக் கூறும்போது "பிப்ரவரி 10 ஆம் தேதி மாலை நான்கு மணியளவில் நீதிமன்றம் கஃபீல் கானை உடனடியாக விடுவிக்குமாறு அறிவுறுத்தியது, ஆனால் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் அவர் விடுவிக்கப்படவில்லை. ஜாமீன் வழங்கிய பிறகு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பது உச்ச நீதி மன்றத்தின் உத்தரவு."
"டாக்டர் கஃபீல் மீதான அனைத்து வழக்குகளிலும், அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் தேசியப் பாதுகாப்புச் சட்டம் எப்படி பாய்ந்தது என்பது தான் புரியவில்லை" என்றார்.
"அவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது உயர் நீதிமன்றம்தான் சரி எது தவறு எது என்று முடிவு செய்யும்" என்று கூறுகிறது அலிகர் மாவட்ட நிர்வாகம்.


கஃபீல் கான்
பிபிசியிடம் பேசிய அரசாங்க வழக்கறிஞர் மணீஷ் கோயல் "என்எஸ்ஏ காவல் காலத்தை அதிகரிப்பது குறித்த வழிமுறைகளை ஆலோசனைக் குழு பரிந்துரைக்கிறது, அரசாங்கம் மட்டும் அதை முடிவு செய்யவில்லை. ஆலோசனைக் குழுவில் உள்ள மூத்த உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள் உள்ளனர். தேசியப் பாதுகாப்புச் சட்டம் மூன்று மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இது மும்மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இதை நீட்டிக்கும் முடிவு ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுடன் மட்டுமே செய்யப்படுகிறது. கஃபீல் கான் விஷயத்தில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஒரு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது என்பதுதான். அதனால் தான் இது நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
ரசுகாவில் டாக்டர் கபீல் கான் கைது செய்யப்பட்ட காலம் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது, ஆனால் ஏப்ரல் 1 ஆம் தேதி, தேசியப் பாதுகாப்புச் சட்டக் காவல் காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. டாக்டர் கபீலின் குடும்பத்தினர் அவரை கைது செய்வதற்கும் என்எஸ்ஏவின் நடவடிக்கைக்கும் எதிராக ஹேபியாஸ் கார்பஸ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர், ஆனால் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது.
"பேய் அரசாண்டால் பிணம் தின்னுவதே சட்டமாகும்."
என முன்னோர் சரியாகத்தான் கூறிச்சென்றுள்ளனர்.
----------------------------------+-----------------------------
2021 பொதுத்தேர்தல்.
தி.மு.க போடும் கணக்கு.
“தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கிறது. திமுக வரும் தேர்தலில் தனியாக நின்றாலே ஜெயித்துவிட முடியும் என்று பிரசாந்த் கிஷோர் திமுக தலைமைக்கு ஏற்கனவே ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார். ஆனாலும் ஸ்டாலின் இதில் தீவிரமாக யோசித்து வருகிறார். வரும் தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான காரணிகளில் ஒன்றைக்கூட திமுக தவற விட்டுவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். வரும் தேர்தலில் திமுகவின் வெற்றியை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் கூட்டணியும் ஒன்று. எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட இந்தக் கூட்டணித் தேரிலேயே சட்டமன்றத் தேர்தலுக்கும் பவனிவர வேண்டும் என்ற எண்ணம் ஸ்டாலினிடம் இருக்கிறது.
ஆனாலும் ஏற்கனவே திமுக பொருளாளர் துரைமுருகன் சொன்னதுபோல தேர்தல் நெருங்கும் நிலையில், சிலர் வரலாம், சிலர் போகலாம். அந்த வகையில் திமுகவின் தலைமை வட்டாரத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்ற ஓர் உத்தேசக் கணக்கு திட்டமிடப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவின் பார்வையில் இது உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக், மமக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இருந்த நிலையில் திமுக 174 தொகுதிகளில் போட்டியிட்டது.
