செவ்வாய், 31 ஜனவரி, 2012

மகான் அஜ்மல் கசாப்?

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு நியாயமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை என்றும் அவர் தரப்பில் அவருக்கென நியமிக்கப்பட்டுள்ள வழக்குரை0ர் ராஜூராமச்சந்திரன் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

நீதிபதி அப்தாப் ஆலம் முன்பு நடந்த விசாரணையின்போது அவரது வக்கீல் வாதிடும்போது" அஜ்மல் கசாப் மீது தேத்திற்கு எதிரான சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால் இந்த குற்றத்தில் கசாப்புக்கு பங்கு எதுவும் இல்லை. கசாப் கொலைக்குற்றவாளியாக கருதினாலும் நாட்டுக்கு எதிரான போரில் ஈடுபட்டார் என்பது நிரூபணம் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்கு எதிராக அவர் எதிர்த்து வாதிட முழு உரிமை உண்டு" என்று கூறியுள்ளார்.


கசாப்பை பொறுத்தவரை மும்பை ஐகோர்ட் அவருக்கு மரணதண்டனையை கடந்த 2011 பிப்ரவரி மாதம் 21 ல் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு 5 முறை தூக்கிலிடும்படி கடும் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தது.
 2008 நவம்பர்26ம் தேதிய மும்பையில் கசாப்பும் அவன் கூட்டாளிகளும் நடத்தியதாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.பலர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பட்டு கசாப் பிடிபட்ட போதும் கூட அவனது வக்கீல் எப்படி இவ்வாறு வாய் கூசாமல் வாதாடுகிறார்?.

இப்படியே போனால் "கசாப் இந்திய விடுதலைக்காகப் போராடிய தியாகி .மும்பை தாக்குதலில் 166 பேர்கள் இறக்கவில்லை.அவர்கள் அனைவரும் தற்கொலை செய்து கொண்டார்கள்.மற்றவர்களை கசாப்பும் அவனது கூட்டாளிகளும் தனது உயிர்களை மதிக்காமல் காப்பாற்றியுள்ளனர்.
கசாப்புக்கு பரவீர் சக்கர விருது கொடுக்க வேண்டும்"
-என்று கூட கூறுவார் போல் இருக்கிறது.வக்கீல்கள் தனது கட்சிக்காரரை காப்பாற்ற வாதாட வேண்டியதுதான்.
ஆனால் தனது மனசாட்சிக்குக் கூட துரோகம் என தெரியுமளவு கதையை அவிழ்த்து விட வேண்டுமா ?

இன்னும் எத்தனை காலம் தான் கசாப்பை வைத்து காமெடி செய்யப்போகிறார்கள்? இப்படியே போனால் அடுத்த தாக்குதல் வந்து விடும்.பின் அவர்களையும் வைத்து வாதாடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.
மறுபடியுமா?

______________________________________________________________________
ரோஜா அரசியல்

காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக்கள் அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது.அதில் அதிக அளவில் பயிரிடும் நாட்களாக கொலம்பியாவும் ஈக்குவடாரும் உள்ளது.கிட்டத்தட்ட அமெரிக்காவின் 80%ரோஜா தேவையை இந்த இரு நாடுகளுமே தீர்க்கிறது.
கொலம்பியாவில் மட்டும் இந்த ரோஜா வளர்ப்பில் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறதாம்.கிட்டத்தட்ட ஒரு லட்சம் பில்லியன் டாலர்கள் இதில் வருமானம் வருகிறதாம்.
கொலம்பியாவின் முக்கிய பயிரிடலான கோகோ,கொக்கோயின் தஒழிலுக்கு இந்த ரோஜா வளர்ப்பு மாற்றுத்தொழிலாக மாறீயுள்ளது.
ஆனால் இப்போது இந்த 2012 காதலர் தினத்துக்காக கட்டுக்கட்டாகா ரோஜாக்கள் கொலம்பியாவில் உருவாகி வரும் வேளையில் அந்த ரோஜா வளர்ப்பில் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துக்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவுக்.அதனால் அதை சூடும் இளம் பெண்கள் புற்று நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்க அரசு அச்சம் தெரிவித்துள்ளது.
உண்மையில் கொலம்பியா,ஈக்குவெடார் போன்ற நாடுகளில் இடது சாரி கட்சிகள் பலம் பெற்று வருவதுதான் இந்த புற்று நோய் பூச்சாண்டிக்குக் காரணம் என்று அந்நாடுகள் கருத்து தெரிவித்துள்ளது. வழக்கமான வேளாண்முறையிலேயே ரோஜாக்களை பயிரிட்டதாக அந்நாடுகள் தெரிவித்துள்ளது.
_______________________________________________________________________________
குறைந்துவரும் ஜப்பான் மக்கட் தொகை.
______________________________________________

ஜப்பானின் மக்கள் தொகை வரவர குறைந்து கொண்டு இருப்பதாகஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானின் தற்போதைய மக்கள் தொகை, 12 கோடியே 77 லட்சம். மக்கள் தொகை குறித்து, அந்நாட்டு சுகாதார மற்றும் மக்கள் நலத் துறை அமைச்சகத்தின், தேசிய மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆய்வுக் கழகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 2060 ம் ஆண்டில், ஜப்பான் மக்கள் தொகை, தற்போதைய மக்கள் தொகையை விட, மூன்றில் ஒரு பங்கு குறைந்து, 8 கோடியே 67 லட்சமாக ஆகி விடும். இதே நிலை நீடித்தால், 2110ல், 4 கோடியே 29 லட்சமாகி விடும்.
தற்போது உலக அளவில், ஜப்பானின் சராசரி மனித ஆயுள்தான் அதிகமாக உள்ளது. 2010 கணக்கெடுப்பின்படி, சராசரி மனித ஆயுள், 86.39 ஆண்டுகளாக உள்ளது.
 2060ல், பெண்களைப் பொறுத்தவரை, 90.93 ஆண்டுகளாக அதிகரித்து விடும். ஆண்களின் சராசரி ஆயுள் தற்போதைய, 79.64 ஆண்டுகளில் இருந்து, 84.19 ஆண்டுகளாக அதிகரிக்கும். இந்த மக்கள் தொகை குறைவுக்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. 

