பேரண்டம் எப்படி உண்டானது?

புகழ் பெற்ற செர்ன் (CERN) எனப்படும் ஐரோப்பிய அணுக்கரு ஆய்வு நிறுவனம் அணுவுக்குள் இருந்து 'டெட்ரா குவார்க்' என்னும் புது வகைத் துகள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது என்ற இயற்பியலின் அதிமுக்கியமான கேள்விக்கு விடை காணும் முயற்சியில் உத்வேகத்தோடு உழைக்கும் ஆர்வத்தை புதிய துகளின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்குத் தந்துள்ளது.
இந்த டெட்ரா குவார்க் என்றால் என்ன, இதன் கண்டுபிடிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று பார்ப்பதற்கு இரண்டு விஷயங்களைப் பார்ப்போம்.
அதில் முதல் காரணத்தைப் புரிந்துகொள்வதற்கு நாம் வாழும் இந்தப் பேரண்டம் எதனால் ஆனது என்ற கேள்வி பயணித்து வந்தப் பாதை மிகவும் முக்கியம்.

பேரண்டக் கட்டடத்தின் செங்கல் எது?

இந்த உலகம், இந்தப் பேரண்டம், எதனால் ஆனது என்ற கேள்வி பல்லாயிரம் ஆண்டுகளாக மனித இனத்தைத் துளைத்துக்கொண்டுள்ள கேள்வி.
அணுக் கருத் துகள் ஆராய்ச்சி. research in sub atomic particles and quark.
படக்குறிப்பு,
அணுத் துகள்களில் செய்யப்படும் ஆராய்ச்சி என்பது அந்த துகள்கள் விட்டுச் சென்ற தடயங்களை ஆராய்வதாக இருக்கிறது.
நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து பூதங்களால் ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள், நம்பினார்கள். இந்த ஐந்து பூதங்களை விவரிக்கும் புறநானூற்றுப் பாடல்கூட ஒன்று உண்டு.
செர்ன் - புதிய துகள் - பேரண்டம் - குவார்க் - அணு ஆராய்ச்சி
பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன.
ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை.
பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.
ஹெட்ரான் என்னும் பெரிய துகள்களை மேலும் பிரித்தால்...
ஆனால், பயணம் அத்தோடு முடியவில்லை. அணுவுக்குள் இருக்கும் துகள்களிலும், அடிப்படைத் துகள்கள், கூட்டுத் துகள்கள் என்று இருவகை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மிக மிகச் சிறியதான எதிர் மின் சுமையுடைய எலக்ட்ரான் போன்றவை பகுக்கமுடியாத துகள்களாக - ஆங்கிலத்தில் எலிமென்டரி பார்ட்டிகிள் - இருக்கின்றன. ஆனால், நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் தம்மினும் நுண்ணிய வேறு பொருள்களால் ஆனவை என்று பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. ஆக, அணுவுக்குள் இருக்கிற துகள்களும் அடிப்படைப் பொருள்கள் அல்ல. அவற்றிலும் வேறொன்றால் செய்யப்பட்டவை உண்டு என்று ஆனது. அணுவுக்குள் இருக்கும் துகள்களில் நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள் 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால் அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று தெரியவந்தது.
குவார்க்கில் ஆண் பெண் - ஒரு சின்ன கற்பனை
அதாவது நாம் கண்ணால் காணும் பொருள்களைப் பகுத்தால் தனிம மூலக்கூறுகள் வரும், அவற்றைப் பகுத்தால் அணுக்கள். அணுக்களைப் பகுத்தால், எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான் போன்ற துகள்கள், அவற்றில் பெரிய துகள்களான ஹெட்ரான் வகைத் துகள்களைப் பகுத்தால், குவார்க்குகள். இதுதான் புரிதல்.
இந்த குவார்க்குகளில் அப் - டவுன், சார்ம்-ஸ்ட்ரேஞ்ச், டாப்-பாட்டம் ஆகிய மூன்று ஜோடிகளாக, ஆறு வகை உண்டு. தவிர, இந்த ஆறிலும் குவார்க் - எதிர் குவார்க் என்ற முரண்பட்ட மின்சுமை உடைய வகையும் உண்டு. அதாவது ஆறு இனத்திலும் ஆண்-பெண் இருப்பது மாதிரி.
இது வரையில், இரண்டு குவார்க்குகள் சேர்ந்து உருவான மெசான் வகை ஹெட்ரான்களும், மூன்று குவார்க்குகள் சேர்ந்து உருவான பேர்யான் வகை ஹெட்ரான்களும் மட்டுமே பொதுவாக காணப்பட்டன. ஆனால், கணித கணக்கீடுகள் மூலம் நான்கு குவார்க், ஐந்து குவார்க் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கணித்தார்கள்.
அப்படி நான்கு, ஐந்து குவார்க் கொண்ட கற்பனையில் மட்டுமே கண்ட அரியவகை ஹெட்ரான்களை எக்ஸோடிக் ஹெட்ரான் என்று அழைத்தார்கள்.
கற்பனையாகவே இருந்து வந்த இந்த நான்கு, ஐந்து குவார்க் கொண்ட அரிய வகை ஹெட்ரான்களை கடந்த சில ஆண்டுகளில் சில முறை ஆய்வுக் கூடத்தில் கண்டுபிடித்தும் இருக்கிறார்கள்.
ஆனால், அப்படிக் கண்டுபிடித்தவற்றில் எவையும், இரண்டுக்கும் மேற்பட்ட ஒரே வகை குவார்க்குகளைக் கொண்டவையோ, நான்குமே வலுவானவையோ இல்லை.