ஆனால் திமுக கூட்டணியில் இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இருக்கின்றன. இவை தவிர பல தோழமைக் கட்சிகளும் இயக்கங்களும் இருக்கின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸுக்குக் கொடுக்கப்பட்ட 41 இடங்களில் 9 இடங்களே வெற்றிபெற்றது. பெரும்பாலான மீதி இடங்களில் அதிமுகவே வெற்றி பெற்றது. எனவே இம்முறை கூட்டணிக் கட்சிகளுக்கான இடம் மிகவும் கறாரான முறையில் கணக்கிடப்படுவதாகத் தெரிகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட எம்.பி தொகுதிகளின் அடிப்படையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் சீட்டுகளை திமுக கணக்கிடுகிறது. அதாவது ஓர் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட கட்சிக்கு மூன்று சட்டமன்றத் தொகுதிகள் என்ற விகிதத்தில் திமுக திட்டமிட்டு வைத்துள்ளது. அதன்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 10 எம்.பி தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸுக்கு 30 சட்டமன்றத் தொகுதிகள் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் அடுத்த கட்சி மதிமுக கடந்த எம்.பி தேர்தலில் ஒரு மக்களவை தொகுதி, ஒரு ராஜ்யசபா என இரு எம்.பி.க்களைப் பெற்றது. அதன் அடிப்படையில் மதிமுகவுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள், அடுத்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் தலா இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டன. அவற்றுக்கு 6 + 6 = 12 சட்டமன்றத் தொகுதிகள். விடுதலைச் சிறுத்தைகள் இரு எம்.பி தொகுதிகளில் போட்டியிட்டதன் அடிப்படையில் அக்கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள். ஒரு தொகுதியில் நின்ற கொமதேக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி கட்சிகளுக்கு தலா 3 சட்டமன்றத் தொகுதிகள். ஆக இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விடுகின்றன. 234 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 63 தொகுதிகள் போய்விட, மீதி 171 தொகுதிகளில் திமுக போட்டியிட வாய்ப்பிருக்கிறது.
இதில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் தவிர மீதியிருக்கும் கட்சிகளிடம், ‘நீங்கள் ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது போல உதயசூரியன் சின்னத்திலேயே நின்றால் உங்களது கட்சிக்கான தேர்தல் செலவை திமுக ஏற்றுக் கொள்ளும்’ என்றும் திமுக கூற வாய்ப்பிருக்கிறது. அப்படிப் பார்த்தால் ஏற்கனவே 171 இடங்கள் தவிர, மதிமுக 6, விடுதலைச் சிறுத்தைகள் 6, கொமதேக 3, ஐஜேகே 3 ஆகிய 18 இடங்களிலும் என மொத்தம் 189 சட்டமன்றத் தொகுதிகளிலும் உதயசூரியனே நிற்க வாய்ப்பிருக்கிறது. கடந்த எம்.பி தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தும் போட்டியிடாத மனிதநேய மக்கள் கட்சிக்கும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.
இதுதான் இப்போதைய திமுக தலைமைக்குள் ஆலோசிக்கப்பட்டு வரும் பட்டியல். இது முழுக்க முழுக்க திமுகவின் பார்வையில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கும் உத்தேசப்பட்டியல். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வருகிற சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு இவ்வளவு இடங்கள் தேவையென இப்போதே ஆலோசனைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கருத்தும், திமுகவின் கருத்தும் விவாதிக்கப்பட்டு பிறகே கூட்டணிக் கணக்கு இறுதி செய்யப்படும். வரும் தேர்தலில் அரசியல் சூழலைக்கொண்டு இந்தக் கூட்டணிக் கணக்கு மாறலாம் அல்லது இந்தக் கூட்டணிக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கூட்டணிக் கட்சிகள் கூட மாறலாம்”
நன்றி: மின்னம்பலம்.
---------------------%----------------------------

ஞாயிறு, 19 ஜூலை, 2020

பெரியாரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததென்ன?

