பணம் வந்த வழிகள்?
மத்திய அமைச்சர் நாராயணசாமி, "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:
“கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என, பல முறை விளக்கம் அளித்து விட்டோம். ஆனாலும், அணுமின் நிலையத்தை தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்டஆயர் இவான் அம்ப்ரோஸ், அணு உலை எதிர்ப்பு போராட்டங்களில் முதலில் பங்கெடுத்தார்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் சார்பில், மத்திய அரசுடன் பேச்சு நடத்தும் தமிழக குழுவிலும் இடம் பெற்றார். ஆனால், இதிலிருந்து திடீரென விலகி விட்டார்.இவரது நேரடி கட்டுப்பாட்டில், தூத்துக்குடி மல்டி பர்பஸ் சோஷியல் சர்வீஸ் சொசைட்டி (டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.,) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் செயல்படுகிறது. இதன் கீழ், மக்கள் கரங்கள், கடலோர மக்கள் கூட்டமைப்பு, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம் ஆகிய தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஒரு நிறுவனத்திற்கு, அணு உலை எதிர்ப்பாளர் உதயகுமாரின் கூட்டாளி புஷ்பராயன், ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.”என்று கூறியுள்ளார்.
அதையே வழி மொழிந்து காங்கிரஸ் தொழிலாளர் சங்கத்தலைவர் சத்திய மூர்த்தி பேசும்போது:-
”அணு உலை எதிர்ப்பாளர்களுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்களுக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன் வரை, அமெரிக்காவிலிருந்து, 54 கோடி ரூபாய் வந்துள்ளது. இந்த பணத்திற்கு கணக்கு கேட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய உள்துறையினரும், உள்ளூர், "கியூ' போலீசாரும் விசாரணைக்கு சென்றனர்.இதை முன்பே தெரிந்துகொண்ட அணு உலை எதிர்ப்புக் குழு, விசாரணைக்குச் செல்லும் அதிகாரிகளிடம் பேரம் பேசியது. ஆனால், மத்திய அரசு சமயோசிதமாக, அதிகாரிகள் குழுவை கடைசி நேரத்தில் மாற்றி அனுப்பியது. அந்த குழுவினர், தொண்டு நிறுவனத்தில் விசாரணை நடத்தினர். அப்போது கம்ப்யூட்டர், "ஹார்டு டிஸ்க்'கை மாற்ற, அங்கிருந்த சிலர் முயற்சித்தனர். ஆனாலும், தேவையான தகவல்களை, அதிகாரிகள் சேகரித்து விட்டனர்.
தொண்டு நிறுவனத்திற்கு வந்த பணத்தில் தான், அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கிறோம். ஏழைகள், மாற்றுத் திறனாளிகள், கைம்பெண்களின் நலனுக்கு செலவு செய்வதாக, சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள்,வெளிநாட்டு நிதியை கணக்கு காட்டுகின்றன.இது தொடர்பான ஆவணங்களை, மத்திய அரசு கேட்டுள்ளது. ஆவணம் தராவிட்டால், மத்திய வெளிநாட்டு நிதி பங்களிப்பு முறைப்படுத்துதல் (எப்.சி.ஆர்.ஏ.,) சட்டத்தில்சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிய வேண்டும்”.இவ்வாறு சத்தியசீலன் கூறினார்.
இந்த குற்ற சாட்டுகளுக்கு அணு உலை எதிர்ப்பு குழு தலைவர்கள் என்ன கூறப்போகிறார்கள்?
தூத்துக்குடியில் மத்திய பொருளாதார புலனாய்வு பிரிவினர் இம்மாதம் திடீரென வருகை தந்து பல்நோக்கு சேவைசங்கம்,டயோசீசன் சபை போன்ற கிறித்துவ சேவை நிறுவனங்கள் என்ற பெயரில் வெளிநாட்டில் குறிப்பாக அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளிடம் பணம் பெறும்நிறுவனங்களின் கணக்கு வரவு செலவுகளை ஆய்வு செய்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
நகல் எடுத்துள்ளனர்.அவை சரிதானதுதானா எனவும் ஆய்வு செய்கின்றனர்.
______________________________________________________________________________

சரிந்த கணினி .
2011- அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நான்காவது காலாண்டில், சர்வதேச அளவில் கணினி விற்பனை, 1.4 சதவீதம் (9 கோடியே 21 லட்சத்து 71 ஆயிரத்து 280) சரிவடைந்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 9 கோடியே 34 லட்சத்து 50 ஆயிரத்து 575 கணினிகள் என்ற அளவில் உயர்ந்து காணப்பட்டது.
ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம், உலக நாடுகளை பாதித்துள்ளது. இதனால், கம்ப்யூட்டர் உள்ளிட்ட, நுகர்வோர் சாதனங்களுக்கான தேவை குறைந்துள்ளதாக, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும்,கணினியில் உள்ளது போன்ற வசதிகளைக் கொண்டுள்ள ஸ்மார்ட் போன், டேப்லெட் சாதனங்களின் வருகையாலும்,கணினிவிற்பனை குறைந்துள்ளது.
