ஏனிந்த கோபம்,,,,,

 நக்கீரன் வாரம் இருமுறை ஏட்டில் இடம்பெற்ற கட்டுரையில் உள்ளது இதுதான்.படிக்காதவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.

 
"ஜெ.வுட‌ன் ஆலோசனை‌யி‌ல் ஈடுப‌ட்டவ‌ர்க‌ளி‌ன் பே‌ச்சு, ச‌சிகலா ‌விவகார‌ம் ப‌ற்‌றி‌த் ‌‌திரு‌ம்‌பியு‌ள்ளது. அதை ‌விரு‌ம்பாத ஜெய‌ல‌லிதா, ''அதை‌ப்ப‌ற்‌றி பேசா‌தீ‌ங்க.ந‌ா‌ன் தவறான ‌விதையை ‌விதை‌ச்‌சி‌ட்டு ‌விஷ‌த்தை அறுவடை ப‌ண்‌‌ணி‌க்‌கி‌ட்டிரு‌க்கே‌ன்'' எ‌ன்று சொ‌ல்‌லி‌வி‌ட்டு, கலைஞ‌ர் ‌,வீரமணி''இவ‌ங்க இர‌ண்டு பேரு‌ம்,எ‌ன் கூட இரு‌க்‌கிறவ‌ங்களை ம‌யிலா‌ப்பூ‌ர் மாஃ‌பியா‌ன்னு ‌பிர‌ச்சார‌ம் ப‌ண்ணுறா‌ங்க.அதாவது நா‌ன் மா‌மியா‌ம்.. எ‌ன் கூட இரு‌க்‌கிறவ‌ங்க மா‌மி‌க‌ள் அ‌திகமு‌ள்ள ம‌யிலா‌ப்பூ‌ர் மாஃ‌பியாவா‌ம். இ‌ந்த ‌விம‌ர்சன‌ம் எ‌ம்‌ஜிஆ‌ர் கால‌த்‌திலேயே க‌ட்‌சி‌க்கு‌ள்ளே வ‌ந்தது.அ‌ப்ப அவ‌ர் எ‌ன்ன சொ‌ன்றா‌ர் தெ‌ரியுமா?''எ‌ன்று ‌த‌ன் மு‌ன்னே இரு‌ந்தவ‌ர்களை‌க் கே‌‌ட்டு‌வி‌ட்டு,அ‌ந்த ச‌‌ம்ப‌வ‌த்தை ‌விள‌க்க ஆர‌ம்‌பி‌த்‌திரு‌க்‌கிறா‌ர் ஜெய‌ல‌லிதா.
''நா‌ன் அர‌சியலு‌க்கு நுழை‌ஞ்ச நேரம‌் அது.எ‌‌ம்‌ஜிஆ‌ர் எ‌ன்னை‌க் கூ‌ப்‌பி‌ட்டு, இ‌னி த‌ன்னால ஊ‌ர்ஊரா சு‌ற்ற முடியாது‌ன்னு‌ம், கருணா‌நி‌தி‌க்கு‌ப் போ‌ட்டியா ஜான‌கியை கொ‌ண்டு வரன்னு‌ம் சொ‌ல்‌லி,அ‌ம்முதா‌ன் ச‌ரியான ஆ‌ள்னு எ‌ன்னை‌க் கா‌ட்டி,க‌ட்‌சி ‌நி‌ர்வா‌கி‌க‌ள் ‌கி‌ட்டே சொ‌ன்னா‌ர்.
அதோடு, கொ‌ள்கை பர‌ப்பு‌ச் செயலாள‌ர் பத‌வியையு‌ம் கொடு‌த்தா‌ர். கே.ஏ.கே., எ‌ஸ்.டிஎ‌ஸ். போ‌ன்றவ‌ங்க கடுமையா எ‌தி‌ர்‌த்தா‌ங்க. அ‌ப்ப பொ‌ன்னைய‌ன் இரு‌ந்தாரு.அவரு, 'ந‌ம்ம க‌‌ட்‌சியு‌ம் ‌திரா‌விட இய‌க்க‌ம்‌ங்‌கிற அடையாள‌த்தோடு இரு‌க்கு.இ‌தனோட கொ‌ள்கையை பர‌ப்ப ஒரு ‌பிரா‌மினை ‌நிய‌மி‌க்‌‌கிறது ச‌ரியா இரு‌க்காது'‌ன்னு சொ‌ன்னா‌ர்.