 தற்போதைய ஜப்பானிய இளைய சமுதாயம், தங்களின் வாழ்க்கைக்கும், வேலை வாய்ப்புக்கும், குடும்பத்தை ஒரு பாரமாகக் கருதுவதால்,திருமணம் செய்யவதிலும்,குழந்தைகளைப்பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.அதை ஒரு சுமையாகவே கருதுகின்றனர். கடந்தாண்டு ஏற்பட்ட சுனாமியில், 19 ஆயிரம் பேர் பலியாயினர்.

சுனாமியால் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால், பெரும்பாலானோரின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் இளைய தலைமுறையினர் குடும்ப வாழ்வை கண்டு ஒது0குகிறார்கள்.என்று ஆய்வு தெரிவித்துள்ளது.


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++பனி கண்டத்தில் தனியே நிற்கும் இந்த கட்டிடம் பற்றி கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் உள்ள முக்கிய விதைகள்,தாவர வகைகள் இதில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 
காரணம் இந்த உலகம் அணு யுத்தத்தினாலோ,இயற்கை சீற்றத்தினாலோ பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட அழிவை சந்தித்தால் இவ்விதைகளை,தாவர வகைகளை மீண்டும் பயிரிடுவதன் மூலம் உலகை மறு உருவாக்கம் செய்யத்தான்.
அதற்கு பனி படர்ந்த கண்டத்தி இந்த பாதுகாப்பான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.நாம் பார்ப்பது அதன் வாயிற் பகுதியைத்தான்.கட்டிடம் பாதுகாப்பாக பாறைகளைக்குடைந்தது போல் கட்டப்பட்டுள்ளது.
_______________________________________________________________________________
ரூபிக் கியூப் மூலம் உருவாக்கப்பட்ட ஓவிய0கள்.ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஹிட்லரிசம்?

ஜெர்மனியின் அரசுதலைவராக உருவாகி, சர்வாதிகாரி என்று பெயரெடுத்து இன வெறியுடன் லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துஉலகையே வெல்ல போரில் பெரும் அழிவு ஏற்படுத்தியஅடால்ஃப் ஹிட்லர் எழுதிய மெயின் கேம்ப் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வெளிட  தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஹிட்லருடைய நினைவலைகளைத் தொகுப்பாகக் கொண்ட மெயின் கேம்ப் புத்தகத்திலிருந்து சில பகுதிகளைத் தன்னுடை வாரப் பத்திரிகையில் சிறிது சிறிதாக வெளியிட பீட்டர் மெக் கீ என்பவர் திட்டமிட்டார்.


ஆனால் ஹிட்லர் பிறந்த பவேரியா மாநில அரசு இந்த நூலின் பதிப்புரிமையை வைத்திருக்கிறது. தன்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் இதை பதிப்பிக்கக் கூடாது என்று அது கூறிவிட்டது. ஹிட்லர் நினைத்தத- பேசியது சொல்வதால் நாசிசம் மீண்டும் எழ வாய்ப்பாகலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இத்தனை காலத்துக்குப்பின் நாசிசம் உயிர்த்தெழுமா? இந்த பயம் தேவையா? என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இப்போதே ஜெர்மனியில் சில இடத்தில் மறைமுகமாக நாஜி இயக்கம் என்ற பெயரில் சிலர் கூடி ஆலோசித்துவருகிறார்கள்.இது போன்றா செய்திகளால் அவர்கள் வலுப்பெற்று மீண்டும் ஆர்ய இனவாதம் தலைதூக்கிவிடக்கூடாதில்லையா? வரும் முன் தடுப்பது நல்லதுதானே.ஹிட்லரின் கொள்கைகள் நல்லவையாக இருந்தால் இந்தப்பயமே தேவையில்லையே?
________________________________________________________________________________________________


ஊழலுக்கு "தடை "போட்டால் போதுமா?

எஸ் - பேண்ட் ஒதுக்கீடு தொடர்பாக இஸ்ரோவின் துணை நிறுவனமான ஆன்டிரிக்ஸ் மற்றும் தனியார் நிறுவனமான தேவாஸ் ஆகியவற்றிற்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு காரணமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மற்றும் 3 விஞ்ஞானிகளை, இனிவரும் காலங்களில் அரசின் எந்தவொரு திட்டத்திலும் நியமிக்கப்போவதில்லை என்ற முடிவை மத்திய அரசு அறிவித்தது.
பிரதமருக்கான அறிவியல் ஆலோசனைக் குழு தலைவரும், பெங்களூரில் உள்ள ஜவாஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் கௌரவத் தலைவருமான சி.என்.ஆர்.ராவ்:
 "இஸ்ரோவில் பணியாற்றி நாட்டுக்கு நீண்ட காலமாக சேவை செய்தவர்களை அரசு நடத்துகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் மீதான விமர்சனம் தவறானது. குப்பையைத் தூக்கி வீசுவதுபோல, விஞ்ஞானிகளை இந்த அரசு நடத்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறீயுள்ளார்.


அவர் அரசியல்வாதிகளுக்கு ஏன் இந்த நடவடிக்கை.இல்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராவ் கேள்வி நியாயமாக இருந்தது போல் தெரிந்தாலும் சரியான வாதமாக இல்லை.விஞ்ஞானிகள் லஞ்சம் பெற்றால் அது தவறில்லையா?  அவர்கள் என்ன நாட்டுக்காக தியாகம் செய்து வருகிறார்களா/ மாதாதாம் கொள்ளையான சம்பளம்-சலுகைகள் பெற்றுக்கொண்டுதான் வேலை பார்க்கிறார்கள்.இதில் நாட்டுக்கான சேவை எனன வந்தது.
இப்போதைய அரசு ஒட்டு மொத்தமாகப்பார்த்தால் ஊழலின் மறுவடிவம்தான் .ஆனால் இதிலும் தப்ப இயலாத அரசியல்வாதிகள் ஆ.ராசா,கனிமொழி,கல்மாடி போன்றோர் சிறை தண்டனை அடைந்தது ஊழலுக்காத்தான்.

