இதில்தான் வீரத்தைக் காட்ட வேண்டுமா?
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி மாடுபிடித்தவர்களில் 39 பேர் காயம் அடைந்தனர். அதில்படுகாயமடைந்த 7 பேர் மதுரை அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாகத்தான் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வீர விளையாட்டு என்று மாட்டுடன் போராடுவதை என்ன வென்று சொல்வது.அரசுதடை போட்டாலும் அதற்கு நீதிமன்றம் போய் தடை வாங்குவது பின் மாடு முட்டி படுகாயமடைவதும்,வாழ்வையே இழப்பதும் என்ன சொல்ல?
வாழ்வில் தனது வீரத்தைக் காட்ட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் உள்ளது.ஊரில் தாதாதனம் செய்பவரை,கட்டபஞ்சாயத்து செய்பவர்களை,ஊழல் அரசியல் செய்பவர்களை,ஊரையே மிரட்டி கைக்குள் வைத்து அராஜகம் செய்பவர்களை,மக்களுக்கு சேர வேண்டிய நியாயமான சலுகைகளைக்கூட சுயநலத்துடன் தானே ஒதுக்கிக்கொள்பவர்களை எதிர்த்துப்போராடி அடக்க இவர்களால் முடியவில்லையே.ஒரு மாட்டை அடக்குவதில் போய் வீரத்தை காட்டி உயிரையும்,உடல் உறுப்புகளியும் இழக்கிறார்களே.அதில்தான் இவர்கள் வீரத்தைக் காண்கிறார்களா? அது வீரம் அல்ல.நாம் காடுகளில் ஆதிவாசிகளாய் அலைந்த போது கொடிய விலங்குகளை அடக்கியுள்ளார்கள் நம் முன்னோர்.யானையையே அடக்கு வித்தைக்காட்டவைத்து பாரங்களைத்தூக்க வைத்தவர்கள்தான் நம் முன்னோர்.இப்போதும் விலங்குகளுடன் மோதுவது நம்மை பழங்குடியினராக்குமே தவிர மாவீரர்களாக்காது.
பழமையான விளையாட்டு என்றால் கபடி,சிலம்பம்,போன்றவற்றில் தங்கள் திறமையைக்காட்டுங்கள்.மாட்டுடன் மோதி காலத்தையும் ,உயிரையும் வீணாக்காதீர்கள்.
________________________________________________________________________________
இதுவும் பொங்கல் வாழ்த்துதான்.
_______________________________________________________________________________
தேசியமருந்து விலை கொள்[ளை]கை |
------------------------------------------------------------------------------------- -ஆர்.சிங்காரவேலு |
தேசிய மருந்து விலைகள் கொள்கை-2011 என்ற நகல் கொள்கை அறிக்கையை மத்திய அரசு சுற்றுக்கு விட்டுள்ளது. மக்கள் வாங்கி பயன் படுத்தக்கூடிய வகையில் மருந்து விலைகளை கட்டுப்படுத்துவது நோக்கம் என அரசு நாடகமாடுகிறது.
வளர்ந்துவரும் மருத்துவச் செல வுகளால் ஆண்டுக்கு 2 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் தள் ளப்படுகின்றனர். மருத்துவச் செலவு களில் பெரும்பகுதி மருந்துகள் வாங் கிட செலவிடும் நிலை உள்ளது. ஏன் இந்த நிலை? சுகாதாரம், உடல்நலம் பேண அரசு மிகக் குறைந்த அளவே செலவிடுகிறது. மருந்து விலையோ கொள்ளை விலை! வளர்ச்சியடைந்த நாடுகளில் பொது சுகாதாரம் நன்கு பேணப்படுகிறது. அங்கெல்லாம் மக்கள் பெரும்பாலும் பொது சுகாதாரம் மூலம் அரசு சப்ளை செய்யும் மருந்து களை பயன்படுத்துகின்றனர். நம் நாட்டில் மக்கள் பயன்படுத்தும் 85 சதவீத மருந்துகள், தனியார் மருந்துக் கடைகளிலேயே வாங்குகின்றனர். 1979ம் ஆண்டு முதன்முறையாக ஒருங்கிணைந்த மருந்து விலைக் கட்டுப்பாடு உத்தரவை அரசு வெளி யிட்டது. பெரும்பாலான மருந்துகளின் விலைகளை அரசு கட்டுப்பாட் டிற்குள் கொண்டு வந்தது. ஆனால் 1987, 1995ல் இந்த உத்தரவு திருத்தப் பட்டதனால், பல மருந்துகள் விலைக் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப் பட்டன. மருந்து தொழில் செழிப்பாக இருக்க வேண்டுமானால், கட்டுப் பாடுகள் கூடாது என்பது அரசின் வாதம்! இதன் விளைவு? 