அடித்ததால் வர மாட்டேன்.
சமீபத்தில் ராமேஸ்வரம் வந்து யாகம் செய்த ராஜபக்ஷே சகோதரி கணவர் நடேசன் தமிழர் அமைப்பினரால் செருப்பால் அடிவாங்கினார்.அவரின் மனைவி நிருபமா ராஜ பக்ஷே இப்போது வீர சபதம் செய்துள்ளார்.
எனது கணவரை தாக்கி அவமதித்துள்ளார்கள் தமிழ் நாட்டுக்காரர்கள். ஆதலால் இனி இந்திய மண்ணில் கால் வைக்கப் போவதில்லை என்று போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ச சகோதரி நிருபமா ராஜபக்ச ஆவேசமாக கூறியுள்ளார்.
தனிப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ காரணங்களுக்காக இனி இந்தியாவிற்கு செல்லமாட்டேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை.
என சபதம் எடுத்துள்ளார் நிருபாமா.
எப்போதுமே தமிழர்கள் உணர்வற்று இருப்பதில்லை.அவ்வப்போது உணர்வு வந்து செல்வது உண்டு.
பாகிஸ்தான் “தெருவில் பிச்சை எடுக்க மாறு வேடத்தில் குரங்கு.
ஜப்பானில் காவல்துறைக்கு தேர்ந்தேடுக்கப்படட நாய்கள்.
_____________________________________________________________________________________________
எனது கணவரை தாக்கி அவமதித்துள்ளார்கள் தமிழ் நாட்டுக்காரர்கள். ஆதலால் இனி இந்திய மண்ணில் கால் வைக்கப் போவதில்லை என்று போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ச சகோதரி நிருபமா ராஜபக்ச ஆவேசமாக கூறியுள்ளார்.
தனிப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ காரணங்களுக்காக இனி இந்தியாவிற்கு செல்லமாட்டேன்.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை.
என சபதம் எடுத்துள்ளார் நிருபாமா.
எப்போதுமே தமிழர்கள் உணர்வற்று இருப்பதில்லை.அவ்வப்போது உணர்வு வந்து செல்வது உண்டு.
தமிழகத்திற்கு வந்து தமிழ்ப்போராளிகள் -தமிழ் மக்களுக்கு எதிராக யாகம் நடத்தும் உங்களை நாங்களும் வரவேற்கவோ,வராமல் இருந்தால் வருத்தமோ படமாட்டோம்.
_________________________________________________________________________________________
இத்தாலி ”கோஸ்டா குரோசிரா” நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3000 பயணிகள் மற்றும் 1000 பணியாளர்களுடன் கடலில் சென்று கொண்டிருந்தது.
திடீரென தரைதட்டி கப்பல் நின்றதில் கடல்நீர் உள்ளே நுழையத் தொடங்கியது.அதில் பயணம் செய்த 3000 பேரும் மீட்கப்பட்டனர்., மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது .
_____________________________________________________________________________________________
விடாது கருப்பு?
பிரபஞ்சம் அல்லது பேரண்டத்தில் பெரும்பகுதியாக இருப்பது கரும்புள்ளி {டார்க் மேட்டர்} என்ற எளிதாக விளக்கஇயலாத இருண்ட பொருள். நம் கண்களால் சாதாரணமாக பார்க்கமுடியாத இந்த இருண்டபொருள் குறித்து அறிவியல் உலகில் நீண்டநாட்களாகவே அறியப்பட்டிருந்தாலும், பேரண்டத்தில் இந்த விவரிக்க முடியாத இருண்ட பொருள் எவ்வளவு தூரம் பரவியிருக்கிறது, பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த இருண்டபொருள் காணப்படுகிறது என்பது குறித்த வரைபடம் எதுவும் இதுவரை தயாரிக்கப்படவில்லை.
அப்படியானதொரு வரைபடம் தயாரிப்பதில் வானியல் விஞ்ஞானிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.
அமெரிக்க வானியல் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் இத்தகைய வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். இது விவரிக்கமுடியாத இருண்ட பொருள் குறித்த முழுமையான வரைபடம் இல்லை என்றாலும், விவரிக்க முடியாத இருண்ட பொருள் குறித்து இதுவரை தொகுக்கப்பட்ட வரைபடங்களிலேயே இது தான் பெரிய வரைபடமாக பார்க்கப்படுகிறது.
ஹவாயில் இருக்கும் பிரத்தியேக வான் தொலை நோக்கியை பயன்படுத்தி இந்த வரைபடத்தை இவர்கள் தயாரித்திருக்கிறார்கள். இதன்மூலம் நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியில் இந்த இருண்ட பொருள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை சாதாரண மனிதர்களும் பார்க்க படிக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இந்த இருண்டபொருள் கண்ணுக்கு தெரியாது என்பதால், இதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு புகைப்பட ஒளிபெருக்கி{லென்சை}யை பயன்படுத்தி இந்த வரைபடத்திற்கு தேவையான புகைப்படங்களை இவர்கள் எடுத்தார்கள்.
பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு பொருளும், தனது எடைக்கு ஏற்ப, தன்னைச்சுற்றியுள்ள இடத்தையும் நேரத்தையும் வளையச்செய்யும் அல்லது மாற்றியமைக்கும் என்பது அடிப்படை விதி. இந்த விதியின் அடிப்படையில் பார்த்தால், விவரிக்க முடியாத இருண்டபொருளானது, தன்னைக்கடந்து செல்லும் ஒளிக்கீற்றுக்களை வளைந்து செல்லும்படி செய்கிறது. பூமிக்கு வந்து சேரும் ஒளிக்கீற்றுக்களின் பாதையை வைத்துப்பார்க்கும் போது பிரபஞ்சத்தின் எந்த பகுதியில் இந்த இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் காண முடியும். அப்படித்தான் இந்த விஞ்ஞானிகள் பேரண்டத்தின் எந்தெந்த பகுதிகளில் இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருள் இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு வரைபடம் தயாரித்திருக்கிறார்கள்.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பிரபஞ்சத்தின் மிகச்சிறியதொரு பகுதியைத்தான் இவர்கள் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அதாவது நூறுகோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் வானத்தில் இருக்கும் இருண்டபொருளைத்தான் இவர்கள் தற்போது அடையாளம் கண்டிருக்கிறார்கள். அறுநூறு கோடி ஆண்டுகள் ஒளி பயணிக்கக்கூடிய தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் வெளிப்படுத்திய ஒளியைத்தான் இந்த ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்தார்கள்.
இவர்கள் பார்த்த இந்த குறிப்பிட்ட பேரண்டத்தின் ஒரு பகுதியில், கேலக்ஸிஸ் எனப்படும் அண்டங்களை சுற்றி இந்த விவரிக்கமுடியாத இருண்ட பொருளானது சங்கிலித்தொடராக காணப்படுவதாகவும், பிறகு திடீரென ஒன்றுமே இல்லாத சூனியப்பிரதேசத்தில் இது சென்று முடிவதாகவும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
____________________________________________________________________________________________________________
கணினி பற்றிய செய்தி.
கணினியில் தற்போது பல்வேறு கோப்புக்கள் அனைத்தும் ஆபிஸ் பார்மட்டுகளிலேயே உருவாக்கப்படுகின்றன. மேலும் எம்.எஸ்.ஆப்பிஸ் மென்பொருளை பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.
இணையத்தில் நாம் ஒரு தகவலை தேடி செல்லும் போது பல கோப்புகள் வேர்ட், எக்சல், பவர் பாயின்ட் பார்மட்டுகளில் இருக்கும். அவ்வாறு உள்ள கோப்புகள் படங்களுடன் மட்டுமே இருக்கும்.
இவற்றை தனியாக பிரித்தெடுப்பதற்கு Image Extraction Wizard என்னும் மென்பொருள் உதவி புரிகிறது. இதன் மூலம் படங்களை தனியாக பிரித்தெடுக்க முடியும்.
உதாரணமாக நாம் ஒரு வேர்ட் டாக்குமெண்டை எடுத்துக் கொள்வோம், அதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களை மட்டும் தனியே பிரித்தெடுக்க வேண்டுமெனில் தனித்தனி படங்களாக தெரிவு செய்து மட்டுமே சேமிக்க முடியும்.
அதற்கு பதிலாக ஒட்டுமொத்தாக அனைத்து படங்களையும் ஒரே சமயத்தில் பிரித்தெடுக்கவும் முடியும். அதற்கு உதவும் மென்பொருள் தான் இந்த Image Extraction Wizard.
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் ஒரு முறை கணினியை மறுதொடக்கம் செய்துவிட்டு பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் குறிப்பிட்ட ஆப்பிஸ் கோப்பினை தெரிவு செய்து, அடுத்து எந்த இடத்தில் சேமிக்க வேண்டும் என்பதையும் தெரிவு செய்து கொண்டு, அடுத்து Next என்னும் பொத்தானை அழுத்தவும்.
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்த படங்கள் சேமிக்கப்பட்டு விடும். இதே போல் அனைத்து விதமான ஆபிஸ் கோப்புகளில் உள்ள படங்களையும் தனியே பிரித்தெடுத்துக் கொள்ள முடியும்.
இணையத்தள முகவரி :
http://www.rlvision.com/files/OfficeImageExtractionWizard_Setup.exe
இணையத்தள முகவரி :
http://www.rlvision.com/files/OfficeImageExtractionWizard_Setup.exe
________________________________________________________________________
பாகிஸ்தான் “தெருவில் பிச்சை எடுக்க மாறு வேடத்தில் குரங்கு.
ஜப்பானில் காவல்துறைக்கு தேர்ந்தேடுக்கப்படட நாய்கள்.
_____________________________________________________________________________________________