50 ஆகி விட்டதா?
ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பே மனிதருக்கு நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் போன்ற மூளையின் ஆற்றல்கள் குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இதுவரை மூளையின் ஆற்றல்கள் குறைவதற்கு 60க்கு மேல் வயதாகும் என எண்ணப்பட்டது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ இதழ் இந்தஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது. பிரான்ஸ் ,பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மூளைத் திறன்களைப்பற்றி சில ஆண்டுகள்ஆய்வு செய்து, இந்த முடிவை கண்டறிந்துள்ளனர்.
மூளையின் திறன்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவரும் நிலையில், ஒருவர் வயதாகும்போது அவரது மூளையின் திறன்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விளங்கிக்கொள்வது என்பது இந்த நூற்றாண்டில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகின்றனர்.
45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத்திறன், பகுத்தாய்வுத்திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.
அதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம்கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.
மூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம்கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.
மூளையின் திறன்கள் குறைந்துபோவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.
ஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.
முந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.
சிறு வயது முதலே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வது உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்ல மூளையின் திறன்களைப் பேணுவதற்கும் அவசியம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
_________________________________________________________________________________
சேது கால்வாய்.புத்துயிர் பெறுமா?
சேதுக் கால்வாய் திட்டத்தை மாற்றுப் பாதை யில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு வின் அறிக்கையை உடனடியாகத் தாக்கல் செய் யும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. உருப்படியான பணி களைச் செய்வதில் எப்போதுமே அலட்சியமாக இருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இப்போதாவது சுற்றுப்புறச் சூழல் நிபுணர் ராஜேந்திர கே.பச்சோரி தலைமையிலான ஆறு பேர் குழுவின் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
தென் தமிழகத்தின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துவிசையாக திகழும் என்ற அடிப்படையில் தான், இடதுசாரிகளின் ஆதரவில் இருந்த, முதலாவது ஐக்கிய முற்போக் குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2005ம் ஆண்டு சேது கால்வாய் திட்டம் தொடங்கப்பட் டது. ரூ.2240 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணிகள் தொடங்கிய நிலையில் “ராமர்பாலத்தை இடிக்கக் கூடாது” என்று ஆர்.எஸ்.எஸ்., பாரதிய ஜனதா தலைமையிலான வகுப்புவாத சக்திகள் கலகத்தைத் தூண்டின. வகுப்புவாத சக்தி களோடு, குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட வர்களும் இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித் தனர். அதேசமயம் இத்திட்டத்தை நிறைவேற்றி னால் பாக் நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் அரிய நீர்வாழ் உயிரினங் களுக்கும், சுற்றுப்புறச் சூழலுக்கும் ஆபத்து ஏற் படும் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் சில ரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பல தரப் பினரும் வழக்குத் தொடுத்தனர்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில் 2007ம் ஆண்டு இந்தியத் தொல் லியல் துறை, ராமர் பாலம் என்றழைக்கப்படும் மணல்திட்டு இயற்கையாக உருவான அமைப்பு, அதை மனிதர்கள் உருவாக்கியதற்கு ஆதார மில்லை என்று மனுத் தாக்கல் செய்தது. ஆனால் இதற்கு வகுப்புவாத சக்திகளிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியவுடன், அதை எதிர்கொள் ளும் அரசியல் துணிவு இல்லாத மத்திய அரசு அம்மனுவை விலக்கிக் கொண்டது.
இந்தப் பின்னணியில், 2010ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி இத்திட்டப் பணியை நிறுத்தி வைக் கும்படி உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இந்திய உணவுக் கிடங்குகளில் விரய மாகிக் கொண்டிருக்கும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொன்னபோது, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சொல்லத் துணிந்த பிரதமர் மன்மோகன் சிங், ஏனோ சேது கால்வாய்த் திட்டப்பணியை வகுப்புவாதிகள் கூறும் “நம்பிக்கை” அடிப் படையில் நிறுத்தி வைப்பது சரியல்ல என்று சொல்லத் துணியவில்லை.
இதனால் பல நூறு கோடி ரூபாய் கடலில் கொட்டப்பட்ட நிலையில் சேதுக் கால்வாய்த் திட்டப் பணி முடங்கியது. நிபுணர் குழு அறிக்கை கடந்த மாதம் (2011 டிசம்பர்) மத்திய அரசிடம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒண்ணே முக்கால் ஆண்டுக்குப் பிறகு இப்போதும் கூட இந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு தானாக ஆர்வம் காட்டவில்லை. உச்சநீதிமன்றம் அறிக்கை கோரிய பிறகும், இன் னும் கால அவகாசம் வேண்டும் என்று தான் மத் திய அரசு வழக்குரைஞர் கேட்டிருக்கிறார். தேர் தல் காலத்தில் பாரதிய ஜனதா இதை அரசிய லாக்கக் கூடும் என்ற பயத்தோடு, சேதுக் கால்வாய்த் திட்டத்தை கிடப்பில் போட வேண்டும் என்கிற மத்திய அரசின் எண் ணத்தைதான் இது வெளிக்காட்டுகிறது.
நன்றி:தீக்கதிர்.
________________________________________________________________________________-
உலக போலீஸ்காரர்.