டிஜிட்டல் கடவுள்,,,?
இணையத்தில் டிஜிட்டல் தொழில் நுட்பம் மூலமாக தகவல்களை பரிமாறும் சேவையை செய்யும் ஸ்வீடன் நாட்டு அமைப்பு ஒன்றை ஸ்வீடன் அதிகாரிகள் ஒரு மதமாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
காப்பிமிஸத் திருச்சபை என்று தன் அமைப்புக்கு பெயர் சூட்டிக்கொண்டுள்ளது. இந்த அங்கீகாரம் மூலமாக, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் புனிதப்பணிக்கு இன்னும் அதிகமான பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்புவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
காப்புரிமைக்கு எதிராக இயங்கும் ஸ்வீடன் பைரேட் இயக்கத்துடன் இந்த அமைப்பு மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருப்பதாக சுவீடன் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.இம்மதத்தின் கடவுள் யார் கணினிதானே.
_________________________________________________________________________________
வாங்க ஊழலை ஒழிப்போம்.......
ஊழல் புகாரில் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட பா.ஜ.க.வில் பாபுசிங் குஸ்வாகா இணைந்தார்.அவரை விழா நடத்தி வரவேற்றுள்ளது பா.ஜ.க.ஊழல் ஒழிப்பு ரத யாத்திரை சென்றவர்கள்.ஊழலை ஒழிக்கும் முறை நல்லாவே இருக்கிறது.
_________________________________________________________________________________
மனித குண்டு,
இன்று பிற்பகல் சிரியா தலைநகரில் மனித வெடிகுண்டு வெடித்ததால் 40 பேர்கள் பலியாகியுள்ளனர்.70 பேர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காவல்துறை வாகனம் மீது குறிவைத்து இச்செயல் நடந்துள்ளது.
************************************************************************************************************
தேள் மசால்,
சீனாவில் தேள் மசாலுடன் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்திருக்கும் சாலை வியாபாரி.
_____________________________________________________________________________
அரசியல் குப்பை.
******************************************************
மதுரை தமிழ்ச்சங்கம் ரோட்டில், பழைய இரும்பு பொருட்கள் மற்றும் உதிரிபாகங்கள் விற்கும் கடைகள் உள்ளன. நேற்று அதிகாலை "கண்ணழகன் ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் விற்பனை கடை' முன் ,திடீரென குப்பைகள் நிரம்பிய தொட்டி இருந்தது. இதை கண்டித்து, உரிமையாளர் கண்ணழகன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அரைமணிநேரம் மறியலில் ஈடுபட்டனர். போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சமரசம் செய்தனர்.
கடை உரிமையாளர், கண்ணழகன் கூறியதாவது :
”இந்த மாநகராட்சி வட்டத்தின் அ.தி.மு.க., கவுன்சிலரின் கணவரும்,அ.தி.மு.க, வட்ட செயலாளருமான சக்திவிநாயகர் பாண்டி மற்றும் கட்சி நிர்வாகிகள் செந்தில், ஜேம்ஸ், நேற்று முன் தினம் மாலை கடைக்கு வந்தனர். "பொங்கல் பண்டிகைக்காக ரூ.ஒரு லட்சம் மாமூல் தரவேண்டும்' என்றனர். "எதற்காக தரவேண்டும். வேண்டுமானால் ரூ.5000 தருகிறேன்' என்றேன். ஆத்திரமடைந்த அவர்கள், "நீ எப்படி வியாபாரம் செய்கிறாய் என்று பார்ப்போம்' என மிரட்டி சென்றனர். காலையில் பார்த்தால், 200 அடி தூரத்தில் இருந்த குப்பை தொட்டியை கடை முன் வைத்திருந்தனர். திலகர் திடல் போலீசில் புகார் கொடுத்துள்ளேன். என்றார்.
இது பற்றி சக்திவிநாயகர் பாண்டி ”நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய் புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நானும் புகார் கொடுத்துள்ளேன். மின் டிரான்ஸ்பார்மருக்கு கீழ் குப்பைத்தொட்டி இருந்தது. எந்நேரமும் தீப்பிடிக்கும் அபாயம் இருந்ததால், வேறு இடத்திற்கு மாற்றும்படி மின்வாரியம் கூறியது. அதனால் தள்ளி வைத்தோம். எதிர்ப்பு கிளம்பியதைதொடர்ந்து, பழைய இடத்திற்கே குப்பைத்தொட்டி வைத்துவிட்டோம்” என்றார்.
சாலையில் சாக்கடை நீரால் பொது மக்களுக்கு இடைஞ்சல் வந்தால் அந்த சாக்கடையை நன்கொடை தராத கஞ்சர்கள் வீட்டு கிணற்றில் விழும்படி வடிகால் அமைத்து தனது நற்பணியை அவர் விரிவு படுத்த வேண்டும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தங்க வேட்டையில் பலியான உயிர்கள்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் தங்கத்தை தேடும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 25 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மின்டோனா தீவில் நாப்னாப்பேன் பகுதி உள்ளது. இங்கு தங்கம் கிடைப்பதாகக்கூறி தங்க கனிமத்தை தேடும் பணியில், நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அம் மலைப்பகுதியே தோண்டப்பட்டு வந்ததால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என,அரசு கடந்தாண்டு அறிவித்தது.
ஆனால், இதைகண்டு கொள்ளாமல் பலர் தொடர்ந்து தங்கத்தை தேடி வருகின்றனர்.
இங்கு நேற்று காலை திடீரென நிலச்சரிவு உண்டானது. பலர் மணற் சரிவில் சிக்கிக்கொண்டனர். மீட்பு படையினர் தேடியதில், 15 பேர்களது உடல்களை வெளியே எடுக்கப்பட்டது.
இதில், 25 பேர்வரை பலியாகி இருக்கலாம். 100க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
இப்பகுதியில் 50 சிறிய குடிசைகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் பொதுமக்கள் உறங்கிக் கொண்டிருந்த போதுநிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இப்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு 2 கி.மீ.,தொலைவில், கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில், 14 பேர் பலியாகினர். , 2009ல் நடந்த மற்றொரு நிலச்சரிவில், 26 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் தங்க ஆசை யாரை விட்டது.இவ்விபத்துக்குப்பின்னரும் தங்க வேட்டை தொடரத்தான் செய்யும்.காரணம் பிலிப்பைன்சின் வறுமைதான்.
_________________________________________________________________________________
தாய்ப் பாசம்,