 
அ‌ப்ப எ‌ம்‌ஜிஆ‌ர் 'நீ‌ங்க அ‌ம்முவை ‌பிரா‌மி‌ன்னு ‌நினை‌க்‌கி‌றீ‌ங்களா? பிரா‌மி‌ன்னா குழை‌ஞ்சு குழை‌ஞ்சு பே‌சி கா‌ரிய‌ம் சா‌தி‌ப்பா‌ங்க. அ‌ம்மு எதையு‌ம் ப‌ட்ப‌ட்டு‌ன்னு நே‌ரில‌் பே‌சிடு‌ம்.
அ‌ப்புற‌ம்,இ‌ங்கே இரு‌க்‌கிற ‌நீ‌ங்க யாரு‌ம் மா‌ட்டு‌க்க‌றி சா‌ப்‌பி‌ட்டிரு‌க்க மா‌ட்டீ‌ங்க. ஆனா, அ‌ம்மு ‌ஸ்பெ‌ன்ச‌ரி‌லிரு‌ந்து ‌ஸ்பெஷ‌ல் ‌பீஃ‌ப் வா‌ங்‌கி என‌க்கு சமை‌ச்‌சி‌க் கொடு‌த்‌திரு‌க்கு. நா‌ன்தா‌ன் பழ‌க்க‌மி‌ல்லாததால அதை சா‌ப்‌பிடலை.மா‌ட்டு‌க்க‌றிசா‌ப்‌பிடுற அ‌ம்முவைஎ‌ப்படி‌பிரா‌மி‌ன்னு நினை‌க்‌கி‌றீ‌‌‌ங்க'‌ன்னு சொ‌ன்னா‌ர்.

இ‌‌ன்னைக‌்கு கருணா‌நி‌தியு‌ம்,‌வீரம‌ணியு‌ம் நா‌ன் ‌பிரா‌மி‌ன்னு‌ம் எ‌ன் கூட இரு‌க்‌கிறவ‌ங்களை ம‌யிலா‌ப்பூ‌ர் மாஃ‌பியா‌ன்னு‌ம் சொ‌ல்றா‌ங்க''எ‌ன்றபடி ச‌ி‌ரி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்" 

இந்த கட்டுரைதான் அ.தி.மு.க.வினரை மிகக் கோபப்படுத்திருக்கிறது.அதற்கு கண்டனம் தெரிவிப்பதை விட அம்முவிடம் மன்னிக்கவும் ஜெயலலிதாவிடம்  பெயரெடுக்கவே இந்த கலவரம்,தாக்குதல்கள் எல்லாம் அணி,அணியாக வந்து செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நக்கீரன் அடக்குமுறைக்கு ஆளாவது வழமையானதுதான்.
நக்கீரன் மட்டுமல்ல எதிர்ப்பு செய்தி,விமர்சன செய்தி வெளியிடும் அனைத்து பத்திரிக்கைகளும் தாக்கப்படுவது வழக்கம்தான்.அ.தி.மு.க ஆட்சியில் மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவே என்ன பாடுபட்டார்.
நக்கீரன் வெளியிட்ட செய்தி நாகரிகமானது அல்லதான்.இது போன்ற விமர்சனங்களை தாங்கும் மனப்பக்குவம் ஆளுங்கட்சிக்கு வேண்டியது அவசியம்.அடக்குமுறையும் ,தாக்குதலும் அச்செய்தியை உண்மையாக்கிவிடும்.குற்றமுள்ள நெஞ்சுதானே குறு,குறுக்கும் என்று பழமொழியே உண்டு.