1993 - 94க் கும், 2003-04க்கும் இடைப்பட்ட 10 ஆண்டுகளில் 2.6 மடங்கு மருந்து விலைகள் கூடின. இதே காலகட் டத்தில் பொதுவாக அனைத்து சரக்கு களின் விலை 1.75 மடங்கு கூடியது. கடந்த ஆண்டுகளில் விலைக் கட்டுப்பாட்டை நீக்கியதாலும், பெரிய மருந்து உற்பத்தி கம்பெனிகளின் தில்லுமுல்லுகளாலும் விலைகள் ஏறின. சந்தையே விலையை தீர் மானிக்கட்டும் என்ற கொள்கை அமலாக்கத்தால், மருந்து கம்பெனி களிடையே போட்டி ஏற்பட்டு, விலை கள் ஸ்திரமாகும் என கூறப்பட்டது. நடப்பதோ வேறு. பெரிய மருந்து கம் பெனிகள், தாங்கள் தயாரிக்கும் விலை உயர்ந்த மருந்துகளை நோயாளி களுக்கு பரிந்துரைக்கக் கோரி டாக்டர் களையும் கெமிஸ்டுகளையும் லஞ்சம் கொடுத்து தங்களுக்கு சாதகமாக செயல்பட வைக்கின்றன. இதே மருந் துகள் 5ல் ஒரு பங்கு அல்லது 10ல் ஒரு பங்கு விலையில் கிடைத்தாலும், டாக் டர்களின் பரிந்துரையால் விலை உயர்ந்த மருந்துகள்பால் மக்களின் கவனம் திருப்பப்படுகிறது. 2002ல் புதிய மருந்துக் கொள் கையை அரசு அறிவித்தது. இது மேலும் பல மருந்துகளின் மீதான அரசுக்கட்டுப்பாட்டை அகற்று வதாகும். இதற்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்றம் அரசின் புதிய கொள்கைக்கு இடைக் கால தடை விதித்தது. அரசு, உச்ச நீதிமன்றத்திற்கு சென்று தடையை நீக்கியது. ஆனால் அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகளின் விலை அரசுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியது. நியாயமான மருந்து விலைக் கொள்கை தேவை என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியது. சுகாதாரத் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு வும், உச்சநீதிமன்றமும் இந்த குரலை ஆதரிக்கின்றன. இதற்காக அரசு, சாந்து கமிட்டி, பிரணாப் சென் கமிட்டி என பல கமிட்டிகளை நியமித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி - 1 அரசின் காலத்தில், நியாயமான கொள் கையை உருவாக்க அமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. கடந்த 7 ஆண்டுகளில் இக்குழு கூடி, ஏன் நியாயமான மருந்து விலை கொள் கையை தீர்மானிக்கவில்லை என்பது புதிராகவே உள்ளது. இந்த பின்னணியில் 2011 மருந்து விலைக் கொள்கையை பார்க்க வேண் டும். 74 மருந்துகளின் விலைகளே அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதிலும் கூட பொது சுகாதாரம் பேண பயன்படும் 30 மருந்துகளின் விலை கள் மட்டுமே அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. விலைக் கட்டுப்பாட்டுக்கு வெளி யே உள்ள மருந்துகள், க்ஷசுஹசூனு பொறுத்து விலைகள் மாறுகிறது. அதிகமாக விற்பனையாகும் க்ஷசுஹசூனு மருந்துகள் மிக அதிக விலையில் விற்கின்றன. 2011 தேசிய மருந்து விலைகள் கொள்கை, ஒரு முற்போக்கான அம் சத்துடன் துவங்குகிறது. அதாவது தேசிய அத்தியாவசிய மருந்துப் பட்டி யலில் உள்ள 348 மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். ஆனால் இது மிக கெட்டிக்காரத்தனமாக, பெரிய மருந்து கம்பெனிகளின் அபரிமித லாபத்தை, நயவஞ்சகமாக உறுதிப்படுத்துகிறது. மருந்துவிலைகள், உற்பத்திச் செலவு, நியாயமான லாபம் போன்ற வற்றை அடிப்படையாகக் கொண்டு அமையாது. இதற்கு பதிலாக, சந்தை விலைகளை தீர்மானிக்குமாறு, மருந்து தயாரிப்பதற்கு தேவையான மூலப் பொருட்களின் விலையை அரசு தீர்மானிக்கலாம். மூலப் பொருட்களின் விலைகள் போட்டி அடிப்படையில் அமையும். மருந்து உற்பத்தியாளர் களே மூலப் பொருட்களை வாங்குவர். மூலப் பொருட்களிலிருந்து தயா ரிக்கப்படும் மருந்துகளின் தொழிலில் ஒரு லட்சம் கோடி ரூபாய் புரள்கிறது. இதில் உள்நாட்டுச் சந்தையின் அளவு மட்டும் ரூ.48,200 கோடி. ஒரு மருந் தின் விலைக்கு உச்சவரம்பு நிர் ணயிப்பார்களாம். இந்த உச்சவரம்பு, சந்தையில் மிக அதிக விலையில் விற்கும் 