விஞ்ஞானி என்பதற்காக அவர்கள் செய்யும் ஊழல்களை மன்னிக்கலாம் என்கிறாரா ராவ்/?
அரசு வேலயில் இனிநியமனம் கூடாது என்பதெல்லாம் ஒரு ஊழலுக்கு துணை போனவருக்கு தண்டனை என்பது மிகத்தவறு.அவர்  மாதவன் நாயர் மீது விசாரணை நடத்தி உண்மை எனில் சிறையில் அடைக்க வேண்டும்.இல்லை என்றால் ஊழலுக்கு தண்டனை என்று ஆ.ராசாவை இனி அமைச்சராக நியமிக்க தடை விதித்து அவரை திகாரில் இருந்து விடுவிக்க வேண்டும்.இதற்கு ராவ் என்ன சொல்கிறார்?
ஆ.ராசாவும் அமைச்சராக இருந்து நாட்டுக்கு சேவை ஆற்றியுள்ளார அல்லவா?


சனி, 28 ஜனவரி, 2012

கோவில் நகைகள்-மகா மோசடி


கோவில்கணக்கு மோசடிகள். 
விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் ஏராளமான அளவில் நன்கொடைகளை திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு அளித்துள்ளார் என்று பல செய்திகள் கூறுகின்றன. தங்க ஆபரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நன்கொடைகள் பற்றிய விபரங்களைத் திரட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் திணறிக் கொண்டிருக்கிறார்கள். நன்கொடை வழங்கப்பட்ட பொருள்களின் பட்டியல் எதுவும் கோவில்களில் இல்லை. இது இல்லாத நிலையில், எவ்வளவு தங்க ஆபரணங்கள் இந்தக் கோவில்களுக்கு கிருஷ்ணதேவராயரால் வழங்கப்பட்டது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இது மட்டுமல்ல, வேறு பல மன்னர்களால் தரப்பட்ட நன்கொடைகளுக்கும் இதுதான் நிலையாக இருக்கிறது.


இது போதாதென்று ஆந்திர மாநில தொல்பொருள்துறை புதிதாக ஒரு குற்றச்சாட்டுடன் வந்திருக்கிறது. திருப்பதி வெங்கடாசலபதி தேவஸ்தானத்தின் வசம் இருப்பதாகச் சொல்லப்படும் மதிப்புமிக்க பொருட்களின் அளவுக்கும், கல்வெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களில் சொல்லப்பட்டவற்றின் மதிப்புக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது என்பதுதான் அது. முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் கோவில் சொத்துக்களான தங்கம் மற்றும் ஆபரணங்களின் கதி பற்றி கோவில் சொத்துப் பாதுகாப்புக்குழுவினர் அபாயம் குறித்து எச்சரிக்கிறார்கள்.

 கோவில்களின் சொத்துக்கள் காணாமல் போய்விடுவதற்கான அனைத்து வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் ஒரு உயர்மட்டக்குழுவை நியமித்து அதன் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்தாகும்.

500 ஆண்டுகளுக்கு முன்பான பல கல்வெட்டுகளை ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்தக் கல்வெட்டுகளில் தெலுங்கிலும், தமிழிலும் ஏராளமான விபரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் அஹோபிலத்தில் உள்ள நரசிம்மர் கோவில், ஸ்ரீகாளஹஸ்தி கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜூனா கோவில், தரணிக்கோட்டையில் உள்ள அமரேஸ்வரர் கோவில் மற்றும் சிம் ஹாசலத்தில் உள்ள லட்சுமிவராஹநரசிம்மசுவாமி கோவில் ஆகியவற்றோடு திருப்பதி வெங்கடாசலபதி கோவிலும் கிருஷ்ணதேவராயர் நன்கொடையைப் பெற்ற பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இது பற்றிக் கருத்து தெரிவிக்கும் அறநிலையத்துறையின் முன்னாள் அதிகாரி ஒருவர், நன்கொடைகள் பற்றிய விபரங்களை முழுமையாகத்தொகுக்காமல் அரசு அதிகாரிகள் விட்டுவிட்டது உண்மைதான். கோவில்களில் உள்ள ஆபரணச்சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா, இல்லையா என்பது பதில் கிடைக்காத கேள்விதான் என்கிறார்.


1970 ஆம் ஆண்டிலிருந்துதான் சொத்துக்கள் அடங்கிய பட்டியலை மாநில அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. நிச்சயமாக கிருஷ்ணதேவராயர் வழங்கிய நன்கொடைகள் அந்தப் பட்டியலில் இருக்கப்போவதில்லை. இத்தனைக்கும் ஆபரணங்களைச் சோதிக்கும் பிரிவு ஒன்று தனியாக அறநிலையத்துறையில் இயங்கி வருகிறது. மன்னர் காலக் கல்வெட்டுகள், பல்வேறு நன்கொடைகள் பற்றிக் குறிப்பிட்டாலும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் வந்த நன்கொடை பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் அறநிலையத்துறையினர். தனது தாயார் நாகாளம்பாவின் பெயரில் நிலங்களையும், ஆபரணங்களையும் கிருஷ்ணதேவராயர் அளித்துள்ளார். 91 முத்துக்கள் அடங்கிய நெக்லஸ் ஒன்றும் அவரால் வழங்கப்பட்டிருக்கிறது.


ஆபரணங்கள் இருப்பதை அறநிலையத்துறை அதிகாரிகள் ஒப்புக் கொண்டாலும் முறையான சரிபார்க்கும் பணி எதுவும் இதுவரை நடக்கவில்லை. முறையான சொத்துப்பட்டியல் தயாரிக்காதவரை, மன்னரால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆபரணங்களை உறுதிப்படுத்த முடியாது என்கிறார் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் துறைப் பேராசிரியரான கிரண் கிராந்த். அவர் உள்ளிட்ட பல்வேறு தொல்பொருள் வல்லுநர்கள், விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ண
தேவராயர் ஆயிரம் தங்கக்காசுகள், ஒரு முத்து நெக்லஸ், மரகதம் பதிக்கப்பட்ட வைரப் பதக்கம், அஹோபிலக் கோவிலுக்கு தங்கத்தட்டு என்று நீண்ட நன்கொடைப்பட்டியலை வாசிக்கிறார்கள்.

