புதன், 11 ஜனவரி, 2012

பொருளாதார நெருக்கடியும்-இந்தியாவும்.


                                                                  -பேரா. வெங்கடேஷ் பி. ஆத்ரேயா
இந்திய அரசாங்கம் கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயக் கொள்கை களை பின்பற்றி வருகிறது. மத்திய அர சின் கொள்கைகள், அந்நிய மூல தனத்தை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில், அவற்றிற்கு வரிச்சலுகை என்ற பெயரில் ‘ஊக்கம்’ அளிப்பதாக உள்ளன. அதே நேரத்தில், மக்களின் தேவைகளைப் பற்றி துளியும் கவலை கொள்ளாததாகவும் உள்ளது.


பொருளாதார நெருக்கடியின் சூழ் நிலைகளில் அரசின் பற்றாக்குறையை குறைப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

1. அரசின் செலவைக் குறைப்பது

2. அரசின் வரவை அதிகரிப்பது

ஒரு நல்ல, ஜனநாயகமிக்க அரசாங் கம் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செலவை அதிகரித்து, அதை ஈடு கட்ட, பன்னாட்டுக் கம்பெனிகளிட மிருந்தும், இந்திய முதலாளிகளிடம் இருந்தும் வரவினை அதிகப்படுத்திட வேண்டும். ஆனால் இந்தியாவின் ஆளும் அரசாங்கம் இதற்கு நேர்மாறாக செயல்படுகிறது. அதாவது, அந்நிய நாட்டுக் கம்பெனிகளின் மீதும், பெரு முத லாளிகள் மீதும் வரி விதித்தால் அவர்கள் ‘ஊக்கம்’ இழந்து சோர்வடைந்து விடு வார்களாம். எனவே அவர்கள் மீது வரி விதிக்காமல், அந்த வரி இழப்பை ஈடு கட்ட, மக்களுக்கு ஒதுக்கப்படுகின்ற கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்றவற்றில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டை, மானியத்தை வெட்டுகிறது.


1991ல் நடைமுறைப்படுத்தப்பட்ட தாராளமயக் கொள்கை என்பதன் உண்மையான பொருள் ‘நெறிமுறை நீக்கல்” என்பதே. கடந்த காலங்களில் தனியார் கையில் இருந்த சாராயக் கடை கள் இன்று அரசு வசம் வந்துள்ளன. அர சிடம் இருந்த கல்வி, சுகாதாரம், விவசாய முதலீடு போன்றவை தனியார் கைக்கு சென்றுள்ளன. இதன் விளைவாக, இத்த கைய துறைகளின் நோக்கமே மாற்றப்படு கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் அரசிடம் இருந்த இந்தத் துறைகளில் தனியார் முத லீடுகள் செய்யப்பட்டதன் காரணத்தால், கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்றவை சேவையாக பார்க்கப்பட்ட நிலைமை மாறி, முழுமையாக சாராயக்கடை போன்று இலாபத்திற்காக மட்டும் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.

சில்லரை வர்த்தகம்


இன்றைக்கு மத்திய அரசு சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனு மதிக்கத் துடித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஒரு சிறிய கடையின் பரப்பளவு சுமார் 200 சதுர அடி ஆகும். ஆனால் அந் நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு வால் மார்ட் போன்ற பன்னாட்டு பகாசுரக் கம் பெனிகள் சில்லரை வர்த்தகத்தில் கால் வைத்தால், அக்கடையின் சராசரி பரப் பளவு 1,08,000 சதுர அடி ஆகும். அப்படி யானால், ஒரு வால்மார்ட் கடை நமது ஊரில் இருக்கும் 1,300 கடைகளை விழுங்கிவிடும். அதேபோல் வேலை வாய்ப்பு பெருகும் என்று கூறுவதும் தவறு. ஒரு சிறிய கடையில் 2பேர் என்றால் 1300 கடைகளில் தற்போது 2600 பேர் வேலை செய்கிறார்கள். 1 வால்மார்ட் கடையில் அதிகபட்சம் 10-20 பேர் மட்டுமே வேலை செய்வார்கள். 2,600 ஏழை மக்களின் வேலை வாய்ப்பினைப் பறித்து 20 பேருக்கு வேலை அளிக்கும் வளர்ச்சி யாகவே இது இருக்கும். வேலை வாய்ப் பினை புதிதாக உருவாக்காமல், இருக் கின்ற வேலைவாய்ப்பினையும் அழித் தொழிக்கக்கூடிய வகையிலேயே வால் மார்ட்டை வரவேற்கிறது அரசு.