பெரியாருக்கு ஏன் இத்தனை சிலைகள்? அரசியலிலும், சமூக இயக்கங்களிலும் முரண்படும் பல அமைப்புகள் கூட பெரியாரை ஏற்றுக் கொண்டாடுவது ஏன்? யார் இந்த பெரியார்?
திரிபுராவில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்டுகள் தோற்ற நிலையில், அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அதையடுத்து தமிழ்நாட்டில் பெரியாரின் சிலைகளை அகற்றப்போவதாக பாஜகவினர் கோபம் காட்டினார்களே ஏன்?
கம்யூனிஸ்டுகள், திராவிடக் கட்சிகள், தலித் அமைப்புகள், தமிழ்த்தேசியவாதிகள், பெண்ணியவாதிகள் என்று பல்வேறு நிறங்களும், முழக்கங்களும் உடைய அமைப்புகளும், இயக்கங்களும், தனி நபர்களும் ஏன் பெரியாரைப் போற்றவேண்டும்?
ஈரோட்டில் செல்வக் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ராமசாமி-யை மதங்களுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும், பெண்ணடிமைத் தனத்துக்கும் எதிராகத் திருப்பியது எது?

விதவை மறுமணம்

குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாரபட்சங்கள் இளம் வயதிலேயே அவரது கவனத்தைக் கவர்ந்தன. குழந்தைத் திருமணம் செய்து குழந்தையாக இருக்கும்போதே கணவனை இழந்து கைம்பெண்ணாகி வாழ்நாள் முழுவதும் கைம்பெண்ணாகவே வாழ நேர்ந்த பல்லாயிரம் பெண்களின் துயரம் அவரை ஆட்கொண்டது.
Skip YouTube post, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்
End of YouTube post, 1
அவ்விதம் குழந்தைப் பிராயத்திலேயே கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர் மறுமணம் செய்வித்தார்.

காசி பயணம்

நாகம்மையாரை மணந்துகொண்டு தமது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த நேரம், குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவர் வீட்டை விட்டு வெளியேறி துறவு பூணும் நோக்கத்தோடு காசிக்குச் சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்கள் பிராமணர் அல்லாதோரை உள்ளே அனுமதிக்க மறுத்ததால் அவர் பசியில் வாடி, சத்திரத்தில் இருந்து வீசி எறிந்த இலைகளில் இருந்து உணவை எடுத்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அவரது மனதில் நீங்கா வடுவை ஏற்படுத்தியது.
திருப்பத்தூரில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை மூடப்பட்டிருக்கும் காட்சி.
படக்குறிப்பு,
திருப்பத்தூரில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை அந்த சம்பவம் நடந்தபோது மூடப்பட்டிருந்த காட்சி.
பிறகு அவர் தமது துறவு எண்ணத்தைக் கைவிட்டு ஊருக்குத் திரும்பினார். இயல்பாகவே இருந்த ஆர்வத்தினால் அவர் பல பொதுப் பணிகளை சொந்த ஊரான ஈரோட்டில் மேற்கொண்டார்.

காங்கிரசில்...

காந்தியக் கொள்கைகளால் கவரப்பட்டு அவர் 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். கதர், மது எதிர்ப்பு, தீண்டாமை எதிர்ப்பு என்னும் காந்தியின் அடிப்படைக் கொள்கைகளுக்காக உழைத்தார்.
விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று தாம் வகித்த நகரமன்றத் தலைவர் உள்ளிட்ட ஏராளமான பொதுப் பதவிகளைத் துறந்தார்.
தமது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட ஊக்குவித்தார் பெரியார். அவர்கள் இருவரும் தலைமையேற்று காங்கிரஸ் கட்சியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.
கள்ளுக்கடை மறியல் போராட்டத்துக்கு ஆதரவாக, கள் இறக்கப் பயன்படக்கூடாது என்று, தமது தோப்பில் இருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டி அழித்தார் பெரியார்.