இது போன்ற அவதூறு செய்திகளை நீதிமன்றத்தில் சந்தித்து பத்திரிக்கையை முடக்கலாம்.
தினகரன் மதுரை பதிப்பு தி.மு.க.அழகிரி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது எவ்வளவு சட்ட விரோதமோ அதற்கு எந்த அளவும் குறைந்ததல்ல.நக்கீரன் தாக்கப்பட்டதும்.
இவர்கள் தாக்கியதைவிட அ.தி.மு.க.வினருக்கு பாதுகாப்பு கொடுத்த காவல்துறையினர்தான் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.தங்கள் பணியையே மறந்து விட்டு தாக்குபவர்களுக்கு பாது காப்பு கொடுக்கும் இவர்களை என்ன வென்று சொல்லுவது.நவீன கொத்தடிமைகளான காவல்துறை மக்களால் எப்படி மதிப்புடனும்,நம்பிக்கையுடனும் பார்க்கப்படும்.

இன்றும் (08.01.2012) நக்கீரன் அலுவலகம் மீது 2வது நாளாக அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல் நடத்தினர். சுமார் 100க்கும் மேலானோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வீசிய கற்கள் நக்கீரன் அலுவலகத்தின் வழியே சென்ற பொதுமக்கள் மீதும் பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வழக்கம்போல வேடிக்கை பார்த்தபடியே நின்றனர்.  
நக்கீரன் அவதூறு வெளியிட்டது.அதை அ.தி.மு.க.வினர் தாக்கினார்கள்.காவல்துறை ஏவல்துறையாகி வேடிக்கைப்பார்த்தது.சரிதான்.
அதற்காக மாநகராட்சி அந்த தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பையும்-மின் இணைப்பையும் துண்டித்தது எந்தவூர் நியாயம்./
இது மக்களாட்சியா?அல்லது நக்கீரனின் முந்தைய வாசகமான பெண்ஹிட்லர் ஆட்சிதானா?
அ.தி.மு.க.வினர் செயல்கள் முன்பு நக்கீரனுக்கு நல்ல விளம்பரமாகி விற்பனை அதிகரித்தது.அந்த வேலையை மீண்டும் துவக்கி விட்டீர்கள்.
நக்கீரனைதான் ஆசை தீர தாக்கியாயிற்றே.நீதிமன்றம் போக வேண்டியதுதானே?

நக்கீரன் பத்திரிக்கை அருகே குடியிருப்பது சட்ட விரோதமானதா/சாபக்கேடான செயலா?
குடிநீர்-மின் இணப்புகளை தெருமுழுக்க துண்டிப்பது மிகக் கேவலமான செயல்.அந்தப்பகுதி சட்டமன்ற உறுப்பினரும்,மாநகராட்சி உறுப்பினரும் அ.தி.மு.க.என்பதால் இந்த தண்டனையா.? உங்களுக்கு வாக்களித்தவர்கள் அவர்கள்.அதற்கு நீங்கள் தரும் பரிசுதானா இது?

செய்தியை வெளியிட்ட நக்கீரன் கோபால் மீது 6 வழக்குகளும்,அலுவலகத்தை நாசமாக்கி,கார்களை உடைத்து,தீவைத்து அச்சு எந்திரத்தை கண்டம் செய்து,குடிநீர் குழாயை நொறுக்கி,மின் இணைப்பை துண்டித்த அ.தி.மு.க.வினர் மீது 4 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.
அதிலும் அ.தி.மு.க.வினர் அடையாளங்காணவியலாத