ஒருவேளை நன்கொடைகளின் உண்மையான மதிப்பைக் கண்டுபிடித்து, மாயமானதோடு ஒப்பிட்டால் உலகிலேயே பெரும் மோசடி வெளிப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் தொல்பொருள் வல்லுநர்களில் சிலர்.

திருப்பதி வெங்கடாசலபதி கோவில்தான் உலகிலேயே பணக்காரக் கோவில் என்று கருதப்பட்டது. திருவனந்தபுரம் அனந்தபத்மநாபர் கோவிலின் சொத்துக்கள் பற்றிய விபரங்கள் கிடைக்கும்வரை இந்த அந்தஸ்து தொடர்ந்தது. தற்போது இரண்டாவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தக் கோவிலின் ஆண்டு வருமானம் சுமார் 650 கோடி ரூபாயாகும். நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலுக்குச் சொந்தமான தங்கத்தின் அளவு 3 ஆயிரம் கிலோ என்று கூறப்படுகிறது. ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத்தொகையாகவும் வங்கிகளில் இந்த கோவிலுக்குச் சொந்தமான பணம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 300 கோடி ரூபாய், 350 கிலோ தங்கம் மற்றும் 500 கிலோ வெள்ளியை நன்கொடையாக இந்தக் கோவில் பெறுகிறது. இந்தக் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில்தான் மன்னர் காலத்தில் தரப்பட்ட நன்கொடைகள் பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை.அல்லது மறைக்கப்பட்டு விட்டது.
_____________________________________________________________________________________________

இது செவ்வாய் கிரகத்தின் புகைப்படம்.


இது சுரண்டலின் மறு வடிவம்.?
_________________________________________________________________________________

                   ஈழத்து மகாகவி
தெளிவத்தை ஜோசப்
ஆழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஒரு புத்து யிர்ப்பினை ஏற்படுத்திய பெருமையினை, சிறப் பினை கொண்டவராகத் திகழ்கிறவர் மஹாகவி என்கிற ருத்திரமூர்த்தி அவர்கள். இலங்கைப் பாரம்பரியத்தில் தமிழ்க் கவிதை வரலாறு கூறு பவர்கள், ‘குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு என்னும் சங்க இலக்கியங்களில் ஈழத்துப் பூதந் தேவனார் பெயரில் அமைந்துள்ள ஏழு பாடல் களே ஈழத்துக் கவிதை இலக்கிய வரலாற்றின் தொன்மைக்குச் சான்றாக அமைகிறது’ என்று ஆரம்பிப்பதுண்டு.

‘ஈழத்துப் பூதன்தேவனாரிலிருந்து இன்று கவிதை எழுதும் இ.முருகையன் வரை கவிதை மரபொன்று சங்கிலிப் பின்னல் போல் வாழை யடி வாழையென வந்திருப்பதை இலகுவில் மறுக் கவியலாது’ என்கிற பேராசிரியர் கைலாசபதி யின் கூற்றும் இதை ஊர்ஜிக்கும். (பேராசிரியர் கைலாசபதி ஈழத்து முன்னோடிகள், பக்.13)

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலம் வரையும் கூட சமயம், சமயப் பிரச்சாரம், சமயப்பாதுகாப்பு, சமயம் சார்ந்த தலங்கள், பிரபந்தங்கள் போன்ற செய்யுள் இலக்கியங்களாகவே கவிதைகள் இருந்துள்ளன! இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் இறுதிநாட்களில் சமயமே இலக்கியத்தின் முக்கிய பாடுபொருளாக இருந்து வந்தபோதும் கூட, சமகாலச் சமூக தேவைகளையும் பிரச் சனைகளையும் நோக்கும் தன்மையும் ஈழத்துக் கவிதைகளில் இடம்பெறத் தொடங்கின.

                   

பாவலர் துரையப்பா, ப.கு. சரவணபவன், நல்ல தம்பி புலவர், சோமசுந்திரப் புலவர் ஆகியோர் இம்மாற்றத்தின் முன்னோடிகள் (திருமதி கலை யரசி சின்னையா எம்.ஏ, ஈழத்துக் கவிதை இலக் கியம் கட்டுரை, கொழும்பு கட்டுபெத்தை வளாக தமிழ் இலக்கிய மலர் 1977)

இந்த மாற்றங்களின் வழி மேற்கிளம்பிய ஈழத்து தமிழ் கவிதை என்னும் ஒரு மரபுக்கு வித்திட்டவராக மஹாகவியைக் கொள்ளலாம். கொண்டாடலாம். மஹாகவியைப் பேசும்போது கூடவே முருகையனும் நீலாவணனும் கை கோர்த்து வந்து நிற்பதை தவிர்த்துக் கொள்ள முடிய வில்லை. மூவரும் ஒரு காலத்தவர்கள்.( மஹா கவி 1927-1971, நீலாவணன் 1931-1975, முருகை யன் 1935 -2009) ‘50க்கும் 80க்கும் இடைப் பட்ட காலப் பகுதியில் படைப்புகளின் அளவி லும் தரத்திலும் இலங்கையின் ஏனைய கவிஞர் களைவிட இவர்கள் மூவரும் மிக உயர்ந்து நின்றார்கள்.

இலங்கைத் தமிழ்க் கவிஞர்களிடையே மஹாகவி எவ்வளவுதான் ஒரு இமயம் போல் உயர்ந்து நின்றாலும், மஹாகவியை விட நீலா வணனே சிறந்தவர் என்றும், இவ்விருவரை விட வும் முருகையனே சிறந்தவர் என்றும் கற்பிக்கும் வட்டாரங்கள் இன்று முண்டு.