வைக்கம் போராட்டம்

ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்றார். இந்நிலையில், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கோயில் இருக்கும் தெருக்களில் நடமாட தலித்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கிருந்த போராட்டத் தலைவர்கள் பெரியாருக்கு கடிதம் எழுதி போராட்டத்தை தலைமையேற்று நடத்தும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த பெரியார் காந்தியின் அறிவுரையையும் மீறி தமது கட்சிப் பதவியைத் துறந்து திருவிதாங்கூர் விரைந்தார்.
திருவிதாங்கூர் மகாராஜா பெரியாரின் நண்பர் என்பதால் அவர் அரசு மரியாதையோடு வரவேற்கப்பட்டார். ஆனால், தாம் அரசை எதிர்த்துப் போராட வந்திருப்பதால் அரசு மரியாதையை ஏற்க முடியாது என்று மறுத்த பெரியார் தொடர்ந்து வைக்கத்தில் போராட்டம் நடத்திக் கைதானார். இதையடுத்து அவரது அவரது மனைவி நாகம்மை பெண்களைத் திரட்டி போராட்டத்தைத் தொடர்ந்தார்.
போராட்டத்தின் வெற்றிக்குப் பிறகே அவர் ஊருக்குத் திரும்பினார். இதனால், வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டார்.

காங்கிரசில் இருந்து வெளியேறுதல்

இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற முயன்று தோற்றுப் போனார் பெரியார்.
இந்நிலையில், சேரன்மாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை அவர் எதிர்த்தார்.
Periyar
படக்குறிப்பு,
பெரியார்
ஆனால், வ.வே.சு. ஐயர் தமது போக்கை மாற்றிக் கொள்ள மறுத்ததுடன், காங்கிரசும் அந்த பள்ளிக்கான மானியத்தை நிறுத்த மறுத்தது.
இதையடுத்து அவர் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். வைதீக மதத்தையும், கடவுள் நம்பிக்கையையும், மூடப் பழக்கவழக்கங்களையும் பெரியார் எதிர்த்தார். பிராமணர் அல்லாதவர்கள் தம்மையே தாழ்வாக நினைக்கக் கூடாது என்பதை சுயமரியாதை இயக்கம் வலியுறுத்தியது.
இந்த நிலையில், 1916ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீதிக்கட்சி என்று பரவலாக அறியப்பட்ட தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் தலைவராகப் பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிராமணர்கள் ஆரிய இனத்தில் தோன்றியவர்கள் என்றும் பிராமணர் அல்லாதோர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வாதிட்ட பெரியார் திராவிடர்களை மானமும் அறிவும் மிக்கவர்களாக மாற்றுவதற்காகத் தாம் பாடுபடுவதாக கூறினார்.

பெண்ணுரிமை

குழந்தை திருமண எதிர்ப்பு, விதவை மறுமணம், பெண்களுக்கு கல்வி, தமது துணைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, ஒத்துவராத திருமணத்தை முறித்துக் கொள்ளும் உரிமை ஆகியவை வேண்டும் என்று வாதிட்ட பெரியார், பெண்கள் குழந்தை பெறும் இயந்திரமாக இருக்கத் தேவையில்லை என்று வாதிட்டார். அவரது பெண்ணுரிமைக் கருத்துகள் இன்றைய நிலையில் கூட புரட்சிகரமாகத் தோன்றக்கூடியவை.
பெரியார்
சுதந்திரத்துக்கு முந்தைய இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோது அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தியவர். இந்தியா முழுவதும் ஒரே நாடாக ஆவதை எதிர்த்த அவர் தென்னிந்தியப் பகுதிகள் இணைந்து திராவிட நாடாக ஆகவேண்டும் என்று குரல் கொடுத்தார்.

திராவிட நாடு

ஆனால், தமிழ்நாடு தவிர்த்த பிற பகுதிகளில் இதற்கு ஆதரவு இல்லாத நிலையில், தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கத்தை மாற்றினார்.
இட ஒதுக்கீட்டு கொள்கைக்காக வாதிட்ட, பெண்ணுரிமைக்காக வாதிட்ட, மூடப் பழக்கங்களை எதிர்த்த, மதத்தை எதிர்த்த பெரியார் தமது கருத்துகள் பரவ தமிழ்நாடு முழுவதும் நீண்ட சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு பிரசாரம் செய்தார்.
தமது பிரசாரங்களில் தாம் சொல்வதாலேயே ஒரு கருத்தை ஏற்கவேண்டியதில்ல என்றும், சிந்தித்துப் பார்த்து அவரவர் கருத்துக்கு சரியெனப் படுகிறவற்றை மட்டுமே ஏற்றால் போதுமென்றும் வாதிட்டார் அவர்.

