அறிவிப்பில்லா அவசரநிலை!
அறிவிப்பில்லா அவசரநிலை! அவசர நிலைக்கு எதிராகவும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஆதரவாகவும் பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதை நினைவு கூர்கிறார் மோடி. அதாவது காங்கிரசு கட்சிக்கு எதிராகப் பேசுவதற்காக இந்த விவகாரத்தைக் கையில் எடுத்தார். இந்திய அரசியலமைப்பு புத்தகத்தை ராகுல் எடுத்துக் காட்டுவது அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அதனால் பழைய வரலாற்றைச் சொல்லி காங்கிரசைக் கேள்வி கேட்கிறாராம் மோடி. “எமர்ஜென்சியை அமல்படுத்தியவர்களுக்கு, நமது அரசியலமைப்புச் சட்டத்தை நேசிப்பதற்காகச் சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை. எமர்ஜென்சியைக் கொண்டு வந்த மனநிலை, அதே கட்சியினரிடம் இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது. தேசத்தை சிறையாக மாற்றியவர்கள் அவர்கள்” என்று சொல்லி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் பிரதமர். எமர்ஜென்சியைக் கொண்டு வந்ததற்கு வருத்தம் தெரிவித்து, 1979 செப்டம்பர் 30 சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆகியவை இணைத்து நடைபெற விழாவில் முன்னாள் ...