அமெரிக்கா, சென்ற டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் 1.80 கோடி கணீனிகளை விற்பனை செய்துள்ளது.இது, கடந்த 2010ம் ஆண்டின், இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்டதை விட, 5.9 சதவீதம் குறைவு.இதே காலத்தில், ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கணினி விற்பனை, 9.6 சதவீதம் குறைந்து, 2.90 கோடியாக குறைந்துள்ளது.
இதே காலத்தில், ஆசிய பசிபிக் பிராந்திய நாடுகளின் கணினி விற்பனை, 8.5 சதவீதம் அதிகரித்து 3.04 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும், இது 10.6 சதவீத வளர்ச்சி என்ற மதிப்பீட்டை விட குறைவு.இந்தியா, சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் கணீனி விற்பனையும் குறைந்துள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இந்நிலையில், மதிப்பீட்டு காலத்தில், லத்தீன் அமெரிக்காவின் கணினிசந்தை, 11.2 சதவீதம் வளர்ச்சி அடைந்து, விற்பனை 93 லட்சமாக உயர்ந்துள்ளது.
டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், உலகளவிலான கணினி விற்பனையில், ஹெவ்லெட் பேக்கர்டு[hp] நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. எனினும், முந்தைய 2010ம் ஆண்டின் இதே காலத்து டன் ஒப்பிடும் போது, இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 16.2 சதவீதம் குறைந்துள்ளது.கடந்த 2011ம் ஆண்டின், டிசம்பருடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், இந்நிறுவனம் 1 கோடியே 47 லட்சத்து 12 ஆயிரத்து 266 கணீனிகளை விற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டின் இதே காலத்தில், 1 கோடியே75 லட்சத்து 54 ஆயிரத்து 181 ஆக இருந்தது.
கணினிஏற்றுமதியில், லெனோவா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், இந்நிறுவனத்தின் விற்பனை 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 136 (1 கோடியே 5 லட்சத்து 16 ஆயிரத்து 772 கோடி) ஆக உள்ளது.இதே காலத்தில், டெல் நிறுவனம் 1 கோடியே 16 லட்சத்து 33 ஆயிரத்து 880 (1 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 317), ஏசர் குழுமம் 98 லட்சத்து 23 ஆயிரத்து 214 (1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 606), ஏசஸ் நிறுவனம் 62 லட்சத்து 43 ஆயிரத்து 118 (51 லட்சத்து 80 ஆயிரத்து 913) மற்றும் இதர நிறு வனங்கள், 3 கோடியே 68 லட்சத்து 27 ஆயிரத்து 666 (3 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரத்து 786)கணினிகளை விற்பனை செய்துள்ளன.
_________________________________________________________________
புதிய ஓய்வூதிய கொள்[ளை]கை?
இந்தியாவை தற்போது ஆளும் காங்கிரசு அரசு கொண்டு வரும் அனைத்து கொள்கை முடிவுகளும்.மக்களையும்.தொழிலாளர்களையு மேலும் ஆதரவற்றவர்களாக்கும் நோக்கிலும்,பண முதலைகளை மென்மேலும் உயர்த்திப்பிடிக்கும் கொள்கைகளாகவே இருக்கிறது.
இதோ வேறு வழியில் வருமானமின்றி அரசையே நம்பி உழைத்து ஓய்வு பெற்றவர்கள் தங்கள் கடைசிதினங்களை ஓய்வூதியம் மூலமே கழிக்க வேண்டிய சூழலில்தான் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் ஓய்வையும்-நிம்மதியையும் குலைக்கும் நோக்கில் புதிய ஓய்வூதிய திட்டம் மத்திய அரசு கொண்டு வரத்துடிக்கிறது.
அதற்கு அதன் ஜென்ம பகைவனான பா.ஜ.க.வும் சிங்கி அடிக்கிறது.
அது பற்றி மேலும்

_________________________________________________________________________________
மோனாலிசாவிடம் ஏதும் குறை கண்டீர்களா?
_________________________________________________________________________________
_________________________________________________________________________________
1. வம்சாவளியைசேர்ந்தவர்கள் (2011)
[The descendants]
ஜார்ஜ்குளூனிசிறந்தநடிப்புடன் வெளியாகியுள்ள இப்படம் ஆஸ்காரை வெல்லும் என பேசப்படுகிறது.மேலும் 2011=ல் சிறந்த ஆங்கிலத்திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
நகைச்சுவை கலந்த குடும்பபடமான இதை அலெக்சாண்டர் பெய்னி இயக்கியுள்ளார்.
ஒருவரியில் வரும் வசனங்கள் இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இருப்பதாக பரவலான பாராட்டுக்களை இப்படம் பெற்றுள்ளது.
நடிகர்கள்:ஜார்ஜ் குளூனி ,சிலினி வுட்லி
|