பொதுவுடமை ஈடுபாடு

ரஷியாவுக்குப் பயணம் சென்று வந்த பிறகு பொதுவுடமைக் கொள்கைகளில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. உலக கம்யூனிஸ்டுகளின் முதல் ஆவணமான கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை என்ற புத்தகத்தை தமிழில் முதன் முதலில் மொழி பெயர்த்துப் பதிப்பித்தவர் பெரியார். தமது கருத்துகளைப் பரப்ப 'குடியரசு' முதற்கொண்டு பல பத்திரிகைகளையும் நடத்தியவர் பெரியார்.
தம்மைவிட வயதில் மிகவும் குறைந்தவரான மணியம்மையை அவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தபோது சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட பலர் அவருடன் கருத்து வேறுபாடு கொண்டு திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து 1949ல் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கினர். அந்தக் கட்சியும் அதிலிருந்து பிரிந்த அண்ணா திமுகவும் தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வருகின்றன.
சுயமரியாதை, மத மறுப்பு, மூட நம்பிக்கை மறுப்பு, பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, திராவிடக் கொள்கை, பிராமணர் எதிர்ப்பு போன்ற தாம் நம்பிய பல கொள்கைகளுக்காக வாழ்நாளெல்லாம் போராடியவர் பெரியார். இந்தப் போராட்டத்தில் அவரைப் பாராட்டியவர்களும், எதிர்த்தவர்களும் உண்டு.
பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் அவரது கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை. பிராமணராக இருந்தபோதிலும் சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரியுடன் பெரியார் கடைசிவரை நல்ல நட்பைப் பேணினார். கடவுள் நம்பிக்கை உடைய குன்றக்குடி அடிகளார் போன்றவர்களோடும் பெரியாருக்கு நல்ல நட்பு நிலவியது.
இன்றளவும் சுயமரியாதை என்ற வார்த்தைக்கு தமிழகத்தில் ஒரு தனி மகத்துவம் இருக்கிறது என்றால், அது பெரியார் ஏற்படுத்திக் கொடுத்தது என்றே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், திராவிடம், சுய மரியாதை, மூட நம்பிக்கை மறுப்பு, எழுத்து சீர்திருத்தம், பெண்ணுரிமை, சாதி ஒழிப்பு, போன்ற பல மரபுகளே, அவர் தமிழர்களுக்காக விட்டுச் சென்ற செல்வங்களாக மதிக்கப்படுகின்றன

வியாழன், 16 ஜூலை, 2020

பேரண்டம் எப்படி உண்டானது?

புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.
இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.
அதில் முதல் காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் வாழும் இந்தப் பேரண்டம் எதனால் ஆனது என்ற கேள்வி பயணித்து வந்தப் பாதை மிகவும் முக்கியம்.

பேரண்டக் கட்டடத்தின் செங்கல் எது?