நான்கும் பெரிய குவார்க் - புதிய கண்டுபிடிப்பு

இந்நிலையில், செர்ன் நிறுவனத்தின் எல்.எச்.சி.பி. (LHCb) எனப்படும் ஆய்வுத் திட்டம் கடந்த மாதம் இரண்டு சார்ம் வகை குவார்க்குகளையும், இரண்டு சார்ம் வகை எதிர் குவார்க்குகளையும் கொண்ட ஒரு அரிய ஹெட்ரான் துகளை கண்டுபிடித்தது. இத்தகவலை செர்ன் தனது இணைய தளத்திலேயே அறிவித்துள்ளது. முன்னெப்போதும் நான்கும் ஒரே வகையை சேர்ந்த, வலுத்த வகை குவார்க்குகளைக் கொண்ட துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் செர்ன் செய்தித் தொடர்பாளர் கியோவானி பசலேவா தெரிவித்தார்.
செர்ன் நிறுவனத்துக்கு நிலத்துக்கடியில் 27 கி.மீ. நீளமுள்ள வளைய வடிவ துகள் மோதல் ஆய்வுக் கருவி இருப்பது பிரபலம். கடவுள் துகள் எனப்படும் ஹிக்ஸ் போசானைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி இங்குதான் நடக்கிறது. லார்ஜ் ஹெட்ரான் கொலைடர் எனப்படும் இந்த துகள் மோதல் கருவி 2009 முதல் 2013 வரையிலும், பிறகு 2015 முதல் 2018 வரையிலும செயல்பட்டபோது கிடைத்த தரவுகளை ஆராய்ந்தபோதுதான் இப்படிப் புதிய வகை டெட்ராகுவார்க் என்னும் துகள் இருப்பதற்கான தடயம் கண்டறியப்பட்டது என்று இந்த மாதம் முதல் தேதி அறிவித்தது செர்ன்.
செர்ன் - புதிய துகள் - பேரண்டம் - குவார்க் - அணு ஆராய்ச்சி
புரோட்டான்களையும், நியூட்ரான்களையும், அணுக்கருவையும் பிணைப்பதும் இயற்கையில் உள்ள நான்கு வகை அடிப்படை விசைகளில் ஒன்றுமான 'ஸ்ட்ராங் இன்டராக்ஷன்' என்பதை ஆராய்வதற்கான 'ஆராய்ச்சிக்கூடமாக' இந்த புதிய, அரிய வகை ஹெட்ரான்கள் இருக்கும் என்றும் செர்ன் அறிவித்துள்ளது.

புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி - அமோல் திகே

இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் பற்றி மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் ஆராய்ச்சி நிறுவனத்தின் கோட்பாட்டு இயற்பியல் துறை பேராசிரியர் அமோல் திகே-விடம் பிபிசி தமிழின் சார்பில் கேட்டோம்.
'குவான்டம் குரோமோடைனமிக்ஸ்' எனப்படும் முழுமையான ஸ்ட்ராங் இன்டராக்ஷன் கோட்பாட்டின் கீழ் இப்படி, நான்கு, ஐந்து குவார்க்குகளைக் கொண்ட ஹெட்ரான் துகள்கள் இருக்கலாம் என்று முன்பே கணிக்கப்பட்டிருந்தது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கணிப்பை மெய்யாக்கியது மட்டுமல்ல, அந்தக் கோட்பாடும் சரி என்று நிரூபித்துள்ளது. அந்த வகையில் இது முக்கியமானது. நான்கும் பெரிய குவார்க்குகள் என்று கூறப்பட்டுள்ளது. எது எப்படி ஆனாலும், புதிய குழந்தை வந்த மகிழ்ச்சி இது என்றார் அவர்.
இரண்டு குவார்க் உள்ள ஹெட்ரான்களை மெசான் என்றும், மூன்று குவார்க் உள்ளவற்றை பேர்யான் என்றும் அழைக்கிறார்கள். இப்போது, நான்கு, ஐந்து உள்ளவற்றை கண்டுபிடித்தால், அதற்கும் புதிய வகை உருவாகுமா? என்று அவரிடம் கேட்டோம். இப்போதைக்கு புதிதாக கண்டுபிடிக்கும் இத்தகைய நான்கு குவார்க் கொண்ட டெட்ராகுவார்க்குகள், 5 குவார்க் கொண்ட பென்டா குவார்க்குகளுக்கு x, y, z என்று பெயர் வைத்துக்கொண்டு போவார்கள், நிறைய வந்த பிறகு ஒருவேளை புதிய வகைகளுக்குப் பெயர் சூட்டலாம் என்றார் திகே.
இது ஒருவேளை உண்மையிலேயே நான்கு குவார்க்குகள் வலுவாக பிணைந்து உருவான டெட்ரா குவார்க் ஆகவும் இருக்கலாம், அல்லது இரண்டு மெசான்கள் வலுவற்ற முறையில் இணைந்து இப்படி ஒரு தோற்றம் தரலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதே என்று அவரிடம் கேட்டோம். ஆமாம் அப்படி ஒரு சந்தேகம் இருக்கிறது. இன்னும் கூர்ந்து கவனித்து இதற்கான சாத்தியக்கூற்றை ஆராயும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றார் திகே.
கோட்பாட்டைத் தெளிவுபடுத்த உதவும் - அர்ச்சனா ஷர்மா
செர்ன் ஆய்வகத்தில் பணியாற்று மூத்த துகள் இயற்பியலாளரான அர்ச்சனா ஷர்மாவுடன் பிபிசி தமிழின் சார்பில் உரையாடினோம். எக்ஸோடிக் ஹெட்ரான் எனப்படும் அரிய வகை ஹெட்ரான்கள் தொடர்பான மூன்று மாதிரிகள் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆய்வுகள் நடக்கின்றன. இது போன்ற அரிய வகை ஹெட்ரான்களை பலமுறை பார்க்க நேர்வது இந்த மாதிரிகளை தெளிவுபடுத்தி உரைக்க உதவியாக இருக்கும் என்கிறார். புதிதாக கண்டறியப்பட்ட துகளில் நான்கும் பெரிய வகை குவார்க்காக இடம் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது என்கிறார் அர்ச்சனா.
பேரண்டம் எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையான கேள்விக்கு விடை காண்பதற்கான பயணத்தில், இந்த கண்டுபிடிப்பு அறிவியலை ஒரு படி அருகே நகர்த்திச் சென்றதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு, ஆம் என்கிறார் அமோல் திகே.

இந்தப் பேரண்டம் ஏன் இருக்கிறது?