3 கம்பெனிகளின் விலை களின் சராசரியாக இருக்குமாம். எனவே 2011ல் அறிவிக்கப்பட்ட தேசிய மருந்து விலைகள் கொள்கை, நடைமுறையில் பெரிய கம்பெனி களின், குறிப்பாக பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபத்தை பல மடங்கு உயர்த்த வழிவகுக்கும். நோயற்ற வாழ்வே நிறைவான செல்வம். ஒரு தேசத்தின் மிகப்பெரும் சொத்து அதன் மனிதவளமே. சோச லிச சமூகத்தில் தான் சுகாதாரம் அரசின் முன்னுரிமைப் பணியாக கருதப்படுகிறது. உதாரணமாக, கியூ பாவில் அனைத்து மக்களுக்கும் 100 சதவீத மருத்துவப் பராமரிப்பு அரசால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அமெ ரிக்கா தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட உலகம் முழுவதும் தனது ராணுவ வீரர்களை அனுப்புகிறது. ஆனால் கியூபா தனது மருத்துவர் களை உலகம் முழுவதும் அனுப்பி உதவுகிறது.
நன்ற்:தீக்கதிர்,
____________________________________________________________________________________________
|
மின் சிக்கனம் செய்வது எப்படி?
""தொழில் நிறுவனங்கள் சரியான வழிமுறைகளை கடைப்பிடித்தால், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, ஐந்து கோடி ரூபாய் செலவாகும். இந்த மின்சாரத்தை வினியோகம் செய்ய, 15 முதல் 20 கோடி ரூபாய் வரை செலவாகும். மின் சிக்கனத்தை கடைப்பிடிப்பதாலும், குண்டு பல்புகளை மாற்றுவதாலும், தமிழகத்தில் 500 முதல் 600 மெகாவாட் மின்சாரத்தை மிச்சப்படுத்த முடியும்.வீடு கட்டுவோர் செலவினத்தின் ஒரு பகுதியாக, சோலார் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும். 1,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவோர், கட்டாயம் சூரிய ஒளி வெப்பத்தை பயன்படுத்தும், சோலார் வாட்டர் ஹீட்டர் அமைக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள், தலா ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு மின் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், மின்சாரத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி ஆய்வின் படி, வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் எரிசக்திக்கான தேவை, 55 சதவீதம் வளர்ச்சி பெறும். இந்தியாவிலும், சீனாவிலும் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்கும். பெட்ரோலிய எரிபொருளின் தேவை, வரும் 2030ம் ஆண்டிற்குள், 84 சதவீதம் அதிகரிக்கும்.அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள, தனி நபர் மின் நுகர்வை காட்டிலும், இந்தியாவில் குறைவான மின் நுகர்வே உள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியா, ஐந்தாவது மிகப்பெரிய மின் நுகர்வு நாடாக மாறும்.
இந்திய அளவில் தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயத்துக்கான மின் பயன்பாட்டில், சிக்கனத்தை கடைப்பிடித்தால், 20 சதவீத அளவுக்கு மின்சாரத்தை மிச்சப் படுத்த முடியும்.:-கோவை “மின்சிக்கன நாள்”கருத்தரங்கில் அலசப்பட்டவை.
இது போல் பேசிவிட்டு அன்றாட அலுவல்களைக்கவனிக்க சென்று விடாமல் அரசே கட்டாயப்படுத்தினால்.மின் சேதாரத்தை குறைக்கலாம்.இன்றைய மிந்தட்டுப்பாடு நேரத்தில் அது மிக தேவையானது.
_________________________________________________________________________________
மத்திய ஆசியாவிலேயே பெரிய மசூதியான கஸரத் சுல்தான்மசூதியில் [கஜகஸ்தான்]திடீரென தீவிபத்து
ஏற்பட்டது.
தீயை அணிக்கும் முயற்சியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் முயன்று வருகின்றன.
_________________________________________________________________________________
இன்றைய புகைப்படம்.