இந்த உலகம், இந்தப் பேரண்டம், எதனால் ஆனது என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தைத் துளைத்துக்கொண்டுள்ள கேள்வி.
அணுக் கருத் துகள் ஆராய்ச்சி. research in sub atomic particles and quark.
படக்குறிப்பு,
அணுத் துகள்களில் செய்யப்படும் ஆராய்ச்சி என்பது அந்த துகள்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்வதாக இருக்கிறது.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள், நம்பினார்கள். இந்த ஐந்து பூதங்களை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல்கூட ஒன்று உண்டு.
செர்ன் - புதிய துகள் - பேரண்டம் - குவார்க் - அணு ஆராய்ச்சி
பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன.
ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை.
பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.
ஹெட்ரான் என்னும் பெரிய துகள்களை மேலும் பிரித்தால்...
ஆனால், பயணம் அத்தோடு முடியவில்லை. அணுவுக்குள் இருக்கும் துகள்களிலும், அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என்று இருவகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மிக மிகச் சிறியதான எதிர் மின் சுமையுடைய எலக்ட்ரான் போன்றவை பகுக்கமுடியாத துகள்களாக - ஆங்கிலத்தில் எலிமென்டரி பார்ட்டிகிள் - இருக்கின்றன. ஆனால், நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் தம்மினும் நுண்ணிய வேறு பொருள்களால் ஆனவை என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அணுவுக்குள் இருக்கிற துகள்களும் அடிப்படைப் பொருள்கள் அல்ல. அவற்றிலும் வேறொன்றால் செய்யப்பட்டவை உண்டு என்று ஆனது. அணுவுக்குள் இருக்கும் துகள்களில் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால் அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று தெரியவந்தது.
குவார்க்கில் ஆண் பெண் - ஒரு சின்ன கற்பனை
அதாவது நாம் கண்ணால் காணும் பொருள்களைப் பகுத்தால் தனிம மூலக்கூறுகள் வரும், அவற்றைப் பகுத்தால் அணுக்கள். அணுக்களைப் பகுத்தால், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள், அவற்றில் பெரிய துகள்களான ஹெட்ரான் வகைத் துகள்களைப் பகுத்தால், குவார்க்குகள். இதுதான் புரிதல்.
இந்த குவார்க்குகளில் அப் - டவுன், சார்ம்-ஸ்ட்ரேஞ்ச், டாப்-பாட்டம் ஆகிய மூன்று ஜோடிகளாக, ஆறு வகை உண்டு. தவிர, இந்த ஆறிலும் குவார்க் - எதிர் குவார்க் என்ற முரண்பட்ட மின்சுமை உடைய வகையும் உண்டு. அதாவது ஆறு இனத்திலும் ஆண்-பெண் இருப்பது மாதிரி.
இது வரையில், இரண்டு குவார்க்குகள் சேர்ந்து உருவான மெசான் வகை ஹெட்ரான்களும், மூன்று குவார்க்குகள் சேர்ந்து உருவான பேர்யான் வகை ஹெட்ரான்களும் மட்டுமே பொதுவாக காணப்பட்டன. ஆனால், கணித கணக்கீடுகள் மூலம் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்தார்கள்.
அப்படி நான்கு, ஐந்து குவார்க் கொண்ட கற்பனையில் மட்டுமே கண்ட அரியவகை ஹெட்ரான்களை எக்ஸோடிக் ஹெட்ரான் என்று அழைத்தார்கள்.
கற்பனையாகவே இருந்து வந்த இந்த நான்கு, ஐந்து குவார்க் கொண்ட அரிய வகை ஹெட்ரான்களை கடந்த சில ஆண்டுகளில் சில முறை ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள்.
ஆனால், அப்படிக் கண்டுபிடித்தவற்றில் எவையும், இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே வகை குவார்க்குகளைக் கொண்டவையோ, நான்குமே வலுவானவையோ இல்லை.

நான்கும் பெரிய குவார்க் - புதிய கண்டுபிடிப்பு

இந்நிலையில், செர்ன் நிறுவனத்தின் எல்.எச்.சி.பி. (LHCb) எனப்படும் ஆய்வுத் திட்டம் கடந்த மாதம் இரண்டு சார்ம் வகை குவார்க்குகளையும், இரண்டு சார்ம் வகை எதிர் குவார்க்குகளையும் கொண்ட ஒரு அரிய ஹெட்ரான் துகளை கண்டுபிடித்தது. இத்தகவலை செர்ன் தனது இணைய தளத்திலேயே அறிவித்துள்ளது. முன்னெப்போதும் நான்கும் ஒரே வகையை சேர்ந்த, வலுத்த வகை குவார்க்குகளைக் கொண்ட துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செர்ன் செய்தித் தொடர்பாளர் கியோவானி பசலேவா தெரிவித்தார்.
செர்ன் நிறுவனத்துக்கு நிலத்துக்கடியில் 27 கி.மீ. நீளமுள்ள வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவி இருப்பது பிரபலம். கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசானைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி இங்குதான் நடக்கிறது. லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும் இந்த துகள் மோதல் கருவி 2009 முதல் 2013 வரையிலும், பிறகு 2015 முதல் 2018 வரையிலும செயல்பட்டபோது கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இப்படிப் புதிய வகை டெட்ராகுவார்க் என்னும் துகள் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது என்று இந்த மாதம் முதல் தேதி அறிவித்தது செர்ன்.
செர்ன் - புதிய துகள் - பேரண்டம் - குவார்க் - அணு ஆராய்ச்சி
புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்' என்பதை ஆராய்வதற்கான 'ஆராய்ச்சிக்கூடமாக' இந்த புதிய, அரிய வகை ஹெட்ரான்கள் இருக்கும் என்றும் செர்ன் அறிவித்துள்ளது.

புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி - அமோல் திகே

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றி மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் அமோல் திகே-விடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம்.
'குவான்டம் குரோமோடைனமிக்ஸ்' எனப்படும் முழுமையான ஸ்ட்ராங் இன்டராக்ஷன் கோட்பாட்டின் கீழ் இப்படி, நான்கு, ஐந்து குவார்க்குகளைக் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்கலாம் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கணிப்பை மெய்யாக்கியது மட்டுமல்ல, அந்தக் கோட்பாடும் சரி என்று நிரூபித்துள்ளது. அந்த வகையில் இது முக்கியமானது. நான்கும் பெரிய குவார்க்குகள் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படி ஆனாலும், புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி இது என்றார் அவர்.
இரண்டு குவார்க் உள்ள ஹெட்ரான்களை மெசான் என்றும், மூன்று குவார்க் உள்ளவற்றை பேர்யான் என்றும் அழைக்கிறார்கள். இப்போது, நான்கு, ஐந்து உள்ளவற்றை கண்டுபிடித்தால், அதற்கும் புதிய வகை உருவாகுமா? என்று அவரிடம் கேட்டோம். இப்போதைக்கு புதிதாக கண்டுபிடிக்கும் இத்தகைய நான்கு குவார்க் கொண்ட டெட்ராகுவார்க்குகள், 5 குவார்க் கொண்ட பென்டா குவார்க்குகளுக்கு x, y, z என்று பெயர் வைத்துக்கொண்டு போவார்கள், நிறைய வந்த பிறகு ஒருவேளை புதிய வகைகளுக்குப் பெயர் சூட்டலாம் என்றார் திகே.
இது ஒருவேளை உண்மையிலேயே நான்கு குவார்க்குகள் வலுவாக பிணைந்து உருவான டெட்ரா குவார்க் ஆகவும் இருக்கலாம், அல்லது இரண்டு மெசான்கள் வலுவற்ற முறையில் இணைந்து இப்படி ஒரு தோற்றம் தரலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. இன்னும் கூர்ந்து கவனித்து இதற்கான சாத்தியக்கூற்றை ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் திகே.
கோட்பாட்டைத் தெளிவுபடுத்த உதவும் - அர்ச்சனா ஷர்மா
செர்ன் ஆய்வகத்தில் பணியாற்று மூத்த துகள் இயற்பியலாளரான அர்ச்சனா ஷர்மாவுடன் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம். எக்ஸோடிக் ஹெட்ரான் எனப்படும் அரிய வகை ஹெட்ரான்கள் தொடர்பான மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடக்கின்றன. இது போன்ற அரிய வகை ஹெட்ரான்களை பலமுறை பார்க்க நேர்வது இந்த மாதிரிகளை தெளிவுபடுத்தி உரைக்க உதவியாக இருக்கும் என்கிறார். புதிதாக கண்டறியப்பட்ட துகளில் நான்கும் பெரிய வகை குவார்க்காக இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் அர்ச்சனா.
பேரண்டம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காண்பதற்கான பயணத்தில், இந்த கண்டுபிடிப்பு அறிவியலை ஒரு படி அருகே நகர்த்திச் சென்றதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு, ஆம் என்கிறார் அமோல் திகே.

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது?