‘கவிஞரின் கவிஞர்’ என்று முருகையனை போற்றுவதற்குக்கூட பேராசிரியர் கைலாசபதி கூச்சப்படவில்லை என்று குறிக்கின்றார் சண் முகம் சிவலிங்கம். (இலங்கை சாகித்திய விழா மலர் 1993, சண்முகலிங்கம் சிவலிங்கம்)

அளவெட்டியில் 1927ல் பிறந்த ருத்திர மூர்த்தி (9.1.1927) என்கிற மஹாகவி அவர்கள் பிந்திய1940களில் கிராம ஊழியனில் ஆரம் பித்து, வரதருடன் தேனி மறுமலர்ச்சியில் இணைந்து விஜயாபாஸ்கரனின் சரஸ்வதியுடன் ஊடாடி ஈழகேசரி, வீரகேசரி, சுதந்திரன், விவேகி, தேனருவி என ஈழத்துப் பேரேடு, சிற்றேடுகளில் தன் கவிதை மனம் திறந்தவர். ‘சோலை கடல் மின்னல் முகில் தென்றலினை மறவுங்கள். மனிதனை அதுவும் சாதாரண மனிதனைப் பாடுங்கள்; அவனது இன்னல் ஏழ்மை உழைப்பு உயர் வினைப் பாடுங்கள்’ என்று அறைகூவல் விடுத் தவர் மஹாகவி.


‘இன்னவைதான் கவி எழுத ஏற்றபொருள் என்று பிறர் சொன்னவற்றை நீர் திருப்பிச் சொல் லாதீர்’ என்று கவிதைக்குள் பிரவேசிப்பவர் களுக்கு அரைத்த மாவரைக்காதீர்கள் என்று அறிவுறுத்தியவர் மஹா கவி.

மஹாகவியின் ஆரம்பகாலக் கவிதைகள் யாழ்ப்பாண கிராம மக்களை, மக்களின் வாழ்வி யல்புகளை, இன்ப துன்பங்களை பாடுவதா கவே அமைகின்றன. பிறந்த மண்ணை நேசித்த பிறவிக் கவிஞர் அவர் என்று கூறும் இரசிகமணி கனக செந்தில் நாதன்,

‘கொண்டேன் கொடுக்கின்றேன்!/ கொள்ளா விட்டால் என்ன. / கோதைப் பழமென்பார்/ குறை கள் கண்டால் என்ன!’

என்று ஒரு கவிஞனுக்கே உரிய காம்பீர்யத் துடன் எக்காளமிட்டவர் என்று மஹாகவியின் எந்த ஒரு நூலும் வெளிவராத 50 களிலேயே இனம் கண்டு எழுதி வைத்துள்ளார். (ஈழத்து பேனா மன் னர்கள், கரவைக்கவி கந்தப்பனார்; ஈழகேசரி)

                       

‘மஹாகவியின் பெரும்பாலான கவிதைகள் யாழ்ப்பாண கிராமிய வாழ்வைக் கருப்பொரு ளாகக் கொண்டவை. கிராமியத்தை மஹாகவி போல் தமிழ் கவிதைகளில் வெளிக்கொணர்ந்த பிரிதொரு கவிஞன் இல்லை எனலாம். இந்த வகையில் இவருக்கு அண்மையில் நிற்கக் கூடியவராக நீலாவணன் ஒருவரையே கூற முடியும்’ என்று அடித்துக் கூறுகின்றார் மஹா கவி நூல் வெளியீட்டுக்குழு அமைத்து, அதனூ டாகவும் தனியாகவும் அவருடைய படைப்புக் களை நூலுருவாக்குவதில் பெரிதும் முன்னின்று உழைத்தவரான கவிஞர் எம்.ஏ. நுஃமான் அவர்கள்.

தனிக் கவிதைகள், தன்னுணர்ச்சி கவிதை கள் என்றே ஆரம்பத்தில் பாடினாலும் பிறகு ஏறத் தாழ அறுபதுகளில் மானிட வாழ்வை ஒரு பெரும் பரப்பில் நோக்கும் தன்மை அவரிடம் மேலோங் கத் தொடங்கியது.

மஹாகவியின் தனிப்பாடல் காலக்கட்டத் தில் அவர் அறிமுகப்படுத்திய குறும்பா என்னும் புதிய செய்யுள் முறை அவருக்கு ஒரு ஏகோ பித்த புகழையும் பிரபல்யத்தையும் மகோன்ன தத்தையும் கொடுத்தது.

மஹாகவியின் குறும்பாக்களை தனது இளம்பிறை சஞ்சிகையில் உரிய கவனத்துட னும் ஓவியக் கனதியுடனும் பிரசுரித்ததுடன்,100 குறும்பாக்களைத் தொகுத்து தனது அரசு வெளியீட்டின் மூலம் மஹாகவியின் குறும்பா என் னும் தலைப்புடன் 1966ல் நூலாக்கிக் கொடுத்த சீர்மை எம்.ஏ. ரஹ்மான் அவர்களுடையது.

ஆங்கிலத்தில் 5 வரிகளில் ஒரு குறிப்பிட்ட யாப்புமுறையில் அமையும் கவிதைகளை லிமரிக் என்றழைப்பர். இத்தகைய கவிதை முயற் சியை தமிழில் அறிமுகப்படுத்தல் வேண்டும் என்று மஹாகவிக்கு ஏற்பட்ட உந்துதலின் விளைவே குறும்பாவாகும். மஹாகவி நிறைந்த புலமையும் அகண்ட பார்வையும் ஆழ்ந்த திளைப்பும் புதிய வீறும் ஒருங்கே அமைந்த நாடறிந்த கவிஞர். இவர் குறும்பா என்னும் புதிய செய்யுள் முறையை அமைத்து, அச்செய்யுள் முறைக்கு இலக்கணம் வகுக்கத்தக்கதான குறும்பா தொகுப்பைத் தந்ததன் மூலம், எந்தப் பொருளும் கவிதைக்கு அந்நியமானதல்ல என் பதை நிரூபித்துள்ளதுடன் தமிழ்க் கவிதை வளத்தினை செழுமைப்படுத்தியுள்ளார்.
                       