பொருளாதாரக் கொள்கைகளை அரசியல் பார்வையோடு உற்று நோக்க வேண்டும். கடந்த 4 ஆண்டுகளில், 2007ல் இருந்து இன்றுவரை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெரு மந்தத்திற்குப் பின்னர், 70-80 ஆண்டு களுக்குப்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக முதலாளித்துவ நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறி வருகின்றன. அமெரிக்கா, ஜப்பான், கனடா, பிரிட்டன், ஐரோப்பா போன்ற நாடுகளிலும் உற்பத்தி பெருக வில்லை. வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் 4ல் 1 பங்கு பேரும், ஸ்பெயினில் 3ல் 1 பங்கு பேரும், கிரீஸ், இத்தாலி போன்ற ஜி- 7 நாடுகளில் பெருவாரியான எண்ணிக்கையிலும் வேலையில்லா இளைஞர் பட்டாளமாக மாறியுள்ளனர். தனிநபர் லாபத்தை மையமாகக் கொண்ட முதலாளித்துவக் கட்டமைப்பில் வேலையின்மையும், வறு மையும் நிரந்தரமானவையே. உழைப்பாளி மக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே இது பிரயோகிக்கப்படு கிறது.

பொருளாதார நெருக்கடி நிலையில், பெரும் கம்பெனிகளின் நிதிச் சந்தையும் பணச்சந்தையும் படுத்துக்கிடக்கிறது. திவாலாகும் நிலையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் முயற்சி யில் அரசு உதவி செய்கிறது. எவ்வித மதிப்பும் இல்லாத பங்குகளை, அரசு அதிகமான பணத்தைக் கொடுத்து வாங்குகின்றது. இதன் விளைவாக ஏற் பட்ட போராட்டம்தான் அமெரிக்காவில் நடக்கும் “வால்ஸ்ட்ரீட்டை கைப்பற்று வோம்”போராட்டம். 99 சதவீதம்மக்களை காப்பாற்றாமல், 1சதவீதமுதலாளிகளைக் காப் பாற்றும் அமெரிக்க அரசினை எதிர்த்தும், பெரும் முதலாளிகளை எதிர்த்தும் நடைபெறுகிறது. அமெரிக் காவின் மொத்த சொத்தில் 40 சதவீதம், இந்த 1 சதவீத முதலாளிகளிடம் குவிந்துள்ளது.

இந்தியாவில் 1991க்கு முன்பு, அதா வது, தாராளமயக் கொள்கைகளை அறி முகப்படுத்தும் முன்பு, பொருளாதாரம் உள்நாட்டுச் சந்தையை, மக்களின் வாழ்வை மையப்படுத்தி இருந்தது. 1991ல் ஏற்றுமதி, இறக்குமதியின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 14 சதவீதம். ஆனால் 2012ல் 50 சதவீதமாக அதிகரித் துள்ளது. அதிகமான ஏற்றுமதி -இறக்கு மதியைச் சார்ந்ததாக இந்தியப் பொரு ளாதாரம் மாற்றப்பட்டிருப்பதால், உலகப் பொருளாதார நெருக்கடிச் சூழலில் முன்பை விட பல மடங்கு இந்தியா தாக் கப்படும் அபாயம் உள்ளது.

அந்நியச் செலாவணி


1991ல் அந்நிய முதலீடுகளை அனு மதித்த பிறகு அந்நியச் செலாவணி இழப்பு அதிகமாகியுள்ளது. ஏனென்றால், அந்நிய முதலீடு என்ற பெயரில் அந்த பணத்தை பன்னாட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் முதலீடு செய்கின் றன. அந்த பணமும் இந்தியாவின் வளர்ச் சிக்கு எந்த வகையிலும் உதவுவ தில்லை. மாறாக பங்குச் சந்தையில் சூதாடி, அந்தப் பணத்தை இரட்டிப்பாக்கி, அந்நியர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