பெருவெடிப்பு
படக்குறிப்பு,
பெருவெடிப்புக்குப் பிறகு எப்படி இந்தப் பேரண்டம் விரிவடைந்தது என்பது குறித்த கோட்பாட்டை விளக்கும் வரைபடம்.
குவார்க் துகள் வகைகளில், குவார்க் - எதிர் குவார்க் (ஆங்கிலத்தில் ஆன்டி குவார்க்) என்று முரண் வகை இருக்கிறது என்று மேலே பார்த்தோமில்லையா. அதைப் போல அணுத் துகள் அனைத்துக்கும் கூட எதிர் துகள்கள் உண்டு. அணுவிலும் எதிர் அணு உண்டு. அணுக்களால் ஆன பொருளிலும் எதிர்ப் பொருள்கள் இருக்கவேண்டும் என்று 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இயற்பியலாளர் பால் டைராக் கணித்தார்.
ஓர் அணுவும், எதிரணுவும் சந்திக்க நேர்ந்தால் அவை ஒன்றை ஒன்று அழித்து இரண்டும் கதிர்வீச்சாக, ஆற்றலாக மாறிவிடும்.
ஏறத்தாழ 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பால் இந்தப் பேரண்டம் விரிவடையத் தொடங்கியதில் இருந்து துல்லியமாக சமமான எண்ணிக்கையிலேயே அணுக்களும், எதிரணுக்களும் உற்பத்தியாகி வந்திருக்கவேண்டும். அப்படி இருக்கும்போது ஒவ்வொரு அணுவையும், எதிரணு ஒன்று அழித்திருக்குமானால், இந்த உலகத்தில் ஓர் அணுவோ, ஒரு பொருளோ இருந்திருக்கக் கூடாது.
ஆனால் பல லட்சம் கோடி விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், அண்டசராசரம் அத்தனையும் வெறும் பொருள்களால் ஆனவை மட்டுமே. எதிர்ப் பொருள் எங்குமே இல்லையே ஏன்?
அல்லது சம எண்ணிக்கையில் எதிர்ப் பொருள், எதிரணு இருந்து பொருளை, பொருளணுவை அழித்திருந்தால், இந்தப் பேரண்டத்தில் எந்தப் பொருளுமே, விண்மீண்களும், உடுக்கூட்டங்களும், சூரியனும், பூமியும் எதுவுமே இருந்திருக்கக் கூடாது. ஆனால், இவையெல்லாம் இருக்கிறன்றனவே ஏன்? இந்தக் கேள்விதான் இன்றைய உலக இயற்பியலின் அதிமுக்கியமான கேள்வி. விண்வெளி அறிவியல் முதல், துகள் அறிவியல் வரை எல்லாவற்றையும் குடையும் அதிமுக்கியப் பிரச்சனையாக இதுதான் இருக்கிறது.
பொருளும், எதிர்ப்பொருளும் மிகச் சரியாக, சமமான கணக்கில் உற்பத்தியாகி ஒன்றை ஒன்று அழித்துக்கொண்டிருந்தபோது, எங்கோ சமநிலை ஒரு நூல் அளவு தவறி, எதிர்ப்பொருளை விட, எதிரணுக்களைவிட ஒரு நூலளவு அணுக்களும், பொருள்களும் அதிகமாகிவிட்டன. அந்த நூலளவு பொருள்கள்தான் பல லட்சம் கோடி விண்மீன்களாக, பேரண்டத்தில் உள்ள அத்தனையுமாக உள்ளன என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்த தவறு எங்கு நடந்தது, எப்படி நடந்தது என்பதற்குதான் விடையில்லை.
தற்போது நான்கு 'சார்ம்' வகை குவார்க்குகள் கொண்ட முக்கியமான இந்த டெட்ராகுவார்க் கண்டுபிடிப்பை நிகழ்த்திய LHCb திட்டத்தின் முழுப்பெயர் Large Hadron Collider beauty என்பதாகும். இந்த ஆய்வுத் திட்டம் அமைக்கப்பட்டதன் நோக்கமே பெருவெடிப்புக்குப் பிறகு, எதிர்ப்பொருள்களால் அழிக்கப்படாமல் பொருள்கள் தப்பிப் பிழைத்து நமது இந்தப் பேரண்டத்தை உருவாக்கியது எப்படி என்பதை ஆராய்வதுதான்.
-----------------------------------------------------------
வீணானதே அனைத்து ராஜதந்திரங்களும்.
இந்தியாவுடனான சபஹார் ரயில்வே திட்டத்தை ஈரான் நாடு ரத்து செய்துள்ள நிலையில், இலங்கையும் கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரீசிலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுகமான சபஹாரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லை வரை இந்தியா சார்பாக ரயில்வே பாதை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மற்றும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஆகியோர் இடையே கடந்த 2016ம் ஆண்டு இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது.
இதனால் ஈரான் இந்தியாவுக்குத் தேவையான பெட்ரோலை இந்திய ரூபாயிலேயே வாங்கிக்கொள்வதாக கூறியது.இதனால் டாலர் சேமிப்பு இந்தியாவில் உயரும்.ரூபாய் மதிப்பும் உயரும்.
ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் இதற்கான நிதி உதவிகளை இந்தியா வழங்காமல் இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்தியாவின் உதவியின்றி ஈரான் ரயில்வே அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவுடன் ரூபாய் 30 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தத்தை ஈரான் கையெழுத்திட்டிருக்கும் சூழலில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் கைவிட்டுள்ளது.
இதனிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுகத் திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருகிறார். இந்தத் திட்டத்தை இந்தியாவுக்கு பதில் சீனாவுக்கு வழங்க இலங்கை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. .
இந்திய பண மதிப்பு டாலருக்கு எதிராக உயர்வதை தடுக்க அமெரிக்கா செய்த சதியால் ட்ரம்ப் பேச்சைக் கேட்டுந ல்ல வாய்ப்பை மோடி கெடுத்து விட்டார்.
நேபாளம்,ஈரான் இப்போது இலங்கை என இந்தியா தன் நண்பர்களை இழந்து வருகிறதி.இவர்கள் சீனாவுடன் நட்பு பாராட்டினால் இந்திய பாதுகாப்புக்கு சீனாவால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்பதை கௌடில்ய வாரிசுகள் உணராதது இந்தியாவிற்குதான் கேடு.
-------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?