லிமரிக் என்னும் குறும்பாவை ஈழத்துக் கவிதை உலகிற்குள் கொண்டு வந்ததைப் போலவே, லிரிக் என்னும் இசைப் பாடல்களை யும் கொண்டு வருகின்றார் மஹாகவி, இந்த மாநிலத்துப் பெரு வாழ்வு என்னும் இசைத் தமிழ்க் காப்பியத்தின் மூலம். இப்பாடல்கள் யாவும் நிகழ்கால வாழ்வு பற்றி அமைந்தவை. அடுத் தடுத்துப் பாடப்படின் ஒரு தொடர்பும் அமையப் பெற்றவை. இப்படித் தொடர்பு அவசியம் இல்லை எனினும், அஃது இருப்பது கவிஞரின் சுவைப் பெருக்கத்திற்கே உதவுகின்றது. மஹா கவி கோலியிருக்கும் வழியை பிற கவிஞர்களும் பயில்தல் ஆரோக்கியமான இலக்கியப் பணி யாக அமைதல் கூடும் என கூறியுள்ளார்.


[‘காலம்’ இதழில் வெளியான கட்டுரையின் சுருக்கம்.]
--------------------------------------------------------------------------------------------------------------------------------

விருது பெற்ற படவரிசை,


புலிட்சர் விருது பெற்றப்புகைப்பட வரிசை.

அனைத்தும் தீவிரவாத ,போர் கொடுமைகளின் வடிவம்தான்.

வெள்ளி, 27 ஜனவரி, 2012

வேலை தேவை


எதிர்வரும் பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட600 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் இருப்பதாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது.
மூன்றில் ஒரு தொழிலாளி அல்லது உலக மக்கள் தொகையில் 110 கோடி வேலையில்லாமல் அல்லது வேலையிருந்தும் வறுமையில் வாடுவதாக தொழிலாளர் ஆணையத்தின் இயக்குனர் ஜூவான் சொமாவியா தெரிவித்துள்ளார். ”வேலைவாய்ப்பினை உருவாக்குவதுதான் தற்போது உலக நாடுகளின் முன்னுள்ள முக்கிய வேலையாகும்” என அவர் கூறியுள்ளார். இதனை அரசாங்கங்கள் எடுக்கும் தீவிரகொள்கைமூலம்தான் நடைமுறைப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.
யூரோ மற்றும்டாலர் கடன் பிரச்னைகள் விரைவில் சுமுகமாகத் தீர்க்கப்பட்டாலும் 2016 ஆம் ஆண்டு வரை உலகத்தில் வேலைவாய்ப்பின்மை மதிப்பீடு 6 சதவிகிதமாக இருக்கும். 2011 ஆம் ஆண்டு 15 முதல் 24 வயது வரையுள்ள ஏறத்தாழ 75 மில்லியன் இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருந்ததாக சர்வதேச தொழிலாளர் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
 இதற்கு இப்போதே வளரும் நாடுகள் முதல் வளர்ந்து விட்டதாகக் கருதப்படும் நாடுகள் வரை நடவடிக்கை எடுத்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இல்லையேனில் வேலை வாய்பின்மையும்,வறுமையும் உலகநாடுகளில் முந்தைய 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு சென்று உழைக்கும் மக்கள் போராட்டமாக வடிவெடுத்து கம்யூனிச பூதம் வந்துவிட வாய்ப்பை தந்து விடும்.அமெரிக்கா உட்பட்ட மேலை நாடுகள் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
பொருள்தான் இவ்வுலகின் ஆதாரமாக உள்ளது.அதனால்தான் அது பொருளாதாரமாகியுள்ளது.
வேலையின்மையும்-பணமின்மையும் ஒரு வளர்ந்த நாடும்,உலகின் பலநாடுகளின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் அமெரிக்க நாட்டின் வளரும் தலைமுறையினரை என்ன பாடு படுத்திவருகிறது என்பதை கீழுள்ள செய்தி மூலம் பார்த்துக்கொள்வோம்.
மனநோயாளிகளாக 4.5 கோடி அமெரிக்கர்கள்!
கடந்த ஆண்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்களில் 4 கோடியே 59 லட்சம் பேர் மனரீதியான பிரச்சனையை எதிர்கொண்டிருக்கிறார்கள். இது அதிகாரபூர்வமான தகவலாகும். போதை மருந்துப்பழக்கம் மற்றும் சுகாதாரத்துறை பற்றிய தேசிய ஆய்வை அமெரிக்க அரசு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவாகத்தான் அதிர்ச்சிகரமான புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன. “சாம்ஹ்சா” அமைப்புதான் இந்த ஆய்வை நடத்தியது. 18 வயது முதல் 25 வயது வரையிலானவர்களிடம், 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ஏற்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களில் 29.9 விழுக்காட்டினர் மனரீதியான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14.3 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டனர்.

வளர்ந்த நாடுகளில் இந்தப் பிரச்சனைகள் பெரும் அளவில் இல்லை என்று இதற்கு முந்தைய ஆய்வுகள் கூறிவந்தன. மற்ற எந்த உடல்நலப் பாதிப்பையும்விட, மனரீதியான நோய்கள்தான் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளன என்பது உலக சுகாதாரக்கழகத்தின் கருத்தாகும். ஆனால் கடந்த பல ஆண்டுகளாகவே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் மனரீதியான பாதிப்புகள் இருந்தன. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, வேலையிழப்பு மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நோய் அமெரிக்கப் பொருளாதாரத்தின் மீது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவர்களின் சிகிச்சைக்காக அமெரிக்க அரசால் 2002 ஆம் ஆண்டில் மட்டும் 15 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 67 ஆயிரத்து 500 பேர்(12 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.

2010 ஆம் ஆண்டுதான் முழுமையான ஆய்வை சாம்ஹ்சா நடத்தியது. அதன்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஆண்களைவிட, பெண்களே அதிகமான அளவு மனரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களில் போதை மருந்திற்கு மிக அதிகமாக அடிமையாகி இருப்பர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டைத் தொடுகிறது. பதின்பருவத்தைத் தாண்டிய அமெரிக்கர்களில் ஐந்து விழுக்காட்டினர், அதாவது 1 கோடியே 14 லட்சம் பேர் கடுமையான மனநோயால் அவதிக்குள்ளாகினர். போதை மருந்து பயன்பாடு பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் பெரிய அளவில் நடந்தாலும், அதன் பயன்பாடுகள் இளைஞர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை.