1 டாலரின் மதிப்பு 44 ரூபாயாக இருந் தது, இன்று 54 ரூபாயாக மாறியுள்ளது. இதற்கு, சரக்கு ஏற்றுமதி குறைவதும், அந்நியச் செலாவணி கையிருப்பு குறை வதும் முக்கிய காரணங்கள் ஆகும். அந் நிய முதலாளிகள் வெளிநாட்டில் வணி கக் கடன்கள் வாங்கியுள்ளனர்.இந்தக் கடன்களை எல்லாம் டாலர்களைக் கொடுத்து மட்டுமே திருப்பமுடியும். இந்திய முதலாளிகளின் இத்தகைய கடன்களால் இந்தியா கடுமையாக அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்திக்கும் அபாயம் நம் முன் உள்ளது.

ஏற்றுமதித் தொழில்கள் பாதிக்கப் பட்டால் நம்நாட்டில் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம், ஜவுளி வேலைகள் பறிபோகும். ஏற்றுமதி குறையும் போது நாட்டின் மொத்த கிராக் கியில் ஏற்படுகிற மந்தநிலை ஏற்படுகிறது.

நம் ஏற்றுமதியில் 43 சதவீதம் ஐரோப் பிய ஒன்றியமும், அமெரிக்காவும் வாங்கு கின்றன. எனவே அரசு களத்தில் இறங்கி பொதுத் துறையை மேம்படுத்தினால் மட்டுமே மொத்த கிராக்கி உயரும்.

அவ்வப்போது ஏற்படும் நெருக்கடி, மந்த நிலை, ஏற்றுமதி-இறக்குமதி சரிவு, அந்நியச் செலாவணி வீழ்ச்சி, தொடரும் விவசாய நெருக்கடி போன்றவை வேலை யின்மையை கடுமையாக அதிகரிக்கும். பன்னாட்டுச் சந்தைகளில் விலைகள் வீழ்ச்சியடைய ஆரம்பிக்கும். ஏற்றுமதி விலை சரியும் பொழுது, எவ்வித கட்டுப் பாடும் இல்லாமல் மலிவான வேளாண் பொருட்கள் நமது நாட்டிற்குள் வந்து, விவசாய நெருக்கடியை மேலும் அதிகப் படுத்தும்.

வேலையைப் பறிக்கும் வளர்ச்சி


இந்த நிலையில் தான் மத்திய அரசு இந்தியா 7 சதவீத வளர்ச்சியை அடைந்து விட்டதாக கூறுகிறது. ஆனால் அந்த வளர்ச்சியினை உற்று நோக்கி னால், மூன்றாவது துறையான சேவைத் துறை - 60 சதவீத வளர்ச்சியும், இரண் டாவது துறையான தொழில்துறை - 22 முதல் 25 சதவீதம் வரை வளர்ச்சியும், முதன்மைத் துறையான விவசாயம் வெறும் 15 முதல் 18 சதவீதம் வளர்ச்சியும் எட்டியிருப்பதைப் பார்க்கலாம். ஆனால், நாட்டின் உழைப்பாளர் படையில், 2009ம் ஆண்டின் தேசிய மாதிரி சர்வேயின் படி, 50 சதவீதம் பேர் விவசாயத் துறையில் தான் வேலை செய்கின்றனர். 28 சதவீதம் பேர் சேவைத்துறையிலும், 22 சதவீதம் பேர் தொழில்துறையிலும் வேலை களைச் சார்ந்திருக்கின்றனர்.

28 சதவீதமே உழைப்பாளிக்கு வேலையளிக்கிற சேவைத்துறை (கல்வி, சுகாதாரம் போன்றவை)யில் தனியார் முதலீடுகள் அதிகரித்து இருப்பதால் சற்று வீக்கம் (வளர்ச்சி) உள்ளதாக காட்டப்படுகிறது. ஆனால், 50 சதவீத மக்கள் சார்ந்துள்ள விவசாயத் துறையின் வளர்ச்சியை உறுதி செய்யாமலும், அதில் வேலை வாய்ப்பினை உருவாக்காமலும் கைகழுவிவிட்டது அரசு.

