நாடாளுமன்ற சம்பளம்

 நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஜார்க்கண்டில் பள்ளி முதல்வர்,  துணை முதல்வர் கைது: சிபிஐ விசாரணை.

தருமபுரி அருகே பிரசித்தி பெற்ற பிலியனுர் முனியப்பன் கோயில் உண்டியலில் ரூ.90 கோடிக்கான காசோலை .
''விவாதத்தை தலைமையேற்று நடத்த வேண்டிய பிரதமர் விவாதிக்க விரும்பவில்லை'' - நீட் விவகாரத்தில் ராகுல் காந்தி .

கைவிட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

எம்.பி. சம்பளம்?

எம்.பிக்கள் தங்களது தொகுதி மக்களுக்குச் சிறப்பாகப் பணியாற்ற அரசு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்தைத் தவிர தினசரி படி, அலுவலக வசதிகள், பயணச் செலவுகள், தங்குமிடம் எனப் பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தற்போது தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள எம்.பி.களில் புதுமுகம், அனுபவம் வாய்ந்தவர்கள் எனப் பலர் இடம்பெற்றுள்ளனர். மேலும் எம்.பிக்களின் அனுபவத்திற்கு ஏற்ப வீடு, ஓய்வூதியம் ஆகிய சலுகைகளை அரசு வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதியில் ஆண்டுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்யலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் 

எம்.பிக்களின் மாத சம்பளம் ரூ.1 லட்சம். அத்துடன் எம்.பிகளுக்கு தினசரிப் படியாக நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

நாடாளுமன்ற செயலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டால்தான் இந்த தினசரிப் படியைப் பெற முடியும்.

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும்போதும், நாடாளுமன்ற குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போதும் உணவு மற்றும் பிற செலவுகளுக்காக இந்த தினசரிப் படி வழங்கப்படுகிறது.

எம்.பி.க்களின் அலுவலக செலவுகள்.

எம்.பிக்கள் தங்களது தொகுதியில் உள்ள அலுவலகத்தை நிர்வகிக்கவும், நாடாளுமன்ற மக்களைச் சந்திக்கவும் மாதம் 70,000 ரூபாய் கொடுப்பனவாக (Allowance) வழங்கப்படுகிறது.

அத்துடன் அலுவலக செலவிற்காக 60,000 ரூபாய் கொடுப்பனவாகத் தரப்படுகிறது. இதில் 20 ஆயிரம் ரூபாய் வரை எழுது பொருட்கள் வாங்கவும், தபால் அனுப்பவும் பயன்படுத்திக் கொள்ளலாம். 40 ஆயிரம் ரூபாய் வரை அலுவலக உதவியாளருக்குச் சம்பளமாக கொடுக்கும் உரிமை எம்.பிக்கு உள்ளது.

இதுதவிர தொலைபேசி மற்றும் இணைய செலவிற்காக ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது.

  • நாடாளுமன்ற நிலைக்குழு, பொது கணக்குக் குழு, நாடாளுமன்றக் கூட்டுக் குழு, நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு, பொதுத்துறை நிறுவனங்களுக்கான குழு, நாடாளுமன்ற நிதிக் குழு, பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு எனப் பல குழுக்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இந்தக் குழுவின் கூட்டங்கள் மற்றும் ஆய்வுக்குச் செல்லும் எம்.பி.க்களின், பயணச் செலவு அரசால் வழங்கப்படும். குழுவின் சார்பாக வெளிநாட்டுக்கு எம்.பிக்கள் பயணம் மேற்கொண்டாலும் அதற்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும்.

    மேலும்இந்தப்பயணத்தின்போது, தங்குவதற்கான செலவுகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் பெற்றுக் கொள்ளலாம்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?