இந்தப் புள்ளிவிபரங்கள் பற்றிக் கருத்து தெரிவித்த சாம்ஹ்சாவின் நிர்வாகி பமேலா ஹைடு, நமக்குக் கிடைத்துள்ள புள்ளிவிபரங்கள் போதை மருந்து பயன்படுத்துபவர்களுக்கு சிகிச்சை தர வேண்டியதன் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. மனநோய் என்பது வெற்றிகரமாக தீர்க்கக் கூடியதுதான். மக்கள் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள். மனநோய்க்கான சிகிச்சை சேவை அதிகப்படுத்தப்பட்டால் மக்கள் கூடுதல் பலனடைய வாய்ப்பிருக்கிறது. இதுவொன்றும் தனிமையான நோய் அல்ல. இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றோடு சேர்ந்தே இருக்க வாய்ப்புள்ளது. நடத்தை தொடர்பான பிரச்சனைகளும் இதற்குக் காரணமாக உள்ளது. தூக்கமின்மை, அதிகமாக மது அருந்துதல், புகைபிடித்தல், உடல்ரீதியான செயல்பாடின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளும் கூடவே உள்ளன. மனநோய்க்கு சிகிச்சை அளித்தால், மற்ற பிரச்சனைகளுக்கும் சேர்ந்தே சிகிச்சை கிடைக்கிறது என்கிறார்.

அமெரிக்காவில் உள்ள சிகிச்சை நிலைமையும் அவ்வளவு நன்றாக இல்லை. பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் நான்குபேருக்குதான் 2010 ஆம் ஆண்டில் மனநல மருத்துவ சேவை கிடைத்திருக்கிறது. கடுமையான மனநோயால் தாக்கப்பட்டவர்களின் நிலை ஓரளவுக்குப் பரவாயில்லை. அவர்களில் 60 விழுக்காட்டினருக்கு மருத்துவ சேவை கிடைத்திருந்தது.

பாதிப்புகள் வேறு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தியது. 87 லட்சம் பேர் தற்கொலைதான் தீர்வு என்று அந்த முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சனைகளோடு, ஆபத்தான அம்சமாக மற்றொன்றையும் இந்த அறிக்கை சித்தரிக்கிறது. 12 வயது முதல் 17 வயது வரையிலானவர்களில் 19 லட்சம் பேர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் அந்த ஆபத்தாகும்.

வியாழன், 26 ஜனவரி, 2012

5 முதலாளிகளின் ஆட்சி -குடியாட்சி?

ந்தியா குடியரசு நாடாகி 62 ஆண்டுகளாகின்றன. அதாவது, கடந்த 62 ஆண்டுகளாக இந்திய மக்களுக்காக இந்திய மக்களால் நடத்தப்படும் மக்களாட்சி நடந்துவருகிறது. ஆனால், இன்றைய இந்திய மக்களின் சமூக&பொருளாதார நிலையை பார்க்கிற போது ஒரு (சிறு)பகுதி இந்தியர்களுக்காக ஒரு (சிறு)பகுதி இந்தியர்களால் நடத்தப்படும் ஆட்சியாகவே இது இருக்கிறது. 
மனித வளர்ச்சி குறியீட்டெண் பட்டியலில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியா ஊழல் உணர்தல் குறியீட்டெண் பட்டியலில் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இருப்பது இந்தியாவில் நடக்கும் மக்களாட்சியின் லட்சனத்தை காட்டுகிறது. உலகின் மிக மோசமான விஷயங்களுக்கான எந்தப் பட்டியலை எடுத்தாலும் அதில் முதல் பத்து இடங்களுக்குள் ஒன்று இந்தியாவிற்கு கிடைத்துவிடுவது இந்தியர்கள் செய்த ‘‘பெரும் பேறு’’. உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைவால் பாதிகப்பட்ட குழந்தைகள் அதிகமிருக்கும் நாடு, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் அதிகம் இறக்கும் நாடு, எச்.ஐ.வி. தொற்று அதிகமிருக்கும் நாடு, எளிதில் குணப்படுத்தப்பட கூடிய நோய்களால் அதிகம் இறப்பவர்கள் இருக்கும் நாடு, படிப்பறிவற்றவர்கள் அதிகமிருக்கும் நாடு, வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் அதிகமிருக்கும் நாடு என பல விஷயங்களில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில், பில்லியனர்களை அதிகமாக கொண்டிருக்கும் முதல் பத்து நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. தனியார் மருத்துவத்துறையில் புழங்கும் பணத்தில் உலகில் அமெரிக்காவிற்கு அடுத்த இடத்திலிருக்கும் இந்தியா, பொதுமக்கள் மருத்துவத்திற்காக அரசாங்கம் செலவிடும் நிதி என்று வருகிற போது உலகின் ஆக மோசமான நாடுகளுள் ஒன்றாக இருக்கிறது. பள்ளிக் கல்வி என்று வருகிற போது இந்தியா செலவிடும் நிதியானது பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளை விட மிகக் குறைவு (ஜிடிபி சதவிகிதத்தில்). கடந்த பத்து ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் உலகின் தலைசிறந்த 500 பல்கலைக்கழங்களின் பட்டியலில் ஓரிரு முறைகள் தவிர (அதுவும் ஓரிரு பல்கலைக்கழகங்கள்) இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றதேயில்லை. முதல் 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் எப்போதும் இந்தியா எப்போதும் இடம்பெற்றதில்லை. ஆனால் சீனாவில் சுமார் 10 பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களுக்குள் வருகின்றன. 21ஆம் நூற்றாண்டில், இந்தியா வல்லரசாகி வருவதாக நாம் நம்பிக்கொண்டிருக்கும் இந்த யுகத்தில் சுமார் 75 சதவிகித இந்தியர்களுக்கு கழிப்பிட வசதி கிடையாது. தகவல் தொழில்நுட்பத்துறையில், குறிப்பாக மென்பொருள் துறையில் உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியாவில் கணிணி மற்றும் இணையத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் கூட கிடையாது. 
  