இதன் விளைவாக, நகர்ப்புறங்களில் இருந்து 5 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமப் பகுதிகளில், கடந்த 20 ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்பவர் களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

1991 முதல் 2011 வரை மத்திய அரசு, கூறக்கூடிய வளர்ச்சி என்பது வேலை வாய்ப்பினை உருவாக்கக்கூடிய வளர்ச் சியாக இல்லை. மாறாக வேலை வாய்ப் பை இழக்க வைக்கிற, வேலையைப் பறிக்கிற வளர்ச்சியாகவே இருந்துள்ளது. 7 சதவீத வளர்ச்சி என்று கூறினாலும், வேலை வாய்ப்பில் 0 சதவீதமாகவே இருக்கிறது. கொஞ்ச நஞ்சம் நடந்த வேலை விரிவாக்கமும் முறைசாரா பணிகளாகவே உள்ளன.


2004 - 2005 ஆம் ஆண்டு கணக்குப் படி 45 கோடிப் பேர் கொண்ட இந்திய உழைப்புப் படையில் 7 கோடிப் பேர் மாதச்சம்பளம் பெறுபவர்களாகவும், 13 கோடிப்பேர் ஒப்பந்த மற்றும் அத்தக் கூலிகளாகவும், 25 கோடிப்பேர் சுய வேலை செய்பவர்களாகவும் உள்ளனர். இங்கே “சுயவேலை” என்பதன் பொருள், பாட்டுப்பாடி பணம் கேட்பது, புத்தகம் விற்பது, பூக்கடை வைத்திருப்பது போன்ற தொழில்கள் தான். இவ்வாறாக கடந்த 20 ஆண்டுகளாக ஏழை மக்க ளுக்கு எவ்வித பாதுகாப்பும் அளிக்காத, அளிக்க முன்வராத நாடாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

தீர்வு என்ன?

எனவே, அரசு உள்நாட்டுச் சந்தை யை விரிவுபடுத்திட வேண்டும். இந்திய மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்திட வேண்டும். இன்றைக்கு மக் களுக்கு வழங்கப்படுகின்ற இலவசங்கள் அனைத்தும் பெரிய முதலாளிகளுக்கு வழங்கப்படுகின்ற வரிச் சலுகையில் 1 சதவீதம் கூட கிடையாது. கடந்த 2008ல் டாடா, அம்பானி, பிர்லா போன்ற பெரிய முதலாளிகள் அரசாங்கத்தை அணுகி பெற்ற வரிச்சலுகையால் அரசுக்கு ஏற் பட்ட வரி இழப்பு மட்டும் 4,50,000 கோடி ரூபாய் ஆகும். பெரு முதலாளிகளுக்கு வரிச்சலுகை மட்டுமின்றி, 40,000 கோடி ரூபாய் பொதுத்துறை பங்குகளையும் அரசு விற்று வருகிறது. 


இதிலிருந்து நாட்டை மீட்க, ஊரக வளர்ச்சி, பாசனம், விவசாயம், விவசாயம் சார்ந்த ஆராய்ச்சி மேம்பாடு, கிராம அளவில் சேமிப்புக் கிடங்கு வசதி போன்றவற்றை உருவாக்கி அரசு முதலீடு செய்ய வேண்டும். வேலை வாய்ப்பை மையப்படுத்திய வளர்ச்சியாக இருக்க வேண்டும். அந்நிய மூலதனங்களின் வருகை, வெளியேற்றம் போன்றவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண் டும். இன்றைய அளவில் ஒரு இந்தியன் 2,50,000 டாலர்களை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல அனுமதி உண்டு. இதைப் பயன்படுத்தி பன்னாட்டு நிறு வனங்கள் தங்களின் பினாமிகளைக் கொண்டு, அதிகமான நிதியை வெளியே கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதை முறைப்படுத்திட வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற சாகுபடி நிலப்பரப்பில் பாதிக்குமேல் முதலாளிகள் கையில் உள்ளது. இந்த நிலங்களை எல்லாம் நிலமற்ற விவசாயிகள் பெற, நிலமறு விநியோகம், நிலச் சீர்திருத்தம் போன்றவை மிக மிக அவசியம்.

இதையெல்லாம் செய்ய வேண்டு மானால் இப்பொழுதுள்ள அரசு தனது முதலாளித்துவ வர்க்கச் சார்பை கைவிட வேண்டும்.

                                                                       தொகுப்பு: எஸ்.கார்த்திக்

                                                                                                                                                                                                                                                                                                                           இந்திய மாணவர் சங்கம், மதுரை ,