            இப்படியே மெய்ன்டன் பண்ணுங்க.அடுத்த முறையும் நீங்கதான். 
  ஆனால்நக்கீரன் கோபால் கூறுவதைப்போல தானோ அதிமுகவினரோ நக்கீரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தவில்லை என்று மறுக்கிறார் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்.
”சனிக்கிழமை வெளியான நக்கீரன் இதழில் தங்கள் கட்சியின் தலைவியும் தமிழக முதலமைச்சருமான ஜெ ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக சித்தரித்ததை எதிர்த்து தாங்கள் ஆர்பாட்டம் மட்டுமே செய்ததாக” அசோக் கூறினார்.
தி.மு.க போன்ற எதிர்கட்சியைச் சேர்ந்தவர்களோ அல்லது நக்கீரன் அலுவலகத்தை சேர்ந்தவர்களோ இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் வெளியிட்டார். சரிதான்.
நக்கீரன் கோபாலே ஆட்களை வைத்து தன் அலுவலகத்தை உடைக்க சொல்லியிருப்பார்.ஒவ்வொரு ஊரிலும் கூலியாட்களை வைத்து நக்கீரனை எரித்து விளம்பரம் செய்டிருப்பார்.
நமக்கு அசோக் வைக்கும் பூவை சுமக்குமளவு காது கிடையாதுங்க.
 __________________________________________________________________________

இந்திய கலாச்சாரம்.கிண்டலடிக்கும்

இனவெறி பிபிசி நிகழ்ச்சியாளர்.

பி.பி.சி.தொலைக்காட்சி ஜெரிமி கிளார்க்சன் மீண்டும் கிண்டல்

Controversial TV personality Jeremy Clarkson. Wikipediaகிளார்க்சன் இந்தியா இரயில்கள், கழிப்பறைகள், உடை, உணவு மற்றும் வரலாறு பற்றிஒரு தொடர் நடத்தினர்இதில் இந்தியாவை கிண்டல் செய்ததால்பார்வையாளர்கள் வருத்தம் தெரிவித்ததாகடெய்லி மெயில் தெரிவித்தது.

ஒரு கட்டத்தில், கிளார்க்சன் இந்திய கழிப்பறை சேரிகளில் சுற்றி காட்டுவதன் மூலம் ஏழை மத்தியில் சுகாதாரமற்ற நிலை மற்றும் சுகாதாரம் இல்லாததுஅவமானப்படுத்திபேசினார்.. இந்த நி்கழிச்சி "இந்தியா தாக்குதல்"  பற்றி 23 புகார்கள் வந்ததாகபி.பி.சி பின்னர் தெரிவித்தது.

கிளார்க்சன் முன்புபொதுத்துறை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தபோதுBBC1  நிகழ்ச்சியின்போது ”அவர்ளை குடும்பங்கள் முன் சுட்டு இருக்க வேண்டும் என்று கூறி பின்னர் மன்னிப்பு வேண்டிய கட்டாயத்தில் உள்ளானார்.


மற்றொரு நிகழ்ச்சியில், ஜெரிமி கிளார்க்சன் ஒரு பேண்டு எப்படி பயன்படுத்துவது என்ரு காட்ட இரண்டு இந்திய விருந்தாளிகள் முன் தன் ஆடைகளை களைந்து விட்டுஉடுத்திக் காட்டினார், 
சால்ஃபோர்டு இந்திய மாணவர் அனூஜ் Bidve கொலைக்கு பிறகு அவர் குத்துச்சண்டயில் இறந்திருக்கலாம்:என கிளர்க்சன் கூறி அதற்கும் பின்னர் வருத்தம் தெரிவித்தார்.
இது போன்று எல்லை மீறி பேசி பின் வருதம் தெரிவித்துவரும் ஒருவரை இன்னும் பி.பி.சி ஏன் வேலையில் வைத்திருக்கிறது.இன வெறி கொண்டவர் எப்படி நடு நிலை நிகழ்ச்சிகளை தருவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
                                                                                      பாலை வனச் சோலை?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?