இந்திய மக்களாட்சியின் முக்கிய அம்சமான மதச்சார்பின்மைக்கு சமீபத்திய ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டிக்கு ஏற்பட்ட கதியே சாட்சி. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் உலகின் புகழ்பெற்ற ஆய்வு நிறுவனமான pew நடத்திய ஆய்வில் மத சகிப்பின்மையில் சவுதி அரேபியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது தெரியவந்தது. இது நம்மில் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். அதற்குக் காரணம், இந்தியா மதச்சார்பற்ற நாடு என்று நாம் அனைவரும் நம்பிக்கொண்டிருப்பதே. சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது மக்களாட்சியின் ஓர் அம்சம் மட்டுமே (இந்திய தேர்தல்களில் பணத்திற்கு இருக்கும் சுதந்திரம் வேறு எதற்கும் இல்லை). சட்டத்தின் மாட்சிமை, அதாவது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற முந்நூறு ஆண்டு கால பழமை கொண்ட மக்களாட்சியின் அடிப்படை தத்துவம் இன்றளவும் இந்திய சமூகத்தில் வேரூன்றவில்லை என்பதே யதார்த்தம். இந்தியாவில் நடக்கும் மக்களாட்சியின் யோக்கியதைக்கு காஷ்மீரிலும், சத்தீஸ்கரிலும் வட கிழக்கு மாநிலங்களிலும் நடக்கும் நிகழ்வுகளே சான்று.


இத்தனைக்குப் பிறகும் உலகின் முதல் பத்து பெரும் பொருளாதார சக்திகளுள் இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த ஆச்சர்யமும் இருக்க முடியாது. இந்தியாவின் பரப்பளவு, மனித வளம் மற்றும் இயற்கை வளம் அத்தகையன. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 20 சதவிகிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்கள், பணக்காரர்கள், மேல் நடுத்தர மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கையானது அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகைக்கு சமம் என்பதை மனதில் கொண்டால் ஏன் இந்தியா உலக அரங்கில் முக்கியமான நாடுகளுள் ஒன்றாக கருதப்படுகிறது என்பது புரியும். ஏறக்குறைய  ஒரே காலகட்டத்தில் தங்களது பயணத்தை தொடங்கிய சுதந்திர இந்தியாவையும், மக்கள் சீனத்தையும் ஒப்பிட்டால் இந்தியா எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது என்பது புரியும். கல்வி, மருத்துவம், தொழிற்துறை என எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் சீனாவின் வளர்ச்சி இந்தியாவை விட மும்மடங்கு அதிகம். பலரும் நினைத்துக்கொண்டிருப்பதைப் போல இதற்குக் காரணம் சீனாவின் ஒரு கட்சி சர்வாதிகாரமல்ல. அது உண்மையெனில் பல ஆப்பிரிக்க நாடுகளும், வட கொரியாவும் அதை சாதித்திருக்க வேண்டும். மாறாக சீனா கடைபிடித்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளே அதன் இன்றைய நிலைக்குக் காரணம். குறிப்பாக முதல் 25 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நில சீர்திருத்தமும் மற்றும் கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களும் சீனாவிற்கு பலமான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தன. இந்த எளிய உண்மையை, உலகப் புகழ்பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்யா சென் உட்பட பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். நீண்ட கால அடிப்படையில் பார்க்கிற போது, பல கட்சிகளைக் கொண்ட மக்களாட்சி இல்லாதது சீனாவிற்கான பலவீனமே தவிர பலமல்ல. இந்தியாவில் இத்தகைய அடிப்படையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேயில்லை என்பதே உண்மை.


கடந்த இருபது ஆண்டு கால இந்தியாவின் ஆட்சியை பார்க்கிற போது இந்தியாவில் நடப்பது பெருநிறுவனங்களுக்காக, பெரு நிறுவனங்களால் நடத்தப்படும் பெருநிறுவன ஆட்சி என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மக்களாட்சி என்பது இந்தியர்களுக்கு இன்னமும் பல காலத்திற்கு கனவாகவே இருக்கும்.என்றே தெரிகிறது.


நன்றி:சண்டே இந்தியன்,
 ________________________________________________________________________
ஆப்கான் ஹெல்மாண்ட்  மாகாணத்தில் கார் குண்டு இன்று [26]வெடித்ததில் 4  பேர்கள்  கொல்லப்பட்டனர.31 பேர் படுகாயமடைந்தனர்.
_______________________________________________________________________
அலபாமா[அமெரிக்கா]வில்சூறாவளியால் பாதிக்கப்பட்டக்குடும்பம்.மிரட்சி மாறா குழந்தை.
_____________________________________________________________________
--------------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு உள்ளங்களே.

வணக்கம்.நமது “சுரன்” வலைப்பூ ஆரம்பித்து முதல் பதிவிட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது.
இன்றுவரை தொடர்ந்து வந்து படித்தவர்களுக்கும்,அவ்வப்போது எட்டி பார்த்து சென்றவர்களுக்கும் எனது நன்றிகள்.
அதிக அளவு என்னை பாதித்த செய்திகளையே மற்ற இதழ்கள்.வலைகளில் இருந்து  மீள்பதிவிட்டிருக்கிறேன்.
அவ்வப்போது சொந்த சரக்குகளும் எட்டி பார்த்துள்ளன.குறைகளை மன்னித்து-மறந்திட வேண்டுகிறேன்.
அவ்வப்போது வந்து சென்றவர்கள் தொடர்ந்து வந்து பார்வையிட வேண்டுகிறேன்.
தொடர்ந்து வந்தவர்கள்மேலும் தொடர விரும்புகிறேன்.அனைவருக்கும் நன்றி.
அதிக மற்றைய வேலைப்பளுதான் சொந்த படைப்புகளைமட்டும் வெளியிட தடையாக இருந்து வருகிறது.அதை விரைவில் சரி செய்ய முயல்கிறேன்.
மீண்டும் நன்றி.
உங்கள் அன்பில்
சுகுமாரன்,

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------