யார்தான் ஆராய வேண்டும்?

முல்லை பெரியார் அணையில் நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று அணையை ஆய்வு செய்த நிபுணர்கள் குழு அறிக்கையை
சமர்ப்பித்துள்ளது. 


முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐந்து 
பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. அந்தக் குழு பல்வேறு நிபுணர்களின் ஆய்வறிக்கைகள் மற்றும் நேரடி ஆய்வு செய்து வருகிறது. இக்குழு [முல்லை பெரியார் ஐவர் குழு] கூட்டத்தில்முல்லை பெரியார் விவகாரத்தில் புதிய அணை  கட்டுவதே பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று கேரள தரப்பு வழக்கறிஞர்கள் கூறிக்கொண்டே இருந்தனர்.அணையை எத்தனை ஆண்டுகள் பழுது பார்த்துக்கொண்டே இருப்பது என்று அவர்கள்கேட்டனர். 


கேரள தலைமை 
பொறியாளர்களின் கருத்தை குழுவினர் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், ரூர்கேலா ஆய்வகத்தின் கருத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் கேரள மாநில கூடுதல் தலைமை செயலர் கூறினார். சுமார் ஒன்றரை மணி நேரம் கேரளதரப்பினர் வாதம் செய்தனர். இதனையடுத்து முல்லை பெரியார் அணையை ஆய்வு செய்த மேத்தா, தத்தா ஆகியோர் விசாரணை குழு தலைவர் நீதிபதி ஆனந்த் முன்பு அறிக்கை தாக்கல் செய்தனர். 
அந்த அறிக்கையில் நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு எந்த சேதமும் ஏற்படாது.நில நடுக்கத்தை சமாளிக்கும் படிதான் அணை கட்டப்பட்டுள்ளது.திடீரென இடியும் வாய்ப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கேரள தரப்பினர் அணையை காலி செய்ய வேண்டும்,புது அணை கட்ட வேண்டும் என்பதையே திரும்ப,திரும்பக் கூறிக்கொண்டே யிருந்தனர்.
கேரள அரசோ ஆய்வு செய்த ஐவர் குழு தமிழக அரசு சொல்லியபடியே ஆய்வு செய்ததாகவும் குழுவினர் மீது நம்பிக்கை இல்லை என நீதிபதியிடம் கூறப்போவதாகவும் கூறியுள்ளது.

இவர்களுக்கு யார்தான் அணையை ஆய்வு செய்ய வேண்டும் அணை999 இயக்குநர்,சாண்டி,அச்சுதானந்தன், ஜேக்கப் ,மோகன்லால் போன்ற ஐவர் குழுதான் ஆய்வு நடத்தவேண்டும என்று நினைக்கிறார்களா?
அல்லது மீண்டும்,மீண்டும் ஆய்வுகள் நடத்தி கடைசியில் கடுப்பில் அணைய உடையுங்கள் என்று குழுவினரை சொல்ல வைக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களா?





_________________________________________________________________________________

முடங்கிய டுவிட்டர்-சமாளித்த முக புத்தகம்,
_______________________________________________
 புத்தாண்டு வாழ்த்துக்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் குவிந்ததால், பிரிட்டனில் "ட்விட்டர்' சமூக வலைதளம், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடக்கமாகி விட்டது. இதனால், பயனாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதாகி விட்டது
. "ட்விட்டர்' சமூக வலைதளம் மூலம் 2012 ஆண்டு பிறப்பைஉலகம் முழுவதிலும் உள்ளோர்,ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டனர். இதனால், பிரிட்டனில் பகலில், "ட்விட்டர்' செயல் இழந்து விட்டது.

அதே நேரம், ஜப்பானில் புத்தாண்டு துவங்கிவிட்டதால், "ட்விட்டரில்' ஜப்பானில் இருந்து வாழ்த்துக்கள் குவிய ஆரம்பித்து விட்டன. நிமிடத்துக்கு, 16 ஆயிரத்து 197 வாழ்த்துக்கள்அப்போது தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், "ட்விட்டர்' ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பளுவால் முடங்கி விட்டது. இதனால், ஏற்கனவே வாழ்த்து தெரிவித்தவரும், வாழ்த்து தெரிவிக்கப்பட்டவரும் தங்கள் செய்திகளைக் காண முடியாமல் தவித்தனர். இதனால் சிலர்கடுப்படைந்தனர்.
இதுபற்றி அவர்கள் பின்புஅனுப்பிய செய்திகளில், "ட்விட்டர் ஈஸ் ஓவர் கெபாசிட்டி ”என்று வார்த்தைகளால் இன்றைய நாளை வீணாகிவிட்டது' என்றும், "இந்த புத்தாண்டில் "ட்விட்டர்' எடுக்க வேண்டிய உறுதிமொழி என்னவென்றால், "இனி நான் எப்போதும் ஓவர் கெபாசிட்டி என்ற நிலைக்குப் போக மாட்டேன்' என்பது தான்' எனவும் குறிப்பிட்டிருந்தனர்.


அதேநேரம், "பேஸ்புக்' சமூக வலைதளம், புத்தாண்டு தினத்தன்று, 100 கோடி அளவிற்கு உலகம் முழுக்க செய்திகள் மற்றும் புகைப்படங்கள்பரிமாறிக்கொள்ளப்படும் என்பதால், அதைச் சமாளிக்கத் தான்தயாராக இருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.அதேபோல் அது புத்தாண்டு தின வாழ்த்துக்களை சமாளிக்கவும் செய்தது.
டுவிட்டர் இந்த நெருக்கடியை முன்னதாக கவனத்தில் கொண்டு தன்னை தயார் படுத்திக்கொள்ளாததுதான் .இப்படி கிண்டலுக்கு ஆளாகும் நிலைக்கு உள்ளாக்கி விட்டது.
________________________________________________________________________



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?