பெருவெடிப்பு
படக்குறிப்பு,
பெருவெடிப்புக்குப் பிறகு எப்படி இந்தப் பேரண்டம் விரிவடைந்தது என்பது குறித்த கோட்பாட்டை விளக்கும் வரைபடம்.
குவார்க் துகள் வகைகளில், குவார்க் - எதிர் குவார்க் (ஆங்கிலத்தில் ஆன்டி குவார்க்) என்று முரண் வகை இருக்கிறது என்று மேலே பார்த்தோமில்லையா. அதைப் போல அணுத் துகள் அனைத்துக்கும் கூட எதிர் துகள்கள் உண்டு. அணுவிலும் எதிர் அணு உண்டு. அணுக்களால் ஆன பொருளிலும் எதிர்ப் பொருள்கள் இருக்கவேண்டும் என்று 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டைராக் கணித்தார்.
ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறிவிடும்.
ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பால் இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது.
ஆனால் பல லட்சம் கோடி விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், அண்டசராசரம் அத்தனையும் வெறும் பொருள்களால் ஆனவை மட்டுமே. எதிர்ப் பொருள் எங்குமே இல்லையே ஏன்?
அல்லது சம எண்ணிக்கையில் எதிர்ப் பொருள், எதிரணு இருந்து பொருளை, பொருளணுவை அழித்திருந்தால், இந்தப் பேரண்டத்தில் எந்தப் பொருளுமே, விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், சூரியனும், பூமியும் எதுவுமே இருந்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் இருக்கிறன்றனவே ஏன்? இந்தக் கேள்விதான் இன்றைய உலக இயற்பியலின் அதிமுக்கியமான கேள்வி. விண்வெளி அறிவியல் முதல், துகள் அறிவியல் வரை எல்லாவற்றையும் குடையும் அதிமுக்கியப் பிரச்சனையாக இதுதான் இருக்கிறது.
பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை.
தற்போது நான்கு 'சார்ம்' வகை குவார்க்குகள் கொண்ட முக்கியமான இந்த டெட்ராகுவார்க் கண்டுபிடிப்பை நிகழ்த்திய LHCb திட்டத்தின் முழுப்பெயர் Large Hadron Collider beauty என்பதாகும். இந்த ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கமே பெருவெடிப்புக்குப் பிறகு, எதிர்ப்பொருள்களால் அழிக்கப்படாமல் பொருள்கள் தப்பிப் பிழைத்து நமது இந்தப் பேரண்டத்தை உருவாக்கியது எப்படி என்பதை ஆராய்வதுதான்.
-----------------------------------------------------------
வீணானதே அனைத்து ராஜதந்திரங்களும்.
இந்தியாவுடனான சபஹார் ரயில்வே திட்டத்தை ஈரான் நாடு ரத்து செய்துள்ள நிலையில், இலங்கையும் கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோர் இடையே கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனால் ஈரான் இந்தியாவுக்குத் தேவையான பெட்ரோலை இந்திய ரூபாயிலேயே வாங்கிக்கொள்வதாக கூறியது.இதனால் டாலர் சேமிப்பு இந்தியாவில் உயரும்.ரூபாய் மதிப்பும் உயரும்.
ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதற்கான நிதி உதவிகளை இந்தியா வழங்காமல் இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியாவின் உதவியின்றி ஈரான் ரயில்வே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் ரூபாய் 30 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை ஈரான் கையெழுத்திட்டிருக்கும் சூழலில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் கைவிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறார். இந்தத் திட்டத்தை இந்தியாவுக்கு பதில் சீனாவுக்கு வழங்க இலங்கை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. .
இந்திய பண மதிப்பு டாலருக்கு எதிராக உயர்வதை தடுக்க அமெரிக்கா செய்த சதியால் ட்ரம்ப் பேச்சைக் கேட்டுந ல்ல வாய்ப்பை மோடி கெடுத்து விட்டார்.
நேபாளம்,ஈரான் இப்போது இலங்கை என இந்தியா தன் நண்பர்களை இழந்து வருகிறதி.இவர்கள் சீனாவுடன் நட்பு பாராட்டினால் இந்திய பாதுகாப்புக்கு சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்பதை கௌடில்ய வாரிசுகள் உணராதது இந்தியாவிற்குதான் கேடு.
-------------------------------------------------------------------------------